காஞ்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா!
எதிர்ப்புக் காரணமாக ரத்து!
காஞ்சிபுரம், நவ. 9: ஆர்எஸ்எஸ் கருத்தரங்கம் நடந்த பள்ளி மீது கல்வீசி தாக்குதல் நடந்தது. 6 பேர் காயம் அடைந்தனர். பதற்றம் நிலவியதால், போலீஸ் குவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கிராமத்தில் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு 3,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடந்தது. பள்ளியின் மற்றொரு பகுதியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 2 நாள் கருத்தரங்கம் தொடங் கியது. பல ஊர்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத் தைகள், தமுமுக ஆகியவற்றின் கொடிகளுடன் பலர் பள்ளி முன் திரண்டனர். ஆர்எஸ்எஸ் கருத்தரங்கம் நடத்த அனு மதித்தது யார் என்று பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர். பள்ளிக்குள் இருந்து தடிகளுடன் வெளியே வந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கல்வீசியவர்களை தாக்கினர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினர். அவர்கள் மீது கல்வீச்சு நடந்தது. இதில் 6 பேர் காய மடைந்தனர். அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச் சியில் உறைந்தனர். தகவல் நகரில் பரவி, பெற்றோர் பதற் றத்துடன் வந்து பிள்ளைகளை அழைத்து சென்றனர். பள்ளி நிர்வாகி அருண் குமாரை போலீஸ் அதிகாரிகள் கூப்பிட்டு, ஆர்எஸ்எஸ் இயக் கத்தினரை உடனே வெளி யேற்றும்படி கூறினர். கோட் டாட்சியர் முருகையா (பொறுப்பு), தாசில்தார் நடராஜன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். சம்பவம் பற்றி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் ராஜன் கூறுகையில், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் 2 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந் தோம். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் வந்து எங்கள் மீது கல்வீசினர். பள்ளி நிர்வா கம் கேட்டுக் கொண்டதால் வேறு இடத்துக்கு செல்கிறோம் என்றார். இன்று காலை காஞ்சி இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் மற்றும் காஞ்சி கதிரவன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
விடுதலைப்புலிகளின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
இலங்கை அரசிடம் மத்திய அரசு வற்புறுத்தி போரை நிறுத்தச் செய்ய வேண்டும்
தமிழர் தலைவர் கருத்து
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வற்புறுத்தியுள்ள அறிக்கை வருமாறு:
போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று இலங்கையில் விடுதலைப்புலிகள் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்! முதல்வர் கலைஞர் தம் அயராத முயற்சிகளுக்கு விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து ஏற்பட்ட சாதகமான விளைவு இது என்றே சொல்லலாம்!
முன்புகூட விடுதலைப்புலிகள் 2002-இல் தங்கள் தரப்பிலிருந்து போர் நிறுத்தம் அறிவித்த பிறகே, ஓராண்டுக்கு பின்பே சிங்கள அரசு, பன்னாட்டு அழுத்தம் காரணமாகவே போர் நிறுத்தம் செய்தது.
தமிழ்நாட்டின் எழுச்சி
தமிழ்நாட்டில் எழுந்துள்ள எழுச்சியையொட்டி, நமது முதல்வர் கலைஞர் அவர்கள் விடுத்துவரும் தொடர் அறிக்கைகளின் விளைவாகவே, விடுதலைப்புலிகள் இந்த நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டியுள்ளார்கள்.
வழக்கம்போல இருக்கின்ற சில சிங்கள ஆதரவு - இரவல் குரல் சக்திகள் - ஊடகங்களில் சில இதனைக் கொச்சைப்படுத்தி அவர்கள் ஏதோ வலுவிழந்து விட்டனர் என்று வாய்ப்புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பிரச்சாரம் செய்யக் கூடும். அலட்சியப்படுத்த வேண்டிய இந்த அற்பங்களைப்பற்றிக் கவலைப்படாமல், அங்கு சொந்த மண்ணில் சோற்றுக்கு வழி இன்றி, குண்டு மழைகளிலிருந்து தப்பிக்க காடு, வனாந்திரள்களில் அலையும் தமிழர்கள் குழந்தைக் குட்டிகளுடன் ஊர் திரும்பிட வசதி செய்ய இந்த நல்லெண்ணம் இலங்கை அரசால் எதிர்க் கொள்ளப்பட வேண்டும்.
மத்திய அரசின் கடமை
அதை வற்புறுத்த நமது மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
நமது பிரதமரை 13-ந் தேதி அன்று சந்திக்க வரும் இலங்கை அதிபர் இராஜபக்சேயிடம் எடுத்துக் கூறி வற்புறுத்திட வேண்டும். போர் நிறுத்தம் - நிரந்தர அமைதித் திரும்புதல் இவை பிரதமரால் வற்புறுத்தப்பட்டு அரசியல் தீர்வு அங்கு உருவாக்கப்பட வேண்டும் என்பதே நமது மிக முக்கிய வேண்டுகோள்.
இணையதள இன்டர்ஃபேஸ் பயன்பாடுகளின் அடுத்த கட்ட அறிமுகமாக சில்வர்லைட் என்ற பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது.
மல்ட்டி மீடியா பயன்பாடுகளுக்கு உகந்த இந்த சில்வர்லைட் அடுத்த மே மாதத்திற்குள் 200 மில்லியன் நிர்மாணங்களை எட்டிவிடும் என்று மைக்ரோசாப்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வெப் இன்டர்ஃபேஸ் டிசைனில் அடோப் பிளாஷுடன் சில்வர்லைட் கடும் போட்டிக்கு தயாராகி வருகிறது. இது குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோவில் அதிக கவனம் செலுத்துகிறது என்று மைக்ரோசாஃப்டின் மென்பொருள் பிரிவின் தலைமை வடிவமைப்பாளர் ரே ஒஸ்ஸி தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்காலத்தில் டாட் நெட்டில் இணையத்திற்காக புரோகிராம்களை உருவாக்க இது உதவும் என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.
பயனாளர்களின் நோக்கத்திற்கேற்ப இது பிளாஷ் போலவே செயல்படுகிறது. இந்த பிளக்-இன் அப்ளிகேஷனை ஒருவர் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
இது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஃபயர் ஃபாக்ஸ் மற்றும் சஃபாரி ஆகிய பிரவுசர்களில் கிடைக்கும். டவுன்லோடு செய்த பிறகு ஒரு சிலவர்லைட் பயன்பாடு உள்ளடங்கிய இணையப் பக்கத்தை திறந்து கொள்ளலாம்.
உதாரணமாக டஃபிடி (Taffiti) என்ற பரிசோதனை தேடல் இன்டர்ஃபேஸ் (Search Interface) திறக்கும். இந்த டஃபிடி இன்டர்ஃபேஸ் மரம் போன்ற வரைபடம் திரையில் தோன்றும். இது திறனுள்ள ஒரு பணியிடத்தை நமக்கு அளிக்கும்.
ஆனால் சில்வர்லைட்டை நுகர்வோர்களிடம் சேர்ப்பிக்க விண்டோஸ் அப்டேட்டை பயன்படுத்த மாட்டோம் என்று மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது. மாறாக உள்ளடக்க அல்லது பொருளடக்கம் வழங்குவோர் மற்றும் மைக்ரோசாஃப்ட் டாட் காமை பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளது.
மேஜர் லீக் பேஸ்பால் மற்றும் ஃபாக்ஸ் மூவிஸ் ஆகியவை சில்வர்லைட் பயன்பாட்டை உபயோகப்படுத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் என்டர்டெய்ன்மென்ட் டுனைட், தி ஹோம் ஷாப்பிங் நெட்வொர்க், வேட்ல்ட் வைடு ரெஸ்லிங் என்டர்டெய்ன்மென்ட் (WWE), மற்றும் வீடியோ பகிர்வு இணையதளமான பிரேக் டாட் காம் ஆகியவற்றை சில்வர்லைட் பொருளடக்க வழங்குவோருக்காக சேர்த்துள்ளதாய் மைக்ரோசாஃப்ட் புதனன்று அறிவித்துள்ளது.
என்டர்டெய்ன்மென்ட் டுனைட், சில்வர்லைட் அடிப்படையிலான இணையதளங்களை உருவாக்கி, எம்மி விருதுகள் (Emmy Awards) மற்றும் பிற நிகழ்வுகளை முக்கிய அம்சங்களாக்கவுள்ளது.
சில்வர்லைட் உதவியுடன் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் லைவ் அப்ளிகேஷன்கள் பலவற்றை பயனாளர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த மேம்படுத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சில்வர்லைட் உள்ள சிறந்த தேடல் சாதனத்தை (Search Tool) அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதனன்று சில்வர்லைட் 1.0 வுடன் சில்வர்லைட் என்கோடிங் மற்றும் பப்லிஷிங் டூல் பயன்பாடு ஒன்றையும் சேர்த்து அறிமுகப்படுத்தியுள்ளது. இது எக்ஸ்ப்ரஷன் என்கோடர் 1.0 என்று அழைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக