செவ்வாய், 11 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-10


AN ANIMAL THAT “SEES” WITH ITS EARS!

BERT THOMPSON

The animal kingdom—from ants to zebras—contains many strange yet wonderful creatures. But some of the most amazing of God's creatures are those animals that “see” with their ears.

Most animals have very good eyesight. They use this eyesight to hunt for food. For example, owls have very large eyes, which they use to search for food at night. Cats, too, have eyes that open wider as it gets dark, so that they can hunt even at times when humans can barely see. The keen eyes of eagles can spot mice even from high up in the air.

But some animals have tiny eyes, and very poor eyesight. So how do they hunt for food? God has given them another way to “see,” by using their ears. A bat is just such an animal. Some bats have very small eyes. But if you look at certain bats (like those that eat insects), you will see they have extra-large ears that move easily. Scientists now know that bats “see” by using what we call “echolocation” (EK-oh-low-KAY-shun). Here is how it works.

Bats make a sound that humans cannot hear. They send out sound waves that hit objects. A fraction of a second later, an echo comes back to their large ears. Bats not only hear the echo, but are able to tell how far away an object is, and in what direction. All of this happens so quickly that the bat is able to use the echo to locate the object, even though it may be far away. This is why it is called “echolocation.”

Scientists have learned that bats, using echolocation, can fly through difficult places (like caves and forests) without any trouble. More importantly, bats use echolocation to hit an insect with sound waves, understand where it is, and catch it in mid-air! Bats are so good at doing this that it is almost impossible to trick them. In experiments, scientists threw small rocks in front of bats. The bats sent out sound waves and “saw” the rocks, but did not try to eat them as they would a flying insect. Somehow, bats are able to tell by the echoes whether or not the object is something good to eat!

God has designed creatures in the animal kingdom very well—so that they can survive. Man has learned much from the animals that God made—and we still have much more to learn!

********************************

Thanks:http://www.discoverymagazine.com/articles/d2000/d0010a.htm

 

      


More than a Blog Aggregator

by சத்தியக் கடதாசி
ஷோபாசக்தி வெலிகடைப் படுகொலைகளின் நினைவுநாள் முடிந்து, கந்தன் கருணைப் படுகொலைகளின் நினைவு நாளும் வரப்போகிறது. ஆனால் வெலிகடைச் சிறைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது வருடத்தை நினைவு கூர்ந்து நாங்கள் பிரான்ஸில் நடத்திய ‘நெடுங்குருதி’ நிகழ்வின் மீதான அவதூறுகளும் சேறடிப்புகளும் இன்னும்தான் ஓயவில்லை. இம்மாத ‘தீராநதி’ இதழின் எதிர்வினைப் பகுதியில் அசோக் ‘நெடுங்குருதி’ நிகழ்வு மீதான உச்சக்கட்ட அவதூறுகளையும் தோழர் அ. மார்க்ஸின் மீதான தனது நீண்டகாலக் காழ்ப்புணர்வையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். நெடுங்குருதி நிகழ்வு குறித்து அவதூறுகளும் தவறான செய்திகளும் நிகழ்வுக்குப் பின்னால் [...]
இளமை ஒரு கற்பூரப்பருவம். நல்லதும் சரி, கெட்டதும் சரி இந்தப் பருவத்தில் விரைவாக பற்றிக் கொள்ளும். ஒரு வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை இந்த இளமை எளிதில் அடையாளம் காட்டிவிடும். அந்த இளமைப் பருவத்தில் மூன்று விஷயங்கள் ஒருசேர அமையப் பெற்றால் ஒரு வாழ்க்கை நாசமே அடைகிறது என்பதை நான் பலர் அனுபவங்களில் இருந்து கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அவை என்ன?

1) நிறைய ஓய்வு நேரம்
2) நிறைய பணம்
3) தீய நட்பு

முதலாகக் குறிப்பிட்ட ஓய்வு நேரம் பல கலைகளின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. அந்த நேரம் நூலகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், ஏதாவது நல்ல பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படும் போது மனநலம், உடல்நலம், சாதனைகள் என நல்ல விளைவுகளையே தரும். ஆனால் எத்தனையோ தீமைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகக் கூட இந்த ஓய்வு நேரம் ஆவதுண்டு.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படும் போது வாழ்வின் ஆதாரமாக இருக்கக் கூடியது. அப்படிப் பயன்படுத்தத் தவறுகையில் பணம் பெரும்பாலும் தேவையற்ற வழிகளிலோ, தீய வழிகளிலோ செலவாவது இயல்பே. பணம் கஷ்டப்பட்டு கிடைக்காத போது, அதன் அருமை அறியப்படுவதில்லை. அருமை அறியப்படாத போது அலட்சியமாகவே அது கையாளப்படுகிறது.

முதல் இரண்டும் சேர்ந்தாற் போல இருக்கும் இடங்களை, மூன்றாவதாகக் குறிப்பிட்ட தீய நட்பு வேகமாகத் தேடி வந்து விடுகிறது. சர்க்கரை இருக்கும் இடத்தை எறும்புக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? எனக்குத் தெரிந்த போதைப் பழக்கமுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இப்படி மூன்றும் சேர்ந்தாற் போல கிடைக்கப் பெற்றவர்களே.

இந்த மூன்றில் இரண்டு இருந்தாலும் வழி தவறிப் போகும் அபாயம் நிறையவே இருக்கிறது.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. சம வயதுள்ள குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய இருந்தார்கள். வழி தவற வாய்ப்புகள் குறைவு. ஒரு குழந்தை அப்படித் தவற ஆரம்பித்தாலும் மற்ற குழந்தைகள் மூலம் உடனடியாக வீட்டுப் பெரியவர்களுக்குத் தகவல் வந்து சேர வாய்ப்புகள் அதிகம். ஆனால் இன்றோ தங்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்களைக் கடைசியாக அறிவதே பெற்றோர்கள் என்ற நிலை தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது.

எனவே இளமைப் பருவத்தில் உங்கள் சகோதர சகோதரிகளோ, உங்கள் குழந்தைகளோ இருப்பார்களேயானால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களது ஓய்வு நேரமும், பணமும் எப்படி செலவாகிறது என்பதைக் கண்காணிக்கத் தவறாதீர்கள். அவர்கள் நண்பர்களைப் பற்றி நன்றாக அறிந்திருங்கள்.

'நான் பட்ட கஷ்டம் என் குழந்தை படக்கூடாது' என்று சொல்லி உங்கள் குழந்தைகளைப் பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க முற்படாதீர்கள். நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தை பட வேண்டியதில்லை. உண்மை தான். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டுத் தான் சம்பாதிக்கிறீர்கள் என்ற விஷயமே தெரியாதபடி உங்கள் குழந்தையை வளர்த்து விடாதீர்கள்.

பயன்படுத்தப் படாத காலம் வீண் ஆகும் என்றால், தவறாகப் பயன்படுத்திய காலம் அழிவுக்குப் போடும் அஸ்திவாரம் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்த்துங்கள். பணத்தின் அருமையையும், காலத்தின் அருமையையும் உணர்ந்தவர்களை எந்த தீய சக்தியும் நெருங்குவதில்லை.

- என்.கணேசன்
அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை -மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது. -- மனத்தத்துவ ஆராய்ச்சியாளர் ஸிக்மண்ட் ஃபீராய்டு (Sigmund Freud) புணர்ச்சியின் வரம்பற்ற நிலைகளே மனிதனின் இயல்பென்றும், அதுவே நாகரிக மனிதனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்றும், சமூகத்திடம் கட்டுப்பாடுகளை கட்டுடைக்க முற்படும் போது முதல் கட்டுடைப்பு பாலுணர்வுக்கு தடையாக எதுவும்
இறைவன் எங்குள்ளான் ?
***********************

சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!
மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
உடன் குடியுள்ளான் இறைவன்!
புனிதமான
உன் காவி மேலங்கி
உடையை எறிந்து விட்டு
புழுதி நிரம்பிய
பூமிக்கு இறங்கி
உழவரைப் போல்
உன் தடங்களைப் பதித்திடு!
குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு
விடுதலையா?
எங்கே [...]
*********************
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: . ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
http://jayabarathan.wordpress.com/

கவிதை வாசல்

********************
நீ மட்டும்…

காற்றின் வருகையை
களிப்புடன் தலைசிலுப்பி
வரவேற்கிறது மரம்…

இதழ்விரித்துப்
புன்னகை பகிர்ந்த பூக்கள்
தங்களை அர்ப்பணிக்கத்
தலையாட்டி அழைக்கின்றன…

இடியையும் மின்னலையும் அனுப்பித்
தனது தலைநீட்டலை
மகிழ்வுடன் அறிவிக்கிறது மழை…

இலைகளை உதிர்த்த
கிளைகளின் முதுகில்
மீண்டும்_
தளிர்களைத் துளிர்த்துக்
கொண்டாடுகிறது வசந்தம்…

எங்கோ உதித்த சங்கீதத்தின் சிறுகீற்று
எல்லோர் காதுகளுக்கும்
சுகஒத்தடம் பரிமாறுகிறது…

ஆடிக்கொண்டே போகும் ஆறு
ஆனந்தமாகக் குதிக்கிறது
பள்ளத்தில்… அருவியாக…

தூறல்களின் சிலிர்ப்பில்
தன்னிச்சையாய் முளைத்த
காளான் குடைகளுக்கு அடியில்
துளிகளை_
ஆர்வமுடன் பருகுகிறது எறும்பு…

*****************

அனலேந்தி

ThANKS:vadakkuvasal.COM

      

கருத்துகள் இல்லை: