"தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி" என்ற பெயரில் முதல்வர் கலைஞர் நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தார். கலைஞருக்கு யாருடா தம்பி அப்டின்னு மண்டய பிச்சிக்கிட்டு நாம யோசிக்கிறதுக்குள்ள அது நான் தான் ராசா என்று புயல் தலைவர் வைகோ வெளியே வந்து அவரும் பதிலுக்கு பதில் ஒரு அறிக்கையை விட்டுவிட்டார்.ஆனா இந்த அறிக்கை கலைஞரின் அறிக்கை கலைஞரின் அறிக்கையைப் போல வளவள என்றில்லாமலும், மறைந்திருந்து ஜாடை பேசாமலும் நேரடியாகத் தலைவரைத் தாக்குகிறது.
அந்தநாள் ஞாபகம் வந்தது என்றும், கட்சி தலைமையை கைப்பற்றும் நோக்கத்தில், தான் பெயர் சொல்ல விரும்பாத, குட்டை மனப் பேராசை கொண்ட ஒருவர் செயல்பட்டது தெரிந்தது என்றும், கவிதை கடிதம் என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி என்னை தாக்கி உள்ளார்.
இப்போது என் மீது சுமத்தப்படும் நிந்தையும் பழியும், பெரிய பதவியில் இருப்பவர் என்னையும் எங்கள் இயக்கத்தையும் அழிப்பதற்காகவே ஏவி உள்ளார் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்
இந்தப் பங்காளிச் சண்டை காலங்காலமாக நீடிப்பது தான். தன் குடும்பத்திற்கு மட்டுமே அறிஞர் அண்ணாவால் பட்டயம் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ள தலைவர் நாற்காலியை யாராவது கணவிலே நினைத்துப் பார்த்தாலும் அவர்களுக்கு கல்தா தான். இருந்தாலும் பழிவாங்குவதில் கலைஞருக்கு நிகராக தமிழகத்திலே யாருமில்லை எனலாம்.
அடுத்துவருவது: ஞாயிறு அதிரடி: "உதயசூரியன் சின்னத்திலே" கலைஞர் காமெடி கடிதம்
இந்தியாவிலேயே ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவியை இழந்த ஒரே தலைமைச் செயலர் நீரா யாதவ் ஆவார். இத்தகைய ஊழல் மிகுந்த முன்னாள் அதிகாரியை ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களே வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பெயர் குறிப்பிட விரும்பாத பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் ஒருவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
ராஜ்நாத் சிங் போட்டியிட இருக்கும் காஜியாபாத் தொகுதியில் தியாகி இனத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே அந்த இனத்தைச் சார்ந்த இவரை கட்சியில் இணைத்துள்ளதாக மற்றொரு மாநில முன்னாள் தலைவர் கூறி இருக்கிறார்.
ஏப்ரல் 1ம் திகதி முட்டாள்கள் தினம். நம்மைத்தவிர மத்தவங்கள் எல்லோருக்காகவும் இருக்கிற ஒரேயொரு தினத்தை நாம கொண்டாட வேண்டாமா? அதுக்குத்தான் இதோ டிப்ஸ்…
1. மணல் இல்லேன்னா சாம்பலைப் பொதிசெய்து ஏதாவது பிரபலமான கம்பனியோட பெட்டியில பார்சல் பண்ணி ரோட்டில தவறுதலா விழுந்து கிடக்குற மாதிரி போட்டுவிட்டா எவனாவது அதை எடுத்துக்கொண்டு போய் ஏமாறுவது நிச்சயம். ஆனா இலங்கையில இப்படியான பார்சல்கள் வீண் குழப்பத்தைத் தோற்றுவிக்கும் எங்கிறதால இதைத் தவிர்ப்பது நல்லது.
2. 'பின்லேடன் பிடிபட்டார்', 'ரஜனிகாந் அரசியலுக்கு வாராராம்' போன்ற பியூஸ் போன நியூஸ் எல்லாத்தாலும் முட்டாளாக்க முடியாது. 'நமீதாவுக்குக் கல்யாணம்', 'ரகஸ்யாவுக்கு ஒரு ரகசியக் காதலனாம்' போன்ற சூடான செய்திகளைக் கூறிப்பாருங்கள். ஐந்துவயதுப் பையன் முதல் அறுபது வயதுத் தாத்தா வரை அதிர்ச்சியடைவது நிச்சயம்.
4. பின்னாடி போய் 'பேய்…' என்று கத்திச் சின்னப்பசங்களைப் பயமுறுத்தலாம். ஆனா பெரியவங்களுக்கு இது கொஞ்சம் கஸ்டம். அவங்களுக்காகவே ஒரு அருமையான ஐடியா. பின்னாடி போய் 'நமீதா' என்று கத்திப் பாருங்கள். பதறி அடித்துக்கொண்டு திரும்புவார்கள்.
5. தலையிலே தூசி கிடக்கிறது என்று கூறினால் யாரும் இப்போது ஏமாற மாட்டார்கள். பதிலாக தலையிலே இமயமலை இல்லேன்னா மருதமலை கிடக்கிறது என்றால் பயத்தில் தலையைத் தடவுவது நிச்சயம்.
8. காலுக்கடியில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற பயங்கர விலங்குகள் இருப்பதாகக் கூறியெல்லாம் பயமுறுத்த முடியாது. பதிலாக காசு கிடப்பதாகக் கூறிப் பாருங்கள். பத்துப் பைசா என்று கூறினாலே பதறியடித்துக்கொண்டு குனிவார்கள்.
9. பதிவுலகில் அடத்தவரை முட்டாளாக்குவதற்கு இப்போது சூடாக விவாதிக்கப்படும் ஒரு விடயத்தைப்பற்றித் தலைப்பைப் போட்டுவிட்டு, உள்ளே உங்கள் அக்கா பையன் மடியில் சுச்சா போனதை எழுதிவிடலாம். ஏதோ சூடான விடயம் என்று நம்பி வந்தவர்கள் உங்கள் மடி சூடான விடயத்தைப் பார்த்ததும் ஏமார்ந்து போவார்கள்.
11. பதிவுலகில் பரபரப்பான இலக்கமான பதினொன்றைத் தலைப்பில் போட்டுவிட்டு எவ்வளவு யோசித்தும் பதினொரு விடயம் சிக்கவில்லையா? இப்படி என்னைப்போல் இலக்கங்களைத் தாறுமாறாக இட்டுவிட்டு கடைசி இலக்கத்தைப் பதினொன்றாக இட்டுவிட்டால் சிலர் கவனிக்காமல் ஏமாறுவார்கள். கவனித்துப் பின்னூட்டுபவர்களுக்கும் ஏப்ரல் பூல் கூறிவிடலாம். எப்படி ஐடியா?
தனது மதிப்பெண் சான்றிதழைப் பார்த்துவிட்டு தனது பேராசிரியரிடம் கேட்டான். அவருக்கு வயது 50+.
மாணவன் - "நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?".
பேரா - "தாராளமாக. பதில் கூறுவது எனது கடமை".
மாணவன் - "நல்லது. நான் கேட்கும் கேள்விக்குப் பதில் தேவை. நீங்கள் சரியான பதிலைச் சொன்னால் எனக்கு வழங்கப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண்ணையே அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் தவறான பதிலைச் சொன்னால் எனக்கு உயர் மதிப்பெண் வழங்க வேண்டும். இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?".
பேரா - "சரி. கேள்வியைக் கேள் மகனே!".
மாணவன் - 1) சட்டப்படி (law) சரியானதும், தர்க்க (logical) ரீதியிலாக தவறானதும் எது?
2) சட்டப்படி தவறானதும், தர்க்கப்படி சரியானதும் எது?
நீண்ட நேரம் யோசித்த பிறகும் எந்த ஒரு முடிவுக்கும் வராத பேராசிரியர் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை என ஒத்துக்கொண்டார். அந்த மாணவன் பெற்ற குறைந்தபட்ச மதிப்பெண்ணை அதிகபட்சமாக மாற்றுவதற்கு சம்மதித்தார்.
பின் மாணவனின் முகத்தைப் பார்த்து அதே கேள்வியைத் திரும்பக் கேட்டு "பதில் வேண்டும்", என்றார்.
மாணவன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்கள் :
1) சட்டப்படி (law) சரியானதும், தர்க்கரீதியிலாக தவறானதும் எது?
உங்களுக்கு 55 வயது ஆன பின்பு இப்போது 20 வயது குமரியைத் திருமணம் செய்திருக்கிறீர்கள். இது சட்டப்படி சரியானதாக இருந்தாலும், தர்க்க ரீதியிலாகத் தவறானது.
2) சட்டப்படி தவறானதும், தர்க்கப்படி (logical) சரியானதும் எது?
உங்கள் மனைவிக்கு 25 வயதுக் காதலன் ஒருவன் இருக்கிறான். அது தர்க்கப்படி சரி ஆனால் சட்டப்படி தவறு.
அந்த 25 வயதுக் காதலனுக்கு நீங்கள் முதலில் குறைத்த மதிப்பெண் வழங்கினீர்கள். இப்போது அதிகபட்ச மதிப்பெண் வழங்கிக் கவுரவித்துவிட்டீர்கள். அவன் வேறு யாருமில்லை. நானே..
(இதுக்கு மேல என்ன நடந்துருக்கும்னு சொல்லத் தேவையில்லைங்க)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக