மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது
தெய்வத்தைக் கண்ட
திருவிழாக் கூட்டமாய்
இவன் நிற்க்கும் இடம்மெல்லாம்..........
ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தை
இவன் அன்போடு அனைக்கும் போது
என் பார்வையில் - ஒரு
அன்னையாகவே அறியப்பட்டான்
தண்டவாளத்தோடு இவன்
மீட்டும் இசையினிலே
இருபுறமும் மரங்களெல்லாம்
கைகோர்த்து செல்கிறது பின்னோக்கி
குயிலுக்கு குருவாக இருப்பானோ
வழியெல்லாம் கூவி கூவியே
குதுகலிக்கிறான்....
குயில்பாட்டு மட்டுமல்ல தாலாட்டும்தான்
உலகத்து முதற்தாயிற்க்கு - இறைவன்
தாலாட்டு கற்ப்பிக்கும் பொழுது
உடன் இருந்திருப்பான் போலிருக்கு
இவன் உற்சாகத்திற்க்கு
உரம் போட்டவன் அதில்
ஒரு துளியை
எனக்கு தரமான்டானோ?
இவன் தேகம் தொட தான்
எத்தனை பேருக்கு ஆசை
காடோடும் காற்றெல்லாம்
இவனை தழுவியே செல்கிறது
பெய்யும் மழையெல்லாம்
இவனை நனைப்பதற்க்கே
பெய்கிறது.......
வானத்தில்
மிதக்கும் மேகமெல்லாம்
இவன் முதுகேற துடுக்கிறது
இவன் மடியிறங்க
எவருக்குத்தான் மனமுண்டு
எனக்கும் ஒருதுளி கூட இல்லை
கண்மூடி கொண்டு சந்தோசத்தின்
கரையேறிவிட்டேன்........
இறுதிவரை ஜன்னல் வழிவந்து
தேடிய தென்றலின் தேடல்
காரணம் தான் தெரியவில்லை....................
என்ன பேசுவதென்றே தெரியவில்லை... என் வாழ்நாளில் இப்படியொரு தெளிவான சிந்தனை கொண்ட மனிதரை, கலைஞரை, அற்புதமான தலைவரை நான் பார்த்ததில்லை. என் ஆயுசுக்கும் இந்த மனிதருக்கு ரசிகனாய் இருந்த பெருமை ஒன்றே போதும்..."
-பாண்டிச்சேரி மாநில ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியின் பரவச வார்த்தை இது.
"இப்பதான் சார் எனக்கு நிம்மதியா இருக்கு. இனி எவனாவது நம்ம தலைவர் பத்தி மூச்சுக் காட்ட முடியுமா.. இதுக்காகத்தான் சார் இத்தனை நாளும் தவம் கிடந்தோம். தலைவர் தன் திட்டப்பட்டி ஆண்டவன் உத்தரவோட வரும்போது வரட்டும். எங்களை நாங்க தயார்படுத்தி வச்சிக்கிறோம்..."
-இது கோவை மாவட்ட நிர்வாகியின் கருத்து.
"தலைவரின் மனசு எங்களுக்குப் புரியாமலில்லை... இந்த உலகத்துக்குப் புரிய வேண்டாமா (ஹை..ஹை!) அதற்காகத்தான் இந்தச் சந்திப்புக்கு இத்தனை பிடிவாதம் காட்டினோம். இப்போது எல்லாமே தெளிவாகிவிட்டது. தலைவர் எங்களுக்கு பதவி, அதிகாரம் எதையும் கொடுக்காவிட்டாலும் கூட, இந்த ஒரு சந்திப்பு மூலம் மட்டுமே எங்களுக்குப் புதிய அந்தஸ்து கிடைத்துவிட்டது. அந்த பவர் ரஜினியைத் தவிர வேறு யாருக்கு உண்டு?"
-இது ரஜினி மன்ற முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான ஓம்சேகர்.
"யார் என்ன வேணா சொல்லட்டும். எங்களுக்கு தலைவர்கிட்டேயிருந்து சரியான, தேவையான செய்தி கிடைத்துவிட்டது. இதுபோதும் எங்களுக்கு.." என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரி என்பதை நினைவூட்டி, ரஜினியின் பாராட்டுப் பெற்றவர்!)
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பரவச நிலையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்திலிருந்து வெளிவந்த ரசிகர்கள் நம் களப்பணியாளரிடம் பகிர்ந்து கொண்டவற்றில் ஒரு பகுதிதான் இங்கே நீங்கள் படிப்பவை.
இதுநாள் வரை, வருவாரா மாட்டாரா என்ற சந்தேகத்தோடே காலம் தள்ளிய ரசிகர்கள், இந்தச் சந்திப்புக்குப் பின், சந்தேகம் தீர்ந்து மிக ஆழமான, அழுத்தமான நம்பிக்கைகளைச் சுமந்தபடி ஊர் திரும்பியுள்ளனர்.
அதேநேரம், ரஜினி என்ற அப்பழுக்கற்ற மனிதருக்கு, தலைவருக்கு தொண்டராக இருக்க வேண்டுமென்றால் இன்னும் எப்படியெல்லாம் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மலைப்பும் இவர்களில் பலருக்கு இப்போதே எழுந்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
நேர்மை, தொண்டு மனப்பான்மை, நல்ல வழியில் பணம் சம்பாதிக்கத் தேவையான மனப் பக்குவம் இது மூன்றும் தன் ரசிகர்களிடம் இருந்தாக வேண்டும் என்கிறார் ரஜினி. இந்த மனப் பக்குவத்தை தன் ரசிகர்கள் அடைவதற்குத்தான் இந்த இடைவெளியைத் தந்திருப்பதாக ரசிகர்களும் நினைக்கிறார்கள்.
பணம், ஜனம் இரண்டும் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது. இருந்தால் அங்கே அரசியல் வந்துவிடும் என்ற ரஜினியின் வார்த்தைகளில் பொதிந்துள்ள அர்த்தங்கள் ஆயிரம்.
"எல்லா விஷயத்திலுமே தலைவர் ரொம்ப தீர்க்கமான முடிவோட இருக்காருப்பா... நாமதான் குழப்பத்தோட இருந்திருக்கோம் இத்தனை நாளா... இனி யார், என்ன சொன்னாலும், அதன் அடிப்படையில் தலைவருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை மட்டும் செய்யவே கூடாது... தலைவர் ஒரு ரூட்டு போட்டுக் கொடுத்திட்டார். அதில் போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்..." என்பதே, இந்த சந்திப்பின் முடிவின் ரசிகர்களின் மனநிலையாக இருந்தது.
ரஜினி சொல்வதுபோல, எதற்கும் நேரம், சூழல் சரியாக அமைய வேண்டாமா?
கள உதவி: கோபி
http://www.envazhi.com
முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் -மருதையன்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?
ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் 'தூய்மைப்படுத்தல்' போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான். அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் நேற்று சூரசம்ஹாரத்தை காண 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர். சூரனை முருகன் சம்ஹாரம் செய்த போது பக்தர்களின் கோஷம் விண்ணதிர ஒலித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக