நாங்கள்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!
எங்களில்
இலக்கிய நயமிருந்தும்
இலக்கண முறையிருந்தும்
கைக் கூலி
கொடுக்கப் பண மில்லாத
குறையினால்
படிக்கப் படாமல்..
கைப் பிரதியாகவே..
காலமெல்லாம்...!
எங்களை
விலை கொடுத்து
வாங்கிப் பிரித்து
வார்த்தைகளில்
விழும் அமுதம் பருகி
வாக்கியங்களின்
இன்பம் சுவைத்து
முழுவதும் படிக்காமல்
அவசர... அவசரமாய்...
முன் அட்டையில் மயங்கி
வாடைகைக்கு கிடைக்குமா - என
வாசகன் கேட்கிறான்?
என்ன சொல்வது..
ஏளனம் செய்வதில்
எவர்க்கும் சளைத்தவனல்லவே
எந்தமிழ் வாசகன்!!!
எழுதியவரே எம்மை
ஏரெடுத்துப் பாராதபோது
வீணில் வாசகனைக் குறைகூறி
விளையும் பயன் என்ன..??
பெற்றோரே...
மற்றோரே...
கரையான் அரித்து
கரைந்து போகுமுன்னே..
காமுகனின் கோரப்பசியால்
களங்கப் படுமுன்னே...
கரையேறத் துடிக்கின்றோம்..
காப்பாற்ற அழைக்கின்றோம்..
இன்னும் நங்கள்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!!!
எண்ணம்: இனியஹாஜி, சிந்தனை: நவம்பர் - 2008, தோஹா - கத்தார்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!
எங்களில்
இலக்கிய நயமிருந்தும்
இலக்கண முறையிருந்தும்
கைக் கூலி
கொடுக்கப் பண மில்லாத
குறையினால்
படிக்கப் படாமல்..
கைப் பிரதியாகவே..
காலமெல்லாம்...!
எங்களை
விலை கொடுத்து
வாங்கிப் பிரித்து
வார்த்தைகளில்
விழும் அமுதம் பருகி
வாக்கியங்களின்
இன்பம் சுவைத்து
முழுவதும் படிக்காமல்
அவசர... அவசரமாய்...
முன் அட்டையில் மயங்கி
வாடைகைக்கு கிடைக்குமா - என
வாசகன் கேட்கிறான்?
என்ன சொல்வது..
ஏளனம் செய்வதில்
எவர்க்கும் சளைத்தவனல்லவே
எந்தமிழ் வாசகன்!!!
எழுதியவரே எம்மை
ஏரெடுத்துப் பாராதபோது
வீணில் வாசகனைக் குறைகூறி
விளையும் பயன் என்ன..??
பெற்றோரே...
மற்றோரே...
கரையான் அரித்து
கரைந்து போகுமுன்னே..
காமுகனின் கோரப்பசியால்
களங்கப் படுமுன்னே...
கரையேறத் துடிக்கின்றோம்..
காப்பாற்ற அழைக்கின்றோம்..
இன்னும் நங்கள்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!!!
எண்ணம்: இனியஹாஜி, சிந்தனை: நவம்பர் - 2008, தோஹா - கத்தார்
மாந்தனைய அன்பர்களே வணக்கம்! நாம சின்ன வயசுல, திண்ணையில, ஆட்டாங் கல்லுகிட்ட, நல்ல தண்ணிக் கெணத்துகிட்டன்னு பொம்பளைங்க ஒன்னு கூடிப் பேசுற பக்கம் போயி ஒன்னுந் தெரியாத சின்னவனாட்டம், அவிங்க பழம பேசுறதக் கேக்குறது உண்டு. நொம்ப சுவராசியமா இருக்கும்.
"வக்கத்தவ வக்கணையாப் பேச வந்துட்டா சிறுக்கி!" ன்னு சொல்வாங்க. "அவன் ஒரு துப்புக் கெட்டவன்!" ன்னு சொல்வாங்க. "என்ன ஒரு சாமார்த்தியம், வாங்கிட்டே வந்திட்டாளே?!"ன்னு பெரு மூச்சு விடுவாங்க. "ஓகோ! நான் நாதியத்தவன்னு நெனச்சிட்டாளா, அவ?"ன்னு சீறிப் பாய்வாங்க. "பசப்புறதப் பாரு!"ன்னு சிறு மூச்சு விடுவாங்க.
"வக்கத்தவ வக்கணையாப் பேச வந்துட்டா சிறுக்கி!" ன்னு சொல்வாங்க. "அவன் ஒரு துப்புக் கெட்டவன்!" ன்னு சொல்வாங்க. "என்ன ஒரு சாமார்த்தியம், வாங்கிட்டே வந்திட்டாளே?!"ன்னு பெரு மூச்சு விடுவாங்க. "ஓகோ! நான் நாதியத்தவன்னு நெனச்சிட்டாளா, அவ?"ன்னு சீறிப் பாய்வாங்க. "பசப்புறதப் பாரு!"ன்னு சிறு மூச்சு விடுவாங்க.
நான் இந்தப் பழமைகெல்லாங் கேட்டுப் பல வருசம் ஆச்சு போங்க. ஊர்ல இன்னமும் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காங்ளாங்றதே சந்தேகந்தான். அப்புறம் பாருங்க, அதுகளுக்கான பொழக்கமும் மாறிப் போச்சுங்றது என்னோட தாழ்மையான எண்ணம். சரி, அந்தப் பழமைகளப் பத்தி எனக்குத் தெரிஞ்சதை இப்பப் பாப்பமா?! சொல்லுறதுல எதனா மாத்தம் இருந்தாலும் சொல்லுங்க.
வக்கு(வழிமுறை): செய்யுறதுக்கு உண்டான வழிமுறை தெரியாதவிங்கள, வக்கில்லாதவன்னு சொல்வாங்க.
வக்கணை: இதனோட பொழக்கம் இப்ப நல்லாவே மாறிப் போச்சு. இப்பெல்லாம் சாமார்த்தியமாப் பேசுறதை, வக்கணையாப் பேசுறதுன்னு பொழங்கறோம். ஒருத்தங்க மத்தவங்க கிட்டப் பேசும்போது குறை சொல்லியும், எதிர் மறையாவும் பேசினா அது வக்கணை. இந்த எடத்துல பழமொழி ஒன்னு ஞாபகம் வருது. கட்டுன ஊட்டுக்கு எட்டு வக்கணை!அதாவது, புதுசாக் கட்டின வீட்டைப் பத்திப் பொறாமைல கொற சொல்லிப் பேசுறது.
வக்கணை: இதனோட பொழக்கம் இப்ப நல்லாவே மாறிப் போச்சு. இப்பெல்லாம் சாமார்த்தியமாப் பேசுறதை, வக்கணையாப் பேசுறதுன்னு பொழங்கறோம். ஒருத்தங்க மத்தவங்க கிட்டப் பேசும்போது குறை சொல்லியும், எதிர் மறையாவும் பேசினா அது வக்கணை. இந்த எடத்துல பழமொழி ஒன்னு ஞாபகம் வருது. கட்டுன ஊட்டுக்கு எட்டு வக்கணை!அதாவது, புதுசாக் கட்டின வீட்டைப் பத்திப் பொறாமைல கொற சொல்லிப் பேசுறது.
சாமார்த்தியம் அப்படீன்னா, சமர்த்தாப் பேசி காரியம் சாதிக்குறது. ஈழத்துல பொண்ணுக பெரிய மனுசி ஆனதை சாமத்தியம்னு சொல்வாங்க. பூப்புனித நீராட்டு விழாவைச் சாமத்திய சடங்குன்னு சொல்வாங்க.
துப்பு: இதுக்கு நெறய அர்த்தம் இருக்கு. துப்புறது ஒன்னு. மர்மம் பத்தின தக்வலை துப்புன்னு சொல்வோம். திருடு போன வண்டியப் பத்தி துப்பு ஒன்னு கெடச்சிருக்கு. அப்புறம், துப்புங்றதுக்கு உணவுங்ற அர்த்தமும் இருக்கு. ஆக, துப்பு கெட்டவன், துப்பு இல்லாதவன்னு சொன்னா, ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாதவன்னு இடிச்சு சொல்லுறது.
சரிங்க, மத்ததை (நாதி, பசப்பு, பெரு மூச்சு, சிறு மூச்சு) எல்லாம் நாளைக்குப் பாப்போம். இப்ப நீங்க போயி வக்கணையாப் பின்னூட்டம் போடலாம். சாமார்த்தியமாவும் பின்னூட்டம் போடலாம். எப்படி வேணாலும் போடுங்க. ஆனா அந்த ஓட்டை மட்டும் நல்லபடியாப் போட்டுட்டு, அப்புறமா பின்னூட்டம் போடுங்க.
துப்பு: இதுக்கு நெறய அர்த்தம் இருக்கு. துப்புறது ஒன்னு. மர்மம் பத்தின தக்வலை துப்புன்னு சொல்வோம். திருடு போன வண்டியப் பத்தி துப்பு ஒன்னு கெடச்சிருக்கு. அப்புறம், துப்புங்றதுக்கு உணவுங்ற அர்த்தமும் இருக்கு. ஆக, துப்பு கெட்டவன், துப்பு இல்லாதவன்னு சொன்னா, ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாதவன்னு இடிச்சு சொல்லுறது.
சரிங்க, மத்ததை (நாதி, பசப்பு, பெரு மூச்சு, சிறு மூச்சு) எல்லாம் நாளைக்குப் பாப்போம். இப்ப நீங்க போயி வக்கணையாப் பின்னூட்டம் போடலாம். சாமார்த்தியமாவும் பின்னூட்டம் போடலாம். எப்படி வேணாலும் போடுங்க. ஆனா அந்த ஓட்டை மட்டும் நல்லபடியாப் போட்டுட்டு, அப்புறமா பின்னூட்டம் போடுங்க.
குப்பைல கெடந்தாலும், குன்றிமணி நெறம் போயிருமா?
நல்லபடியா, அந்த ஓட்டு?
இலங்கை தமிழர் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த, தமிழகத்தில் இருந்து 1,500 மாணவர்கள் சிறப்பு ரெயிலில் டெல்லி சென்றனர். அவர்களை தலைவர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
விடுதலைப் புலிகள் ஊடுவல் ஆபத்தை அடுத்து கருணா கடந்த வாரம் தமது கட்சியின் மூத்த தலைவர்களுடன் மட்டகளப்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ராணுவத்துக்கு முழு ஒத்துழைப்பது அளிப்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக என்றும் கருணா தெரிவித்தார்.
கனவிலும் எதிர் பார்க்காத தோல்வியை (2-0) ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது, வார்னே மெக்ராத் இல்லாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை கண்டிப்பாக உணர்ந்து இருப்பார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் டிரா க்காக விளையாடியதாக நம்மை குற்றம் சாட்டி தங்கள் திறமையை பெரிதாக நினைத்தவர்களுக்கு அடுத்த மூன்று டெஸ்ட் ம் தர்ம அடி கொடுத்துள்ளது. அதுவும் கடைசி டெஸ்ட் நாக்பூர் ல் அவர்கள் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து இருக்க வேண்டியது ஆனால் என்ன செய்தும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரன் எடுக்க நம்மவர்கள் விடவில்லை அது மட்டுமில்லாமல் இரண்டாவது இன்னிங்க்ஸ் ல் டோனி ஹர்பஜன் எடுத்த 50 ரன்களும் எமனாகி விட்டது.
பொதுவாக இந்திய ஆட்ட களங்கள் பந்து வீச்சிற்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கும் அதனால் இதை ஒரு குறையாக எப்போதும் எதிர் அணியினர் கூறுவார்கள் இந்த முறை அவ்வாறு இல்லாமல் பேட்டிங் கிற்கு சாதகமாகவே அமைக்கப்பட்டது அப்படி இருந்தும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியவில்லை. இதில் இருந்தே அவர்கள் திறமையை மதிப்பிட்டு கொள்ளலாம்.
இந்தியா பாகிஸ்தான் எப்படி கடும் எதிரிகளோ அதே போல தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள். தற்போது ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததால் இந்தியாவை விட அவர்கள் தான் அதிக சந்தோசத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து பத்திரிக்கைகள் ஆஸ்திரேலியாவை கிண்டலடித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இண்டிபெண்டன்ட் என்ற பத்திரிகை "எந்த சாம்ராஜியமாக இருந்தாலும் ஒரு நாள் வீழ்ந்து தான் ஆக வேண்டும். எந்த ஒரு அணியும் வெல்ல முடியாது என்று இல்லை, இந்திய 2-0 என்று வெற்றி பெற்று இருப்பதன் மூலம் ஆஸ்திரேலியா பஞ்சராக்கப்படுள்ளது, ஆஸ்திரேலியாவிற்கு சரிவு தொடங்கி விட்டது" என்று கூறி உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் "தாதா" கங்குலிக்கு நிறைவாகவே முடிந்து இருக்கிறது (கடைசி டெஸ்ட் இரண்டாவது இன்னிங்க்ஸ் ல் டக் அவுட் ஆனது தவிர) கடைசியில் டோனி கங்குலிக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து அழகு பார்த்தது மனதிற்கு நமக்கு கொஞ்சம் நிறைவாக இருந்தது. இந்நிலையில் எனக்கு நினைவிற்கு வந்தது ஸ்டீவ் வாக் தான், அவர் தன்னுடைய கடைசி டெஸ்ட் ல் நம்முடன் கஷ்டப்பட்டு விளையாடி டிரா செய்து தொடரை சமன் செய்ய வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த விசயத்தில் கங்குலி அதிர்ஷ்டகாரரே. இவர் மீது பல குற்றசாட்டுகள் இருந்தாலும் நம்முடைய கிரிக்கெட் சரித்திரத்தில் மறக்க முடியாத நபரே, இவருடைய சிக்ஸர் களும் நாட்வெஸ்ட் சீரீஸ் ல் வெற்றி பெற்ற போது சட்டையை சுழற்றியதையும் எவராலும் மறக்க முடியாது. இவர் இறங்கி வந்து சிக்ஸ் அடிக்கும் ஸ்டைல் க்கு பல ரசிகர்கள் உண்டு என்பதை மறுப்பவர்களும் உண்டோ!
கும்ப்ளே ஏன் மூன்றாவது டெஸ்ட் உடன் விலகினார் என்று தெரியவில்லை. இவர் கேப்டன் பொறுப்பேற்ற இரண்டு டெஸ்ட் ம் டிரா ஆனது இவருக்கு தர்மசங்கடத்தை கொடுத்து இருக்கும், வெற்றியுடன் விடை பெற்று இருந்தால் அவருக்கு நிறைவாக இருந்து இருக்கும், இருந்தாலும் தோல்வியை கொடுக்காத வரை பரவாயில்லை.
ரிக்கி பாண்டிங் எங்கள் நாட்டில் முரளிதரனை சாதனை செய்ய விட மாட்டோம் என்று கூறி அதே போல அவரை வார்னே சாதனையை முறியடிக்க முடியாமல் செய்தார்கள், ஆனால் இந்திய டெஸ்ட் போட்டி தொடங்கிய போது சச்சினை சாதனை செய்ய விட மாட்டோம் என்று கூறிய போது தலைகனம் தான் தெரிந்தது காரணம் அப்போது 75 ரன்களே எடுக்க வேண்டியது இருந்தது அதற்க்கு, சச்சினை கேவலமாக நினைத்தார்களா அல்லது ஓவர் கான்பிடண்ட் ஆக இருந்தார்களா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இவ்வாறு கூறியதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஓவர் கான்பிடண்ட் உடம்புக்கு ஆகாது என்பதை புரிந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகின் தலை சிறந்த அணி !!! என்று கூற ஆரம்பித்து விட்டார்கள் ஒரு சிலர், ஆஸ்திரேலியா தற்போது தோல்வி அடைந்து இருந்தாலும் அதை சாதாரணமாக எடை போட கூடாது, மிக சிறந்த அணி என்பதில் மாற்று கருத்து இல்லை. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மீண்டும் சிறப்பாக விளையாட முயற்சிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த வெற்றியின் மூலம் வெற்றி போதை தலைக்கேறாமல் (நம்மவர்கள் தான் தர்ம அடியும் கொடுப்பார்கள் அதே சமயம் தர்ம அடியும் வாங்குபவர்கள் ஆயிற்றே) வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். இந்த வெற்றி ஒரு கூட்டு வெற்றி தான், எந்த ஒரு தனிப்பட்ட ஒருவரின் வெற்றியும் அல்ல.
எத்தனை அணிகள் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது இந்திய அணி தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
மானுட வரலாற்று நிலையும், தமிழில் சமூக அறிதலும் குறித்த குறிப்புகள் - ராஜன் குறை பகுதி 1: அமெரிக்கா, நவம்பர் 2008. நவம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்காவில் வரலாறு தன் முகத்தை மீண்டும் காட்டியது. ஒருபுறம், கடவுளைக் கண்டது போல வரலாற்றுவாதிகள் மகிழ்ந்தனர். இன்னொரு புறம், நள்ளிரவில் நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் ஆடிப்பாடினார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சி யாரையும் நெகிழச் செய்வதாய் இருந்தது. மனிதர்களாகவே நடத்தாத, ஓட்டுப் போடும் உரிமைக்காக போராட வைத்த அமெரிக்க நிறவெறி, ஒரு கறுப்புத் [...]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக