வியாழன், 2 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-01

இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது.

இன்று(31/03/2009) மதியம் பன்னிரெண்டு மணிக்கு பிரித்தானியா சவுத் பாங்க் பல்கலைக் கழக மாணவர்களால், மாணவர்கள் வெகு உர்ச்சாகமாக தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் அணிவகுத்து நின்று, அகவணக்கத்துடன், தேசியக் கொடிப் பாடல் இசைக்க தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதன் பின்னர் மறைந்த முன்னால் பிரித்தானிய மாணவரும் ஈகப் பேரொளியுமான முருகதாஸிற்கு சுடர் ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்பு மாணவர்கள் அனைவரும் மலர்தூவி தங்கள் மரியாதையை செலுத்தினர்.
மாணவர்கள் அனைவரும் வணக்கம் செலுத்திய பின்னர் வேற்று இன மாணவாகளுக்கு இலங்கையில் இனவாத சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்புப்போர் பற்றியும், தமிழீழ வரலாறு பற்றியும் எடுத்துரைத்தனர்..

அதே வேளை சிங்கள அரசின் தமிழின அழிப்பை நிறுத்துமாறு பிரித்தானிய தலைமை அதிபர் கோல்டன் பிரவுன் அவர்களுக்கு மாணவர்களால் அஞ்சல் அட்டைகளில் அவர்களின் விபரங்கள் நிரப்பப்பட்டன.
பல்கலைக் கழகம் முழுவதும் தமிழின அழிப்பு பற்றியும் எமது பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரியும் பல பதாதைகள் ஒட்டப் பட்டுள்ளன.

இதன் தொடக்கமாக மாணவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவிருந்த பொழுது பல்கலைக் கழகம் தேசியக் கொடியை ஏத்துவதற்கு அனுமதி மறுத்தது. மாணவர்கள் நிர்வாகத்திடம் தாங்கள் நிட்சயம் எங்கள் தேசியக் கோடியை ஏத்துவோம், இது எங்கள் தேசியக் கொடி என்று வாதாடினர். மாணவர்களைக் கட்டுப் படுத்த முடியாத நிர்வாகம் காவல்த்துறை உதவியை நாடினர். விரைந்து வந்த காவல்த் துறையினரிடம் மாணவர்கள் தங்கள் போராட்டம் தொடர்பாகவும் தேசியக் கொடி தொர்பாகவும் விளக்கி கூறினர்.பின் காவல் துறையினர் அனுமதி அளித்தபின் பல்கலைக் கழக நிர்வாகமும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.



தனது உதவியாளரை கடத்தி மறைத்து வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்லிவ வந்த அசின் நேற்று இரவு 12.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக அவரது தந்தை இன்று காலை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்.
அந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
கடந்த சில வாரங்களாக அசினின் உதவியாளரை காணவில்லை என்று அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்திருந்தார் அதனைத் தொடர்ந்து அவரைத் தேடி மும்பாய் தூத்துக்குடி சென்னை ஆகிய இடங்களில் அவர் தங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து சிறப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதை அடுத்து நேற்று இரவு அசின் இந்திப் படசூட்டிங்கை முடித்து விட்டு வீடு திரும்பியவேளை வீட்டு வாசலில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்கள் அவரைக் கடத்திச் சென்றதாக அவரது கார் சாரதி தெரிவித்தார்.
இந்த செய்தி முழுவதும் ஏப்ரல் 1 ஆம் திகதியான முட்டாள் தினத்தில் முட்டாள் அனைவருக்காகவும் வெளியிடப்படுகின்றது.


நமக்கு வெறும் எண்ணிக்கையாகக்கூடத் தோன்றும் தினம் நடக்கும் வன்னிச்சாவுகள். இந்த கொலைபாதக சோனியா, புத்தமத ஆதரவு பியாங்கா, ராஜாபிச்சை கோஷ்டிகளின் ரத்தவெறி ... ஒரு ஊசிமுனை நிலம் கூட கொடுக்கமாட்டோம் .. என்று சூளுரைத்த துரியோதனனைக்கூட மிஞ்சிவிட்டார்கள் இந்த நவீன கௌரவர்கள்! இதுவரை இறந்தசிறுவர்கள் விடுதலைப்புலிகளால் துவக்குகள் கொடுத்து போர்முனைகளுக்கு அனுப்பப் பட்டவர்கள் என்று நிரூபித்த இலங்கை அரசு..இப்பொழுது புதிதாக ஒரு விசயத்தையும் அகில உலக கருணாமூர்த்திகள் சபையிடம் சான்றுகளோடு நிரூபித்துள்ளது. அந்த முக்கிய விசயம் இதுதான். புலிகள் குழந்தைகளுக்குக்கூட துப்பாக்கி பயிற்சி கொடுத்து போரின் முன்னரங்குகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள் என்பதுவேயாகும். இதைப்பார்த்து உலகநாடுகள் அதிர்ச்சியும் வேதனையையும் தமது சப்புக்கொட்டுகள் மூலம் பீடியாக்களில் தெரியப்படுத்திக்கொண்டுள்ளன. இதோ கீழே புலிகளின் குழந்தை கரும்புலியின் படம்.


(குறிப்பு: சத்தியமாக இந்த வரியை நக்கல் நையாண்டிக்காக எழுத முடியவில்லை. யார் பெற்ற மகவோ.. படத்தைப் பாருங்கள்... இப்படி ஈக்கள் மொச்சிக்கிடக்கிறதே. சண்டாளி சோனியாவின் மார்பில் ரத்தம் ஓடுகிறதா என்று பாருங்கள் தமிழக வாக்காளர்களே)

எஸ்.வி.சேகர்..

அவரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகவே அறிவேன்..அவரைப் பற்றியும்..அவர் அரசியல் ஈடுபாடு பற்றியும்..பதிவுகள் எல்லாம் படித்தேன்..எனக்குத் தெரிந்த அவரை இத்தருணத்தில் சொல்ல வேண்டியது..என் கடமை என எண்ணுவதால் இப்பதிவு.

அவர்...எடிடிங், மிக்ஸிங் என்று பல தொழில் நுணுக்கங்களை அறிந்தவர்.வி.கோபாலகிருஷ்ணன் நாடகக் குழுவில் இருந்தவர்.பின்..தனக்கென ..நாடகப்பிரியா என்ற குழுவை ஆரம்பித்து..நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார்.தானும் வளர்ந்தார்..கூட நடித்தவர்கள், எழுத்தாளர்களையும் வளர்த்தார்.

கிரேஸி மோகன்..முதலில் இவருக்குத்தான் நாடகம் எழுதினார்..கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்...பின்னர் மோகன் தனிக் குழு ஆரம்பிக்க சேகரும் தனது ஒத்துழைப்பைத் தந்தார்.

கோபு-பாபு..இவருக்கு நாடகம் எழுதினப் பின்னரே..திரைஉலகிலும் கொடிகட்டி பறந்தனர்.சின்னத்திரையில் வலம் வந்துக் கொண்டிருக்கும் பிருந்தாதாஸ் முதலில் இவருடன் நாடகங்களிலும்...பின் பொதிகையில் வண்ணக்கோலங்கள் தொடரிலும் நடித்தவர்.

சரி..விஷயத்திற்கு வருகிறேன்...

யாருடைய சிபாரிசும் இல்லாமல்...தனக்கென தனிப்பாணியில் வளர்ந்தவர் இவர்.ஒரு முறை சட்டசபைக்கு சுயேச்சை வேட்பாளராக நின்று 1500க்கு மேல் வாக்குகள் பெற்றார்.அச்சமயம் தனிக்கட்சி ஆரம்பித்திருந்த நெடுன்செழியன் 450 ஓட்டுக்களே வாங்கி இருந்தார்.ஒரு நாடகத்தில் இவர் இதைச் சொல்ல..அன்று நாடகத்திற்கு வந்திருந்த ஜெ மிகவும் ரசித்தார்.

பின்..2006 தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில்..வேட்பாளராக மைத்ரேயன் பெயர் அடிபட கடைசியில் சேகர் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜெ யின் குட்புக்ஸில் இவர் இருந்ததை சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.தகராறு தி.நகர்.எம்.எல்.ஏ., கலைராஜன் ரூபத்தில் முதலில் ஆரம்பித்தது..

எல்லோருக்கும் வேண்டியவரான இவர் ...அனைத்துகட்சியினர் விசேஷங்களுக்கும் சென்றார்.தமிழக அரசியலில் மட்டும் அது மா பாதகம் ஆகும்.தன் மகள் திருமணத்திற்கு ஜெ வை அழைத்தும் வரவில்லை.(அழைப்பிதழில் ஜெ புகைப்படம் போடவில்லை..அதனால் அம்மாவிற்கு கோபம் என்றும் கூறப்பட்டது).பின் சத்யராஜ் வீட்டு திருமணத்தில் ஸ்டாலினுடன் புகைப்படத்தில் இருந்தார் சேகர்.தன் இல்லத்திருமணம் ஒன்றிற்கு கலைஞர் வர அவரை வரவேற்று மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தலைமை தன்னை விலக்குகிறது என தெரிந்ததும்...கலைஞரை வீட்டில் சந்தித்து..திரைப்படவிழா விற்கு 25 லட்சம் வாங்கி வந்தார்.

இந்நிலையில்..அ.தி.மு.க.,பொதுக்குழுவிற்கு இவருக்கு அழைப்பில்லை..தனது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டியநிலையில் இருந்தவர்..பிராமணர்களுக்காக இட ஒதுக்கீடு என் ஆரம்பித்துள்
ளார் .

சேகரை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்...எம்.எல்.ஏ., பதவியில் திறம்பட செயல் பட்டவர் இவர்.தொகுதி மக்கள்..எந்த கட்சியை சேர்ந்தவராய் இருந்தாலும்..எளிதில் பார்க்க முடிந்தவர்.மாதம் ஒரு முறை மக்கள் குறைகளை அவர்களை சந்தித்து கேட்டவர். அ.தி.மு.க., கண்டிப்பாக ஒரு நல்லவரை இழக்கிறது.

ஆனால்...டோண்டு சொன்னது போல..இடஒதுக்கீடு விஷயத்தில்..இவருடன் எனக்கு உடன்பாடில்லை.
இன்று உலகம் முழுதும் முட்டாள்கள் தினம் கொண்டாட படுகிறது. நீங்கள் ஏமாற்றப்படாமல் இருக்க நீங்கள் நீங்களாவே இருங்கள். ஏன் இப்படி எச்சரிக்கை, டிப்ஸ், ஐடியா என்று சொன்னவுடன் உங்க சொந்த மூளைய நம்பாம வரீங்க.

போங்க சாமிகளா போங்க, அப்படியே பின்னூட்டம் போட்டுட்டு போங்க. பின்னூட்டம் போடுறவங்க தான் புத்திசாலிகள் என்று அனைவருக்கும் தெரியும். நான் புதுசா ஒன்னும் சொல்ல வேண்டியது இல்லை.



.
இன்று உலகம் முழுதும் முட்டாள்கள் தினம் கொண்டாட படுகிறது. நீங்கள் ஏமாற்றப்படாமல் இருக்க நீங்கள் நீங்களாவே இருங்கள். ஏன் இப்படி எச்சரிக்கை, டிப்ஸ், ஐடியா என்று சொன்னவுடன் உங்க சொந்த மூளைய நம்பாம வரீங்க.

போங்க சாமிகளா போங்க, அப்படியே பின்னூட்டம் போட்டுட்டு போங்க. பின்னூட்டம் போடுறவங்க தான் புத்திசாலிகள் என்று அனைவருக்கும் தெரியும். நான் புதுசா ஒன்னும் சொல்ல வேண்டியது இல்லை.



.

கருத்துகள் இல்லை: