இணைத்து வைத்த ஆபாச வழக்கு
இதென்னடா நயன்தாராவுக்கு வந்த சோதனை? பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆபாசமாக நடித்திருப்பதாக ஷகீலா மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதே போல இன்னொரு வழக்கு நயன்தாரா மீதும் தொடரப்பட்டிருக்கிறது. ஆனால், இது கேரள எல்லைக்குட்பட்ட திருவனந்தபுரத்தில்.
ஏகன் படத்தில் ஆபாசமாக நடித்ததாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நாகராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ராஜுசுந்தரம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவும் செய்திருக்கிறது. இது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய நயன்தாரா, சென்சார் அமைப்பு சர்டிபிகேட் கொடுத்த ஒரு படத்தை ஆபாசம் என்று நீதிமன்றத்திற்கு போவது எப்படி முறையாகும். அவர்களுக்கு தெரியாதா ஆபாசம் எது? கவர்ச்சி எது? என்பது. நான் ஒருபோதும் ஆபாச படத்தில் நடித்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை என்று சீறியிருக்கிறார்.
அழகானப்பட்ட நயன்தாராவை இப்படி ஷகீலாவோடு ஒப்பிட வச்சிட்டாங்களே, ஐயோ பாவம்!
55 வயதானவன் காதலிக்கலாமா, சின்னப் பெண்களைக் காதலிக்கலாமா, திருமணமானவன் பிறபெண்களைக் காதலிக்கலாமா... இதுகூடப் பரவாயில்லை, அவற்றை அப்படியே எழுதலாமா... (சிலருக்கு அப்படிச் செய்வதுகூடப் பிரச்சனையில்லை, ஆனால் எழுதக் கூடாதாம்!). I would like to eat your pussy என்ற வரி ஆபாசமானதாம். நல்லது; அவர்களது வாய் உணவருந்த மட்டுமே பயன்படுவாதயிருக்கும் :)
தன்மேல் வீசப்படும் வன்மத்தைக்கூட இலக்கியமாக்கக்கூடிய சாமர்த்தியம் வெகு சிலருக்கே உண்டு. இவருக்கு பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம், அதனால்தான் இப்படியெல்லாம் எழுதித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார் எனச் சிலர் 'அபிப்ராயப்பட்டதற்கு', சாரு ஒரு கதையில் சொன்னது : நான் ஆண்மையுள்ளவனா எனச் சோதிக்க, என் கதைகளைப் படித்தால் போதாது; அதற்கு உங்கள் மனைவிகளை ஓரு இரவு என்னுடன் அனுப்ப வேண்டும்!
கலை உன்னதம் எனச் சிலர் கும்மியடித்தபோது சாரு ஆய்வு பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தலைப்பு : Art is Fart. (இத்துடன் ஆஸ்கார் வைல்டின் பிரசித்திபெற்ற வாசகமான Life is imitating Artஐ இணைத்துப் பார்க்கலாம்). சிலர் அமைப்பியல் என்ற பெயரில் புரியாத ஆட்டம் போடுவதாக விமர்சித்து சாரு கவிதா சரணில் எழுதிய கட்டுரை 'பூம் பூம் ஷக்கலக்க அமைப்பியல்வாதம்'. ஷங்கன்னா என்ற புனைபெயரில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புக் கட்டுரை எழுதிய சாரு வைத்துக் கொண்ட புனைபெயர் ஃபக்கன்னா. இப்படிச் கலை, அமைப்பியல் எனச் சகலத்தையும் பகடி செய்யும் எழுத்து சாருவினுடையது.
ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை சாருவும் அவரது சில நண்பர்களும் ஒருங்கிணைத்தார்கள். அதில் ஒரு காட்சி : இரண்டு ஆண்கள் பத்தடி இடைவெளியில் ஓரினப் புணர்ச்சி செய்வதுபோல் மைமாக நடித்தார்கள். பின்னணியில் சுப்ரபாதம். அந்நாடகக் குழுவில் பலர் இருந்தபோதும் சாருவின்மீது குறிவைத்து உடல்ரீதியான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. (பின்னணியில் சுப்ரபாதம் இசைக்கப்பட்டதையே பெரிதாக அப்போது தினமலரிலிருந்து இடது சாரிப் பத்திரிகைகள் வரை எழுதியது இன்னொரு நகைச்சுவை). வேறுமாதிரியான வன்மம் சாருவின்மேல் இணையப் பக்கங்களில் விசிறியடிக்கப்படுகின்றது.
ஒன்றரையணா கருத்துகளை உதிர்ப்பவர்கள் குறைந்த பட்சம் சாரு இதுவரை என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்பதையாவது தெரிந்துகொண்டு கருத்துகளை உதிர்க்கலாம். ஒன்றுமே செய்யாமல் இணையத்தில் கொஞ்சம் மேய்ந்துவிட்டு கண்டபடி திட்டி / மிரட்டி எழுதுவது அயோக்கியத்தனம்!
அ.மார்க்ஸ்தான் சொன்னாரென்று நினைக்கிறேன் : இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கதை சொல்லி சாரு நிவேதிதா.
(தற்போது இடுகைகள் நீக்கப்பட்டுவிட்ட பதிவொன்றையும், ஒரு இணைய விவாதக் களத்தில் வைக்கப்பட்ட சில வாதங்களையும் படித்ததும் எழுதியது. இணையத்தில் பல இடங்களில் சாருவின் மீது துவேஷம் கக்கும் பதிவுகளைப் பார்க்கிறேன். அதற்கான சிறு எதிர்வினையே இது).
அவரின பேச்சை ஒரு பொருட்டாக கூட மதிக்காத தமிழ் மக்கள், சுமார் 10 கோடி அளவிற்கு நிதியை குவித்துவிட்டனர்..
அதை தொடர்ந்து முதல் கட்டமாக் 2000 டன் நிவரான பொருட்கள் , கப்பல் மூலம் இலங்கை செல்ல தயார் நிலையில் உள்ளது. முதல்வர் , செஞ்சிலுவை பிரதிநிதி ரைஸ் ஆகியோர் அந்த பொருட்களை நேற்று பார்வையிட்டனர்.
இந்த பொருட்கள் கப்பல் மூலம் கொழும்பு எடுத்து செல்லப்பட்டு செஞ்சிலுவை சங்கம் பன்னாட்டு குழு முலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்படும்..
எப்படி , யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று வினா எழுப்பி, தங்கள் கற்பனையில் ஏதேதோ பினாத்தியவர்களுக்கு இப்போதாவது புரிந்திருக்குமா? போய் பினாத்துவதற்கு அடுத்த காரணத்தை தேடுங்கள்
2000 டன் என்பது முதல் தவனை. மட்டுமே.
800 டன் எந்த மூலைக்கு என்று அவசர புத்தியில் சில பதிவர்கள் ஒரு வேளைக்கு இவ்வளவு என்றால் , 40 வேளைக்கு என்றெல்லாம் கணக்கு போட்டு பதிவிட்டு தங்கள் கணித அறிவினை பறை சாற்றினார்கள் .. வாருங்கள், 2000 டன் பற்றி கணக்கு போட்டு, பதிவிடுங்கள்.
ஜெயா உள்ளிட்ட அனைவரும் , 25 லிட்டர் ஜெலுசில் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.. இல்லையெனில் சொல்லுங்கள் உங்களக்கும் நிவாரணம் தரும் விதத்தில் 10 கோடியில் இருந்து வாங்கி தருவார்கள்..
''எரியும் ஈழமும், பிராமண நாளிதழ்களும்'' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கி.வீரமணி பேசுகையில்,
பிராமணர்களால் நடத்தப்படும் சில ஆங்கில நாளிதழ்களும், சில தமிழ் நாளிதழ்களும் ஈழப் பிரச்சினை குறித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மக்களை திசை திருப்பும் வகையில் தவறான, திசை திருப்பக் கூடிய செய்திகளை அவை பிரசுரித்து வருகின்றன.
2.30 லட்சம் ஈழத் தமிழர்கள் படும் துயரங்களையும், வலுக்கட்டாயமாக காட்டுக்குள் துரத்தப்பட்டுள்ள அவலத்தையும் இந்தப் பத்திரிக்கைகள் மறந்து விட்டன.
இவர்களால் அமெரிக்க அதிபராக ஓபாமா தேர்வு செய்யப்பட்டதை பக்கம் பக்கமாக செய்தி போட்டு நிரப்ப முடிகிறது. ஆனால் தமிழ் ஈழத்திற்காக விடுதலைப் புலிகள் நடத்தி வரும் போர் குறித்த செய்தியை ஏன் இவர்கள் போடுவதில்லை?.
பிராமணக் குடும்பங்களால் நடத்தப்பட்டு வரும் இந்த பத்திரிக்கைகளின் இரட்டை நிலையைத்தான் இது காட்டுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு தங்களையும், தங்களது தாயகத்தையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று தெரியும். இந்த செய்தித் தாள்களின் உதவி அவர்களுக்குத் தேவையி்ல்லை.
தமிழர்களும், திராவிடர்களும், இந்த பிராமணப் பத்திரிக்கைகளைப் படிக்காமல் புறக்கணிக்க முன்வர வேண்டும் என்றார்.
thatstamil.com
உலகப் பிரபல "ஜுராஸிக் பார்க்' நாவல் எழுத்தாளர் மைக்கல் கிரிச்டன், தனது 66 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக மர ணமானார்.
அவருடைய "ஜுராஸிக் பார்க்' நாவலைப் போன்றே "கொங்கோ' மற்றும் "டிஸ்குளோஸர்' உட்பட அவரது அனைத்து நாவல்களும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன.
அவருடைய நாவல்கள் ஒவ்வொன்றும் 150 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
அத்துடன் பிரபல அமெரிக்க மருத்துவமனை தொலைக்காட்சி நாடகத் தொடரான "ஈ.ஆர்' (ER) இவரின் சிருஷ்டிப்பிலேயே உருவானமை குறிப்பிடத்தக்கது.
அவரது புதிய நாவல் ஒன்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கிரிச்டனின் மரணத்தையடுத்து அவ்வெளியீடு பிற்போடப்பட்டுள்ளது.
அவரால் எழுதப்பட்ட ஏனைய நாவல்களில், "ஒட்ஸ் ஒன்' (1996), "த அன்ட்ரோமெடா ஸ்றெயின்' (1969), "த கி ரேட் ட்ரெயின் ரொபரி' (1975), "த லொஸ்ட் வேர்ல்ட்' (1995), "டைம் லைன்' (1999), "ஸ்டேட் ஒப் பியர்' (2004), "நெக்ஸ்ட்' (2006) என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக