வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25

ராபர்ட் ராய் ப்ரிட்


பெரும்பாலான தொல்லின ஆராய்ச்சியாளர்கள் இன்றைய பறவைகள் முன்னாள் டைனசோர்களிலிருந்து பரிணாமம் அடைந்தவை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அந்த டைனசோர்கள் எந்த அளவுக்கு இன்றைய பறவைகளை இத்திருக்கின்றன என்பது பற்றி பல கேள்விகள் இருக்கின்றன.



டைனசோர்கள் வெப்பரத்த உடையவைகளாகவும், வேகமுடையவைகளாகவும், தந்திரமான மாமிச உண்ணிகளாகவும் இருந்தனவா அல்லது மெதுவாக நகர்பவையாகவும் மடத்தனமாகவும் இருந்தனவா என்பது நிபுணர்கள் இன்னமும் விவாதிக்கும் ஒரு விஷயம்.



டைனசோர்களின் எலும்புகளை ஆராய்ந்த ஒரு புதிய ஆராய்ச்சி, சுராசிக் பார்க் படத்தில் வந்தது போன்று வேகமுடையவையாக இருந்தன என்று காட்டுகிறது.



மாமிசம் சாப்பிடும் டைனசோர்கள் மிகவும் சிக்கலான அமைப்புள்ள நுரையீரல்களைக் கொண்டிருந்தன என்பதும், அந்த அமைப்பு இன்றைய பறவைகளில் இருக்கும் நுரையீரலை ஒத்திருக்கின்றன என்பதும் ஒஹையோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பாட்ரிக் ஓக்கான்னர் அவர்கள் தலைமையில் ஆராய்ச்சி செய்த குழுவால் கண்டறியப்பட்டுள்ளது. டெரோபோட் டைனசோர்கள் என அழைக்கப்படும் இரண்டு கால்களால் நடக்கும் டைனசோர்கள் பறவைகள் போன்ற கால்களுடனும், தங்கள் எலும்புகளுக்குள் காற்றை அழுத்தி அனுப்பு எடைகுறைவானதாக இருந்தனவென்றும், இது இன்றைய பறவைகளை ஒத்திருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.




கடந்த முப்பதாண்டுகளில் பறவைகளே இன்றைய டைனசோர்கள் என்ற கொள்கையை தீவிரமாக சிந்தித்து வந்திருக்கிறார்கள். 1996இல் sinosauropterx சினோசாரோப்ட்ரெக்ஸ் என்ற பறவைகள் போல பல அங்கங்களும் கொண்ட நன்றாக பாதுகாக்கப்பட்ட ஒரு டைனசோரின் மீதங்கள் கண்டறியப்பட்ட போது உறுதி செய்யப்பட்டது.


இன்னும் பல ஆராய்ச்சிகள் டிரெக்ஸ் வளர்ந்த பின்னால், உடலெங்கும் மீன் போன்று சிதில்கள் கொண்டு இருந்தாலும், அதன் குஞ்சுகள் இறக்கைகள் கொண்டவையாக இருந்தன என்பதை உறுதி செய்திருக்கின்றன.



இருப்பினும், தொல்லின ஆராய்ச்சியாளர்கள், (paleontologists) முதலைகள் போன்று குளிர்ரத்தமுடையவை என்று டைனசோர்களை கருதி வந்தார்கள். ஊர்வன (reptile)வற்றின் எளிய இதயம் மிகவும் குறைவான ஆக்ஸிசனையே ரத்தத்துக்கு அனுப்புகிறது. இது பறக்க போதுமானதல்ல.




நவீன கம்ப்யூட்டர் டோமோகிராபி (CT) scans மூலம் டைனசோர் இதய எலும்புகளை ஐந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்தபோது, அவற்றில் நான்கு பகுதிஉள்ள இதயம் பாலூட்டிகளைப் போன்றும், பறவைகள் போன்றும் இருந்தது கண்டறியப்பட்டது.



இந்த வருடம் ஒரு அரிதாக கிடைத்த டிரெக்ஸின் மென்திசுக்களைஆராய்ந்தபோது அது ஆஸ்டிரிச் கோழியின் மென்திசுக்களை ஒத்து இருந்ததும் அறியப்பட்டது.



வெப்பரத்தமா குளிர்ரத்தமா ?



ஒரு பறவையின் காற்றுப்பை அமைப்புகள் அதன் உடலெங்கும் அமைந்துள்ளன. அந்த காற்று நுரையீரலுள் இரண்டு முறை செலுத்தப்படுகிறது. இது மிகவும் துல்லியமான சுவாசிக்கும் அமைப்பை உருவாக்குகிறது.



மிகவும் சிக்கலான இதயங்களுடன் கூடிய இந்த உயர்ந்த சுவாசிக்கும் அமைப்பு பறவையின் மெடபாலிஸத்தை அதிகரித்து அதனை வெப்பரத்த உயிரியாக ஆக்குகிறது. அதாவது தங்களது உடலின் தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தும், ஒரே சீராக வைக்கும் ஒரு அமைப்பை இவைகள் கொண்டிருக்கின்றன.



ஊர்வன குளிர் ரத்தப் பிராணிகள். இவைகளின் சுற்றுச்சூழலின் தட்பவெப்பத்தின் மூலம் தங்களது உடலின் தட்பவெப்பத்தை கட்டுப்படுத்த விழைக்கின்றன.




டைனசோரின் சுவாசிக்கும் அமைப்பு இன்றைய பறவைகளின் சுவாசிக்கும் அமைப்பு போலவே இல்லாமல் இருந்தாலும், 'அது நிச்சயம் ஒரு முதலையின் அமைப்பு போன்றதல்ல என்பது தெளிவு ' என்று ஓ 'கானர் கூறுகிறார்.




டைனசோர்களின் அமைப்பு இதனால் வெப்பரத்தமுடையது என்றும் கூறிவிட இயலாது. விவாதம் தொடரும்போது, மறைந்துவிட்ட இந்த உயிரிகளின் அமைப்பும் ரத்தமும், குளிர்ரத்த அமைப்புக்கும் வெப்ப ரத்த அமைப்புக்கும் இடையே இவை இருக்கலாம் என்று சிந்திக்கிறார் ஓ 'கானர்.

----

thanks to thinnai.com
கொடைக்கானல் காவல் நிலையத்தில் சமுதாயத்தின் புற்றுநோயாக கருத்தப்படும் லஞ்சத்தில் குளித்த இரண்டு ஏட்டுக்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு பணியில் இருந்த போலீசார் சேகர், மற்றும் ரவி ஆகியோர் கட்டாயமாக லஞ்சம் தர வேண்டும் என்று அவரை வற்புறுத்தியுள்ளனர். இதை அவர்களுக்கு தெரியாமல் சுப்பரமணியம் வீடியோ பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார்.
 சர்வதேச மனித உரிமை அமைப்பும் இலங்கை அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இன்னமும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வலியுறுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் கருணாநிதி-ஜெயலலிதா குற்றச்சாட்டு : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : கச்சத்தீவை இலங்கை அரசு புனிதப்பகுதியாக அறிவிக்கப்போவது குறித்து நான் விடுத்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் ஓர் அறிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.  
'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய இராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால், புலிகளின் முக்கியத்தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.  கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள், சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.
 யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' நாளிதழ் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத குழுவினரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் படுகாயமடைந்திருக்கும் அதேவேளையில் அலுவலகக் கட்டடத்துக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக 'உதயன்' வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் கஸ்துரியார் வீதியில் 'உதயன்' அலுவலகம் அமைந்திருக்கின்றது.  
 புதுக்குடியிருப்பில் மோதல்களில் காயமடைந்தவர்களை அழைத்துச்செல்ல வந்த இரு பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் மீது விடுதலை புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு உலங்கு வானூர்தியை விமானி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை: