மலேசியாவின் முன்னாள் பிரதமர், டாக்டர் மஹாதீர் முஹம்மது மீண்டும் UMNO கட்சியில் சேருவதாக அறிவித்துள்ளார்.
நேற்று நடந்து முடிந்த அக்கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர், விரைவில் கட்சியில் இனைவதாக உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலிக்கிடையே அறிவித்தார். கடந்த ஆண்டு, இப்போதைய பிரதமர், அப்துல்லாவின் செயல்கள் மற்றும் அரசின் கொள்கைகளால் அதிருப்தி அடைந்து இருந்த டாக்டர் மஹாதீர், UMNO கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அறிவித்து இருந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து, அரசினை வெளிப்படையாக விமரிசித்து அப்துல்லா அரசிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது குறிபிடத்தக்கது.
வேணாம் பாஸ்..!
சொன்னாக் கேளுங்க...!
இதை தயவு செஞ்சி பாக்க வேண்டாம்...!
சொன்னாக் கேக்க மாட்டீங்க..!
சரி..! OK..! பாத்துக்கங்க..!
நாம சின்ன வயசுல இருந்தே, "இதைச் செய்ய்யாதே..! அதைச் செய்ய்யாதேன்னு..!"
"இங்க போகாதே..! அங்க போகாதேன்னு..!"
எப்படியெல்லாம்... எதிர் மறைக் (Negative) கட்டளைகளால் சூழப்படுகிறோம்...
அதை நாம எப்படி எதிர்கொள்கிறோம்ங்கறதை விளக்குவதற்க்காக மனோதத்துவ நிபுணர் "டெரன் பிரவுன்"- ங்கறவரு நடத்திக் காட்டிய பரிசோதனையின் வீடியோக் காட்சிதான் அது.
அந்த சின்னப்பசங்க கிட்ட ஒரு பெட்டியக் காட்டி...
இது்லக் கைய வச்சிராதீங்கன்னு... திரும்பத் திரும்ப சொன்னப்பறம் அவங்க என்ன பண்ணினாங்க...?
அப்புறம் என்ன நடந்திச்சு..?-ங்கறதைத்தான் நீங்க வீடியோவுல பாத்தீங்க.
சரி...! நான் ஒண்ணு சொல்றேன்.
"இப்ப நீங்க நீல நிறத்தைப் பத்தி நினைக்கக் கூடாது-ன்னு" நான் சொன்னா...
முதல்ல உங்க மனசுல நீல நிறத்தை நினைச்சுப் பாத்துட்டுத்தான், அதை நினைக்காம இருக்க முயறசி பண்ணுவீங்க.
சரியா..?
இன்னொரு உதாரணம்:
"நான சிகரெட் பிடிக்கக் கூடாது-ன்னு நீங்க நினைச்சீங்க-ன்னா...,"
முதல்ல உங்களுக்கு சிகரெட் நினைப்பு வந்து... அப்புறம்தான் அது வேணாம்-ன்னு நினைப்பீங்க.
இப்ப என்ன ஆகும்- ன்னா... ஆல்ரெடி உங்களுக்கு நீங்களே சிகரெட்டை நினைவுபடுத்திட்டீங்க.
அப்புறமென்ன..?
இன்னேரம் புகை பிடிக்கறதுக்கான முஸ்தீபுல இறங்கியிருப்பீங்க. (புகைப் பழக்கம் உள்ளவர்கள் மட்டும்.)
பைக்ல வெளிய கிளம்பறீங்க.
"இன்னிக்கு எந்த விபத்தும் நிகழக் கூடாதுன்னு" நினைச்சிட்டே போனீங்கன்னா...
கண்டிப்பா ஒரு சின்ன சிராய்ப்போடயாவது வீடு திரும்புவீங்க.
(ஏன்னா நீங்கதானே விபத்தை உங்க நினைப்புலயே கொண்டு போறீங்க?)
ஆக நம்ம மனசை...
நமக்கு எது தேவையோ... அதை நினைக்க பழக்கணும்.
தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விலக்கி...
அங்கே நமக்குத் தேவையான நேர்மறைச் சிந்தனைகளை நிரப்ப வேண்டும்.
"இன்னிக்கி நான் பாதுகாப்பாய் பைக்ல போய் வருவேன்-ன்னு நினைச்சுட்டே வண்டிய எடுங்க."
Relace your Negative thoughts by Positive thoughts.
எப்படி...?
அடுத்த பதிவுல இன்னும் விரிவா பாப்போம்.
"நன்றி: இங்க இருந்துதாங்க பாஸ...,் இந்த வீடியோவைச்் சுட்டேன்.
ஹி..! ஹி..! ஹி..!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக