செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் திண்டுல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாவதற்கு முன்பு கொளத்தூர்மணி பேசிய பேச்சுக்கள் டி.வி.டி. மற்றும் "சி.டி."கேசட்டுகளாக தயாரிக்கப்பட்டு சேலம் மாவட்டம் கொளத்தூர், மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையில் தமிழர்களை அழிக்க சிங்கள ராணுவத்துக்கு உதவி செய்த இந்திய (காங்கிரஸ்) அரசுக்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என்று கொளத்தூர் மணி பேசி உள்ளார்.

இந்த டி.வி.டி. மற்றும் சி.டி. கேசட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மேட்டூர் நகர காங்கிரஸ் தலைவர் வெங்கடேசுவரன் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவானந்தத்திடம் ஒரு மனு கொடுத்து உள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர்மணி தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசிய பேச்சு அடங்கிய டி.வி.டி. சட்ட விரோதமாக வெளியிடப் பட்டு உள்ளது. இந்த டி.வி.டி. மேட்டூர் பகுதியில் உள்ள சில முக்கிய இடங்களில் விற்கப்பட்டு வருகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு விற்கப்படும் இந்த டி.வி.டி.க்களை உடனடியாக பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள 1.9 பில்லியன் டொலர்கள் கடனுதவிக்கு எதிராக நிரந்தர தடையுத்தரவை விதிக்கக்கோரி கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான சட்டத்தரணி புருஸ் பெய்ன்,இன்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால், அல்லது ஆதரவாக தீர்ப்பளித்தால், அதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் இலங்கைக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நெருக்கடி காரணமாகவே இலங்கைக்கு நிதியுதவியை வழங்குவதாக தெரிவித்தால் அதற்கு என்ன பதிலை தெரிவிக்கப்போகிறீர்கள் என புரூஸ் பெய்னிடம் கேட்டபோது, மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் போது, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடு என்ற வகையில் அமெரிக்கா ஆதரவளிக்க முடியாது என தெரிவித்தார்

இந்தநிலையில் அமெரிக்கா இந்த தடையுத்தரவை விதிக்க தமது 17 வீத வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றே தாம் எதிர்ப்பார்ப்பதாக புரூஸ் பெய்ன் குறிப்பிட்டார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று சனிக்கிழமை சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.











தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சர்வதேசம் அங்கீகரிக்கக்கோரி நியூசிலாந்தில் 'உரிமைப் போர்" நடாத்தப்பட்டுள்ளது.

ஒக்கிலாந்து நகரில் நேற்று சனிக்கிழமை (21.03.2009) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மக்கள் பெரும் திரளாக வந்து தங்கள் உரிமைக்கான குரலை வெளிப்படுத்தினர்.




'தமிழீழ விடுதலைப் புலிகள் எமது பாதுகாப்பு அரண்"
'எமக்குத் தேவை தமிழீழம்"
'பரபாகரன்தான் எமது தலைவர்"

என்ற பல கோசங்களையிட்டவாறு மக்கள் ஊர்வலத்தில் பங்குபற்றினனர்.




இங்குள்ள சிங்களவர்கள், இது நடைபெறுவதற்கு முன்பதாக நியூசிலாந்தின் ஒக்கிலாந்து நகரத்தின் பிரதான வீதிகளில் தமது வாகனங்களில் சிங்கக் கொடியையும் நியூசிலாந்து கொடியையும் இணைத்தவாறு வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசீலாந்து தமிழ் மக்கள் இந்த 'உரிமைப் போரில்" , தாயகத்தில் உணவு மருந்து வசதி இன்றி அல்லல்படும் மக்களின் அவலத்தையும் போரின் கொடுமைகளையும் சித்தரிக்கும் புகைப்படங்களையும் பதாகைகளையும் கொண்டுசென்றனர்.




'நியூசீலாந்தே எமக்கு உதவு"
'உலகமே எமக்குத் தேவை சமாதானம்"

எனவும் கோசமிட்டனர். இதில் பங்குபற்றிய நியூசீலாந்துவாழ் தமிழ் மக்கள் முதன்முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழீழத் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இங்குள்ள வேறு இனத்தவர்களும் இவர்களுடன் இணைந்துகொண்டு தங்கள் ஆறுதலைiயும் ஆதரவையும் தெரிவித்தனர். பேரணியின் இறுதியின்போது, நியூசீலாந்து தமிழ் சங்கம் சார்பாக Dr.சிவா வசந்தன் உரையாற்றினார்: 'ஐ.நா இன் செயலாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சிங்கள அரசை உலுக்கியுள்ளது. அதனால், அனைத்து நாடுகளிலுமுள்ள சிங்களவர்களை எமது போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு வற்புறுத்தி வருகிறது. இதனை நாம் எம் கண்முன்னே காணுகிறோம். எனவே, புலம்பெயர் தமிழ் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடைந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக நின்று தமிழீழத்தை வென்றெடுக்கவேண்டும்.




இந்திய அரசு ஏப்பிரல் 14 ஆம் திகதிக்கு முன் போரை முடிவிக்குக் கொண்டுவரக் கேட்டுக்கொண்டதையடுத்து சிங்கள அரசு கொடூரமாக மேலும் பொதுமக்களை தாக்கி வருகிறது. இதனால், இன்னும் நாம் எமது போராட்டங்களை வலுப்பெறச்செய்து நியூசீலாந்து மற்றும் வெறிநாடுகளின் கவனத்தையீர்த்து 'தமிழீமே" எமக்கு உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும் என அவர்களை உணரச் செய்யவேண்டும்.

புலம்பெயர் வாழ் தமிழரிலேயே எமது தமிழீழ விடுதலையின் வெற்றியும் பலமும் தங்கியுள்ளது" என்றார்.

இவரைத் தொடர்ந்து, மகளிர் அணி சார்பாகப் பேசிய திருமதி நர்மதா : 'தமிழர்கள் பலம்பெற்ற இராச்சியங்களைக்கொண்டு சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ்ந்த வரலாற்றைக்கொண்டவர்கள். அந்த வரலாற்றை மீளவும் பெறுவதற்கு எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெறவேண்டும்" என்றார்.


பாகிஸ்தான், ஜோர்டான்,சௌதிஅரேபியா,சிரியா,துருக்கி,பாலஸ்தீனம்,இஸ்ரேல்,சிசிலி,கார்சிகா போன்ற நாடுகளில் ஒருவர் ஜாதி அல்லது கிளான் விட்டு காதலித்தாலோ,அல்லது திருமணம் செய்து கொண்டாலோ அல்லது தவறாக நடந்தாலோ அதனை பெரிய அவமானமாகக் கருதுவார்கள்!

நம்ம ஊரிலும் அப்படித்தாங்க என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.

ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் கொலை செய்து விடுவார்கள்! நம் ஊரிலும் கொல்லுகிறார்களே என்றால் ஆமாம்!

இங்கு அதற்கு தண்டனை உண்டு!

அங்கு பெரிய தண்டனை கிடையாது!

இப்படிக்கொல்லுவதற்கு "ஹானர் கில்லிங்"

என்று பெயர்.

ஜோர்டான் நாட்டில் 19 வயது பெண் அலங்காரம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் சென்று ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இதைப் பார்த்த அவளுடைய அப்பாவும் சகோதரரும் கோபம் கொண்டு அடித்தே கொன்று விட்டார்கள்.

ஜோர்டானில் ஒவ்வொரு வருடமும் 20 பெண்கள் இதுபோல் கொல்லப்படுகிறார்கள்!

ஜோர்டான் சட்டம் 340,98 களின்படி இது அனுமதிக்கப்பட்டு உள்ளது!

இறந்த பெண்ணின் கன்னித்தன்மை பாதிக்கப்பட்டு இருந்தால் ஆணுக்கும் தண்டணை உண்டு!

 

,ஜூன் 2007ல் கொல்லப்பட்ட ஒரு பெண்!

இந்தியா

இந்தியாவில் 1.1.2003ல்  21 வயது சுனிதா தேவி,அவருடைய காதலன் ஜஸ்பீர்சிங் ஆகியோர் பல்லா கிராமம் ஹரியானா மாநிலத்தில் இந்த மரியாதைக்கொலை செய்யப்பட்டனர்.

http://blogs.reuters.com/gbu/2008/05/22/honor-killing/

Photo

மேலேயுள்ள படத்தில்:ஹானர் கில்லிங் செய்யப்பட்ட சாரா ஆமினா.

பெர்லின்

ஹாடின் சருகுவின் துருக்கிய முஸ்லிம்  சகோதரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர்

கனடா

கனடாவில் க்ரேட்2 மாணவி அவரது அப்பாவால் பர்தா அணியாததால் கொல்லப்பட்டார்!

மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வந்தாலும் தீவிரமான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் மனிதர்களின் மனம் மாறினாலே இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்கள் மீள முடியும்!!

இலங்கைத் தமிழர் அவலம் நீக்க ஐ.நா.உடன் தலையிட வேண்டும்: இந்திய மனித உரிமை அமைப்புகள் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்து : இலங்கையின் வட பகுதியில் போரை நிறுத்தி மக்களின் அவல நிலையை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகத் தலையிடவேண்டும் என்று இந்திய மனித உரிமை அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை: