வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02

முல்லைத்தீவில் காயமடைந்த நிலையில் அழைத்து வரப்பட்ட நோயாளிகள் பலருக்கு வெடிகுண்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் அவயவங்களை துண்டிக்கவேண்டிய பரிதாபநிலை நிலவு வதாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கவலை தெரிவித்துள்ளது.

செஞ்சிலுவைக் குழுவின் (ஐ.சி.ஆர்.சி யின்) சத்திரசிகிச்சை நிபுணர் மார்ட்டின் @ஹர்மன் இதனைத் தெரிவித்தார்.
செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் உத்தியோகபூர்வத் தகவல் அறிக்கையில் அவரது பேட்டி வெளியாகியுள்ளது.திருகோணமலைக்கு அழைத்து வரப்படும் இந்த நோயாளர்கள் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.


கே: புதுமாத்தளன் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளர்களின் நிலைமையை எவ்வாறு வர்ணிப்பீர்கள்?
ப: அவர்களது மருத்துவம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதைக் காண முடிகின்றது. புதுமாத்தளன் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அவர்கள் பணி புரியவேண்டிய மிகவும் கடினமான சூழ்நிலையை கருத்திற்கொள்ளும்போது மிகப் பெரிய உன்னதமான பணியை ஆற்றுகின்றனர்.
நடப்பதற்கு முடியாத நிலையில்....
எனினும், அப்பகுதியில் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும், மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாலும், திருகோணமலைக்கு வரும் நோயாளிகள் மிகவும் களைப்படைந்தவர்களாகவும், பலவீனமானவர்களாகவும், நடப்பதற்குக்கூட முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.


கே: புதுமாத்தளனிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடம் என்ன வகையான காயங்களைக் காண்கிறீர்கள்?
ப: வெடிகுண்டு சிதறிய காயங்கள் காரணமாக அனேகமானவர்களின் அவயங்களை அகற்றவேண்டியுள்ளது. உடலின் வேறு பகுதிகளில் ஏற்பட்ட காயங்களுக்கும் சிகிச்சையளித்துள்ளேன்.


கே: புதுமாத்தளனில் பெரும் எண்ணிக்கையான நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் இருப்பதை கருத்திற்கொள்ளும்போது, அவர்களில் யாரை வெளியேற்றுவது என்பதை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?
ப: செஞ்சிலுவைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பலில் குறிப்பிட்டளவு இடமேயுள்ளதால், தேவைகளை அடிப்படையாக வைத்து யாரை முதலில் வெளியேற்றுவது என்பதை தீர்மானிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
புதுமாத்தளனில் பணிபுரியும் மருத்துவவர்களின் ஆலோசனைபடியே யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பதை தீர்மானிக்கிறோம். உள்ளூர் அதிகாரிகளின் இணக்கத்துடனேயே ஒவ்வொரு வெளியேற்றமும் இடம்பெறுகின்றது என்றார்.
யுத்தத்தில் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்து வரும் புலிகள் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டங்களையும் நிகழ்வுகளையும் குழப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்கள் அனைவரும் மிகவும் விழிப் பாக இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். ஊடகங்கள் இது தொடர்பான விரிவான பிரசாரங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும் என்றும் அவர் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை தற்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து 61 ஆயிரத்து 157 பேர் வவுனியாவுக்கு வருகைத் தந்துள்ளனர் என்றும் இன்னும் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பொது மக்களே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
பச்சைப்புல்மோட்டைச் சந்தி படையினரின் கட்டுப்பாட்டில்: புலிகளின் 19 சடலங்களும் மீட்பு
புதுக்குடியிருப்பின் தெற்காகவுள்ள பச்சைப் புல்மோட்டைச் சந்தி தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று (02) அறிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பிலிருந்து அம்பலன்பொக்கை வீதியிலேயே இந்தச் சந்தி அமைந்துள்ளது.

இந்தச் சந்தியைக் கைப்பற்றும் முயற்சியின் போது இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையே இடம்பெற்ற மோதலின் போது புலிகள் தரப்பில் பாரிய இழப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் இங்கு நடத்தப்பட்ட தேடுதலின்போது புலிகளின் 19 சடலங்களைக் கைப்பற்றியதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது,

குடந்தையில் நாங்கள் குடியிருந்தபோது நடந்த சம்பவம் இது. என்வீட்டிற்கு எதிரே புதிதாக குடிவந்த குடும்பத்தில் இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள். இரண்டு பெண்களில் எனது வயதையொத்த ஒரு பெண்... அதுவும் அழகாகவும். மனசு கும்மாளம் போட ஆரம்பித்தது. மீசை முளைத்த பருவம் அது. பின்னே இருக்காதா என்ன?
எங்கள் ஊரில் கோ- எஜிகேசன் அனைத்து பள்ளிகளிலும் கிடையாது. மெட்ரிக் பள்ளிகளில் மட்டும்தான்.(மெட்ரிக்குலேசன் ஸ்கூல் - நிறைநிலை பள்ளி. திகழ்மிளிர் கவனித்திற்கு!) காலையில் அந்த பெண் பள்ளிக்கு பேருந்தில் செல்வாள். நான் மிதிவண்டியில் செல்வேன். அந்தப்பெண் செல்லும் பேருந்தை தொடரும் எனது மிதிவண்டிப் பயணம். பேருந்து நிலையத்தில் அவள் இறங்கும்போது அவளுக்கு முன் ஒரு அரைவட்டம் அடித்து எனது இருப்பை காட்டிக்கொள்வதும், மாலையிலும் அதேபோல் வீட்டிற்கு அருகில் இறங்கும் போதும் நடக்கும். இப்படித்தான் கொஞ்ச நாளா போச்சு. பேசுவதற்குதான் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. பொங்கல் திருநாள் வந்தது. என் நண்பனின் யோசனைப்படி வாழ்த்து மடல் என் கையழுத்தில்லாமல்
அன்புள்ள
அன்புள்
அன்பு
அன்

என்று எழுதியனுப்பினேன். அனுப்பி இரண்டு நாளாகியும் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. கிடைத்ததா... இல்லையா... எனக்குள் மிகப்பெரிய தவிப்பு... போஸ்மாஸ்டரிடம் அவங்க வீ்ட்டிற்கு ஏதாவது கிரீட்டிங் கார்ட் வந்ததா? என்று கேட்டேன். ஆமா வந்தது என்றார். அப்ப கிடைத்துவிட்டது. ஆனால் எந்த ரியாக்சனும் தெரியவில்லையே... ஒரே குழப்பம்தான்.
போகி அன்று வீட்டிற்கு வெள்ளை அடித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் அந்தப்பெண்ணின் அக்கா அந்த கிரிட்டி்ஙகார்டை எடுத்துக்கொண்டு வந்தார். வந்தவர் நேரே என் அப்பாவிடம் அந்த கார்டை கொடுத்து, விசயத்தை சொல்லி,கண்டிச்சு வைங்க என்று மட்டும் சொல்லிவிட்டு போய்வி்ட்டார்.
அந்த நிமிடங்களை நினைச்சு பாருங்களேன்.எனக்கு கையும்,காலும் வெலவெலத்துப்போயிட்டது.
தப்பு செஞ்சா என் அப்பா அறைந்துவிடுவார். அறைந்தால் அவரின் கைவிரல் அப்படியே பதிந்துவிடும். அப்படி அடிப்பார். அன்று மட்டும் அந்த அதிசயம் நடந்தது.கார்டை வாங்கிக்கொண்டவர் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. வீட்டிற்குள் சென்றுவி்ட்டார். நான் சுண்ணாம்பு அடிப்பதா, அவரின் பின்னால் செல்வதா... ஒன்றும் புரியவில்லை. கையில் மட்டையை வைத்துக்கொண்டு நிற்கிறேன்.
இரண்டு மூன்று நாட்களாகியும் அதைப்பற்றி பேசவேயில்லை. என் அம்மா மட்டும் "ஏன்பா இப்படி செஞ்சே? உனக்குன்னு உன் அக்கா மக இருக்கா" என்றார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தேன். அந்த வருட பள்ளிவிடுமுறையில் அவர்கள் வீட்டை காலிசெய்து போய்வி்ட்டார்கள். அவ்வளவுதானா என் முதல் காதல்?
இனிமேதான் மேட்டரே...!

(காலங்கள் வேகமாக உருண்டோடியது...வேலைக்காக சென்னை வந்தேன். எனக்காக என் அக்கா மகள் இருக்கிறாள் என்று அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அவளைப் பார்த்து, என்னை உனக்கு பிடித்திருக்கிறதா? என் அம்மா உன்னைப்பற்றிச் சொன்னார்கள் என்று சொன்னேன். அவளும் அவளுக்கும் விருப்பம் இருந்தது. சரியென்று சொல்ல, அவளையே வீட்டிற்கு தெரியாமல் காதலித்து, வீட்டாரின் சம்மத்துடன் கல்யாணமும் முடிந்தது.)

அப்புறம் என்ன என்கிறீர்களா?

இதே சென்னையில் பல வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்த்தேன். கடைத்தெருவில்...
அதன்பிறகு, சிலநாட்கள் கழித்து நான் குடியிருக்கும் தெருவில்...எனக்கு பகீரென்றாகிவி்ட்டது.இவளெங்கே இங்கே?

நான் குடியிருக்கும் தெருவில்தான் அவளும் குடியிருக்கிறாள். கல்யாணம் ஆகி, ஒரு பையனும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன். பேசி பழகாமலே முறிந்ததால் எங்களுக்குள் வீரியமான தாக்கம் இல்லை என்பதுதான் உண்மை. வேலைக்கு செல்லும்போது சமயத்தில் அவள் எதிர்படும்போது சங்கடமாகத்தான் இருக்கிறது, அவளை பார்ப்பதற்கே! எங்கோ பார்ப்பதுபோல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறேன். சமயத்தில் அவளும் அப்படித்தான் செய்கிறாள். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் இம்மாதிரி யாருக்கும் வாய்க்கக்கூடாது. எங்கிருந்தாலும் வாழ்க!

பங்களாதேஷிலுள்ள பிரதான நகரங்களில் பிச்சை எடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

144 மில்லின் மக்கள் வாழும் பங்களாதேஷில் 40 வீதமான மக்கள் நாள் ஒன்றிற்கு ஒரு டொலர் மூலம் பிச்சை எடுப்பதன் மூலம் வருமானம் பெற்றுவருவதாக பங்களாதேஷ் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பிச்சை எடுப்பதினை தடை செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாத்ததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டதினை மீறி பிச்சை எடுப்பதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒரு மாத கால கடும் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றக்கோரி பங்களாதேஷ் நிதி அமைச்சர் யு.ஆ.யு. முஸித் கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடாளுமன்றத்திடம் முறையிட்டிருந்த நிலையில், தற்போது இது சட்டமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: