அலுவலகத்துல இப்ப அப்ரைசல் நேரம்கிறதுனால, ஏகன் விமர்சனம் அப்ரைசல் ஸ்டைலயே..
கோடம்பாக்கத்தின் கோலிவுட் அலுவலகம். ஏகனுக்கு அப்ரைசல் நடத்த இருப்பதால், மீட்டிங் அறையில் டேமேஜர் டென்சனாக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது, ஏகன் அறைக்குள் நுழைகிறார்.
ஏகன்: | (கதவைத் திறந்து) ஐ யாம் பேக்! |
டேமேஜர்: | நீங்க இப்பத்தான் உள்ள வர்ரீங்க. இதுக்கெல்லாம் ஐ யாம் பேக் சொல்லக் கூடாது!! |
ஏகன்: | அப்படியா!? அப்ப இருங்க. |
(ஏகன் வெளியே சென்று, மீண்டும் கதவைத் திறந்து) | |
ஏகன்: | ஐ யாம் பேக்! |
டேமேஜர்: | ஸ்ஸ்ஸ்ஸப்பா.. பேக்கோ.. ஃப்ரண்ட்டோ.. முதல்ல இங்க வந்து உக்காருங்க, ப்ளீஸ்! |
(ஏகன் மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறார்… நடக்க்க்கிறார்.. நடக்க்க்க்கிறார்… நடந்து கொண்ண்ண்ண்ண்ண்டே இருக்கிறார்…) | |
பணியாளர்: | (இடையில்) சார்.. உங்கள பெரிய டேமேஜர் கூப்பிடுறாரு. |
(டேமேஜர் எழுந்து, நடந்து கொண்டிருக்கும் ஏகனைக் கடந்து சென்று, பெரிய டேமேஜரைப் பார்த்துப் பேசி விட்டு, மீண்டும் அறைக்குத் திரும்பி, இன்னும் நடந்து கொண்டிருக்கும் ஏகனைக் கடந்து, தன் இருக்கையில் அமர்கிறார். சிறிது நேரம் கழித்து, ஒரு வழியாக ஏகனும் தன் இருக்கையில் வந்து அமர்கிறார்) | |
டேமேஜர்: | ஆமா.. நான் உங்கள சீட்டுலதான உக்காரச் சொன்னேன். இது வரைக்கும் என்ன பண்ணீங்க.. பத்து அடிய நடக்கிறதுக்குப் பத்து நிமிஷமா? |
ஏகன்: | அது ஹீரோ இண்ட்ரொடக்ஷன். அதுக்கெல்லாம் அப்படித்தான் ஸ்லோமோஷன்ல நடக்கணும். இப்பக் கூட நடந்து வர்ரப்ப, நான் ஒரு இடத்துல நாலா பிரிஞ்சி, திரும்பவும் ஒண்ணா சேந்தேனே.. எனக்குப் பின்னாடி எக்ஸ்-ரே..ச்சீ ச்சீ.. லேசர் ரே எல்லாம் போச்சே!! அதையெல்லாம் நீங்க பார்க்கல!? |
டேமேஜர்: | பாக்கலயே. |
ஏகன்: | சரி.சரி. ஃப்ரீயா விடுங்க. அப்ரைசல ஆரம்பிங்க. |
டேமேஜர்: | ஹ்ம்.. சரி, இந்தப் படத்துல நீங்க என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்கன்னு ஷார்ட்டா சொல்லுங்கப் பார்க்கலாம். |
ஏகன்: | நான் பேஸ் மாட்டேன். என் படம் பேசும். |
டேமேஜர்: | ம்ச்.. இங்கல்லாம் இப்படி சொல்லக் கூடாது. நீங்க உங்களப் பத்திப் பேசலன்னா, உங்களுக்கு சி ரேட்டிங்தான். |
ஏகன்: | அய்யோ.. அதெல்லாம் வேணாம். நானே சொல்லிடுறேன். நான் இந்தப் படத்துல ஒரு காவல் அதிகாரியா வர்ரேன். அப்புறம், வில்லனப் பிடிக்கறதுக்காக, வில்லன் கிட்ட இருந்து அப்ரூவரா மாறின ஒருத்தன மாறுவேஷத்துல கல்லூரிக்குப் போய் கைது பண்றேன், கடைசியில அந்த வில்லனயும் பிடிக்காம கொன்னுடறேன். இதுக்கெல்லாம் நடுவுல நயன் கூட காதல், டூயட் எல்லாம் இருக்கு. |
டேமேஜர்: | அந்த வில்லனக் கடைசியில கொலைதான் பண்ணப் போறீங்கன்னா, அத படத்தோட ஆரம்பத்துலயே செஞ்சிருக்கலாம்ல. எதுக்காக அந்த அப்பாவி அப்ரூவர படம் முழுக்கத் துரத்தனும், இரண்டரை மணி நேரத்த வீணாக்கனும்? |
ஏகன்: | இதையெல்லாம் என்னோட லீடரத்தான் நீங்க கேட்கணும். அவரு சொன்னாரு, நான் பண்ணேன். |
டேமேஜர்: | சரி.அத விடுங்க. அது என்ன படத்துல ஒரு மாதிரி கழுத்த ஆட்டி என்னமோ செய்றீங்க!? |
ஏகன்: | அதுவா.. அது ச்சும்மா ஸ்டைலுக்கு.. அப்படியெல்லாம் என்னத்தையாவது பண்ணலன்னா ஹீரோன்னு ஒத்துக்க மாட்டாங்க. |
டேமேஜர்: | ஸ்ஸ்ஸ்ஸ்.. நான் வேற என்னமோ நினைச்சிட்டேன்.. |
(இடையில் பணியாளர் கதவைத் திறந்து) | |
பணியாளர்: | சார்.. உங்களுக்குப் போன் வந்திருக்கு. |
ஏகன்: | எழுந்திருச்சிட்டேன். இதோ வர்ரேன் (என்று எழுகிறார்) |
டேமேஜர்: | ஹலோ.. போன் வந்தது எனக்கு, நீங்க உக்காருங்க.. (பணியாளரிடம் திரும்பி) நான் அப்புறமா வந்து அட்டெண்ட் பண்றேன். (ஏகனிடம்) ஆமா.. படத்தோட கிளைமாக்ஸ ஏன் அவ்வளவு திடீர்னு முடிச்சிட்டீங்க? உங்களோட வளர்ப்புத் தந்தையும் தாயும் 20 வருஷத்துக்கு அப்புறம் திரும்ப சேர்ர சீன்ல, அட்லீஸ்ட் ரெண்டு டப்பா கிளிசரினாவது காலியாகி இருக்க வேணாமா.. பார்த்தா திடீர்னு உங்க அப்பாவும், அம்மாவும், அப்புறம் தம்பியும் சிரிச்சிக்கிட்டே போஸ் குடுக்கறாங்க. சரி அத விடுங்க.. கிளைமாக்ஸ்ல அந்த அப்ரூவர கோர்ட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போறீங்களே, ஒழுங்கா ஒரே ரூட்டுல போக வேணாம். நீங்க வருவீஙகன்னு வில்லனோட ஆளுங்க அந்த ரூட்ல வெடிகுண்டெல்லாம் வச்சிருந்தாங்க. இப்படி ரூட்ட மாத்தி எதோ ஒரு கோடவுன்க்குள்ள வண்டிய விட்டு, உங்கள நம்பிக்கிட்டு இருந்தவங்கள ஏமாத்திட்டீங்களே.. அதுவுமில்லாம, அந்த கோடீஸ்வர வில்லன் ஏன் எப்பப் பார்த்தாலும் அந்த பாழடைஞ்ச கோடவுன்லயே இருக்காரு.. அவரு பங்களாவுல கரண்ட் இல்லயா?? சரி, கடைசியில அந்த அப்ரூவர் என்னதான் ஆனாரு, அதைப்பத்தியும் ஒண்ணும் சொல்லல. |
ஏகன்: | ஏ.ஏ..ஏ.. ஏகன்கிட்ட இத்தனக் கேள்விக் கேட்டா, ஏகன் எதுக்கும் பதில் சொல்ல மாட்டான். இந்தக் கேள்விய நான் சாய்ஸ்ல விடறேன். |
டேமேஜர்: | சாய்ஸ்ல விடுறீங்களா?!. அப்ப உங்க படத்துக்கு சி ரேட்டிங்க்தான். |
ஏகன்: | சி ரேட்டிங்தானா… நான் உங்கள அப்புறமா கவனிச்சிக்கிறேன். ஏகன் வில் பி பேக். |
அமெரிக்க அரசியலைப் பற்றி எனக்கு அலசத் தெரியாவிட்டாலும், அதைப் பற்றி ஆராயத் தெரியாவிட்ட்டாலும்,இவர் charismatic leader என்று மட்டும் உணர்கிறேன்! ஜான் F கென்னடி, பில் கிளிண்டன் போன்றோரைப் பார்த்தும் எனக்கு இதே போல் தோன்றியிருக்கிறது!
நன்றி வெயிலான் சுட்டி பகிர்ந்தமைக்கு!!
இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்! உடனே தேசீயம் அப்படி இப்படின்னு கமெண்ட் போடாதீங்க! என் மனசுல பட்டதைச் சொன்னேன்!!
நன்றி வெயிலான் சுட்டி பகிர்ந்தமைக்கு!!
இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்! உடனே தேசீயம் அப்படி இப்படின்னு கமெண்ட் போடாதீங்க! என் மனசுல பட்டதைச் சொன்னேன்!!
*Lankstyle* Holland tamil rappers..
(San-G,Vinieman)
this video mixed BY Thanushan From Colombo..
real videosong coming soon...
http://www.myspace.com/arambam
lankstyle,arambam,vinieman,mcsanjee,neth erland,holland,chennei,srilanka,colombo, thanushan,sinhala,2pac,tamil,rap,
kollywood,tamilan,eelam,thoolvi,vanakam, peace,iraj,tamilremix,arrahman,rajani,la nkanz,
vijay,prabudeva,ajith,tamilnadu,mia,iraj ,ranindu,yogib,drburn,simbu,tamil dance,holland tamil rappers,chenei,yuvan,kaalai,mallu,desi,
tamilz,eelam,kuruvi,asin,thrisha,tamilbr own
,suntv,vijaytv,shakthitv,jeyatv,mcsanjee ,
tamil rap,netherland,ls records,danush,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக