வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-11

வருமுன் உரைத்த நிபுணர் வீட்டுக்கடன் நெருக்கடியால் உண்டான நிதி சூறாவளியில் சீர் குலைந்து போயிருப்பது அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்ல, அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் மீதான மதிப்பும்தான்.   . அமெரிக்காவோடு சேர்த்து உலக நாடுகளையும் திண்டாட வைத்த இந்த பயங்கர நிதி நெருக்கடிக்கான காரணங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வங்கிகள் திவாலாக நேர்ந்தது எப்படி என்பது குறித்தும் அலசி ஆராயப்பட்டு விதவிதமான காரணங்கள் முன் வைக்கப் படுகின்றன. இவை பொருளாதார செயல் பாடுகள் பற்றி இதுவரை புரியாத விஷயங்களை எல்லாம் புரிய [...]
சமீப காலமாக..மென்பொருள் வல்லுனர்களைப் பற்றி பத்திரிகைகள் மனம் போனபடி எழுதி வருகின்றன..

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல..ஒரு நிகழ்ச்சி சமீபத்தய படம் ஒன்றில் வந்துள்ளது.

வேலையில்லாத ஒருவனுக்கு மென்பொருள் தொழில் வல்லுநராக வேலைகிடைக்கிறது.முதல் வருடம்..நண்பர்களுக்கு இனிப்பு வழங்கும்..அவன்..அடுத்த ஆண்டு 5000 ரூபாய் வரை செலவழித்து ஒரு பார்ட்டி கொடுக்கிறான்..

இரண்டு ஆண்டுகள் கழித்து..சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்குகிறானாம்..

இப்போது அவன் மாத சம்பளம் 85000 ரூபாய்.இப்படி வந்த படம் அறை எண் 305ல் கடவுள்..

ரஜினி நடித்த சிவாஜியில் 20ஆண்டுகள் ஆர்கிடெக்சல் இஞ்சினீயர் ..அமெரிக்காவில் 200கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாக வருகிறது.

பார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்களாக..இவர்கள் இருக்கிறார்கள்..

இப்படி எல்லாம் அவர்கள்மீது பொறாமை படும் நண்பர்களே...அந்த நிலைக்கு வர ..அவனது உழைப்பு ..மென்டல் டென்ஷன் ஆகியவை எவ்வளவு இருந்திருக்கும்...அதை எண்ணிப்பாருங்கள்.ஒரு படத்தில் நடிக்க கோடிகணக்கில்..நீங்கள் வாங்கும்போது...மாத உழைப்புக்கு 85000 வாங்குவது கூடாதா?(இப்பணத்தில்..வருமான வரி..படிக்க வாங்கிய வங்கி கடன் மாதத் தவணை..அவனது மருத்துவசெலவு ஆகியவை போக)..அவன் வீட்டுக்கு எடுத்துப் போகும் சம்பளம்..பாதி கூட தேறாது.

அவனே பாவம்...உலக பொருளாதார வீழ்ச்சியால்...தினம் செத்து..பிழைத்துக் கொண்டிருக்கிறான்.அவனை ..திரை உலகமே..பத்திரிகை துறையே..தயவு செய்து விட்டு விடுங்கள்.

ஒரு வேண்டுகோள்!

நண்பர்களே...

ரஜினியின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்கள் என்ற பட்டப்பெயரை நேர்மையற்ற சில பத்திரிகைகளும், சில 'மனநோயாளி வலைப்பதிவர்களும்' நமக்கு சூட்டிவிட்டன. அதற்காக நாம் வருத்தப்படவில்லை. சந்தோஷமே...
இருக்கட்டும்.

இப்போது உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

ரஜினி எனும் நல்ல மனிதரின் எந்தச் செயலையும் கொச்சைப்படுத்துவது மட்டுமே தங்கள் குறிக்கோள் எனும் நோக்கில் ஆபாச விகடன்களும், தினப் பொய் மலர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளன.

இவற்றை புறக்கணிப்பது மட்டும்தான் அவற்றுக்கு நாம் தரும் பதிலடியாக இருக்க முடியும். ரஜினி பெருந்தன்மையான மனிதர். நிச்சயம் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் எனும் தைரியம் இந்தப் பத்திரிகைகளுக்கும் பதிவர்களுக்கும்.

தமிழை ஒழுங்காக எழுதத் தெரியாத 'அரைவேக்காடு'களும் கூட அவருக்கு திறந்த கடிதம் எழுதி தங்கள் கோணல்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

எனவே இவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை கிடைக்கும்போது கிடைக்கட்டும்... ஆனால் பொருளாதார ரீதியில் ரஜினியின் சமூகம் என்ற பெருமைக்குரிய ரசிகர்கள் ஏற்படுத்தும் இழப்பு என்னவென்பதைக் காட்ட வேண்டிய தருணம் இது. விற்பனையில் குறைந்தது பத்து பிரதிகளைக் கூட்ட வேண்டும் என்றாலும் அதில் உள்ள வலிகள் என்னவென்பது நாம் நன்கு அறிந்ததே.

புறக்கணிப்பு தேவையில்லை என்று கூறும் நண்பர்களும் நமக்குள்ளேயே இருக்கிறார்கள். ரொம்ப நாட்கள் பின்னால் போக வேண்டாம்... குறைந்தபட்சம் 6 மாத காலத்துக்கு முந்தைய குசேலன் வெளியீட்டிலிருந்து நிகழ்ந்தவற்றை யோசித்துப் பார்த்தால் நாம் சொல்வதில் உள்ள நியாயம் புரியும்.

ரஜினி நேரடியாக வந்து நமக்கு உத்தரவாக இதைச் சொல்லப் போவதில்லை. அவரிடம் இதுபற்றி யாரேனும் புகார் தெரிவித்தாலும், 'பிடிக்கலன்னா விட்டுட்டுப் போயிட்டே இரு கண்ணா... அவங்களை ஏன் பொருட்படுத்தறீங்க...' என்றுதான் சொல்வார். காரணம் பெருந்தன்மையில் அவர் ஒரு மகானின் மன நிலைக்குப் போய்விட்டவர்.

எனவே இன்றிலிருந்து மேற்கண்ட குழுமங்களின் எந்த வெளியீடுகளையும் வாங்குவதில்லை என உறுதியெடுப்போம். அத்தோடு, இந்த நல்ல பிரச்சாரத்தை முடிந்தவரை இணையத்துக்கு வெளியிலும் செய்வோம்.

ஒரு பத்திரிகையாளனாக இந்த செயலில் நமக்கு ஒரு தயக்கமிருந்தாலும், வணிகத்துக்காக அனைத்து தர்மங்களையும் தூக்கியெறிந்த, யாரோ ஒருவரைத் தூக்கி வைத்துக் கொண்டாட ஒரு நல்லவரைப் புண்படுத்துகிற இவர்களுக்கு எதிராக மக்கள் திரளுகிறார்களோ இல்லையோ, முதலில் ரசிகர்கள் திரளவேண்டிய நேரம் இது.

இந்தப் பத்திரிகைகளைப் புறக்கணித்தவர்கள், விருப்பப்பட்டால் தங்கள் விவரங்களைத் தெரிவிக்கலாம். www.envazhi.com- ல் அவற்றை வெளியிடும் எண்ணமுள்ளது. கூடவே தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம், அவற்றையும் பிரசுரிக்கிறோம்.

எதுவரை இந்தப் புறக்கணிப்பு...?

இந்தப் பத்திரிகைகள் ரஜினியை தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்பதல்ல நம் விருப்பம். குறைந்தபட்ச நடுநிலையுடன் நடந்து கொண்டாலே போதும். அப்படியொரு ஆரோக்கியமான சூழலுக்கு இந்த நோயுற்ற பத்திரிகைகள் திரும்பும் வரை இந்தப் புறக்கணிப்பைத் தொடரலாம்.

'நீ சொல்லி நாங்க என்ன செய்யறது... அது எங்கள் விருப்பம்...' என்று வாதிடுபவர்கள், அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் பத்திரிகை தர்மம் பேசும் நண்பர்கள் இந்த வேண்டுகோளைப் படிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இது அவர்களுக்கல்ல!

நன்றி!!
www.envazhi.com


குறிப்பு: புறக்கணிப்பு மற்றும் சந்தா நிறுத்திய விவரங்களை envazhi@gmail.com எனும் இமெயில் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கருத்துக்களை புகைப்படங்களோடும் அனுப்பலாம்.
படங்கள்: சுந்தர்

கருத்துகள் இல்லை: