சென்னை நவ :5: இலங்கை உள்பட பல்வேறு முக்கிய நாடுகளைச் சேர்ந்த துணைத் தூதர்களுடன், தமிழக அரசு செவ்வாய்க்கிழமை திடீர் ஆலோசனை நடத்தியது. இதுவிபரமாவது: இலங்கை சார்பில் அந்த நாட்டின் துணை தூதர் பி.எம்.அம்சா, அமெரிக்காவின் துணை தூதர் ஆன்ட்ரூ சிம்கின் உள்பட ஜப்பான், பிரிட்டன், தாய்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த துணை தூதர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையிலான அரசு உயரதிகாரிகளுடன் துணை தூதர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்னை உள்பட பல முக்கியப் பிரச்னைகள், தமிழகத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் துணை தூதர்களுடன் அரசு ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சென்னை நவ :5: தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு ஆணையிடாமல் இருக்குமா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டும் நிதி விடுதலைப் புலிகளுக்கோ அல்லது இலங்கை அரசுக்கோ தான் பயன்படும் என்று சிலர் அறிக்கை விட்டுள்ளனர். முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) மூலம்தான் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்காமல் அரசியல் நடத்துவதால் எந்தப் பலனும் இல்லை. தீயை அணைக்க வேண்டிய நேரத்தில் பெட்ரோலை ஊற்றுவது போல நடந்து கொள்ளக்கூடாது. சிறு பிசிறுகூட இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் அடுத்த நிமிடமே போரை நிறுத்துமாறு ராஜபக்சே அரசுக்கு இந்திய அரசு ஆணையிடாமல் இருக்குமா? இலங்கைப் பிரச்னையில் முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன் வரவேண்டும் என்று கி. வீரமணி கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் ரூ. 19.70 லட்சம் செலவில் புதிய பூங்கா
அன்பின் சகேரர்களே,முகவை மாவட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா சார்பாக "நேரடி அரசியல்" என்ற தலைப்பின் கீழ் ஆய்வரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வரங்கில் சட்டமியற்றும் சபைகளில் இந்திய முஸ்லிம்களின் பங்கு பற்றியும் இன்னும் அவர்களின் சமூக அரசியல் நிலை பற்றியும் ஆராயப் பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதான ஆய்வுரை வழங்க உள்ளார் :சகோ. E.M. அப்துர் ரஹ்மான் அவர்கள் பொதுச் செயளாலர்,
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் 8-ந் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக