வியாழன், 2 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-01

ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியில் தமிழீழம் உருவானால் அதைப் பார்த்து என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த 50 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வருக்கு, இலங்கையின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களவர் என்பதும், 30 சதவீதமே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாதா?

ஈழத் தமிழரிடையே வாக்கெடுப்பு என்று கூறாமல் இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவது பிரச்சினையை வேண்டுமென்றே குழப்புவதாகும்.

1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ பிரச்சினை முன்வைக்கப்பட்டு மிகப்பெருவாரியான தமிழர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குப் பின் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் தமிழீழ ஆதரவு வேட்பாளர்களையே தமிழர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தமிழீழம் வேண்டும் என ஈழத்தமிழர்கள் தேர்தல் மூலம் பலமுறை தீர்ப்பளித்திருப்பதை ஏற்று அதற்கு அங்கீகாரம் தர இந்திய அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்த வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படும் கருணாநிதியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

வன்னிபெரு நிலப்பரப்பில் மக்கள் அடைக்கலம் புகுவதற்காக மகிந்த அரசாங்கம் அறிவித்தது பாதுகாப்பு வலயம் அல்ல; மாறாக அது கொலைக்களம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் கவலை வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.

சிறிலங்கா படையினரின் பாதுகாப்பு வலயம் என்ற அந்த கொலைக்களத்திற்கு மக்கள் செல்ல மறுக்கின்றனர், அச்சமடைகின்றனர் எனவும் அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது மக்கள் எதிர்கொள்கின்ற மனிதப் பேரவலம் தொடர்பாக அனைத்துலக சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கில் வன்னியில் இருந்து வெளியிட்ட அறிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார்.

வன்னியில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா படையினரின் எறிகணை, பீரங்கி தாக்குதல்களில் நாள்தோறும் படுகொலைகளை செய்யப்படுவது சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட படுகொலை என்று கண்டனம் தெரிவித்த அவர், அனைத்துலக சமூகம் இதனை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றது என்றும் கூறினார்.

உணவுகளையும் மருந்துப் பொருட்களையும் வன்னிக்கு அனுப்ப விடாது தடுத்து நிறுத்தி பட்டினி போட்டு மக்களை கொல்வதும் மகிந்த அரசாங்கத்தின் மற்றுமொரு உத்தி என்றும் எடுத்துக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம், அவ்வாறான இனப் படுகொலை உலகில் வேறு எங்கும் இடம்பெற்றதில்லை என்றும் தெரிவித்தார்.

காயமடையும் மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களில் ஒரு விழுக்காட்டைக்கூட அரசாங்கம் உரிய முறையில் அனுப்பவில்லை.

இந்நிலையில் மக்கள் பாதுகாப்பாக அடைக்கலம் புகுவதற்கு அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் எவ்வாறு நம்பிக்கையுடன் செல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்து அவலப்பட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அப்படியே கொன்று குவிப்பதும் அங்கவீனமடைய செய்வதும்தான் மகிந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கம்.

இதனை அனைத்துலகம் பார்த்துக்கொண்டிருக்கப் போகின்றதா? அல்லது வெறுமனே கண்டன அறிக்கை வெளியிட்டு கவலை தெரிவிக்கப்போகின்றனரா? எனவும் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம், இந்த விடயத்தில் மௌனமாக இருப்பவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் ஆவேசமாக எடுத்துக் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றிலேயே இந்தக் கருத்தை தமிழக மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்தியாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான என்.டி.ரி.வி. நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பிலேயே இந்தப் பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்தவர்களில் 66 வீதமானவர்கள் "ஆம்" எனக் கூறியிருக்கின்றனர் என நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட என்.டி.ரி.வி.யின் இந்த கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.

இதேவேளையில் தமிழக அரசியல் விவகாரங்களைப் பொறுத்தவரையில் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு, முதலமைச்சர் கருணாநிதிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி ஜெயலலிதாவுக்கும் இடையில் கடுமையான நேரடிப் போட்டி இருக்கும் என்பது போலவும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கின்றது.

தற்போதைய நிலையில், கருணாநிதிக்கு 41 வீதமானவர்களும் ஜெயலலிதாவுக்கு 40 வீதமானவர்களும் ஆதரவளித்திருப்பதாக என்.டி.ரி.வி.யின் இந்த கருத்து கணிப்பு முடிவு காட்டுகின்றது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியில் தமிழீழம் உருவானால் அதைப் பார்த்து என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த 50 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வருக்கு, இலங்கையின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களவர் என்பதும், 30 சதவீதமே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாதா?

ஈழத் தமிழரிடையே வாக்கெடுப்பு என்று கூறாமல் இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவது பிரச்சினையை வேண்டுமென்றே குழப்புவதாகும்.

1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ பிரச்சினை முன்வைக்கப்பட்டு மிகப்பெருவாரியான தமிழர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குப் பின் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் தமிழீழ ஆதரவு வேட்பாளர்களையே தமிழர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தமிழீழம் வேண்டும் என ஈழத்தமிழர்கள் தேர்தல் மூலம் பலமுறை தீர்ப்பளித்திருப்பதை ஏற்று அதற்கு அங்கீகாரம் தர இந்திய அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்த வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படும் கருணாநிதியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான்'' என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் சீமான் கடந்த பெப்ரவரி 21-ம் தேதி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி சிறை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்ய அனுமதி கோரினார். இதற்கு சிறைத்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் சீமானுடன் பேச்சு நடத்தினார். உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சீமான் தனது போராட்டத்தைக் நேற்று கைவிட்டு மதியம் உணவு சாப்பிட்டார்.

இந்நிலையில் 31.03.2009 செவ்வாய் மாலை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று இயக்குனர் சீமானை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராமதாசு, ''பழிவாங்கும் நடவடிக்கையினாலே இயக்குனர் சீமான் சிறையில் வாடுகிறார்.

இலங்கை தமிழர்கள் இனமே கூண்டோடு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து திரைப்பட கலைஞர்களை திரட்டியும், மற்ற கலைஞர்களை திரட்டியும் போராட்டம் நடத்தினார்.

தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதற்காக, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான்'' என்று தெரிவித்தார்.

''தன்னை பகைக்கிறவர்களை உள்ளே தள்ளுவது கலைஞர் வழக்கம்.

இதனால்தான் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் தேர்தல் நேரம் பார்த்து எதற்காக இயக்குநர் சீமான் கைது செய்யப்பட வேண்டும்'' என்று கேள்வி எழுப்பிச் சென்றார்.

நன்றி தமிழ்வின.காம்
சிங்கள இனவாத அரசின் தமிழினப் போரை உடனடியாக நிருத்தக் கோரியும், மக்களுக்கு உடனடியாக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப கோரியும் பிரித்தானிய மாணவர்கள் வெஷ்மினிஸ்டர் பாராளுமன்றம் முன்பாக அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று(31/03/2009)பிரித்தானிய மாணவர்கள் வெஷ்மினிஸ்டர் பாராளுமன்றம் முன்பாக நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அமைதிப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்கக்கோரியும்,
எமது சுதந்திர தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரியும் மாணவர்கள் அனைவரும் தமிழீழ தேசியக்கொடியை தாங்கியவாறும், அவர்கள் கோரிக்கைகளை பதாகைகளாகவும்,சிங்கள அரசின் இன அழிப்பை வெளிக்கொண்டுவரும் வகையில் நிழல்படங்களைத்தாங்கியவாறும் மிக எழுச்சியுடன் போராட்ட்டத்தை முன்னெடுத்து நடாத்துகின்றனர்.
மேலும் இரவையும் பொருட்படுத்தாமல் மக்கள் மாணவர்கள் என அனைவரும் பங்களித்தவண்ணம் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: