.தமிழ் எண்கள்.
எனக்கு மின் அஞ்சலில் வந்த தமிழ் எண்கள் பற்றிய மடல்.
1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்து நூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகர்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கனம்
1000000000000 = கர்பம்
10000000000000 = நிகர்ப்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெல்லம்
100000000000000000 = அன்னியம்
1000000000000000000 = அர்த்தம்
1000000000000000000 0 = பர்ரர்த்தம்
1000000000000000000 00 = பூரியம்
1000000000000000000 000 = முக்கோடி
1000000000000000000 0000 = மகாயுகம்
பதித்தது
குறும்பன்
ஒவ்வொரு குறளும் சொல்வதென்ன கல்வி
ஒவ்வொரு குறளும் சொல்வதென்ன கல்வி
2.எண் என்பதும் எழுத்து என்பதும் மக்களின் கண்கள் போன்றதாகும்.
3.கண்ணுடையவர் என்பவர் கற்றவரே..கல்லாதவருக்கும் கண்கள் இருப்பினும் அவைகள் புண்களாகவே கருதப்படும்.
4.பழகும் போது மகிழ்வோடு பழகி..பிரியும் போது இனி எப்போது காண்போம் என எண்ணும்படி பிரிவதே அறிவுடையோர் செயலாகும்.
5.செல்வந்தர் முன் தாழும் வறியவர் போல்..கல்வி கற்றோர் முன்..தாழ்ந்து நின்று கற்போரே உயர்ந்தவர் ஆவார்.
6.தோண்ட தோண்ட கிணற்றில் நீர் ஊறுவது போல, படிக்கப் படிக்க அறிவு பெருகும்.
7.கற்றோருக்கு எல்லா நாடுகள்,எல்லா ஊர்களிலும் சிறப்பு உண்டு. அதனால் ஒருவன் சாகும்வரை படிக்கலாம்.
8.ஒரு பிறப்பில் நாம் கற்ற கல்வி..ஏழேழு பிறப்பிற்கும் உதவும் தன்மை உண்டு.
9.தாம் விரும்பும் கல்வி அறிவை உலகமும் விரும்புவதால் அறிஞர்கள் மேன்மேலும் கற்றிட விரும்புவர்.
10.அழிவற்ற செல்வம் கல்வியே ஆகும்..மற்றவை எதுவும் செல்வமாக ஆகாது.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தன்னால் தனித்து ஒன்றும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் கருணாநிதி கைவிரித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் எவை எவை சட்ட விரோதமான செயல்களோ அவற்றிலே சிலர் ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இன்று, நவம்பர் 6ம் திகதி முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், பெற்ற குழந்தையை, கண்ணில்படுபவர்களிடம் கொடுத்து விட்டு, தாய்மார்கள் தப்பிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வருகின்றனர். இலவச சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள், தற்போது, பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, இங்கு பிரசவத்திற்காக வரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு நாளில், 30 முதல் 40 பேருக்கு இங்கு பிரசவம் நடக்கிறது. தவறான உறவால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் சிலர், போலி முகவரி கொடுத்து, பிரசவத்திற்கு, "அட்மிட்' ஆகின்றனர். குழந்தை பிறந்த மூன்று, நான்கு நாட்களில், யாரிடமாவது குழந்தையை கொடுத்து, சற்று நேரம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, "எஸ்கேப்' ஆகி விடுகின்றனர். மீண்டும் அந்த பெண்கள் திரும்பி வராததால், குழந்தையை வைத்துக் கொண்டு தவிப்பவர்கள், போலீசார் உதவியுடன் மருத்துவமனை டாக்டர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ரேணுகா என்பவர், தனக்கு குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை, அதே வார்டில் இருந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு தலைமறைவானார். மற்றொரு பெண், மருத்துவமனை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த பார்வதி என்பவரிடம், "குழந்தையை வைத்திருங்கள் பாத்ரூம் சென்று வருகிறேன்' என கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், பார்வதி, மருத்துவமனை போலீஸ் எஸ்.ஐ., அம்பிகாவிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அந்த குழந்தையை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையை தவிக்க விட்டு செல்லும் தாய்மார்களின் எண்ணிக்கை சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. தவறான உறவுகளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சேலம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சண்முகம் கூறுகையில், "நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பிரசவத்துக்கு வந்து செல்கின்றனர். டோக்கன் முறையை மருத்துவமனையில் அமல்படுத்தி வருகிறோம். குழந்தைகளை தவிக்க விட்டு செல்லும் பெண்களை, போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆதரவற்ற குழந்தைகளை சமூக நலத்துறை மூலம், தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைப்போம்' என்றார்.
பாம்பையும் அவனையும் பார்த்தால் முதலில் அழிக்கப்பட வேண்டியவன் அவனே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக