வியாழன், 2 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-01

முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும்(அவ்வ்வ்வ்வ்வ்...) சென்ற ஆண்டு தொடங்கிய இந்த 'வியாதி' இந்த ஆண்டு வரை நீடிக்கிறது. சென்ற ஆண்டு ஒரே கதையை வைத்து 4 நண்பர்களை ஏமாற்றினேன். (இதலாம் ஒரு பொழப்பா அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழுந்தாலும்... விழாத மாதிரி இருந்துகிறேன்)


எத்தனையோ கதை எழுதுறோம்(ஓ... நீ எழுதுவதற்கு பெயர் கதையா.. சரி ரைட்டு), நமக்காக ஒரு கதைய அவிழ்த்துவிடுவோமே என்று ஆரம்பித்தேன். ஏப்ரல் 1ஆம் தேதி அன்று நிறைய பேர் உஷாராக இருப்பதால், ஒரு வாரத்திற்கு முன்பே என் வேட்டையை ஆரம்பித்துவிட்டேன். இப்போது எல்லாம் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று யாருமே ஃபோனைகூட எடுப்பதில்லை! ஹிஹி.... சரி நம்ம கதைக்கு வருவோம். இந்த வருடம் target அப்பாவி 5 நண்பர்கள்.


1) தோழனிடம் ஒரு வாரத்திற்கு முன் பேசி கொண்டிருந்தபோது, அவன் என்னை கிண்டல் செய்து பேசிய போது நான் சொன்னேன், " ஏய் இப்படி பேசாதே...என் bf கேட்டாருன்னா தப்பா நினைப்பார்." என்று பொய் சொன்னேன். அவன் அதிர்ச்சியாய், "என்னது bf? எப்போ இதலாம் நடந்துச்சு?" என்று ஆரம்பித்தவனிடம் ஒரு மெகா மகா பொய் கதையை கூறினேன். கொஞ்ச நாள்கள் கழித்து, bf என்னிடம் சண்டை போட்டதாகவும், நாங்க பிரிந்துவிட்டோம் என்பதாகவும் சொன்னேன். ஒரு வாரம் ஓடிய கதை, இன்று தான் உண்மையை போட்டு உடைத்து, இந்த உலகில் நீயும் ஒரு முட்டாள் தான் என்று மகுடம் சூடி பாராட்டினேன். :) பையன் கோபத்துல கொந்தளிச்சுகிட்டு இருக்கான்!!


2) வூட்டுல மாப்பிள்ள பாக்குறாங்கன்னு இன்னொரு கதை, இது சிட்னியில் படிக்கும் என் பள்ளி தோழிக்கு இமெயில் மூலம் அனுப்பினேன். பொண்ணு பயந்து, மிரண்டு போய், அட்வைஸ் மேல் அட்வைஸ் அனுப்பி அதன் பாச மழையை பொழிந்துவிட்டது. என்ன தான் சொல்லுங்க... நமக்கு ஒரு கஷ்டம் வந்தா... இந்த பாசக்கார புள்ளைங்க ரொம்ம்ப தவிச்சுடுறாங்கப்பா!! எப்படி ஓடியது என்பதை காண இங்க செல்லலாம்! இமெயில் கலாட்டா

பிறகு, அவளிடம் உண்மையை போட்டு உடைத்து, எனது இரண்டாவது சதத்தை அடித்தேன்.


3) இது மூன்றாவது பந்து, கண்டிப்பாக hatrick அடித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஆக, மேல் சொன்ன இரண்டாவது கதையை குறுந்தகவல் மூலம் அனுப்பினேன் ஒரு தோழியிடம்.அவளும் ஓரளவுக்கு ஏமாந்துவிட்டாள்.


4) குறந்தகவல், இமெயில்....ஒகே. யாரு யாரோ கண்டுபிடித்ததை பயன்படுத்தினாயே, ஏன் நான் கண்டுபிடித்ததை பயன்படுத்தவில்லை என்று alexander grahambell கேட்டுவிடகூடாது பாருங்க. ஆக, நேற்று என் கல்லூரி தோழியிடம் ஃபோன் செய்து , "என் ஆண்ட்டி ஒருத்தர் ஒரு film production company வச்சு இருக்காங்க. அவங்க ஒரு குறும்படம் எடுக்க போறாங்க. உன்னைய நியூ இயிர் பார்ட்டில பாத்தாங்க. உன் ஃபோட்டா காட்டுனாங்க. நான் சொன்னே இந்த பொண்ணு என் தோழி தானு. என்னைய உன்கிட்ட பேசி பாக்க சொன்னாங்க. அதுல உன்னைய நடிக்க கூப்பிடுறாங்க. அந்த படம் ஒரு இளையர பத்தி.' என்றேன். பொண்ணு ரொம்ப fitness conscious. ஒல்லியா இருப்பா. அதனால நான் சொன்னேன் ," இந்த படத்துக்காக நீ ஒரு 20 கிலோ வேட் போடனும்." என்றதும் ஆச்சிரியத்தின் உச்சிக்கு போய்விட்டாள்.

அதுக்கு அப்பரம் உண்மை தெரிந்தபிறகு, என்னை பாராட்டிய ஒரே ஜீவன் இவள் தான். சிரித்து கொண்டே அவள், "உனக்கு எப்படி இப்படிலாம் தோணுது. very innovative idea."

5) இன்னொரு கல்லூரி தோழியிடம் assignment due date நாளைக்கு என்றதும் பதறிவிட்டாள். அவள் எனக்கு பாராட்டு விழா எடுக்க போவதாக சொல்லியிருக்கிறாள். ஹிஹி...

ஆமா... எல்லாரையும் ஏமாற்றுகிறோமே. நம்மை ஏன் யாருமே ஏமாற்றுவதில்லை?? :)))

10) மேனேஜருக்கு/பாஸுக்கு ஃபோன் பண்ணி இன்னைக்கு லீவு வேணும்னு கேளுங்க. குடுக்கலைன்னா அடம்பிடிங்க. ஆனா கரெக்ட் டைமுக்கு ஆஃபீஸுக்குப் போயிடுங்க. (நீங்க மேனேஜராவோ, பாஸாவோ இருந்தா உங்க கீழ வேலை செய்யறவங்ககிட்ட இந்த விளையாட்டை விளையாடாதீங்க. வரலைன்னுட்டு போனா பல அதிர்ச்சிகள் உங்களுக்குக் காத்திருக்கும்!)

7) 'இன்னைக்கு முக்கியமான ஆடிட்டிங் இருக்கு. லஞ்சுக்கு வரமாட்டேன். ஒண்ணும் சமைக்க வேண்டாம்'னு மனைவிகிட்ட சொல்லிடுங்க. (பெரும்பாலான வீடுகள்ல கணவன் சாப்பிட வரலைங்கறப்ப வீட்ல ஒண்ணுமே செய்ய மாட்டாங்க. சிம்பிளா சாப்பாடு, ரசம்னு முடிச்சிருப்பாங்க) சாப்பிடற டைமுக்கு கொஞ்சம் முன்னாடி அவங்களுக்குப் பிடிச்ச ஏதாவது (பிரியாணி, ஃப்ரைடு ரைஸ்..) வாங்கீட்டுப் போய் சர்ப்ரைஸ்+ஏப்ரல் ஃபூல் ஆக்கி.. அவங்க சாப்பிட வெச்சிருக்கறத நீங்க சாப்பிடுங்க.

4) கடன் வாங்கின தொகையை உங்க நண்பனுக்கு 'டக்'னு போய்க் குடுங்க. (குடுக்கவே மாட்டீங்க-ன்னு நெனைச்சிருப்பான்.)

6) மகனோ, மகளோ ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கற விளையாட்டுப் பொருளை வாங்கீட்டுப் போய்க் குடுங்க. 'ஒண்ணும் இருக்காது. ஏப்ரல் ஃபூலா இருக்கும்'னு கமெண்ட் பண்ணீட்டே திறப்பாங்க. (கவர்ல ஏப்ரல் ஃபூல்-னே எழுதலாம்)

3) ரொம்ப நாள் போகாத உங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு அல்லது சின்ன மனஸ்தாபம் இருக்கற ஃப்ரெண்ட் வீட்டுக்கு ஏப்ரல் ஒண்ணாம்தேதி காலைலயே போய் நில்லுங்க. அவன் செல்லுக்கு கூப்ட்டு கதவைத் திறக்கச் சொல்லுங்க.

1) பஸ்ல ரெண்டு பேர் போகறப்போ உங்க ஃப்ரெண்டை டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க. உங்ககிட்ட கண்டக்டர் டிக்கெட் கேட்டா 'ஸ்டாஃப்' இல்லைன்னா 'பாஸ் இருக்கு'ன்னு சொல்லுங்க. ரொம்ப நோண்டிக் கேட்டப்பறம் டிக்கெட் வாங்கினதச் சொல்லுங்க.

5) செல்லுல பாலன்ஸ் இல்லாத உங்க ஃப்ரெண்டைக் கூப்ட்டு டேய் இன்னைக்கு ஏர்செல்/ஏர்டெல் (அவரோட சர்வீஸ் ப்ரொவைடர்..) சார்பா 50 ரூபா டாக்டைம் ஃப்ரீன்னு சொல்லுங்க. நம்பமாட்டான். கொஞ்ச நேரத்துல நீங்க 50 ரூபாய்க்கு அவனுக்கு ரீசார்ஜ் பண்ணீடுங்க. அவனுக்கு ஒரு சந்தோஷம்.. அவன் இதே மாதிரி நாலஞ்சு பேருக்கு கூப்ட்டு சொன்னா... அதுனால நாலஞ்சு பேரு ஃபூலானா உங்களுக்கும் சந்தோஷம்.

2) அடிக்கடி உங்களுக்கு பைக் இரவல் தர்ற ஃப்ரெண்டோட பைக்கை வாங்கீட்டு போய் நீட்டா வாட்டர் சர்வீஸ் பண்ணிக் கொண்டு வந்து வெச்சுடுங்க. அப்பறம் அவன்கிட்ட சாவியைக் குடுக்கறப்போ 'சாரிடா... லைட்டா ஒரு வண்டில இடிச்சதுல லெஃப்ட் இண்டிகேட்டர் போயிடுச்சு. ரெடி பண்ணிக்க. எவ்ளோ ஆனாலும் தந்துடறேன்'னு சொல்லிடுங்க. ரொம்ப எரிச்சலோட போறவனுக்கு சந்தோஷ ஏப்ரல் ஃபூலா இருக்கட்டும்.

8) இவன் நல்லா எழுதுவான்-னு நம்ம்ம்ம்ம்பி வர்றவங்கள இப்படி மொக்கையா எழுதி கழுத்தறுங்க. ('அதத்தான் டெய்லி பண்றீயே' என்ற கமெண்ட் கார்க்கி ரிசர்வ் பண்ணி வெச்சுட்டதால வேறமாதிரி என்னைக் கிண்டலடிக்க ட்ரை பண்ணுங்க..)
தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் அதற்கான டிமாண்ட் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தொடர்ந்து இரண்டாவது மாதமாக, மார்ச் மாதத்திலும் தங்கத்தை நாம் இறக்குமதி செய்யவே இல்லை. தங்கத்தின் விலை தொடர்ந்து 10 கிராமுக்கு ரூ.15,000 என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனால் தங்க நகை கடைகளில் வழக்கமான கூட்டத்தை பார்க்க முடியவில்லை. தங்கத்திற்கு டிமாண்ட் இல்லாததால் மார்ச் மாதத்திலும் தங்கத்தை நாம் இறக்குமதி செய்யவே இல்லை. இரண்டாவது மாதமாக தங்கம் இறக்குமதி ஜீரோ வாக இருக்கிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை இதே போல் இருந்தால் நாம் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும் என்கிறார் பாம்பே புல்லியன் அசோசியேஷன் இயக்குனர் சுரேஷ் ஹூண்டியா. கடந்த 2008 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாம் 21 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறோம். ஜனவரி - மார்ச் மாதத்தில் மொத்தம் 61 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறோம்.ஆனால் இந்த வருடம் ஜனவரி - மார்ச் மாதத்தில் நாம் இறக்குமதி செய்திருக்கும் தங்கம் வெறும் 1.8 டன் மட்டுமே. தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்பட்டும் ' அக்ஷய திருதி ' வர இருப்பதால், அப்போது தங்கத்திற்கு டிமாண்ட் இருக்காதா என்று ஹூண்டியாவிடம் கேட்டபோது, எந்த முக்கிய நாள் வந்தாலும் விலை அதிகமாக இருந்தால் யாரும் வாங்கப்போவதில்லை. எல்லாம் விலையை அடிப்படையாகத்தான் இருக்கிறது என்றார்.

நன்றி :தினமலர்
அதான் படிக்காதிங்க சொன்னேன் ...நீங்க கேட்க்காம படிச்சிடிங்க ..
சொல்றத கேட்காத குழந்தைகள் கிட்ட என்ன பேச்சு :-) வேண்டிக்கிடக்கு
அதனால நான் கோவிச்சிக்கிட்டு சொல்லவந்ததை சொல்லல ....
வந்தது வந்துடிங்க பழைய பதிவுகளை படித்து சுவைத்துவிட்டு வோட்டு போட்டுட்டு செல்லுங்கள்

இந்த பதிவுக்கு வோட்டு போட்டுட்டு போங்க
(
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் )
கிழே உள்ள தம்ஸ் அப் அல்லது தம்ஸ் டவுன் ரெண்டுல ஒன்னு அமுத்துங்க




ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பயணிகள் ரெயில் டிக்கெட் கட்டண மாற்றம் இன்று (புதன் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறப்பட்டிருப்பதாவது:- கட்டண மாற்றம் 2009-2010 ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் கட்டணத்தில் ஏற்பட்ட மாற்றம் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இரண்டாம் வகுப்பு:- புறநகர், மெயில்/ எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சாதாரண பயணிகள் ரெயில்களில் அடிப்படைக் கட்டணம் ரூ.50 ஆக இருந்தது. அது ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. சாதாரண ரெயில்களில் 10 கிலோ மீட்டர் வரை பயணம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது.
புறநகர் ரெயில்கள்:- புறநகர் ரெயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. படுக்கும் வசதி கொண்ட மெயில்/எக்ஸ்பரஸ் ரெயில்கள், சாதாரண பயணிகள் ரெயில் கட்டணத்தில் 2 சதவீதம் குறைப்பு செய்யப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி, இரண்டடுக்கு ஏ.சி., மூன்றடுக்கு ஏ.சி, சேர் கார் வகுப்புகளுக்கு 2 சதவீத கட்டண குறைப்பு செய்யப்படும். மெயில்/ எக்ஸ்பிரஸ் மற்றும் சாதாரண ரெயில்களில் முதல் வகுப்பல் எந்த கட்டண மாற்றமும் இல்லை.
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஜூலை 31-ந் தேதி வரையிலும், செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து ஜனவரி 31-ந் தேதி வரையிலும் நெரிசல் மிகுந்த காலமாக கருதப்படும். அதே போல் பிப்ரவரி 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதி வரையிலும், ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் நெரிசல் குறைந்த காலமாகவும் கருதப்படும். இந்த மாற்றங்கள் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
கட்டண விகிதங்கள் மாற்றப்பட்டிருப்பதால், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்களிலேயே அந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம். பயணத்திற்கு முன்பாக இந்த தொகையை பெற விரும்புபவர்கள் ஒரிஜினல் டிக்கெட்டுகளை ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு கட்டண வீதம் மாற்றி அமைக்கப்பட்ட புதிய டிக்கெட்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பல் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை: