வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-11

நாலு விஷயம்


பயம் போனால் ஜெயம் வரும்

ஜாக் லெம்மன் புகழ் பெற்ற நகைச்சுவை, குணசித்திர நடிகர், இயக்குனர். பிராட்வே நாடக அரங்குகளிலும் நடித்திருக்கிறார். அவரது 'some like it hot', 'The Apartment' ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

அதன் பின்பு அவர் 'Face a Hero' என்ற பிராட்வே நாடகத்தில் நடித்தார். அது தோல்வியடைந்து மோசமான விமர்சனங்களைப் பெற்றதால் அவர் மனமுடைந்து போயிருந்தார். தன் எதிர்காலமே இருளாகி விட்டதென கலங்கி தூக்கமே வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்.

மறுநாள் காலையில் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. தோல்வியைத் தழுவிய அந்த நாடகத்திற்குப் பின்பு அவருக்கு எந்த நாடகமும், திரைப்படமும் இல்லாததால் அவருக்கு நேரம் நிறைய இருக்குமெனக் கருதி, படத் தயாரிப்பாளர்கள் 'Days of wines and Roses' என்ற திரைப்படத்திற்கான கதை, உரையாடல்கள் அடங்கிய ஸ்க்ரிப்ட்டை அனுப்பியிருந்தார்கள்.

அதன் பிறகு அவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம். வெற்றிகளும் விருதுகளும் தேடிக் குவிந்தன. நாடகத்தில் அடைந்த தோல்வி அவருக்கு இன்னொரு வெற்றிக் கதவைத் திறந்துவிட்டது.

"தோல்வி நமக்குத் தடையாக இருப்பதில்லை. தோல்வியைப் பற்றிய பயமே நமக்குத் தடையாக இருக்கிறது' - இப்படிச் சொல்லியிருக்கிறார் ஜாக் லெம்மன்.

நாரா? பூவா?

உலகப் புகழ் பெற்ற வயலின் மேதை ஜூபின் மேத்தாவின் வயலின் கச்சேரியை ஒரு தம்பதியர் சுவாரஸ்யமாக ரசித்துக் கொண்டிருந்தனர். அவர் வாசிக்கும்போது கழுத்தில் அவருக்கு அணிவித்த மலர் மாலை இருந்தது. அவர் தன்னை மறந்து அசைந்து ஆடி வாசிக்கையில் மலரிலிருந்து இதழ்கள் கீழே விழுந்து கொண்டிருந்தன.

மனைவி சொன்னார். "அவர் வாசித்து முடிவதற்குள் இதழ்கள் யாவும் கீழே விழுந்து கழுத்தில் வெறும் நார்தான் இருக்கும்"

கணவர் சொன்னார். "இருக்கலாம், ஆனால் அவர் ஒரு அழகான மலர்க்குவியலின் நடுவில்தானே இருப்பார்"

எதைப் பார்ப்பது வெறும் நாரையா? அல்லது அழகான மலர்களையா?

மீனா? நானா?

சாக்ரட்டீசை அவருடைய சிஷ்யர் ஒருவர் கேட்டார். " உங்களிடம் சிஷ்யராக வருபவர்களை ஏற்றுக் கொள்ளுமுன் நீங்கள் ஏன் அவர்களை ஒரு குளத்தைப் பார்க்கச் சொல்கிறீர்கள்?"

"அவர்கள் குளத்தில் குனிந்து பார்க்கும்போது வண்ண மீன்கள் துள்ளி விளையாடுவதைக் கவனிக்கிறார்களா, அல்லது தன் உருவத்தை மட்டுமே ரசித்துக் கொள்கிறார்களா என்று தெரிந்து கொள்ளத்தான்" என்றார் சாக்ரட்டீஸ்.

நாயிருக்க பயமேன்?

அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், •பாலா என்ற நாயை மிக அருமையாக வளர்த்து வந்தார். அந்த நாயி‎ன் பராமரிப்புக்காக ஏகப்பட்ட பணம் செலவழித்தார். எதிர்க்கட்சிக்காரர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாக்கி "ஒரு நாய்க்காக இவ்வளவு பணம் வீணடிக்கப்படலாமா?" என கூக்குரலெழுப்பினர்.

ஆனால் அதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் ரூஸ்வெல்ட். "ஒரு வாயில்லா ஜீவனிடம் கருணையுடன் நடந்துகொள்வது தவறா?" என்று வாதிட்டார். அந்த நாய்க்காக அவர் பரிந்து பேசிய சொற்பொழிவு அவரின் மிகச்சிறந்த பேச்சுகளில் ஒன்று. அவர் நாயிடம் காட்டிய பரிவில் அமெரிக்க மக்கள் மனம் நெகிழ்ந்தார்கள். அவரிடம் அனுதாபமும் அன்பும் பெருகியது மக்களுக்கு. அவருக்கு ஆதரவு பெருகி அவரின் எதிரிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டது. அவரது எதிரிகள் தோல்வியைத் தழுவினார்கள்.
அலுவலக குறிப்பு 2

பிரிண்ட் எடுத்தே பேப்பர்களும், பிரிண்டர் காட்ரிஜின் செலவும் எங்கேயோ சென்றுவிடும். இதை கொஞ்சம் சிக்கனம் செய்யலாமே... Fine Print மூலம்.

இந்த http://www.fineprint.com/ அட்ரஸ் க்கு சென்று, டவுன்லோடு செய்து, நூற்றுக்கணக்கில் verification purpose, Filing Purpose க்காக எடுக்கப்படும் document களை 'Default Printer' க்கு பதிலாக இந்த பிரண்டரை ஸ்லெக்ட் செய்து எடுக்கலாம்.

இதனால் 2 அல்லது 4 பக்கங்களில் நாம் எடுக்கும் பிரிண்ட்டை ஒரெ பக்கத்தில் சுருக்கி எடுக்கலாம். அதனால் பேப்பரின் அளவு குறையும். நேரம் குறையும். பேப்பர்களின் செலவு, பிரிண்டர் காட்ரிஜின் செலவு எதிர்பார்க்கும் அளவு குறையும்.

முயற்சி செய்யுங்களேன்....


அணில் குட்டி அனிதா:- ஏன் ஏன் ஏன்.... எழுத ஒன்னும் இல்லன்னு இப்படியா??????


பீட்டர் தாத்ஸ் :- "The brain is a wonderful organ. It starts working the moment you get up in the morning and does not stop until you get into the office
????!
எனது இசையார்வத்தின் அதிகபட்ச உயரம் தமிழ் திரைப்பாடல்கள் மட்டுமே. டாப் 5 க்குள் அடக்கிவிடக்கூடிய விஷயமா இது.? அதுவும் எனக்கு பிடிக்கவேண்டுமானால் அந்தப்பாடல் இசை தவிர மேலும் சில ரசனையான விஷயங்களையும் கொண்டிருக்கவேண்டும். ஏராளமான பாடல்களுக்கிடையே சில விதி முறைகளை வைத்துக்கொண்டு நான் ரசித்த, ரசிக்கும் டாப் 5 பாடல்களைத் தருகிறேன். மிக முக்கியமான விஷயம் 2006க்கு பின்னர் வந்த பாடல்கள் மட்டுமே ஆட்டத்துக்கு எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரசனையான ஒளிப்பதிவு, ரகளையான ஹீரோ, ஹீரோயின், அற்புதமான இசை, கவிதைத்தனமான பாடல் வரிகள், உணர்வைத்தொடும் குரல், கொஞ்சம் காதல் என பல விஷயங்களையும் கணக்கில் கொண்டு வரிசைப்படுத்தியிருக்கிறேன். பிடித்தால் (பிடிக்காவிட்டாலும்) பின்னூட்டமிட்டு தெரியப்படுத்தவும்.

காற்றின் மொழி..


ப‌ட‌ம் : மொழி இய‌க்க‌ம் : ராதாமோக‌ன் ஜோடி : பிரித்விராஜ், ஜோதிகா ஒளிப்ப‌திவு : குக‌ன் இசை : வித்யாசாக‌ர் பாட‌ல் : வைர‌முத்து குர‌ல் : சுஜாதா

அக்க‌ம் ப‌க்க‌ம்..


ப‌ட‌ம் : கிரீடம் இய‌க்க‌ம் : விஜய் ஜோடி : அஜித், திரிஷா ஒளிப்ப‌திவு : திரு இசை : ஜிவி பிரசாத் பாட‌ல் : நா முத்துக்குமார் குர‌ல் : சாத‌னா ச‌ர்க‌ம்

காத‌ல் வைத்து..



ப‌ட‌ம் : தீபாவளி இய‌க்க‌ம் : எழில் ஜோடி : ஜெய‌ம் ர‌வி, பாவ‌னா ஒளிப்ப‌திவு : ஜீவா இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : பா விஜய் குர‌ல் : விஜ‌ய் யேசுதாஸ்

முன்பே வா..


ப‌ட‌ம் : ஜில்லுனு ஒரு காதல் இய‌க்க‌ம் : கிருஷ்ணா ஜோடி : சூர்யா, பூமிகா ஒளிப்ப‌திவு : ஆர்டி ராஜசேகர் இசை : ஏஆர் ரகுமான் பாட‌ல் : வாலி குர‌ல் : ஷ்ரேயா கோஷல்

எங்கேயோ பார்த்த மயக்கம்..


ப‌ட‌ம் : யாரடி நீ மோகினி இய‌க்க‌ம் : மித்ரன் ஜவஹர் ஜோடி : தனுஷ், நயன்தாரா ஒளிப்ப‌திவு : சித்தார்த் இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : நா முத்துக்குமார் குர‌ல் : உதித் நாராய‌ண‌ன்

பில் கிளிண்டன் பிறந்த/வளந்த ஊருக்கு குடுகுடுப்பைய யாரு கூப்பிட்டது.

பில் 'கிளு'ண்டன் பிறந்து மாணவப் பருவத்தில வளந்த ஆர்கன்சா மாகணத்திக்கு இந்த வாரம் போகச்சொல்லி வெள்ளிக்கிழமை மாலை ஜக்கம்மா உத்தரவு போட்டாச்சு, எதுக்குண்ணா இலையுதிர் காலம் இலை கலர் மாறி கலர் கலரா அழகா இருக்குமே அதப்பாக்கத்தான்.குடுகுடுப்பைக்காரனே ஜக்கு சொல்றத கேக்கலண்ணா அப்பறம் குகு சொல்றது யாரு கேக்குறது.


தங்கமணி, பாப்பா மற்றும் நான் காரெடுத்துட்டு சனிக்கிழமை காலைல ஹாட்ஸ்பிரிங்ஸ், ஆர்கன்சா கெளம்பியாச்சு. போகும் வழிதோரும் பார்த்த மாடுகள் என் பால்ய காலத்தில் நான் மாடு மேச்சத ஞாபகப்படித்திச்சு.


அங்கே போய் பாத்தா வெள்ளிக்கிழமை அடிச்ச காத்துல முக்காவாசி கொட்டிப்போச்சு, நம்ம எள்ளுத்தாத்தா காளமேகப் புலவர் இதப்பாத்திருந்தா நம்ம தாத்தா பதிவர் பழமைபேசி தலையும் அந்த இலை உதிர்ந்த மரத்தையும் வெச்சு ஒரு எள்ளல் பாட்டு எழுதிருப்பாரு.நமக்குதான் இப்படியெல்லாம் உவமை சொல்ற அறிவு இல்லயே.

நம்மூரு சவுக்கு மரத்தோட ஒன்னுவிட்ட பெரியப்பா பசங்க மாதிரி இருக்கிற சில மரங்கள் நாங்க கலர் மாறமாட்டோம் அப்படின்னு பச்சையாவே இருந்துச்சு.

என்னதான் அந்தோனிய கல்யாணம் பண்ணி மேரியம்மாவ மாறுன மாரியம்மா தன்னோட கையில உள்ள வேப்பிலைய மறக்காத மாதிரி, சில
மரங்கள் மாதம் மாறினாலும் கலர் மாறியும் மாறாமலும் இருந்துச்சு.



இதுல இருக்க படங்கள், ஹாட்ஸ்பிரிங்ஸ் மற்றும் டாலிமேனா, கொச்சிட்டா மலை பகுதிகளில் எடுத்தது.டாலிமேனா பகுதி ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.


கலப்பினத்தால கலர் மாறுன இந்த மாடுகள் எப்பயுமே ஒரு மகிழ்ச்சியதான் தருது.


மொத்தத்தில சனி ஞாயிறு ரெண்டு நாள்ல 800 மைல் தூரம் கார் ஓட்டி இத பாத்தோம், நல்ல ஒரு பொழுதுபோக்கு, ஆர்கன்சா மாகணம் டிரைவ் ரொம்ப நல்லா இருந்துச்சு ,

இந்த
ரெண்டு நாள்ல என்னோட செல்போனுக்கு ஒரு கால கூட வரலை, ஏன்னா ஒரு நாளைக்கு 30 கால் பண்ற ஒருத்தருக்கு அந்த அவசியம் ஏற்படலைங்க.

இந்துமதப் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட
உத்தரப்பிரதேச அரசியல்வாதி சிக்குகிறார்

மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் சம்பந்தப்பட்டவர்

மாலேகானில் குண்டு வைத்து 6 பேர் சாவ தற்குக் காரணமான இந்துப் பயங்கரவாதிகள் அய்ந்து பேர் நவம்பர் 17 வரை சிறைக்காவ லில் வைக்கப்பட்டனர். இவர் களில் ராகேஷ் டட்டாராம் தாவ்டே, அஜய் ஏக்நாத் ராகிர் கர் ஆகிய இருவரையும் காவ லில் எடுத்து விசாரித்திட அரசு வழக்குரைஞர் நீதிமன்ற அனு மதி கோரியுள்ளார்.

இதில் ராகிர்கர் என்பவர் சதிகாரர்கள் பலருக்கும் 85 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். மொத்தம் 10 லட்சத்து 73 ஆயிரத்து 200 ரூபாய் சதிச் செயலுக்காகக் கொடுக்கப் பட்டுள்ளது. இதுபற்றி இன் னும் விவரங்கள் இன்று (செவ்வாய்) தெரியவரும்.

சதிச் செயல்கள் சம்பந்த மாக விசாரிக்கப்பட்ட ஒருவர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அது நீதிமன்றத்தில் தரப்பட் டது. புனேயில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் டெக்கான் கிளையில் ஏராளமான பணம் எடுக்கப்பட்டதுபற்றி மேலும் விவரங்கள் வாக்குமூலத்தில் உள்ளன.

ஆவணங்கள் சிக்கின

ராகிர்கரின் வீட்டைக் காவல்துறையினர் கடந்த 4 ஆம் தேதி சோதனையிட்டுக் கணக்குப் புத்தகங்கள், ஆவ ணங்கள், நாள்குறிப்பு, அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்பின் அறக்கட்டளை ஆவணம் முதலியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். அபினவ் பாரத் அமைப்பின் பணமும் ரொக்கமாகக் கைப்பற்றப் பட்டது. இந்த அமைப்பின் மூலம்தான் லெப்டினன்ட் கர்னல் புரோகித் சதிச் செய லைச் செய்து உள்ளார்.

இந்த அமைப்பின் பணத் தைக் கொண்டு ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தும், ஆயுதங்களும் வாங்கப்பட்டுள்ளன. இந் தூரில் ஷியாம் ஆப்தே எனும் நபருடன் ராகிர்கர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அபினவ்பாரத் அமைப்பின் பொருளாளராக ராகிர்கர் உள்ளார்.

ஆயுத வணிகர்கள்

மற்றொருவரான தாவ்டே ஏற்கெனவே ஜால்னா, பர்பானி ஆகிய இடங்களில் நடத்தப் பட்ட குண்டுவெடிப்புச் சம்ப வங்களில் ஈடுபட்டவர். மராட் டியத்தில் நான்டெட் வெடிப் புச் சம்பவத்திலும் ஈடுபட்ட ஆள். ஆயுத வியாபாரியான இவர் பழைய பொருள்கள் என்ற போர்வையில் ஆயுதத் தயாரிப்பிலும் சம்பந்தப்பட் டவர்.

ராம்ஜி, சந்தீப் டாங்கே ஆகிய இரண்டு பேரையும் காவல்துறை தேடி வருகிறது. இவர்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளனர்.

அரசியல்வாதிக்குத் தொடர்பு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெரிய அரசியல் தலைவர் ஒருவர் இந்துத்துவப் பயங்கர வாதத்தில் பங்கு பெற்றுள்ளார் என்ற தகவலையும் சிறப்புக் காவல்படை நீதிமன்றத்தில் தெரிவித்து அவரை விசாரிக்க அனுமதி கேட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசின் ஒத்துழைப் பையும் கோரியுள்ளது. இந்து மத வெறி அரசியல் கட்சிக் காரர்களுக்குச் சதிச் செயலில் உள்ள தொடர்பு இதன்மூலம் வெளிவரும்.

நரேந்திர மோடி

என்ன ஆதாரத்தின் அடிப் படையில் சதிகாரர்களைக் கைது செய்தீர்கள் என்று இந்து மதவெறிக் கட்சியான பா.ஜ.க. வின் குஜராத் முதலமைச்சர் மோடி கேட்டுள்ளார். பேசு வதற்கு முன் யோசித்துப் பேச வேண்டும் என அவருக்கு அறி வுரை கூறியுள்ளார் மராட்டிய துணை முதலமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல். பொடா சட்டம் வேண்டும் என்று பேசுபவர் களே, மராட்டியத்தின் சிறப்புச் சட்டப்படி ஏன் கடும் நட வடிக்கை எனக் கேட்பது வேடிக்கையாக உள்ளது என வும் அவர் கூறினார்.

வி.எச்.பி. - ஆர்.எஸ்.எஸ்.

சதிகாரி பிரதிக்யா சிங் தாக்கூருக்குப் பெரிய வக்கீலை அமர்த்தி வாதாடுவோம் என்று பால்தாக்கரேயும், விசுவ இந்து பரிசத்தும் தெரிவித்துள்ளன. மனித உரிமை ஆணையத்திடம் இதுபற்றி வி.எச்.பி. விண்ணப் பம் கொடுத்துள்ளது. இந்து மத அமைப்புகளைப் பய முறுத்திப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கக் காங்கிரசுக் கட்சி முயல்கிறது என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கூறுகின்றன. சேதுக் கால்வாய், அமர்நாத் யாத்திரை போன்று தங்கள் போராட்டம் நடை பெறும் என்று ஆர்.எஸ்.எசின் ராம் மாதவ் கூறுகிறார். பா.ஜ. கட்சி யைச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே செல்வாக்கிழக்க வைப்பதற்கு அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு முயல்கிறது என்று அவர் கூறு கிறார். அம்முயற்சியை எதிர்த்து நாடெங்கும் உள்ள 50 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். கிளைகள் போராடும் என்றும் அவர் மிரட்டுகிறார்!

கருத்துகள் இல்லை: