செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

விஞ்ஞானிகள் ஆய்வுகூடத்தில் இரத்தம் செயற்கையாக செய்வதற்கு வழி கண்டுபிடித்துள்ளார்கள்...

தாவரத்தின் முதிரா நிலையிலுள்ள தண்டுகளை பயன்படுத்தி தட்டுப்பாடில்லாத அளவுக்கு இரத்தம், அதுவும் தொற்று இல்லாத இரத்தம் வழங்க முடியும் என்று கண்டு பிடித்துள்ளார்களாம்...

இதன் காரணமாக அவசர இரத்த மாற்றுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இரத்தம் வழங்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது...

SNBTS என்று சொல்லப்படும் Scottish National Blood Transfusion Serviceஆனது இங்கிலாந்தின் தேசிய உடல்நல சேவைகள் குழுமத்துடன் (National Health Services, England) சேர்ந்து பணியாற்றிய இந்த செய்முறைத் திட்டமானது 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது...

National Blood Service for England and North Walesஇலுள்ள ஒரு பெண்மணி இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளார்...
"negotiations on the joint research project were at an advanced stage and that legal, rather than scientific, issues were holding up the announcement.".

Wellcome Trustஇனுடைய பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார்...
"complicated legal issues were still being ironed out between all the parties involved but that an announcement was likely to be made in the coming week."...

எப்பிடின்னாலும் இன்னும் சில நாட்களில் இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்...

இது பற்றிய செய்தி ஆங்கிலத்தில் வந்துள்ளது.
தகவல்களை விரிவாக அறிந்து கொள்ள கீழேயுள்ள தொடுப்பை க்ளிக்கவும்...

http://uk.news.yahoo.com/4/20090323/tuk-scientists-bid-to-create-blood-in-la-dba1618.html

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
ஒரே நேரத்தில் சோனியா காந்தியின் பாராட்டையும், பிரபாகரனின் பாராட்டையும் பெற்றவர் ஏஎம்ஆர் ரமேஷ்! ராஜீவ்காந்தி கொலைக்கு பிறகு தப்பியோடிய சிவராசன்-சுபா ஓட்டத்தையும் என்கவுன்டரையும் 'சைனைடு' என்ற தலைப்பில் படமாக்கியிருந்தார் ரமேஷ். தமிழில் 'குப்பி' என்ற பெயரிலும் இந்த படம் வெளிவந்தது. இதுபோன்ற உண்மை சம்பவங்களை படமாக்குவது ரமேஷ¨க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி சுவையானது போலும்! அடுத்து இவர் இயக்கவிருக்கும் படம் போலீஸ் குவாட்டர்ஸ்.

1992 ம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாடெங்கும் எழுந்த கலவரத்தையும், அப்போது பெங்களுரு போலீஸ் குவாட்டர்சில் தங்கியிருந்த ஒரு காதல் ஜோடிக்கு ஏற்பட்ட பிரச்சனையையும் சொல்லப் போகிறதாம் இந்த படம். பெங்களுருவில் நடைபெறவிருக்கும் இப்பட துவக்கவிழாவில் கர்நாடகாவை சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் அத்தனை பேரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

குப்பிக்கு பிறகு இவர் இயக்குவதாக இருந்த சந்தன வீரப்பனின் கதை என்னவாயிற்று என்றோம் ரமேஷிடம். அந்த எண்ணம் இன்னும் அப்படியேதான் இருக்கு. ஆனால், அதற்கு நிறைய பணம் செலவாகும் போல் தெரிகிறது. இடையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் இந்த படத்தை எடுக்கக் கூடாது என்று இரண்டு வழக்குகள் போட்டுவிட்டார். அதனால் இப்போதைக்கு போலீஸ் குவாட்டர்ஸ் படத்தை முடித்துவிட்டு பிறகு யோசிக்கலாம் என்றார் ரமேஷ்!

தமிழில் 'காவலர் குடியிருப்பு' என்ற பெயரில் வரும், அப்படிதானே ரமேஷ்?

புலிக்கு பிறந்தது புலியாகவே இருக்கட்டும், அதற்காக சபை நாகரிகம் வேண்டாமா? என்று கொந்தளிக்கிறார்கள் ஒரு கவி வாரிசை பார்த்து! பிரபல பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி அமெரிக்காவின் 'எம்மி' விருது கமிட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த கமிட்டிக்கு தேர்வு செய்யப்படும் முதல் இந்தியர் இவரே!

தலைகால் புரியாத சந்தோஷத்தோடு ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். நடிகர் சங்கம் சார்பாக சரத்குமார், ராதாரவி, மற்றும் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.வி.சேகர் சுதா ரகுநாதன், மாதேஷ் போன்ற விவிஐபி களும் வந்திருந்தார்கள். முக்கிய விருந்தினராக இந்தியாவின் அமெரிக்க தூதர் அலெக்சாண்டர் சிம்கினும் வந்திருந்தார்.

நிகழ்ச்சியை பாஸ்கி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். சற்று தாமதமாக சில துணையாட்களுடன் வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் கபிலன், நேராக மேடைக்கு சென்று பிரகாஷ் எம் ஸ்வாமிக்கு கதராடை போட்டுவிட்டு அமர்ந்தார். அவரை பேச அழைத்த போதுதான் ஏன்தான் அழைத்தார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது பார்வையாளர்களுக்கு! நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாஸ்கியிடம், 'வாட் இஸ் யுவர் நேம்?' என்றார். அவரும் தனது பெயரை சொல்ல, 'நான் கல்லூரியில் படிக்கும்போது நீங்க வந்திருந்தீங்க. அப்போதிலிருந்து இப்படிதான் பேசிட்டு இருக்கீங்க. நிறைய மாறணும்' என்று அட்வைஸ் பண்ண, 'பேஸ்த்' அடித்தது பாஸ்கியின் முகத்தில்!

அப்படியே தூதர் பக்கம் திரும்பியவர், 'தேர்தல் என்றால் என்ன?' என்றார். அவரும் ஏதோ விளக்கம் சொல்ல, நானும் சிட்னியில்தான் படிச்சேன். நான் படிச்ச மீடியா ஸ்டடியில் இப்படி சொல்லவே இல்லையே என்றார். (நல்லவேளையாக அவருக்கு அட்வைஸ் ஒன்றும் இல்லை) சரக்கென்று சரத்குமார் பக்கம் திரும்பி, உங்களுக்கு அரசியல் எதிர்காலம் உங்க மனைவியால்தான் அமையும் என்றார். வரவர பத்திரிகைகளின் தரம் தாழ்ந்துவிட்டது என்று அடிஷனல் குண்டையும் தூக்கி போட்டுவிட்டு கீழே இறங்கினார். இவர் பேசியதை கூட மன்னித்துவிடலாம். ஆனால், அவ்வளவு பெரிய கவிஞரின் பிள்ளை தமிங்கிலீஷில் பேசியதுதான் தாங்கலே சாமி என்றார்கள் பார்வையாளர்கள்.

கபிலன், அப்பா சொல்லிக் கொடுத்ததை கடைபிடிங்க. நல்ல விஷயம். அப்படியே அய்யன் சொன்னதையும் கேளுங்க, 'அடக்கம் அமரருள் உய்க்கும்...'

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு விருதுகள் புதிதல்ல, இப்போது மேலும் ஒரு விருதாக சாதனா சம்மான் விருதினை பெற்றிருக்கிறார் அவர். கொல்கத்தாவில் உள்ள இந்திய மொழிக்கழகத்தின் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. பாரதிய பாஷா பரிஷித் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த கழகம் ஆண்டுதோறும் 14 மொழிகளில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழுக்கான விருது வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.

51 ஆயிரம் ரூபாய்க்கு பொற்கிழி, பாராட்டு பத்திரத்தோடு, இவரது படைப்புகளை பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுகிற நல்ல விஷயத்தையும் இந்த அமைப்பே செய்யும் என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி. கொல்கத்தாவில் ஏப்ரல் 18 ந் தேதி நடைபெறும் விழாவில் நேரடியாக இந்த விருதினை பெறுகிறார் கவிஞர். இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, ஜெயகாந்தன் ஆகிய எழுத்தாளர்கள் ஏற்கனவே இந்த விருதினை பெற்றிருக்கிறார்களாம்.

தமிழுக்கு செம்மொழி பெருமையை முதல்வர் கருணாநிதி பெற்று தந்திருக்கும் காலப்பொழுதில், இந்த விருதை தமிழ் படைப்பாளிகளுக்கு வங்காள மண் வழங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். மகாகவி தாகூர் பிறந்த இலக்கிய மண்ணில் இந்த விருதை பெறுவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

கருத்துகள் இல்லை: