--
நாடும் முழுவதும் வாகனங்களை கொள்ளையிட்டு, அவற்றின் இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து, வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட இருவரை இரத்தினபுரி மாவட்ட காவற்துறையின் குற்ற தடுப்aபு பிரிவின் அண்மையில் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பிக்கு இரத்தினபுரி பிரதேசத்தில் விகாரை ஒன்றில் தங்கியிருந்த போது கைதுசெய்யப்பட்டதுடன் மற்றைய நபர் மாத்தளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இவர்கள் மிகவும் சாதுர்யமாக கொள்ளையிட்டு இலக்க தகட்டை மாற்றிய டொல்பின் ரக வான் ஒன்றையும் போலியாக தயாரித்த சாரதி அனுமதி பத்திரங்கள் பலவற்றையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
ஒரே இலக்கத் தடுகளை கொண்ட இரண்டு டொல்பின் வான்கள் குறித்து இரத்தினபுரி மாவட்ட காவற்துறையின் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இந்த வாகன கொள்ளை மற்றும் வர்த்தகம் குறித்த தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி காவற்துறை பரிசோதகர் பிரியந்த கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் போது அவர்களிடம் இருந்து கைப்பற்றிய சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் அடையாள அட்டைகளில் பெருபாலானவை தமிழர்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
--
வீடியோத் தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்த முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால்தான் போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை அரசு கூறியுள்ளது.
|
போர் நிறுத்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இரட்டைக் கொள்கையில் இலங்கை மக்களுக்கு அனுபவம் உள்ளது என இலங்கை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கேஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை விடுதலைப் புலிகள் கொல்ல முயன்ற பின்னர் தான் அவர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு தொடங்கியதாக கேஹலிய ராம்புக்வெல மேலும் கூறினார். இதற்கிடையில் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மூன்று மாதகால யுத்தநிறுத்தம் ஒன்றுக்கு செல்வதற்கான அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த தகவலை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய அழுத்தமே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார்.. இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் என இருதரப்பினரும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டுமென தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் போர் நிறுத்தம் செய்ய விடுதலைப் புலிகளுக்கு தயக்கம் ஏதும் இல்லை என சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
People Of Thambiluvil www.thirukkovil.com
கிழக்கில் தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி உறுப்பினர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களில் மாத்திரம் தமது கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் கிழக்கில் வன்முறையை நிறுத்த அவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி, ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ள வேளையில், விடுதலைப்புலிகள் சிற்சில இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறான கொலைகளை செய்து வருவதால், கிழக்கு மாகாணத்தின் இயல்புநிலை பாதிக்கப்படுவதாகவும் கருணா கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கருணா தரப்பினருக்கு எதிரான தாக்குதல்களை பிள்ளையான் தரப்பினர் மேற்கொண்டு வருவதாக சில பத்திரிகைகள் தகவல்களை வெளியிட்டிருந்தன. எனினும் கருணா தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டு, 5 பேர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் பொறுப்பேற்றிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீட்டு விட்டதாக அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளதுடன் அதனை மீட்க கருணாவின் முழுமையான உதவிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக