2009 மே மாதம் 13-ம் தேதி தமிழ்நாடு, பாண்டிச்சேரியிலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரசு போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரசு கட்சிக்கு வாக்களிக்காமல், காங்கிரசுக்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கச் செய்ய வேண்டியது உணர்வுள்ள தமிழர்களின் கடமையாகும். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக திமுக, எதிர்க்கட்சியாக அஇஅதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், பாஜக போன்ற அங்கீகக்கப்பட்ட அரசியல் கட்சிகளும்; தேமுதிக, மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் தமிழ்த்தேசிய அமைப்புக்களும் அவரவர் வலுவுக்கேற்ப இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முடிவெடுத்து, தமிழர் நலனில் அக்கறை செலுத்தி வருவதை உணர முடிகிறது.
"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிட்டுவிடவில்லை" என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் வந்த அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்
இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.
இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆதிக்கம் நீடிக்கிறது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.
நான் நடிகன். எனக்குத் தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்குத் தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.
எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ISI முத்திரை இருக்கிறது. ASI முத்திரை வேண்டியதில்லை.
எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.
ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.
பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் மீதம் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.
இன்று காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து கல்கத்தா நோக்கி ஏர் இந்தியா விமானம் 104 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பயணம் செய்த 3 பயணிகளின் நடவடிக்கையில் விமான பணிப்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால்
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மீண்டும் விமானத்தைத் தரை இறக்க விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வானில் பறந்த விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டது. சந்தேகத்துக்குரிய அந்த 3 நபர்களிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகள் என்பதும், இம்பால் புறப்பட்டு சென்றதும் தெரிய வந்தது. எனவே, அவர்களை தொடர்ந்து பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது

லாஹூரில் காவலர் பயிற்சி மையம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் தாலிபான் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல் 8 மணி நேரம் நீடித்திருந்தது. 800 காவலர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இதில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 27 காவலரும், 8 தீவிரவாதிகளும் மொத்தம் 35 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
6 தீவிரவாதிகளும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். 6 தீவிரவாதிகளில் 2 பேர் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்திகா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம் லாகூர் காவலர் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்த தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். எனவே இந்த தாக்குதல் பின்னணியில் தாலிபான் இயக்கத்துக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் லாகூரில் தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று தஹ்ரீக் -யே-தாலிபான் இயக்கத் தலைவர் பைத்துல்லா மக்சூத் பொறுப்பேற்றதுடன் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தாலிபான் இயக்கத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து தாலிபான்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக