ஞாயிறு, 29 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-28

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. இன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம்.

இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குகளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.

புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது.

2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்தப் பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்.

உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிக்காவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

இந்த ஆண்டு பூமி நேரம், இன்று சனிக்கிழமை இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது. இம்முறை 1000 நகரங்களைச் சேர்ந்த 100 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழீழ தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் ௨7) கனேடிய உயர்தரப்பாடசாலையுள் ஒன்றான சி.டபுள்யு ஜெfப்ரி பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பில் ஈடுப்பட்டனர்.

கனடாவில் இளையோர்களினால் தொடர்ந்து முன்னேடுக்கப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இந் நிகழ்வு நடைபெற்றது.

மாணவர்களும் இளையோர்களும் கீல் மற்றும் பிஞ்ச் சந்திப் அருகில் மாலை 3 மணியளவில் ஒன்று கூடி தமது கனவயீர்ப்பு நிகழ்வை ஆரம்பித்தனர். தமிழீழத் தேசியக் கொடிகளை தாங்கியவாறு வீதியின் நாற்றிசையேங்கும் மாணவர்கள் குழுமி நின்று அமைதியான முறையிலும் அதே நேரம் ஆணித்தரமாகவும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இக்கவனயீர்ப்பு நிகழ்வானது ரொரன்ரோ பெரும்பாகத்தைச் சேர்ந்த இளையவர்கள், மற்றும் ஏனைய தமிழ் மக்களின் ஆதரவைப்பெற்று திரளான மக்கள் கலந்து கொண்ட ஒரு கவனயீர்ப்பாக இடம் பெற்றது.

சிறிலங்காவில் நடைபெறும் போரை நிறுத்த கனேடிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். அங்கு தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்க்கு உரிய தீர்வாக தனித்தமிழீழம் அமைய வேண்டும். எனவே தமிழீழத்தையும் தமிழீழத்தின் தேசியத்தலைமையான விடுதலைப்புலிகளையும் கனேடிய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

"தமிழீழத்தை அங்கீகரி"
"சிறிலங்காவே இனப்படுகொலையை நிறுத்து"
"சிறீலங்காவே தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு"
"கனேடிய அரசே விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு"
போன்ற கோசங்கள் அங்கு எழுப்பபட்டன.

இறுதியில் எமது உறவுகள் குருதிசிந்துவது நிறுத்தப்பட வேண்டும், எனவே சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை நாம் புறக்கணிப்போம் என மாணவர்களும் பொது மக்களும் உறுதி எடுத்துக்கொண்டு கவனயீர்ப்பை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

இன்று சனிக்கிழமை (28.03.09) காலை 9.30 மணிக்கு Savigny le Temple பகுதியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது ஈழத்தில் தொடரும் இனப்படுகொலைகளைச்சித்தரிக்கும் சுலோகங்களைத்தாங்கியவாறு பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கவனயீர்ப்புப்போராட்டத்தில்

அதிகளவாக குழந்தைகளும், சிறுவர்களும், பெரியோர்களும் தாய்நில உறவுகளை நினைந்து, நாள் தோறும் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதல்களினால் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார் என எண்ணில் அடங்கா உறவுகளை நினைந்து போராட்டத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக ஈடுபட்டிருந்தனர்.

இதேநேரம் இக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் Savigny le Temple பகுதியின் உதவி மேயர் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்களது நியாயமான பிரச்சனைகளுக்குத்தீர்வு கிடைக்கும்வரை தன்னாலான அனைத்து உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும், அதே நேரம் தமிழ் மக்களும் தொடர்ந்து எழுச்சியான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடவேண்டும். பாதிக்கப்பட்ட எந்த இன மக்களாக இருந்தாலும் சரி, தனது இனத்தைச்சேர்ந்தவர்களுக்காக போராடும் உரிமை கொண்டவர்களென்றும் இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டுமென்று, தனது உரையில் குறிப்பிட்டிருந்ததுடன் அதற்கான தமது ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்தும் உண்டென உறுதிமொழிகளை வழங்கினார்.

கருத்துகள் இல்லை: