முரசொலியில் அவர் எழுதியுள்ள கவிதையில்,
இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம் இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித் தான் இமை மூடுகின்றார்.
உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தம் இல்லங்களில் உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்
கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத் தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும் வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றல்களாகி விடாமல்;
வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்துவிடாமல்
இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர்தம் உயிர் காத்து இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டு
இங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை "இதயமுள்ளோர் வாழ்க'' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு
அவற்றையெல்லாம் பண்டங்களாக்கி உணவு உடை பொருள்களாக்கி அங்குள்ள உரியவர்க்குப் போய்க் கிட்டிட உகந்த வழி உடனே கண்டு
சர்வ தேச அமைப்புகள் மூலமாக அனுப்பி வைக்கவிருக்கின்றோம்-
அது போய்ச் சேராது என்றும் அது ஓர் நாடகமென்றும் அவசரக்கார தம்பி ஒருவரும் அவையெலாம் வீணாக விடுதலைப் புலிகட்கே பயன்படுமென்று அம்மையார் ஒருவரும்
அதனால் நிதி கொடுக்காதீர்- இலங்கைத் தமிழரை வாழ வைக்காதீர் என்று வெறிக் கூச்சல் போடுகின்றார்- அவற்றை நாம் பொருட்படுத்தாமல்
வெற்றுக் கூச்சல் என்றே எண்ணிக்கொண்டு இன்னும் வேகமாக வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம்- தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம்!
இவ்வாறு தனது கவிதையில் கூறியுள்ளார் கருணாநிதி.
ஆண்டவன் நினைத்தால் நாளையே அரசியல் கட்சி தொடங்கி விடுவேன். ஆனால் இப்போது நாடு சரியில்லை. அமைதியாக அவரவர் பணிகளில் கவனம் செலுத்துங்கள் பின்னர் பார்க்கலாம் என ரஜினி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு நடந்த்து. காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்று எழுதப்பட்டிருந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அது முடிந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்தை ரஜினிகாந்த் வணங்கினார்.
தொடர்ந்து ரசிகர்களை நோக்கி, "உங்களுடைய கேள்விகளை பேப்பரில் எழுதி, மன்ற நிர்வாகி சுதாகரிடம் கொடுங்கள். அவர் மேடையில் உங்களுடைய கேள்விகளை மைக்கில் வாசிப்பார். அதற்கு நான் பதில் கூறுகிறேன்' என்றார். (கிட்டத்தட்ட ஒரு ஆன்மீக ஞானி போல சூப்பர்ஸ்டார ஆக்கிட்டாங்கப்பா!!)
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை எழுதி மேடைக்கு அனுப்ப ரஜினி பதில் கூறினார்.
கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?
ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதே போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுதான் நோக்கம். (என்ன ஒரு உன்னத நோக்கம்! ரஜினியும் ரசிகர்களும் காதலன் - காதலி போல ஆகிட்டாங்க)
என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது. (தலைவா! எதாவது ஒரு சாமியார உதாரணமா சொல்லாம உங்களால இருக்க முடியாதா?)
கே: எதிர்காலம் திட்டம் என்ன?
ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர் காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான். (இதை முதல்லே சொல்லி இருந்தா ஏன் இப்ப கேள்வி கேட்கிறாங்க!)
கே: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?
ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.
கே: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா? (விடுதலைப் போராட்டத்தியாகியா நீங்க பஸ் பாஸ், பென்சன் கொடுக்க!)
ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.
கே: முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள். பிறகு அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். பாபாஜி என்றீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வையில்லையா? (ரஜினி நெனச்ச சாமி கும்பிட கூட உரிமை இல்லையா?)
ரஜினி: (சிரிக்கிறார். சிறிது நேரம் யோசித்து விட்டு) இந்துவிலிருந்து முஸ்லீம், முஸ்லீம் இருந்து கிறிஸ்துவம் என்று மாறினால்தான் தவறு. அது கூட தவறு என்று சொல்ல முடியாது. நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என்று பல படிப்புகள் உள்ளன.
அவை நமது ஞானத்தை விருத்தி செய்கிறது. அது போன்று தான் தேடல் நிறைந்த உள்ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கிறது. இதில் தவறும் ஒன்றும் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்கள்.
கே: நீண்ட காலம் மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களை பற்றி உங்கள் கருத்து?
ரஜினி: ரஜினி ரசிகர்களை பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள். (நான் கேட்டதுக்கு பைத்தியக்காரட்கள்னு சொன்னாங்கப்பா! ஏனென்றால் நானும் ஒரு ரஜினி விசிறி!)
கே: உங்களை குழப்பவாதி என்று சில பத்திரிக்கைகளில் எழுதும்போது அதை கேட்கவும், படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள்?.
ரஜினி: பத்திரிக்கைக்காரர்களை வைத்துக் கொண்டே இந்த கேள்வியை கேட்டால் எப்படி. சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.
நாம் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன். வேறு கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு எதையும் செய்ய மாட்டேன். எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்வேன்.
சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். (குழப்பவாதியானு கேள்வி தானே கேட்டாங்க! உடனடியாக நிருபிச்சிட்டிங்களே!)
கே: ஒகேனக்கல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. உண்மையில் நடந்தது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள்.
ரஜினி: (சிரித்துக் கொண்டே) முன்னாலே முன்னாலே போகனும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும் என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது. விட்ருங்க. அதிலேயே இருந்தால் எப்படி.
முதலில் ஒகேனக்கல் பிரச்சனை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகாவில் எந்த பிரச்சனையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த கூட்டத்தில் நான் அமர்ந்தேன்.
அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது. அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று கூறிவிட்டேன். தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம் கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாக கூறினார். ரசிகர்கள் கத்தி, கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.
ஒரு பிரச்சனை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதானல் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் மன்னிப்பு கேட்டேன் என்றார்.
தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பிய மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினி பின்பு பேசியதாவது:
மீண்டும் மீண்டும் நான் சொல்வது எல்லாம் குடும்பத்தை கவனியுங்கள். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என் கடமைகளை செய்து வருகிறேன்.
நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். கடமையைச் செய். பலனை எதிர்பார் இதுதான் நமது தத்துவம். அரசியலை பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது திறமையாலோ, புத்திசாலித்தனத்தாலோ, உழைப்பாலோ என்று கூறினால் அது முட்டாள்தனம்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது.
சரியில்லாத நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. 1996ம் ஆண்டு இருந்த நிலைமை வேறு. அன்று பதவியில் போய் அமர வேண்டியது தான். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் யாரோ ஜெயித்து நாம் அனுபவிப்பதா?.
நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது.
என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன். பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கும். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே நடக்கலாம்.
தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.
தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான் என்றார் ரஜினி. பிற்பகல், ரசிகர்கள் அனைவருக்கும் ராகவேந்திரா மண்டபத்தில் விருந்து பரிமாறப்பட்டது.
(பாவம்! கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி ரசிகர்கள் ரஜினியை ரொம்ப படுத்தி இருக்காங்க. ரஜினியும் சாய்பாபா ரேங்ஜுக்கு பத்திப்பரவசம் பொங்கி வழிய பதில் சொல்லி இருக்கார். இவரு பேசாம கட்சிக்கு பதில் ஆசிரமம் ஆரம்பிக்கலாம்.)
(தட்ஸ்தமிழ்.காம் இருந்து சுடப்பட்டது)
"India is my country and all Indians are my brothers and sisters."
ஆனா, தன்னுடைய வாழ்க்கையில் இதை உண்மையிலேயே கடைப்பிடித்தவர் யார்?
சுமார் 7.72 MB , 8 நிமிடங்கள்.
|
Snapdrive Link: bht.7.2.mp3
நான் பள்ளியில் படிக்கும் போது..ஹிந்தி தேர்ட் லேங்க்வேஜ்..படிக்க வேண்டும்...பரீட்சையும் எழுத வேண்டும்..ஆனால் அதில் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதில்லை..மொத்த மதிப்பெண்களில் அது சேராது...அதனால் அவசியமில்லை.
மேலும்..அந்த சமயங்களில்..தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் ஹிந்தியை எதிர்த்ததாலும்...தினத்தந்தி போன்ற பத்திரிகைகள்..கார்ட்டூனில்...ஒரு தடியான பெண்ணை..கொம்புகளுடன் வரைந்து..ராட்சசி போல உடை அணிவித்து..கையில் ஆயுதத்துடன் ..காட்சி அளிக்க வைத்து..என்னைப் போன்ற இளைஞர்கள் மத்தியில் 'இதுதான் ஹிந்தி'என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டன.
இளரத்தம்...பின் கேட்கவா வேண்டும்.."ஹிந்தி ஒழிக" கோஷங்களும்...'உடல் மண்ணுக்கு..உயிர் தமிழுக்கு'போன்ற கோஷங்களும் போட்டு...எங்கள் ஹிந்தி புத்தகங்களை கொளுத்தினோம்.
அப்போது எங்களுக்கு ஹிந்தி வாத்தியார்..ஒரு மேடம்...அதனால் எங்கள் அட்டூழியம் அதிகமாகவே இருக்கும்.
எங்கள் தலைமை ஆசிரியர்.திரு சி.ஆர்.ராமனாதன்..மலையாளி..அவருக்கும் ஹிந்தி தெரியாது..மிகவும் கண்டிப்பானவர்.
எங்களைப் பற்றி தெரிந்துக்கொண்டு..ஹிந்தி வகுப்பின் போது ..வகுப்பறையில் நுழைவார்..ஹிந்தி மேடத்தைப் பார்த்து'என்னம்மா..ஒழுங்கா படிக்கிறாங்களா?'என்பார்.,
உண்மையை சொல்ல பயந்துக்கொண்டு..அந்த மேடமும் 'ஓ' என தலையாட்டுவார்கள்..உடனே அவர் என்னை கைகாட்டி..'இவனை ஒரு கேள்வி கேளுங்கோ'என்பார்.
உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம் கியா ஹை?'என்பார்..
எனக்கு வாயில் வந்தவற்றை..உதாரணமாக 'கலம் குர்சி பர் ஹை'என பதில் சொல்வேன்..
'சரியாச் சொல்றானோ' என்பார்..
மேடமும் ..எங்கே..இல்லை என்று சொன்னால்..தனக்கு சரியாக சொல்லித்தர தெரியவில்லை..என ..திட்டு கிடைக்குமோ..என பயந்து..'சரியாகச் சொல்கிறான்' என்பார்..தலைமை ஆசிரியரும்..என்னைப்பார்த்து 'குட்"என சொல்லிவிட்டு..அடுத்த பையனைக் கைகாட்டுவார்..அவன் தன் பெயரை 'மேஜ்'என சொல்லி நல்லப் பெயரை எடுப்பான்..
இப்படியாக நாங்கள் ஹிந்தி படித்தோம்...பின்னர் பொறுப்புணர்ந்ததும்..அவசியமும் உணர்ந்து ..ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன்.
ஆனாலும்...பேசுவதை புரிந்துக்கொள்ளும் என்னால்..திரும்பி சரளமாக பேசமுடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக