குறிப்பு: இந்த அறிமுகக் குறிப்பு ஆஃப்ரோ அமெரிக்க இலக்கியத்தை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு - 4, மே - 1998 ற்காக எழுதப்பட்டது.
இந்த அறிமுகக் குறிப்புகளோடு இணைத்து வாசிக்க: கருப்பு இலக்கியம்: மொத்ததிலிருந்து கொஞ்சம் சிதறல்கள்
இலக்கியப் புனிதங்களும் புனிதத் தொகுதிகளும் நொறுங்கிக் கொண்டிருக்கும் காலமிது. காலத்தை மீறிய படைப்புகள், எல்லோருக்கும் பொதுவான, அருவமான 'அழகியல்' மதிப்பீடுகள் என்று சொல்லப்பட்டவை ஒவ்வொன்றும் ஒன்றொன்றாக நம் கண் முன்பாகவே உளுத்து, உலர்ந்து, உதிர்ந்து கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில், இதுவரை கவனிப்பாரற்றுக் கிடந்த, மெளனத்தால் இருப்பே மறுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் உயிர்பெற்று எழுந்து இலக்கிய அதிகார பீடங்களின் அஸ்திவாரத்தை மெல்ல மெல்ல அசைத்து ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கின்றன. பழைய அணிசேர்க்கைகள் குலைந்து, புதிய இணைவுகள் - ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், இருப்பே துடைத்து அழிக்கப்பட்டவர்கள், மனிதர்களாகவே மதிக்க மறுக்கப்பட்டவர்கள் தமது தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தமக்கிடையிலான ஒற்றுமைகளைத் தேடி அடையாளம் கண்டு அணி சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். நீர் எங்கே இருக்கப் போகிறீர் என்பதை சீக்கிரமே முடிவு செய்து கொள்ளூங்கள்.
* * *
கண்களை மூடிக் கொள்ளுங்கள். உமது ஆட்காட்டி விரலை நெற்றியில் அழுத்திக் கொள்ளுங்கள். எங்கே சட்டென்று உமது நினைவுக்கு வருகிற, உமக்குப் பிடித்த ஐரோப்பிய – வேண்டாம், ஆங்கில இலக்கிய 'மேதைகள்' ஒரு ஐந்து பேரை வரிசையாகச் சொல்லுங்கள் ... ஷேக்ஸ்பியர், பைரன், வேர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், விட்மேன் (உமது நண்பருக்கு சற்று வித்தியாசப்படலாம்: ஹெமிங்வே, வாலேஸ் ஸ்டீவன்ஸ், டி. எஸ். எலியட், டி. எச். லாரன்ஸ், ஜாய்ஸ் ... இப்படி) இப்போது கொஞ்சம் யோசிப்போம். ஏன் ஒரு பெண் எழுத்தாளர் கூட உமது நினைவின் நுனிக்கு வரவில்லை? (ஜேன் ஆஸ்டின், விர்ஜினியா வுல்ஃப், சில்வியா ப்ளாத்). ஏன் ஒரு கருப்பர்கூட தோன்றவேயில்லை?
டோனி மாரிசன், வாலே சோயின்கா ஆகியோர் நோபல் பரிசுகளை பறித்திருக்காவிட்டால் நீர் இவர்களது பெயர்களைத் தெரிந்துகொள்ளும் சிரமமாவது எடுத்திருப்பீரா!
* * *
டிசம்பர் 8, 1986; நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டு வோலே சோயின்கா அங்கே, அந்த மேடையில் நின்று கேட்கிறார்: "கருப்பர்கள் நாங்கள் இப்போது தெளிவாகவே இருக்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் நான் எங்களவர்களை நோக்கி பேசவேண்டிய எந்த அவசியமும் இல்லை. எங்களுடைய இலக்கு, நாங்கள் பயணிக்க வேண்டிய பாதை எதுவென்று எங்களுக்குத் தெரியும். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் பேசவேண்டியது, அந்த மற்றதை நோக்கி - நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பதிலை மெதுவாகவே சொல்லுங்கள். இந்த நொடி, இப்படியொரு நிகழ்வு, வரலாற்றில் எந்தக் காலத்திலும் சாத்தியமேயில்லை என்பதை நிரூபிப்பதற்காக, அவசரத்தில், ஆத்திரத்தில், இதோ, இதே கருப்புத் தோல் போர்த்திய, மெல்லிய சுருண்ட மயிர் கொண்ட எத்தனை ஆயிரம் மனித உயிர்களைக் கண்டம் விட்டுக் கண்டம் பெயர்த்து கடத்திக் கொண்டு போயிருப்பீர்கள்,கொன்று குவித்திருப்பீர்கள், சித்திரவதை செய்திருப்பீர்கள், முடமாக்கியிருப்பீர்கள், நாக்கை இழுத்து வைத்து அறுத்திருப்பீர்கள், மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தியிருப்பீர்கள்." *
* * *
எலியட்டையும் எஸ்றா பவுண்டையும் சில்வியா ப்ளாத்தையும் தேடிப் பிடித்து எடுத்த அதே சென்னை அமெரிக்க நூலகத்தில்தான் கருப்பு (ஆஃரோ - அமெரிக்க) இலக்கியமும் குவிந்து கிடக்கிறது. அது இந்திரன் கண்ணில் மட்டும்தான் பட்டிருக்கிறது. இந்திரனுக்கு உரிய மரியாதை இந்த இடத்தில்தான் இருக்கிறது. மற்றவர்கள் இதற்கு என்ன பொறுப்பு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்!
இப்பொது, ஹென்றி லூயிஸ் கேட்ஸ். Jr, நெல்லி Y. மெக்கே இருவரையும் பொதுத் தொகுப்பாளர்களாகக் கொண்டு, ராபர்ட் G. ஓ' மெய்லி, வில்லியம் L. ஆண்ட்ரூஸ், பிரான்ஸஸ் ஸ்மித் ஃபாஸ்டர், ரிச்சர்ட் யார்பரோ, ஆர்னால்ட் ராம்பர்செத், டெபோரா E. மெக்டெளவல், ஹோர்டென்ஸ் ஸ்பில்லர்ஸ், ஹவுஸ்டன் A. பேக்கர், பார்பரா T. கிறிஸ்டியன் (அனைவரும் ஆஃப்ரோ - அமெரிக்கர்கள்) ஆகிய ஒன்பது பேர் பத்து ஆண்டுகள் கடுமையாக உழைத்து Norton Anthology of African American Literature என்கிற மாபெரும் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 3000 பக்கங்களில், 120 எழுத்தாளர்களுடைய 52 சிறந்த படைப்புகள் இதில் தொகுக்கப்பட்டிருக்கிறது. தொகுப்போடு ஒரு CD – யும் உண்டு. ஆஃப்ரோ அமெரிக்க ஆங்கிலத்தை தாளில் இறக்கி வைக்கும்போது அதன் உயிர்துடிப்பு மடிந்துவிடுவதைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு. இதில் முக்கியமான பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் உண்டு.
வழக்கு மரபு
அடிமைத்தனத்திலிருந்து அரசியல் விடுதலை பெற்ற காலம் வரை (1746 – 1865),
புனரமைப்பிலிருந்து புதிய நீக்ரோ அதாவது மறுமலர்ச்சி காலம் வரை (1865 – 1919)
ஹார்லெம் மறுமலர்ச்சி (1919 – 1940)
யதார்தவதம், நேச்சுரலிசம், நவீனத்துவம் (1940 – 1960)
கருப்பு அழகியல் (1960 – 1970)
70 – களுக்குப் பிந்தைய இலக்கியம்
என்று இரண்டரை நூற்றாண்டு காலத்துக்கு விரிந்திருக்கிற ஆஃப்ரோ அமெரிக்க இலக்கியத்தை ஏழு காலகட்டப் பகுதிகளாகப் பிரித்துத் தொகுத்திருக்கிறார்கள்.
இந்த விரிந்த காலப்பகுதியில், இந்த இலக்கியத்தில் எழுந்த தனித்துவமான வடிவங்கள், ஊடுருவியிருக்கிற தனித்துவமான பண்புகள், ஒவ்வொரு எழுத்தாளரும் தமக்கு முந்தைய தலைமுறை அல்லது சமகால எழுத்தாளருடைய எழுத்துக்களை மறுவாசிப்பு செய்யும் விதத்தில் எழுதியிருக்கும் தனிச்சிறப்பு, இன்னும் இது தொடர்பான பிற அம்சங்களை இந்தத் தொகுப்பு கண்டுகொள்ள உதவுமானால் அதுவே அதன் வெற்றி என்று தமது இலக்கைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக கருப்பு இலக்கியத்தின் தனித்துவமான கூறுகளிலிருந்து, தனித்துவமான கருப்பு விமர்சனக் கோட்பாட்டை உருவாக்கும் முயற்சியில் கருப்பு விமர்சகர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஹென்றி லூயிஸ் கேட்ஸ், ஹவுஸ்டன் பேக்கர், இவர்களில் முக்கியமானவர்கள். இந்த இரண்டு விமர்சகர்களும் மேற்கத்திய விமர்சனக் கோட்பாடுகளைக் கட்டுடைத்து (கட்டுடைப்பையும் சேர்த்து) தனித்துவமான கருப்பு இலக்கிய விமர்சனத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்திருக்கிறார்கள். வரும் காலங்களில் ஆங்கில இலக்கியத்தின், இலக்கிய விமர்சனத்தின் போக்கையே தீர்மானிக்கக்கூடிய இந்த எழுத்துக்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
* Henry Louis Gates Jr. - ன், Canon Formation and the Afro - American Tradition என்ற கட்டுரையிலிருந்து இந்த மேற்கோள். நூல்: Afro - American Literary Study in the 1990s, ed by: Houston A. Baker and Patricia Redmond, University of Chicago Press, 1986.
நம்ம ஊர்ன்னா...லட்டுக்குள்ள மூக்கூத்தி வைச்சு தருவாங்க..ஆனா..அமெரிக்க பெண்கள் மூக்கூத்தி போடுவாங்களா...போடலேன்னா..மூக்கூத்திக்கு பதில் என்ன குடுத்திருப்பாங்க..
தண்ணீ கஷ்டம் இருக்கும்னா...குடம் கொடுத்திருக்கலாம்...அதுவும் இல்லை...அப்போ பெண்கள் ஓட்டை எப்படி வாங்கி இருப்பாங்க?
ஒரு ஓட்டுக்கு.. நம்ம ஊருன்னா..150...200..ரூபாய் கொடுத்திருப்பாங்க..அங்கே எவ்வளவு டாலர் கொடுத்திருப்பாங்க?
ஆண்களுக்கு...சாராயம் வாங்கி..கொடுத்திருப்பாங்களா? அப்படி கொடுத்திருந்தால்..கூட கடிச்சுக்க நம்ம ஊர்ல..ஊறுகாய் இருக்கும்..அங்கே என்ன இருந்திருக்கும்?
பிரியாணி கொடுத்திருப்பாங்களா... மட்டனா ,சிக்கனா ,எவ்வளவு எலும்பு துண்டு இருந்திருக்கும்?
கள்ள ஓட்டு போட்டிருப்பாங்களா?
Booth Capturing இருந்திருக்குமா? அங்கே எல்லாம் மறு தேர்தல் நடக்குமா?
தேர்தல் செல்லாதுன்னு ..யாராவது கேஸ் போடுவாங்களா?
எத்தனைப் பேருக்கு...கைகலப்பு நடந்து ..காயம் ஏற்பட்டிருக்கும்...
ஓட்டு எண்ணிக்கை நியாயமா நடந்திருக்குமா?
(அப்பாடா...நாமும் அமெரிக்க தேர்தல் பற்றி ஒரு பதிவு போட்டுட்டோம் இல்ல)
- பல மக்களின் கற்பனாற்றலின் உந்து விசையை அதிகரித்தது தேன்கூடுதான். அதன் போட்டிகளின் மூலம் குவிந்த கதை, கட்டுரை, கவிதைகள் எத்தனை?
- தமிழ்மணத்தின் இன்றைய சூடான இடுகையின் முப்பாட்டன் தேன்கூட்டின் அதிகம் பார்வையிடப்பட்டவைகள்.
- பெட்டகம், வார்த்தைகளுக்கான அர்த்தம் என பல சக்திகளை ஒன்றடக்கியதே தேன்கூடு.
- சாகரன் என்ற மனிதனின் உழைப்பை ஏன் பெட்டியில் வைத்து பூட்டியிருக்கிறீங்கள். காரணத்தைச் சொல்லலாமே.
- தேன்கூடு கலைக்கப்பட்டதா? இல்லை தொடருமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக