புதன், 1 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-31


ஆஸ்கர் விருதுக்குப் பிறகு தனது சம்பளத்தை ரஹ்மான் ஏற்றாவிட்டாலும், சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் தானாகவே அவர் சம்பளத்தை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிட்டன.
உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இதுவரை தோன்றி வந்த மோட்டரோலா செல்போன் விளம்பரத்தில் விளம்பர மாடலாக நடிக்க மட்டும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.28 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

உலகின் 2வது மிகப் பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் மோட்டரோலா. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் சர்வதேச விளம்பர மாடலாக முன்னணி கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இருந்து வந்தார். அவரது ஒப்பந்த காலம் இப்போது முடிவடைந்துவிட்டது.

இந் நிலையில், புதிய விளம்பர மாடலாக ஏ.ஆர். ரகுமானை மோட்டரோலா நியமித்துள்ளது.

அந்நிறுவன விளம்பரங்களில் தோன்ற டேவிட் பெக்காம் பெற்ற தொகை ரூ.22 கோட பெற்றுவந்தார். இப்போது அவரது இடத்தைப் பிடித்துள்ளதன் மூலம் ஏ.ஆர். ரகுமானுக்கு மோட்டரோலா நிறுவனம் ரூ.28 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளது.

இது பெக்காம் பெற்றதைவிட 20 சதவிகிதம் அதிகம். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 2 ஆஸ்கர் விருதுகளை ரகுமான் பெற்ற பிறகு, அவரது விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. அவரை ஒப்பந்தம் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன
பொதுவாக பிளாக்கர்கள் பிளாக்கை எழுதுவது தங்களின் உள்ளவெளிப்பாட்டை பலரும் தெறிந்துகொள்ளும் நோக்கத்துடன்தான்,ஆனால் சில சமயங்களில் நமது பிளாக்கை வைத்து ஏதாவது சிறிய வருமானத்தை பெறலாம் என்றும் தோன்றும், இதையே பல நிருவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு அவர்கள் வேலையை முடித்துக்கொண்டு நம்மை கழற்றி விட்டுவிடுகின்றார்கள்.இப்படி பல நிறுவனங்கள் தாங்கள் இவ்வளவு தருகின்றோம் இதை செய்தால் போதும் அதை செய்தால் போதும் என்று ஆசை வார்த்தைகளை காண்பித்து நம்மை ஏமாற்றீ விடுகின்றார்கள். இப்படி இருக்க ஆன்லயனில் பணம் சம்பாதிக்கும் வழிகள் என சொல்லக்கூடிய நிருவனங்கள்கூட இப்போது ஏமாற்ற தொடங்கிவிட்டார்கள்.குறிப்பாக 99% ஆன்லயனில் மக்களை ஏமாற்றும் நிருவனங்கள் என சமீபத்தில் யாகூ குரூப்ஸில் ஒரு இடுகையை படித்தேன்.மேலும் சர்வே தளங்கள்தான் மக்களை அதிகம் முட்டாலாக்குகின்றனர்.நான் ஏ.டபில்யூ சர்வேஸ் என்ற தளத்தில் ஏமாந்தேன் ,ஒருசில விளம்பர நிருவனங்கள் மட்டுமே பிளாக்குகளுக்கு பணம்தருகின்றார்கள்.இவற்றிலும் சில போலிகளை காணமுடிகின்றது.எனவே ஏமாற்றுபவர்களைவிட ஏமாறுபவர்கள்தான் குற்றவாலி ஆகவே நாம் நமது பணியை மட்டுமே செய்வோம்,கூகில் போன்ற நம்பகமான நிருவனங்களிடம் மட்டும் உங்கள் தளத்தை பதியுங்கள்,தப்பி தவறி கூட சர்வே தளங்களுக்குள் சென்று விடாதீர்கள்.நீங்கள் ஏதேனும் ஆன்லயனில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஏமாற்றபட்டீர்களா? அப்படியென்றால் அந்த தளங்களை பற்றி கமன்டில் எழுதுங்கள் நம்மை போன்ற பிளாக்கர்களுக்கு அது பயனுள்ளதாக அமையும்.


More than a Blog Aggregator

by மினிமேக்ஸ்
ஆர். முத்துக்குமார்

இந்திய தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. தற்போதைய சூழலில் மொத்தம் மூன்று அணிகள் களத்தில் இருக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. கடந்தமுறை பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தடுமாற்றம் காட்டிய இந்த அணி தற்போது மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

பாரதிய ஜனதா தலைமையிலான அணியின் பிரதமர் வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானி. கடந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட வாஜ்பாய் இந்த தேர்தலில் போட்டியிடவே இல்லை.

இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணியில் இருக்கும் முக்கியமான பிரச்னையே யார் பிரதமர் வேட்பாளர் என்பதுதான். தலைவர்கள் அதிகம் கொண்ட அணி என்பதால் சிக்கல்களுக்கும் பஞ்சமில்லை. இவர்கள் தவிர, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி தேசிய அளவில் தன்னுடைய வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார். உ.பி மற்றும் பிகாரில் லாலு, முலாயம் சிங் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் மூவரும்
அணி அமைத்துள்ளனர்.

அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யவேண்டிய பொறுப்பு அநேகமாக இடதுசாரிகள் மற்றும் மாயாவதியின் கரங்களில் இருப்பது போலவே தோன்றுகிறது. பார்க்கலாம்.


More than a Blog Aggregator

by சூர்யா ௧ண்ணன்
உங்கள் கணினி திரையில் தோன்றும் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் (Screenshot) எடுப்பது மிகவும் எளிது..

Print Scrn Key ஐ அழுத்தி பின் Paint போன்ற இமேஜ் எடிட்டரில் பேஸ்ட் செய்தால் போதும்.

ஆனால், விண்டோஸ் மீடியா பிளேயரில் (Windows Media Player) ஏதாவது வீடியோவை பிளே செய்து ஒரு குறிப்பிட்ட ஸ்டில் மட்டும் எடுக்க மேற்சொன்ன வழியில் முயற்சித்துப் பார்த்தால் படம் வரவேண்டிய இடத்தில் கருப்பு ஸ்கிரீன் மட்டுமே வரும்.

இதை எப்படி செய்ய முடியும்?


எளிதான வழி.
Capture - ஐ support செய்யும் பிளேயரை (VLC Player போன்றவை) உபயோகப்படுத்தலாம். 'Video > Capture to capture a video frame ' -ல் கிளிக் செய்தால் போதும்.

இல்லை அதுவெல்லாம் முடியாது.., விண்டோஸ் மீடியா பிளேயரில்தான் Screenshot எடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தால் இதோ ஒரு வழி..,

Windows Media Player - > Tools -> Options -> Performance -> Advanced சென்று அதில் 'Use Overlays' என்பதை 'Un check ' செய்து OK கொடுத்து விடுங்கள்.





இப்பொழுது 'Print Scrn ' கீ முறையில் முயற்சித்துப் பாருங்கள்.

என்ன வெற்றி தானே?


இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது.  :)

காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. மிகவும் மலிவானதொரு காசியைத் தான் தர்ருசிக்க முடிந்தது. ஆனால்.. இதை எங்கள் வீட்டினருக்கு போனில்  சொன்ன போது என் அம்மா , "நீ தான் தீர்த்தக்கரை பாவியாச்சே.. இப்படித்தான் பேசுவ.." என்று சொன்னார்கள். :(

அட.. விடுங்க பாஸூ.. இதுக்கெல்லாம் அசந்து போற ஆளா நாம… படத்தை பாருங்கள் உண்மை விளங்கும்! 

சில படங்களின் நேரடி காட்சியாக தராமல்.. சுட்டி மட்டும் கொடுத்திருக்கிறேன்.

—-

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image002-1.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image003.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image005.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image006.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image007.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image008.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image009.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image010.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image011.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image014.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image015.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image016.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image017.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image018.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image019.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image021-1.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image023.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image024.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image025.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image026.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image027.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image028.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image029.jpg

கருத்துகள் இல்லை: