கடந்த 30ஆம் திகதியன்று ஈரோட்டில் உள்ள சுதா ஹை டெக் ஐ.வி.எப். மருத்துவமனை மருத்துவமனை ஒன்றில் ஒரே நாளில் 20 சோதனைக் குழாய்குழந்தைகள் பிறந்து புதியசாதனை படைக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பல ஆண்டுகளாக குழந்தைகளில்லாதிருந்த கோவிந்தசாமி (58 வயது) சரோஜாதேவி (வயது 51) தம்பதியினருக்கும் சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
மேற்படி 20 குழந்தைகளின் தாய்மார்கள் கடந்த 30ஆம் திகதி கந்தசஷ்டி தினமானதால் குழந்தைகள் அன்றே பிறக்க வேண்டும் என விரும்பியதையடுத்து அனைவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது.
குறித்த தினத்தன்று காலை 5 மணிக்கு ஆரம்பமாகிய அறுவை சிகிச்சைகள் இரவு 10 மணி வரை தொடர்ந்தன. அன்று பிரசவத்திற்கு உட்பட்ட தாய்மார்கள் 35 வயது முதல் 51 வயது வரை உடையவர்கள்.
இதில் 8 தாய்மார்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
திருச்சி அருகே கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ஐயனார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர் குடவாசல் பாலசுப்பிரமணியன் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நத்தம் பகுதியில் குழுவினருடன் மேற்கொண்ட ஆய்வின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருள் தடயங்களும், 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால சிற்பங்களும் பல இடங்களில் புதைந்த நிலையில் இருப்பதை இவர்கள் கண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக