உங்களின் மதிப்பு என்ன?
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள் “
Posted by கால்கரி சிவா
Thanks:http://sivacalgary.blogspot.com/2006/05/blog-post_18.html
"எமது பணியைப் பொறுத்தவரை பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. மக்களுக்கு உதவிகளை வழங்குகின்ற நடவடிக்கையை பருவமழையானது மேலும் சிக்கலாக்கிவிட் டுள்ளது. சில வீதிகள் இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலைகாணப்படுகின்றமையால் உதவிப்பொருட்களை கொண்டுவருவது கடினமாகியுள்ளது. இருந்தபோதிலும் மிகவும் அவசியமாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்ற எம்மால் முடிந்துள்ளது," என சர்வகட்சி செஞ்சிலுவைச் சங்க குழுவின் பேச்சாளர் அலெக்சாண்ட்ரா மெடியேவிக் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அலெக்சாண்ட்ரா மெடியேவிக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
[அலெக்சாண்ட்ரா மெடியேவிக்]
வீரகேசரியின் ஆ.அருண், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளரினை பேட்டி கண்டுள்ளார்.
பேட்டி விபரம் வருமாறு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக