புதன், 1 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-31





[Your information will be inserted here]
Prefix Firstname Lastname
123 Street Address
MyCity, St 12345

March 31, 2009

Mr. Brian Aitken
Sri Lanka Mission Chief
International Monetary Fund,
700 19th Street, N.W.,
Washington, D.C. 20431

Dear Mr. Aitken:

Recent news reports say that the Central Bank of Sri Lanka is currently negotiating a standby loan of $1.9 billion dollars from the International Monetary Fund. This is supposed to be granted "on concessionary terms" to a country "affected by the global economic crisis." We believe granting this loan will only exacerbate Sri Lanka's crisis, by freeing up funds for its genocidal war.

The Sri Lankan government claims the funds will be needed for "post war reconstruction." However, the regime is currently at the pinnacle of a genocidal war against ethnic Tamils in northern Sri Lanka. The government agent in the region reports there are 330,000 refugees encircled by the Sri Lanka Military, as fighting continues between Sri Lankan forces and the Liberation Tigers of Tamil Eelam. Most have been cut off from outside food and medical supplies for weeks, and their lives are threatened by the war and their resulting humanitarian needs. Human Rights Watch reports that 2,000 Tamil civilians have been killed since January, and 7,000 civilians have been wounded. The Genocide Prevention Project considers Sri Lanka one of eight countries on "Red Alert" - a ranking reserved for countries experiencing ongoing or imminent genocide.

We are concerned that IMF funds will enable the Sri Lankan government to divert funds for the procurement of arms and other war expenses. The Sri Lankan government's annual military expenditure of $1.8 billion approximates the $1.9 billion sought from IMF. This parity is further evidence that international funding at this pivotal time during Sri Lanka's conflict will be utilized for its military, not for financial stabilization.

Sri Lanka continues slipping towards status as a failed state, without financial controls necessary for fiscal responsibility. The Sri Lankan government continuously defies financial transparency, according to Transparency International. Sri Lanka President Mahinda Rajapakse has already pledged not to accept any conditions from the IMF on its loans. This intractability cannot be tolerated by the international community, particularly at a time when the government is sponsoring attacks that directly contravene international rules of war.

We strongly urge the IMF to refuse emergency funding for Sri Lanka. Funding during this volatile time would only further the government's military offensive, as economic priorities would continue to be neglected. We urge the IMF not be complicit in the Sri Lankan government's attacks on civilians, by refusing funding for undemocratic and destructive purposes.

Sincerely,

[Your name will appear here.]

ம ம க கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை!

திமுக கூட்டணி அறிவிப்பு தொகுதி பங்கீட்டுச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்தவித தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திமுக மமக கூறிவந்தன. இந்நிலையில், ம ம க, 2 மக்களவை+1 மாநிலங்களவை என்று கோரிக்கை வைப்பதாகவும், திமுக 1 மக்களவைத் தொகுதிக்கே ஒத்துக்கொண்டுள்ளதால், கூட்டணி மாறுவது பற்றி ம ம க யோசித்து வருகிறது.

இதற்கிடையே,
மனித நேய மக்கள் கட்சியை தங்கள் கூட்டணியில் நீடிக்கவைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தின் சார்பில் அவரது பிரதிநிதிகள் ஜே.எம்.ஆருண் எம்.பி.யும், தொழிலதிபர் பிரசிடென்ட் அபு ஆகியோர் மமக கட்சி நிர்வாகிகளுடன் பேசி

திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடத்தில் இது பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத்தும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருந்தும் மனித நேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மனித நேய மக்கள் கட்சி தனது நிலைகுறித்து இன்று இரவு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நண்பனொருவன் தான் காதலிப்பதாகவும் அதைத் தன் காதலியிடம் கவிதை வடிவில் தெரிவிக்க விரும்புவதாகவும் எப்படி கவிதை எழுதுவதென்றும் கேட்டு நடுநிசியை அண்டும் நேரத்தில் தொ(ல்)லைபேசினான்.

அப்போது நான் இருந்த மனநிலையில், "ஆடான ஆடெல்லாம் தவிடுபுண்ணாக்கெண்டு அலையுதாம். வாத்தியார் வீட்டு நொண்டி ஆடு மட்டும்... இப்ப உனக்கெதுக்கு இந்த காதலும் கத்தரிக்காயும்?" என்றேன்.

நண்பனுக்கு விளங்கிவிட்டது நான் வெறியில் (அட நிஜமாலுமே நித்திரை வெறிங்க) இருப்பது. எனக்கு மின்மடலில் விளக்கமாய் அனுப்பவதாய்க்கூறி அழைப்பினைத் துண்டித்தான்.

பொதுவாகவே காதல் என்றவுடன் இந்தக் கத்தரிக்காயும் அதனுடன் சேர்ந்து விடுகிறதே. அப்படியானால் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம்?

இது என்ன முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுவது போன்றதா அல்லது அமவாசைக்கும் அப்தல்காதருக்கமான உறவு போன்றதா?

எனக்குத் தெரிந்த வரையில் பெண்கள் பருவமடைந்ததும் பச்சரிசிச் சோறும், வெள்ளைக் கத்தரிக்காய்ப் பாற்கறியும், நல்லெண்ணெய்யும், உழுத்தங்களியும் அவர்களுக்கான பிரதான உணவாக மாறி விடுகின்றது. அதைவிடுத்து கத்தரிக்காய்க்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

கத்தரிக்காய் பிராணசக்தியைக் குறைக்கும் என்று சில யோகாவில் சொல்லப்படுகிறது. பாக்கியராஜ்-இன் படத்தில் சொல்லப்படும் சம்பந்தம் அறிவுபூர்வமாக தவறென்று மருத்துவ நண்பன் ஒருவன் கூறினான்.

அப்படியானால் எதற்காக காதலுடன் இந்தக் கத்தரிக்காயைச் சம்பந்தப் படுத்துகிறோம். தெரிந்தவர்கள் கூறலாமே.


More than a Blog Aggregator

by ♗யெஸ்.பாலபாரதி ♗

கடந்த சில நாட்களுக்கு முன் தம்பி குசும்பனிடமிருந்து மடல்.. அவரின் பதிவுகள் குறித்த எனது எண்ணத்தை அனுப்பும் படி கேட்டிருந்தார். ஆனால்.. என்னுடைய பணிச்சூழல் எழுதவிடாமல் செய்து விட்டது. உண்மையில் குசும்பனின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது.. போட்டோக்களை கிராஃபிக்ஸ் செய்வதும், புகைப்படங்களுக்கு அவர் எழுதும் கமெண்ட்டும் தான். நிச்சயமாக நம்மிடையே நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது என்று அடித்து(யாரைன்னு கேட்காதீங்க!) சொல்லமுடியும். அதையும் எழுத்தில் வடிப்பது என்பது தனிச்சிறப்பான விசயம்.

இன்று ஜெயமோகனிடம் அத்தகைய நகைச்சுவையுணர்வை பார்க்கமுடிகிறது. அவ்வப்போது சாருவும் கூட எழுதுவார். இவர்களை விட அ.முத்துலிங்கம் குறிப்பிடதக்கவர். (இவரையே கூட ஆசானாக்கிக்கொள்ளலாமா.. என்றும் ஆலோசனை உண்டு) ஆனாலும் வெறும் நகைச்சுவை காலத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்பது என் எண்ணம். நகைச்சுவையோடு நையாண்டியும் கலந்தால் அது அழியாப்புகழ் பெறும் என்றும் திடமாக நம்புகிறேன். எப்படி காதலுக்கும், நட்புக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை கூறுவார்களோ, அதுபோலவே நகைச்சுவைக்கும், நையாண்டிக்குமான இடைவெளி. இதனை உணர்ந்து குசும்பன் தொடர்ந்து இயங்குவாரெனில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று வாழ்த்துகிறேன்.

கலக்குங்கள் குசும்பன்..
———-
தேர்தல் பேரங்கள் இன்னும் முடிந்தபாடில்லை. தொகுதி பங்கீடு ஒரு பக்கம் சில கட்சிகளை கூட்டணி விட்டே துரத்திவிடும் போலத் தெரிகிறது. கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று குமரிமாவட்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாளை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடப்போவதாகவும் குளச்சல் எம்.எல்.ஏ ஜெயபால் அறிவித்து இருக்கிறார். இதற்கிடையில் காங்கிரஸ் தொழிற்சங்கத்திற்கு நான்கு சீட்டு ஒதுக்க வேண்டும் என INTUC காரர்கள் கொடிபிடித்து கோசம் வேறு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிடைத்ததே 16 அதில் உங்களுக்கு 4 என்பதெல்லாம் ஓவராகத்தெரியவில்லை என்று அவர்களிடம் தங்கபாலு பேசியதை நேரடியாக கேட்டு சிரித்துக்கொண்டேன். :)
—–
இன்னும் சில முக்கிய தலைகள் மதிமுக வில் இருந்து விலகி, திரும்பவும் தாய் கழகமான திமுக-விற்கு வருவார்கள் என்று தெரிகிறது. பாவம் வைகோ.. மிகவும் நொந்து போய் இருக்கிறார். இவர் பா.ம.கவுக்கு நிகராக சீட் கேட்கிறாராம். அதிமுகவோ ஒன்றிலிருந்து மூன்று வரைத் தான் தரமுடியும் என்று சொல்லி வருவதாக தகவல் கிடைக்கிறது. அதனால் அண்ணன் கூட்டணி மாறலாம் என்றும் சொல்கிறார்கள்.. "என்னமோ நடக்குது.. மர்மமாய்.. இருக்குது.."
——
சில நாட்களுக்கு முன்பு கணேஷ் என்பவர் சிலருக்கு ஆயிரம் ரெண்டாஆ…யிரம், மூவாஆஆ…யிரம்…(மாமா பிஸ்கோத்து :))) ) என்று பின்னூட்டங்களை அள்ளி வீசியதாக சில நண்பர்கள் மூலம் அறிந்தேன். செந்தழல் ரவி போட்ட பதிவில் அவரின் பின்னூட்டங்களையும் கண்டேன். ரசித்தேன்(இது பலருக்கு வருத்தத்தையும், சிரமத்தையும் கொடுத்துள்ளது என்பதையும், அதனால் அவரது செயல் கண்டனத்துக்குரியது என்பதையும் மறுப்பதற்கில்லை). மனிதருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. நிச்சயம் அவர் பதிவு தொடங்கினார்.. பின்னூட்டம் போட முடிகிறதோ இல்லையே.. நான் தினமும் படிப்பேன். அசத்தக்கூடிய திறமைகளை வைத்திருக்கும் அவர் இப்படியான வெட்டி வேலைகளில் ஈடுபடுவது தான் வருந்தவைக்கிறது. நான் பலரிடம் சொல்லி வருவது இதைத்தான்.. எழுத்து நன்றாக இருந்தால்.. நிச்சயம் அதற்கான அங்கீகாரம் தாமதமானாலும் கிடைக்கும். வாருங்கள் கணேஷ்.. பதிவைத் தொடங்குங்கள்.
——–

எப்போதுமே அனைத்திலும் புதுமையை முதலாவதாய் அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் தற்போது தமிழ் உட்பட சில இந்திய மொழிகளில் மெயில் அனுப்பும் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.

தமிழ் தவிர ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

இதனை enable செய்ய கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.
- ஜிமெயில் அக்கௌண்ட்டில் login செய்தவுடன் "settings" என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.
- அதில் "gmail display language" என்பதில் "தமிழ்" என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
- பின் "save changes" எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் அனைத்து settings சும் save ஆகி விடும்.

பின் "அஞ்சல் எழுது" எனும் ஆப்ஷனை செலக்ட் செய்தல் கீழ்க்கண்ட கம்போசெர் திரை ஓபன் ஆகும்.




அதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் "தங்க்லீஷ்" என கொச்சையாக அழைக்கப்படும் (அதாவது vanakkam for வணக்கம்) மொழியில் டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்பலாம்.



இந்த வசதியானது கிராமத்தில் இருக்கும் ஆங்கிலம் தெரியாத நண்பர்களுக்கு ஒரு வரப்ப்ரசாதமாகும். நம் கருத்துக்களை நமது தாய் மொழியில் அனுப்பினால் அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். முதலில் மெயில் தமிழில் மெயில் அடிக்க கஷ்டப்பட்டாலும் பிறகு பழகிக்கொள்வர்.{நாம் கற்றுக்கொள்ளவில்லையா?}

பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டை பதியுங்கள். நன்றி...

கருத்துகள் இல்லை: