இதனை நான் மாணவர்களின் மோதலாக கருதவில்லை. மோதல் நடந்த இடம் கல்லூரியாக போய் விட்டதே என்றே வருந்துகிறேன். வேறு எங்காவது இந்த மோதல் நடந்திருந்தால் நாம் என்ன? நினைத்திருப்போம். இரண்டு மாணவ குழுவுக்கு இடையே நடந்த மோதல் என்றா???
இதனை ஒட்டி நம் பதிவர்கள் அனைவரும் தங்கள் கருத்தை வைதாயிற்று, வைத்தாயிற்று. இதில் பலரும் தங்கள் வாதத்தை வைக்கும் போது காவல் துறையையும் தங்கள் வார்த்தை குண்டுகளால் தைக்க தவற வில்லை. அவர்களின் சமூக அக்கறை பெருமிதம் கொள்ள வைக்கிறது. வாழ்க பொது ஜனம்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் அனைவரின் வேண்டுகோளும்/குற்றச்சாட்டும் அந்த காவலர்கள் நம்ம செல்லுலாய்டு நாயகர்கள் போல் பாய்ந்து பிடித்து நிறுத்த வேண்டுமாம். முடியுமா அது? காவலர்கள் வேலையும் சில சட்ட திட்டத்திற்கு அடங்கியே தான் இருக்கும், இருக்கிறது. ( உடனே, அவர்கள் எல்லா விடயத்திலும் சட்ட திட்டத்திற்கு அடங்கியா செய்கிறார்கள் என்று புலி பாய்ச்சல் பாய வேண்டாம், அநேக விடயங்களில் இல்லை என்றே எனக்கும் தெரியும்).
ஒரு கல்லூரியில் சென்று சும்மா ஒரு சில மாணவர்களை கைத்து செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் நீங்களும், மற்ற ஊடாக புலிகளும் விட்டு விடுவீர்களா? "காவல்துறையின் அராஜாகம். காவல்துறையின் ஆணவ போக்கு. காவல் துறையின் திமிர், காவல் துறையின் ... அது.... காவல் துறையின் ..இது..." என்று போட்டு நுங்கு எடுக்க மாட்டீங்க????
மாணவர்களே என்ன சொல்வார்கள்? இன்னைக்கு நாங்க அடிசிப்போம், நாளைக்கு நாங்க ஒண்ணா சேர்ந்ததுப்போம். இடையிலே நீ என்ன? அப்படி என்று தானே கேப்பார்கள். அதே போல் கல்லூரியின் உள்ளே ஹாக்கி மட்டை வைத்திருந்தார்கள், கிரிக்கட் மட்டை வைத்திருந்தார்கள் என்று சொல்லி கைது செய்ய முடியுமா? பின்னே கல்லூரியில் இதெல்லாம் இல்லாமெ வேற என்ன இருக்கும்?
சும்மா கத்தியை வைத்திருப்பதற்கெல்லாம் கைது செய்யிய முடியாது? என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியே கைது செய்யலாம் என்றாலும் அது ஏதும் அறியாத அப்பாவி வேண்டும் என்றால் கைது செய்யலாம். ஆனால் அவர்கள் அப்படியா? அவர்கள் சட்டத்தை அறிந்தததை விட சட்டத்தின் ஓட்டைகளையே அறிந்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? சரி அப்படியே ஒரு காவல்காரார் பாய்ந்து போகிறார் என்று வையுங்கள்; அவர் என்ன ஆயுதம்? யுக்தி கொண்டு அவனை பிடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சுட்டு விடலாமா? தடி கொண்டு தாக்கி விடலாமா? இல்லை நம்ம கைய்ப்புள்ள மாதிரி வேண்டாம் அழுதிருவேன் என்று மிரட்டல்(?) விடலாமா?
சரி அப்படியே ஒருவர் பாய்ந்து ஏதாவது ஆகி விட்டால், அந்த காவலரின் நிலை என்ன? அந்த காவலரின் குடும்பத்தின் நிலை என்ன? இதை கேட்டால் உடனே நீங்கள் அது அவர்களின் கடமை என்று சொல்வீர்கள். அப்படி சொல்லும் நாம் நம் கடமையை சரி வர செய்திருக்கிறோமா? செய்கிறோமா? செய்வோமா? நாம் நம்முடைய குற்றத்திற்கு, இயலாமைக்கு பிறரையே குற்றம் சாட்டி பழகி விட்டவர்கள். அதனாலேயே இப்படியும் சொல்லி கொண்டிருக்கிறோம்.
சட்டம் என்ன சொல்கிறது? இன்னது செய்தால் நாம் இன்ன தண்டனைக்கு, இன்ன நிலமைக்கு ஆளாவோம் என்று அறியாதவர் செய்தால் அவர்களுக்கு தண்டனை இல்லை என்று சொல்கிறது. (சரிதானே... தவறா இருந்தால், பிழை பொறுத்து அருள்க. அதாவது தான் செய்வத்தின் விளைவு அறியாத குழந்தைகளையும், மன நலம் பாதித்தவரையும் சட்டம் தண்டிக்காது என்று சொல்ல வந்தது...) ஆனால் இவர்கள் அப்படி அல்ல. பொறுத்திருந்து பார்ப்போம் சட்டம் என்ன செய்கிறது என்று?
அந்த இடத்தில், உங்கள் தகப்பானாரோ, மகனோ காவல் பணியில் இருந்திருந்தால் நீங்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் எதிர் பார்த்திருப்பீர்கள்???? ( தயவு செய்து மன சாட்சியுடன் சொல்லவும்.......)
நாம் ரோட்டில் விபத்து இன்றி வாகனம் ஒட்ட " உங்கள் குடும்பம் உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறது" என்று எழுதி வைத்திருக்கிறாரே காவலர், அந்த அறிவிப்பு அவருக்கும் தானே?
தமிழில் உங்களுக்கு சரளமாக எழுத வரும் என்று நினைக்கிறீர்களா?
கீழே உள்ள இடைவெளிகளை 'ஆம்' அல்லது 'இல்லை' என்பதில் ஒன்றை மாத்திரம் வைத்து நிரப்புங்கள் பார்க்கலாம்…
………, நான் ஒரு கெட்டவன் தான்.
………, நான் வாரமொருமுறை தான் குளிப்பேன்.
………, இந்த வலைப்பூ மிகச்சிறப்பாக உள்ளது.
(ஹி.. ஹி.. ஹி.. எல்லாவற்றிலும் விட இறுதி வினா தான் அதிகமாக பாதித்திருக்கும் என?. 'இது ரொம்ப பழசுடா' என்ற சொல்ல நினைக்கிறீர்களா?)
வெயில் சுடவில்லை…
கடும் மழையில் உன்னோடு வந்தேன்…
மழை என்னை நனைக்கவில்லை…
உன் மேல் நான் கொண்ட காதலின் மகிமை
என நினைக்காதே,
நான் அப்போது குடை பிடித்திருந்ததை மறந்துவிட்டு…
அனைவருக்கும் வணக்கம்…
நிறைய நாளுக்குப் பிறகு எழுதுகிறேன்…
நான் நினைக்கிறன் எல்லோருக்கும் இத மாதிரியான அனுபவம் கிடைத்திருக்கும் என்று…
எனக்கு கொஞ்ச நாளுக்கு முதல் ஒரு நண்பர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்…
அதில்,
'இன்று திருப்பதி கடவுளின் பிறந்த நாள்… இந்த குறுஞ்செய்தியை 11 பேருக்கு முன்னகர்த்தவும்… முன்னகர்த்தினால் நீங்கள் நினைக்கும் எல்லாமே நடக்கும்… மாறாக அந்த செய்தியை அலட்சியம் செய்தால் நீங்கள் மேற்கொள்ளும் எல்லா காரியங்களும் தோல்வியிலேயே முடிவடையும்…; என்று இருந்தது.
அவனிடம் இதைப் பற்றி கேட்டதற்கு தனக்கு இந்த செய்தியை தனக்குத் தெரிந்த ஒருவர் அனுப்பியதாகவும், அந்த 11 பேரில் ஒருவராக எனக்க அனுப்பியதாகவும் சொன்னான். நான் அவனிடம் கேட்டேன் 'திருப்பதி கடவுள் எப்படா பிறந்தார்? ஏன் இப்பிடியே இருக்கிறீங்கள்?' என்ற. அவன் சொன்னான், 'எனக்கு இதப் பற்றி தெரியாது. கடவுள் விஷயம்.. ஏன் வீணா றிஸ்க் எடுப்பான்?' என்று.
நான் அவனிடம் கேட்டேன் 'சரி.. உனக்கு இந்த மெஸேஜ அனுப்பிளானின்ர நம்பர தரேலுமா?' என்று.
அவனும் தந்தான்..
இது நடப்பதற்கு சில காலத்திற்கு முன்னர் எனக்கு இன்னொரு குறுந் தகவல் கிடைத்தது. பிள்ளையார் போன்ற உருவமுடைய படத்தை குறியீடுகள் மூலம் வரைந்து விட்டு மேலே குறிப்பிட்ட மாதிரியான ஒரு தகவல் கிடைத்தது. நான் அந்த தகவலில் 10 பேருக்கு அனுப்பவும் என்று இருந்ததை 150 பேருக்கு அனுப்பவும் என்று மாற்றி விட்டு நண்பருக்கு அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவரின் இலக்கத்திற்கு அனுப்பி விட்டேன்…
எப்படி என் இராஜதந்திரம்…???????
(ஹி ஹி ஹி ஹி…………………!!!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக