எனது பதிவை படிக்கும் அனைவருக்கும் ஒரு செய்தி,
தவிர்க்க இயலாத காரணத்தினால் என் பதிவின் கதை,வசனகர்த்தா இன்று விடுமுறை அதனால் .இன்று பதிவு கிடையாது.
நன்றி
குடுகுடுப்பை
தவிர்க்க இயலாத காரணத்தினால் என் பதிவின் கதை,வசனகர்த்தா இன்று விடுமுறை அதனால் .இன்று பதிவு கிடையாது.
நன்றி
குடுகுடுப்பை

'அயன்' படத்தின் கதையை சூர்யாவிடம் சொன்னதையே ஒரு சீன் போல விவரித்தார் அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த். 'வேல்' படப்பிடிப்பு நெல்லையில் நடந்து கொண்டிருந்த போதுதான் இந்த கதையை அவருக்கு சொன்னேன். படப்பிடிப்பு முடிந்து மாலை நேரத்தில் ஒரு குளக்கரையில் உட்கார்ந்து கதை கேட்டார். நேரம் செல்ல செல்ல இருள் கவிந்து அங்கங்கே சுவர் கோழிகள், மற்றும் தவளைகளின் சத்தம். நான் கதை சொல்லும் அவரது முகம் கூட தெரியவில்லை. இருந்தாலும் முழு கதையையும் சொல்லி முடித்தபோது எனக்கு கை கொடுத்து பாராட்டிய சூர்யா, 'இந்த படத்தை நாம சேர்ந்து பண்றோம்'னு சொன்னார்.
வெளிநாட்டில் பைட் சீன்கள் எடுப்பதற்கு முன்பே சூர்யா சாயலில் இரண்டு பேரை தயாராக வைத்திருந்தோம். ரொம்ப ரிஸ்க்கான காட்சிகளில் இவர்களை நடிக்க வைக்கலாம் என்பதால். ஆனால், அவர்களுக்கு சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுக்கும்படி ஆனது. எல்லா ஃபைட்டையும் சூர்யாவே ரிஸ்க் எடுத்து செய்தார். இந்த படத்தின் இறுதியில் எ பிலிம் பை கே.வி.ஆனந்த் என்று நான் போட்டுக் கொள்ளவில்லை. அதற்கு காரணம், இந்த திரைப்படம் என் உழைப்பு மட்டுமல்ல, எல்லாருடைய உழைப்பும் கலந்ததுதான் என்றார் கே.வி.ஆனந்த்.

ஒரு காட்சியா இருந்தாலும், ஓ.கேன்னு நடிச்சார், அதனால் ஒரு படத்தின் ஹீரோவாகவே ஆகிவிட்டார் கதிர். ஏற்கனவே 'நிறம்' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், 'காத்தவராயன்' படத்தில் கரணிடம் அடி வாங்குகிற ஒரே ஒரு காட்சியில் நடித்தார் இவர். இவ்வளவு நல்லவரா இருக்காரே, இவரையே அடுத்த படத்திலே ஹீரோவாக்கிட்டா என்ன? என்று நினைத்தாராம் அப்படத்தின் இயக்குனர் சலங்கை துரை. நினைத்த மாதிரியே தனது இரண்டாவது படமான காந்தர்வனில் கதிரையே ஹீரோவாக்கிவிட்டார். இவரது பெயர் மணிகண்டன். இந்த படத்திலிருந்து இனி கதிர்!
இவரைப்போலவே ஹீரோயின் பெயரையும் மாற்றப் போகிறாராம் சலங்கை துரை. ஹனிரோஸ் என்ற இந்த கேரள வரவு, ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள, தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். 'நல்ல பெயரா வைக்கிறேன். அதுக்கு பிறகு உன்னுடைய மார்க்கெட்டும் உயரும்னு சொல்லியிருக்கார். என்ன பெயர் வைப்பாங்களோன்னு ஆர்வமாக காத்திருக்கிறேன்' என்றார் ஹனி!
சாராயம் காய்ச்சுகிறவனின் கதைதான் காத்தவராயன். காந்தவர்வனில் தண்ணி லாரி ஓட்டுபவராக நடிக்கிறாராம் கதிர்! 'தண்ணியை' விட மாட்டீங்க போலிருக்கே என்றால், 'இது நல்ல தண்ணிதானே சார்?' என்றார் சலங்கை துரை.
வில்லன் நடிகரான லால், நமக்கெல்லாம் பரிச்சயம்தான். அவரது தம்பி அலெக்ஸ் பால் மலையாளத்தின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர். காந்தர்வன் படத்திற்கு இவரைதான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் சலங்கை துரை.
புதிய சலங்கை ஒலிக்கட்டும்...

ஒரே ஒரு கேள்வி, கொஞ்சம் திக்கு முக்காடிப் போனார் சூர்யா! 'வாரணம் ஆயிரம்' படத்தில் பாடல்கள் பெரிய ப்ளஸ். அந்த படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் நடந்த பிரச்சனையை நீங்களாவது தீர்த்து வைத்து இருவரின் பிரிவை தடுத்திருக்கலாமே?
சற்று யோசித்து பதில் சொன்னார் சூர்யா. அவங்களுக்குள் கருத்து வேறுபாடுதானே தவிர, வெட்டு குத்து ரேஞ்சுக்கு அடிதடி இல்லையே? அவர்கள் இருவரும் மீண்டும் சேரணும் என்பதுதான் என் விருப்பம். இந்த கருத்து வேறுபாடு சீக்கிரம் மறையலாம். மற்றபடி, அந்த படத்திற்காக எனக்கு கிடைச்ச பாராட்டு நானே நினைச்சு பார்க்காத விஷயம். குல தெய்வம் கோவிலுக்கு போயிருந்தப்போ, எல்லா புகழும் உனக்கேன்னு அந்த ஆண்டவனுக்கே எல்லாத்தையும் செலுத்திட்டேன் என்றார்.
அப்பா சிவகுமாரின் கம்ப ராமாயண பிரசங்கத்தை பற்றியும் பேசியவர், 'அப்பா தன்னோட வாழ்க்கையை ஒவ்வொரு பிரிவா பிரிச்சு வச்சிருக்காரு. ஆரம்பத்தில் ஓவியராக இருக்கணும்னு சென்னைக்கு வந்தவர், அப்படியே நடிப்பு தொழிலுக்கு வந்தார். அதிலேயும் பெரிய சாதனையை செஞ்சுட்டு இப்போ இலக்கிய துறைக்கு வந்திருக்கிறார். அவரை நான் ஆச்சர்யமா பார்க்கிறேன். அவரு வயசுக்கு என்னாலே அப்படி ஒரு சாதனையை செய்ய முடியுமா தெரியலே' என்றபோது, அவரையும் அறியாமல் சிலிர்த்தது சூர்யாவுக்கு!

ஒரு காட்சியா இருந்தாலும், ஓ.கேன்னு நடிச்சார், அதனால் ஒரு படத்தின் ஹீரோவாகவே ஆகிவிட்டார் கதிர். ஏற்கனவே 'நிறம்' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், 'காத்தவராயன்' படத்தில் கரணிடம் அடி வாங்குகிற ஒரே ஒரு காட்சியில் நடித்தார் இவர். இவ்வளவு நல்லவரா இருக்காரே, இவரையே அடுத்த படத்திலே ஹீரோவாக்கிட்டா என்ன? என்று நினைத்தாராம் அப்படத்தின் இயக்குனர் சலங்கை துரை. நினைத்த மாதிரியே தனது இரண்டாவது படமான காந்தர்வனில் கதிரையே ஹீரோவாக்கிவிட்டார். இவரது பெயர் மணிகண்டன். இந்த படத்திலிருந்து இனி கதிர்!
இவரைப்போலவே ஹீரோயின் பெயரையும் மாற்றப் போகிறாராம் சலங்கை துரை. ஹனிரோஸ் என்ற இந்த கேரள வரவு, ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள, தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். 'நல்ல பெயரா வைக்கிறேன். அதுக்கு பிறகு உன்னுடைய மார்க்கெட்டும் உயரும்னு சொல்லியிருக்கார். என்ன பெயர் வைப்பாங்களோன்னு ஆர்வமாக காத்திருக்கிறேன்' என்றார் ஹனி!
சாராயம் காய்ச்சுகிறவனின் கதைதான் காத்தவராயன். காந்தவர்வனில் தண்ணி லாரி ஓட்டுபவராக நடிக்கிறாராம் கதிர்! 'தண்ணியை' விட மாட்டீங்க போலிருக்கே என்றால், 'இது நல்ல தண்ணிதானே சார்?' என்றார் சலங்கை துரை.
வில்லன் நடிகரான லால், நமக்கெல்லாம் பரிச்சயம்தான். அவரது தம்பி அலெக்ஸ் பால் மலையாளத்தின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர். காந்தர்வன் படத்திற்கு இவரைதான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் சலங்கை துரை.
புதிய சலங்கை ஒலிக்கட்டும்...
30.03.2009. மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பூர்த்திசெய்யவே மனிதநேய உதவி அமைப்புக்கள் விரும்புகின்றனவே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட அவை விரும்பவில்லையென ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்புக்களும், உதவி அமைப்புக்களும் விடுதலைப் புலிகளுக்கு உதவவும், மோதல்களை அதிகரிக்கச் செய்வதற்குமே முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதநேய உதவித் திணைக்களத்தின் தலைவர் கென்ற்கின்ஸ்சி, "நாம் இலங்கை அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கவே விரும்புகின்றோம். எதிரிகளாகவல்ல" [...]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக