புதன், 1 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-31

அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத அனைத்து துறையினரும் பயன் பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்று இவ்வாண்டு மே 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த ஒரு சில நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இனிமேல், பல சரக்கு கடை நடத்துபவர்கள், பிளம்பர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் முதல் அனைத்து குடிமக்களும் ஓய்வூதியம் பெறலாம். இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெற விரும்பும் பொதுமக்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டும்.
சென்ற ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத அனைத்து துறை ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதன்படி, இத்திட்டத்தை ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டீ.ஏ) இவ்வாண்டு ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினால், அது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக, ஓய்வூதிய கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம், தேர்தல் கமிஷனின் அனுமதியை கோரியது. இதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, இத்திட்டம் மே 1-ந் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டத்திற்காக திரட்டப்படும் நிதி, அரசு கடன்பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடுகளை நிர்வகிப்பதற்காக, கட்டுப்பாட்டு அமைப்பு புதிதாக ஆறு நிறுவனங்களை நியமித்துள்ளது.
நன்றி : தினமலர்



'ஆகா பார்ப்பதற்கு எறி குண்டு போல இருக்கே, எடுத்து எறியலாமா' என நினைக்கும் உங்கள் மனதிற்கு ஒரு கடிவாளம் இடுங்கள். [என் சமையல்கட்டிற்கு வந்தாலே உங்களில் சிலருக்கு இப்படியெல்லாம் தோன்றுமே!] ஆனால் இதன் சுவை அறிந்தால் எறியமாட்டீர்கள்...எறிந்தாலும் பிடித்து கொள்பவர் அதிஸ்டசாலி

பொதுவாக நாம் முட்டை பாதிக்கு உருளைகிழங்கோடு சேர்த்த மீன்/இறைச்சி/காய்கறி கறி ஒன்றை வைத்து மறுபாதியாக்குவதுண்டு. [இது சமைக்கிறவைக்கு மட்டும் தான் தெரியும். என்ன ஏது என கேட்காமல் கணக்கே இல்லாமல் சாப்பிடுறவங்களுக்கு புரிவது கடினம் தான்.கிகிகி] உருளைக்கிழங்கை தவிர்க்கலாமே என நினைத்து சோயாவில் மட்டும் செய்து பார்த்தேன். நன்றாகத்தான் வந்தது. என்ன, சோயாகலவைக்கு கொஞ்சம் காரம் அதிகமாக இருக்க வேண்டும்.


தேவையானவை:
முட்டை 11
Bread Crumbs 1 கோப்பை
எண்ணெய் - பொரிக்க

சோயாகறிக்கு:
சோயா 1 கோப்பை
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
மிளகாய் தூள் 1 மே.க
மஞ்சள் தூள் 1/4 மே.க
கடுகு 1/2 தே.க
பெரும் சீரகம் 1/2 தே.க
கறிவேப்பிலை 2 மே.க
உப்பு தேவையான அளவு


செய்முறை:
1. 10 முட்டைகளை வேக வைத்து, ஓடை உடைத்து, பாதியாக வெட்டி கொள்ளுங்கள்.
2. சோயா கறிக்கு:
அ) சோயாவை கொதிநீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவிட்டு, நீரை வடித்து எடுத்து கொள்ளுங்கள்.
ஆ) வெங்காயம், மிளகாயை சிறிதாக அரிந்து கொள்ளுங்கள்.
இ) ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடு ஏறும் போது கடுகு, சீரகம், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தூள்களை முறையே சேர்த்து நன்றாக வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் சோயாவை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
3. பாதி முட்டைக்கு எலுமிச்சை பழம் அளவு உருண்டை கறியை எடுத்து முட்டையின் மறுபாதி ஆக்குங்கள்.
4. உருட்டிய உருண்டையகளை அடித்த முட்டையில் போட்டு எடுத்து, பின்னர் ப்ரட் க்ரம்ஸில் உருட்டி எடுங்கள்.
5. அளவான சூடு கொண்ட எண்ணெயில் பொரித்து எடுங்கள்.


ஜோடி: தக்காளி சோஸ்

கவனிக்க வேண்டியவை:

1. காரத்தை கூட்டி குறைக்கலாம்.
2. அவித்த முட்டையின் மஞ்சள் பகுதியை எடுத்து சோயா கறி கிளறும் போது சேர்த்து கிளறலாம்.
3. சோயா தனியேவா என நினைப்பவர்கள் ஒரு கரட்டை சீவி சேர்த்து கொள்ளுங்கள்.
4. 50:50 என பெயர் சூட்டிய பெருமை என்னை மட்டுமே சேரும்.
"அடியே" என்று தொடங்கும்
அப்பாவின் அழைப்பொலியிலிருந்து
அம்மாவிற்கான
அடுத்த யுத்தம்
தொடங்கிவிடும்...

சாராய நாக்கிற்கு
சாதரண உப்பும் காரமும்
பத்தவே பத்தாது...
எப்படிச் செய்தாலும்
இல்லை ருசியென்று
காரணத்தோடு அடித்த அப்பா
இப்போதெல்லாம்
காரணமின்றியும்
அடிக்கத் தொடங்கிவிட்டார்

எனக்காக
புத்தாடை கேட்கையில்
அப்பாவின்
நாக்கு கூசச் செய்யும்
பதிலால்
அம்மாவின் துன்பட்ட இதயம்
தூண்டில் புழுவாய்
துடிதுடித்துப் போகும்

நான் கால்சட்டை நனைத்த
இரவுகளை விட
அம்மாவின் கண்ணீரில்
நனைந்த இரவுகள்
ஆயிரம்

வீட்டையே விட்டு
வெளியே வராதவள்
அம்மா
எப்படியோ அவள்
சுதந்திரம் மட்டும்
களவு போனது...

தனக்கென ஒரு ஆசையும்
வைத்துக் கொள்ளாத
கற்காலத் தாய்
"உனக்கென வருபவளுக்கு
ஒரு குறையும் வைக்காதே"
எனச் சொல்லும் பொது
முற்போக்குத் தாய்

எதற்குப் பிறந்தால்
என்ன சுகம் கண்டால்
வாழ்கையில் இவள்?
என்ற கேள்விகளுக்கு
இதுவரை விடையில்லை...
மஞ்சள் கயிறால்
வென்றவர் அப்பா
தோற்றுப் போனவளும்
பிள்ளைக்காகவே
தோல்வியை மெல்லிய
தோளில் சுமப்பவளும்
அம்மா!
--நாவிஷ் செந்தில்குமார்
தர்பூசனி நீர் தேங்கி நிற்காத மண் வகைகளில் நன்கு வளரும். PKM 1, Sugar baby, Manik, Jothi, Bedana, Durgapuri, Meetha, Durgapura keesar, Amruth போன்றவை தமிழக சூழ்நிலைக்கு ஏற்றவை.பழ தோட்டம் மற்றும் தென்னை தோட்டத்தில் ஊடுபயிராக இவற்றை வளர்க்களாம்.பெண் மலர்களின் எண்ணிக்கையை பொருத்தே இதன் விளைச்சல் அமைவதால், பெண் மலர்களின் எண்ணிக்கையை பெருக்குவது மிகவும் அவசியம்.அதற்கு 25 மில்லி எத்திரலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 15 நாளில் தெளிக்க வேண்டும். அதற்கு பிறகும் 1 வார இடைவெளியில் இதை தொடர்ந்து தெளிக்க வேண்டும். சத்து குறைவினால் பழங்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க 4 - 5 கிலோ நன்றாக மக்கிய தொழு உரத்தை ஒவ்வொரு செடிக்கும் அளிக்க வேண்டும். இதை பின்பற்றினால் தர்பூசனியில் நல்ல விளைச்சல் பெறலாம்.

--


வணக்கம்

நான் என்னத்த எழுதறேன் எனக்கே தெரியல ஆனா ஒரு நாளைக்கு ஒரு ஆயிரம் பேரு வராங்க படிக்க .. அவங்களுக்கு பெரிய மனசு :-) ... நம்ம போடுற மொக்கையும் அதுவும் தப்பான எழுத்துக்கள் கொண்ட பதிவுக்கு இவ்வளவு ஹிட்ஸா ...
யோசித்து பார்த்ததுக்கு ஹிட்சுக்கு காரணம் நல்ல எளிய நடை மற்றும் கருத்து என்று சொல்கிறார்கள் நல்லவர்கள் ...

பதிவுகளின் பிழைகளுக்கு காரணம் நம்ம தமிழ் இல்லை இந்த தட்சு பிரச்சனை ..
( எத்துனை நாள் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே )
இனிமே பதிவில் பிழை வராம பாத்துகிரேன் இகலப்பை இன்ஸ்டால் பண்ணியாச்சு ( பண்ணிட்டாளும்... நம்பிட்டோம் ..பார்ப்போம் ... போன்ற குரல்கள் கேட்க்குது )

என்னாலயே படிக்க முடியல :-( ( நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க )


சரி விஷயத்துக்கு வருவோம் ... நம்ம எழுதின ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள். என்ற பதிவ படிச்சி ஒரு அமெரிக்கா நண்பர் அவரோட பிகுரை கரெக்ட் பண்ணிட்டாரு ... அவரு அங்க இருந்து போன் செஞ்சு ரொம்ப சந்தோசமா சொன்னாரு ... பல நாட்க்களாக ட்ரை செஞ்சு வோர்கொவுட் ஆகாதது என்னோட பதிவ படிச்சி ஆயுடுச்சம் ...

நீங்க ஒரு ... அமைதி ( உள்ளுக்குள்ள ஒரு பயம் அந்த _______ ல நானே கெட்ட கெட்ட வார்த்தையை நிரப்பிக்கிட்டேன் )
நீங்க ஒரு .... நல்ல பதிவாளர் என்று சொன்னாரு ( இப்போ தான் முச்சே வந்துச்சு) .

நீங்க நிறைய பேருக்கு உதவுரிங்க (நல்ல வேலை அவரு நம்மல நல்ல மாமா என்று சொல்லாம விட்டாரே ( சொல்லி தான் தெரியனுமா என்று சில நலம் விரும்பிகள் சொல்றது கேட்குது ) )

நான் ஒரு பெரிய பணக்காரன் ( அது ரஜினி நடிச்ச படம் ஆச்சே ... எங்க தலைவர் படம் அதை ஏன் இவரு சொல்றாரு ... )

நிறைய காசு இருக்கு தம்பி ( காசு இருக்கா இருந்தா கொடுங்க அன்னே )
( தம்பின்னு சொல்றாரே ஒரு வேலை இவரு ரொம்ப வயசான ஆளோ )

ஆனா பாருங்க நம்மக்கு பாசம் அன்பு தர ஒரு நல்ல மனைவி இல்லை ( எதுக்கு நம்ம என்று சொல்லி என்னையும் செர்த்துக்கிட்டாரு )

சொல்லுங்க அண்ணே என்று நான் சொல்ல ( ஹி ஹி நான் தான் நானே தான் )

ரொம்ப நன்றி தம்பி. உனக்கு ஒரு பரிசா என்னோட பெங்களூர் நண்பர்க்கிட்ட சொல்லி ஒரு கார் காம்ப்ளிமென்ட்டா கொடுக்க சொல்றேன்

அண்ணனே நீங்க ரொம்ப நல்லவர் ( நெஞ்சே வெடிச்சி போச்சு )
நம்ம பதிவுக்கு ஒரு முட்டாய் கூட கிடைக்காது என்று இருந்த தருணம் ...
வந்தது பரிசு ... அதுவும் கார் ...

அந்த அமெரிக்கா நண்பருக்கு ரொம்ப பெரிய மனசு வேணும் ...

ஒரு வராம போன் போட்டு அந்த நபர் வந்து கார் கொடுத்தாரு ...

பார்த்து ஓர அதிர்ச்சி ( இன்ப அதிர்ச்சி இல்லை பாஸ் அதிர்ச்சி )



முனு பத்து ரூபாய்க்கு நம்ம சமயபுர திருவிழால வாங்கின மாதிரி இருந்துச்சு ...
கீழே படத்தை பார்க்கவும் ...

இன்னுமுமா சீரியஸா படிக்கிறிங்க ?
ஏப்ரல் ஒன்னு அதுவுமா என்னோட பதிவுலக ரசிகர்களை திருபத்திப்படுத்தாட்டி எப்படி ? அதன் ஒரு பதிவு ... பின்னோட்டங்களில் திட்ட வேண்டாம்

நம்ம பதிவுக்கு எல்லாம் கார் வரும் என்று நம்பி படித்த என் வலையுலக நண்பர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள்

இன்னுமுமா இந்த உலகம் நம்மல நம்பிக்கிட்டு இருக்கு


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி

நமக்குள் உண்டான
பிணக்குகளில்
பிடிபடுகிறது
உன்னைப்பற்றிய
புரிதல்!


****************

உன் காதலி எப்படி?

கேட்பவர்களுக்கு
எப்படி சொல்வேன்...

உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!

கருத்துகள் இல்லை: