ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற பெரிய வங்கிகள் உள்பட 18 பொதுத்துறை வங்கிகளில் 2009 - 10 நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.17,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. பெயர் சொல்ல விரும்பாத மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டை பெருக்கும் நடவடிக்கையாக சுமார் ரூ.16,000 கோடியில் இருந்து ரூ.17,000 கோடி வரை முதலீடு செய்து அந்த வங்கிகளின் பங்குகளை வாங்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் மட்டும் ரூ.600 கோடியில் இருந்து ரூ.700 கோடி வரை முதலீடு செய்யப்படும் என்றும், தேர்தலுக்குப்பின் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுக்குப்பின்,மத்திய அரசு இது குறித்த முறையான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தினமலர்
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், ஈழத்தமிழர்பிரச்சனையில் தீவிரமாகச் செயற்பட்டவர். விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை மிகுதியாக நேசிப்பவர். ஆயினும் இப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். இது ஈழவிடுதலை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது.
இந்நிலையில் தொல். திருமாவளவனின் இந்தப் பேட்டி அவரது சுயநிலையை ஒரளவுக்கு விளக்குவதாக இருக்கிறது.ஒடுக்கபட்ட ஒரு சமூகத்தின் தலைமைப்பொறுப்பிலிருப்பவரின் தொலை நோக்குப் பார்வையைத் துலக்குவதாகவும் இருக்கிறது. திருமாவுக்கு என்னாச்சு என்னும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இருக்கிறது. திருமாவை போற்றுபவர்கள் தூற்றுபவர்கள் எவராயினும் அவசியம் பார்க்க வேண்டிய செவ்வி இது.
ஊடகவியலாளர் சுதாங்கனின் கேள்விகளும், திருமாவின் பதில்களும் மிக நேர்த்தியாக வருகிறது. கீழேயுள்ள இணைப்புக்களில் தொடர்ச்சியாகக் காணலாம்.
இணைப்புக்குச் செல்ல முன் கீழேயுள்ள குறிப்பினையும் வாசித்துச் செல்லுங்களேன்.
thamilbest.com இணையத்தளம், இனிவரும் காலங்களில், 4tamilmedia.com இணையத்தளத்துடன் இணைந்து, புதிய மேம்படுத்தல்களுடன் இனிய சேவையினை வழங்கவுள்ளதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். தயவு செய்து உறுப்பினர்கள் அனைவரும் மீளவும் உங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.
மேலும் உங்கள் வலைப்பதிவிலிருந்து வாக்களிக்கும் வசதியும் புதிதாக ஏற்படுத்தப்ட்டிருக்கிறது என்பதையும் அறியத்தருகின்றோம். அதை செயற்படுத்த கீழ் உள்ள நிரலை blogger.com இல் layout - edit HTML சென்று Expand Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து இன் பின்னால் இணையுங்கள். அதன் பின் நீங்கள் குறிப்பிட்ட பதிவை திறந்து அதை thamilbest.com இல் இணைக்கலாம் மற்றும் வாக்களிக்கலாம்.
thamilbest.com, 4tamilmedia.com, ஆகிய இரு தளங்களின் இணைவில் மேலும் ஒரு சிறப்பாக, thamilbest.com ல் இணைக்கப்படும் அனைத்துப் பதிவுகளும், வெளியாகும் ஒழுங்கு முறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு 4tamilmedia.com தளத்தின் முகப்பிலும் தெரியக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உங்கள் இணைப்பினை அதிக இணையப் பயணாளர்கள் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்குமென நம்புகின்றோம்.
இத் தளத்திற்கு உங்கள் வலைப்பதிவில் அல்லது வலைத்தளத்தில் இணைப்பக் கொடுப்பதற்கு பினு: வுரும் நிரலியைப் பன் படுத்தலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிரபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்துள்ளதாகவும்,அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் இவர் நெறிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன், படையினருக்கு எதிரான மோதலில் மரணமடைந்தார் என விடுதலை புலிகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிரபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்துள்ளதாகவும்,அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் இவர் நெறிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன், படையினருக்கு எதிரான மோதலில் மரணமடைந்தார் என விடுதலை புலிகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு வடக்குப் பகுதியில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற உக்கிர மோதலின்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனி காயமடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இருதரப்பு மோதலின் போது விடுதலைப் புலிகளின் பிரதம தொழில் நுட்பவியலாளரான கிருபாகரன் என அழைக்கப்படும் மதியழகன் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Military: Sri Lankan rebel leader's son injured
COLOMBO, April 1 (Xinhua) -- The Sri Lankan military said Wednesday that Tamil Tiger rebels' leader Velupillai Prabakaran's son Charles Anthony had been injured in a battle in the north.
Anthony was injured days ago in the no-fire zone in Puthukkudiyiruppu of the northern Mullaittivu district, said military spokesman Udaya Nanayakkara.
He had received treatment for gun shot injuries in a temporary Liberation Tigers of Tamil Eelam (LTTE) hospital, said Nanayakkara.
"Military intelligence have confirmed the injuries to Charles Anthony," Nanayakkara told reporters.
Anthony was the eldest of the rebel leader's three children and he was believed to be heading the LTTE's air wing.
The verification of the claims is almost impossible as the authorities do not allow independent journalists or observers to travel to the battle field.
The military say the LTTE's over two-decade-old armed struggle to set up a separate homeland for the minority Tamil community is nearing its end as the organization is confined to an area of just 21 sq km in Mullaittivu down from over 15,000 sq km they held when the current military offensive began in 2006.
More than 70,000 people have been killed in the conflict since the mid-1980s in one of the world's longest civil wars.
தேவையானப்பொருட்கள்;
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
பட்டை இலை - சிறிது
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
ஒரு குக்கரை அடுப்பிலேற்றி, அதில் நெய்யை விட்டு சூடாக்கவும். சீரகம், பட்டை இலை இரண்டையும் போட்டு சற்று வறுக்கவும். பின்னர் அத்துடன் பச்சை பட்டாணியைப் போட்டு சில விநாடிகள் வதக்கி, அத்துடன் ஊற வைத்த அரிசியை, நீரை வடிகட்டி விட்டு சேர்க்கவும். சிறிது கிளறி விட்டு 4 கப் நீரை விட்டு உப்பு போட்டு, குக்கரை மூடி, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விடவும்.
காரமில்லாத இந்த சாதம் குழந்தைகளுக்கு ஏற்றது. பெரியவர்கள், காரமான குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தமிழ்சினிமாவின் காஸ்ட்லி மனிதர் தாணுதான்! பல் குத்துவதற்கு கூட தங்க ஊசியை பயன்படுத்துவார் போலிருக்கிறது. இல்லையா பின்னே? 'அண்ணே, டேட்ஸ் தர்றேன். ஒரு படம் பண்ணலாம்'னு சொன்னாராம் விக்ரம். அவரே ஒரு டைரக்டரையும் அழைத்து வந்தாராம். கதையை கேட்ட தாணு, 'தம்பி இது ஐந்து கோடி பட்ஜெட்ல முடியுற கதையா இருக்கு. அந்நியன் மாதிரி பெரிய படமா இருந்தாதான் உங்களுக்கு மரியாதை' என்றாராம். பிறகு சுசி வந்தார். விக்ரம் ரசிகர்களுக்கு குஷியும் வந்தது. ஏனென்றால், கந்தசாமியின் பட்ஜெட்டை இப்போது கணிக்கவே முடியாது போலிருக்கிறது. தேருக்கு திருவிழா பெருமை, திருவிழாவுக்கு தேர் பெருமைங்கிற மாதிரி, படத்தில் பணியாற்றிய எல்லாரையும் அசர வைத்திருக்கிறது கந்தசாமி!
இயக்குனர் சுசிகணேசன், விக்ரம், ஸ்ரேயா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், பாடலாசிரியர் விவேகா ஆகியோர் மேடையில் இருக்க, கந்தசாமி உருவான கதையை விவரித்தார் தாணு. 'எழுதி வச்சுக்கோங்க, கந்தசாமி தமிழில் தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் படமா இருக்கும்' என்றார். மேடையில் பேசிய எல்லாருமே சுசியை அவ்வளவு எளிதில் திருப்திபடுத்த முடியாது. அவர் இன்னும் இன்னும்னு தேடிகிட்டே இருப்பார்' என்றார்கள்.
தேவிஸ்ரீபிரசாத் பேசும்போது, எல்லா படத்திற்கும் சப் டைட்டில் போடுற மாதிரி, கந்தசாமி... திருப்தியடையாத சுசின்னு போட்டுடலாம் என்று சொல்ல பலத்த சிரிப்பு மேடையில். வழக்கமாகவே ஜாலி டைப் விக்ரம். மற்றவர்களுக்கும் டைரக்டர் சுசிகணேசனுக்கும் படப்பிடிப்பில் இருந்த அந்நியோன்னியத்தை சொல்ல நினைத்தவர், 'சுசியும் ஏகாம்பரமும், சுசியும் தேவி ஸ்ரீ பிரசாத்தும், சுசியும் நானும், சுசியும் ஸ்ரேயாவும்'னு சொல்லிவிட்டு சிரிக்க, வெட்கத்தில் முகம் சிவந்தார் ஸ்ரேயா. 'ச்சும்மா...' என்று கண்ணடித்த விக்ரம், 'இந்த படத்தின் ஒவ்வொரு அசைவும் சுசியோட கற்பனை. மிரட்டியிருக்காரு' என்றார் பிரமிப்பாக.
பாடலாசிரியர்தானேன்னு லேசா நினைக்காமல், விவேகாவின் தோளில் கைபோட்டுக் கொண்ட சுசிகணேசன், 'உங்களுக்கு ஒரு ஸ்கூப் நியூஸ் சொல்றேன். இந்த படத்திலே விவேகாவும் ஒரு பாடல் பாடியிருக்காரு' என்றார்.
இவ்வளவு விஷயங்களும் நடந்தது 'கந்தசாமி' ஆடியோ வெளியீட்டு விழாவில் என்றா Kandhaswami Press meetநினைத்தீர்கள்? அதுதான் இல்லை. ஆடியோ வெளியீடு எப்போது நடக்கும் என்பதை சொல்ல ஒரு பிரஸ்மீட். அதையே ஆடியோ ரிலீஸ் போல கிராண்டியராக நடத்திக் கொண்டிருந்தார் தாணு. முன்னதாக நான்கு விதமான டிரெய்லர்களை திரையிட்டார்கள். மிரட்டல்... மிரட்டல்... மிரட்டல்...! எல்லாரும் பாராட்டிய மாதிரி, தமிழ்சினிமாவின் நம்பர் ஒன் அந்தஸ்தை எளிதாக எட்டிவிடுவார் போலிருக்கிறது சுசிகணேசன்!
ஏப்ரல் 14 ந் தேதி சென்னையில் நடைபெறப்போகிறது கந்தசாமி ஆடியோ விழா. இதில் பெல்ஜியத்திலிருந்து வரப்போகும் நடனக்கலைஞர்கள் கலந்து கொள்ளும் நாட்டிய விழாவும் இடம் பெறுமாம். இதுவரைக்கும் அப்படி ஒரு விழா நடந்ததே இல்லைங்கிற அளவுக்கு கொண்டாடப் போறோம் என்றார் தாணு. இதை தனியா வேற சொல்லனுமா என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக