வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-12

கச்சதீவு அருகே இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் வாள் மற்றும் துப்பாக்கியால் அரக்கத்தனமாக - கண்மூடித்தனமாக - விலங்குகளைவிடக் கொடூரமான முறையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் -

"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் தங்களைத் திட்டி - நிர்வாணப்படுத்தி - சித்திரவதை செய்து - மூர்க்கத்தனமாகத் தாக்கினர் - என்று கரை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார் என்றும் இந்திய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வருமாறு-

இராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மாலை 5 மணியளவில் கச்சதீவு அருகே சில மீனவர்கள் 10 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது இலங்கைக் கடற்படையினர் 5 கப்பல்களில் அங்கு ரோந்து வந்தனர். தமிழக மீனவர்களைப் பார்த்ததும் சற்றி வளைத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் படகுகளில் ஏறினர். மீனவர்களை வாள் மற்றும் துப்பாக்கி முனைகளால் தாக்கி அவர்களை நிர்வாணப்படுத்தினர்.

மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படகில் இருந்த ஜோதிபாச (வயது-21), வினிஸ்டன், கார்பசேவ் மற்றும் இன்னொரு படகில் இருந்த கிங்ஸ்டன் ஆகியோரை அடித்து உதைத்தனர். துப்பாக்கி முனையால் அவர் களைத் தாக்கியதில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
பின்னர் படகில் இருந்த ஐஸ் பெட்டி, மரப்பலகைகள் ஆகியவற்றை கடலுக்குள் தூக்கி வீசியதுடன், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி நேற்றுக்காலை மீனவர்கள் கரைசேர்ந்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் கியூப் பிரிவுப் பொலி ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களைக் கடந்த 2 மாதங்களில் நடுக்கடலில் இவ்வாறு தாக்குவது இரண் டாவது முறையாகும். முன்னதாக 25 படகுகளைச்சற்றிவளைத்து தாக்கியதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில்,
"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் திட்டினர் எனக் கூறினர். மீண்டும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளமையால் தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நன்றி:-உதயன்


More than a Blog Aggregator

by cable sankar

லாஜிக் பார்காமல் விறுவிறுப்பான காமெடி கலந்த ஓரு திரில்லரை பார்க வேண்டுமா.? அதற்கு ரெடி என்றால் இதோ "யுவதா". ஹாப்பி டேஸில் நடித்த பலபேர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்..

நண்பர்கள் என்றால் உயிராய் நினைக்கும் வீரபாபு..என்கிற பாபு.. அமெரிக்கா ஓன்றையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் அஜய்.. போலீஸ் வேலைக்கு தன்னை தயார் படுத்தி கொண்டு செக்யூரிடியாய் வேலை பார்க்கும் கிரண்.. தெலுங்கு சினிமாவை புரட்டி போட்டே தீருவேன் என்ற சபதத்துடன் இயக்குனரகும் கனவுடன் சுப்பு. ராஜ் காதலிக்கும் அவர்களின் வீட்டு ஓனரின் மக்ள்.. என்று துள்ளும் இளமை பட்டாளம்.


பாபுவுக்கும் விஷாச்சிக்கும் காதல் மலருகிறது. எப்படி மலருகிறது என்றெல்லாம் கேட்க கூடாது.. அஜயின் காதலியும் விசாலாட்சியும் மருத்துவ கல்லூரி மாணவர்கள்.. இப்படியாய் கதை போக..உதவி இயக்குனர் சுப்புவுக்கு ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடந்த சண்டையின் போது மண்டையில் அடிபட, ஐந்து லட்ச்ம் இருந்தால் தான் பிழைபார் என்றதும் வேறு வழியில்லாம்ல் ஓரு கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குகிறார்கள்.. கடனை திரும்ப குடுக்க முடியாமல் அவர்கள் திண்டாட.. இரண்டு நாட்களில் கொடுக்கவில்லையென்றால் எல்லோரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டிவிட்டு போகிறான் கந்து வட்டி, என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் மூவரும் ஏ.டி.எம் செண்டரில் பணம் வைக்கும் செக்யூரிட்டி சர்வீஸிலிருந்து பணம் கொள்ளையடிக்க திட்டமிட, ஆனால் இவர்கள் கொளளை அடிக்கும் முன்பே, பணம் கொள்ளையடிக்க பட்டு, அஜயும், பாபு கைதாகிறார்கள். அவர்கள் பிரச்சனையிலிருந்டு மீண்டார்களா.. இல்லையா என்பதை லாஜிக் இல்லாமல் விறு விறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.


அதிபுத்திசாலியான் டி.சிபி, அஜயின் காதலியின் அப்பா, ஜெயிலில் சிம்ரன் ரசிகராக தூள் பரத்தும் சூப்பர் தாதா ஷாயாஜி ஷிண்டே.. என்று பட நெடுகிலும் காமெடி பின்னி பெடலெடுக்கிறார்கள்.. படத்தில் ஹாப்பிடேஸ் ஆர்டிஸ்டுகள் ப்லர் நடித்திருப்பதால் பாடல்களில் கூட அப்படியே இருக்கிறது. ஆனாலும் பரவாயில்லை. மணிசர்மா.. தெலுங்கில் சரோஜா சரியாய் போகவில்லை.. ஆனால் இந்த படம் நிச்சயமாய் போகும்.. ஏனென்றால் சரியான மசாலா கலவையில் கலந்தடிக்கபட்ட ஹைதராபதி பிரியாணி.. "யுவதா"
இந்தியாவின் தொழில் வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் 4.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய மாதத்தில் அது, கவலை அளிக்ககூடிய வகையில் 1.42 சதவீதமாகத்தான் இருந்தது. இருந்தாலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 7 சதவீதமாக இருந்த வளர்ச்சி இப்போது 4.8 சதவீதமாகத்தான் இருக்கிறது. இன்டக்ஸ் ஆஃப் இன்டஸ்டிரியல் புரடக்ஷன் ( ஐஐபி) எடுத்த கணக்கெடுப்பின் படி, இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தொழில் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த வருடத்தில் அது 9.5 சதவீதமாக இருந்தது. ஆகஸ்டில் இது 1.3 சதவீதம்தான் இருக்கும் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது 1.42 சதவீதமாக உயர்ந்திருந்தது. இந்த இன்டக்ஸில் 80 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும் உற்பத்தி, கடந்த வருடம் செப்டம்பரில் 7.4 சதவீதமாக இருந்தது இந்த வருடம் செப்டம்பரில் 4.8 சதவீதமாக இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மின் உற்பத்தி 4.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது கடந்த வருடத்தில் 4.5 சதவீதமாகத்தான் இருந்தது. சுரங்க உற்பத்தி கடந்த வருடத்தில் 4.9 சதவீதமாக இருந்தது இந்த வருடத்தில் 5.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்துகொண்டே வருகிறது. நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 21 சென்ட்கள் குறைந்து 59.12 டாலராகத்தான் இருந்தது. இது கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு குறைவு. லண்டனின் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 9 சென்ட் குறைந்து 55.62 டாலராகத்தான் இருந்தது. கடந்த மார்ச் 2007க்குப்பின் இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கும் குறைவாக இருக்கிறது. அடுத்த மாதம் அல்ஜீரியாவில் நடக்க இருக்கும் ஓபக் அமைப்பு கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு மேலும் 10 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டாலும், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்துகொண்டே வருவதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருவதாக சொல்கிறார்கள். ஜூலை மத்தியில் பேரலுக்கு 147 டாலருக்கும் மேல் இருந்த கச்சா எண்ணெய் விலையில் இப்போது 60 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் 55 டாலருக்கு கூட வந்து விடும் என்று கிரிடிட் சூசி நிறுவனத்தின் எண்ணெய் ஆய்வாளர் தோபியாஸ் மெராத் சொல்கிறார்.
நன்றி : தினமலர்
புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு, அதற்கு தேவையான நிலம் கிடைப்பதுதான் இப்போது ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. எல்லா மாநிலங்களிலுமே இந்த பிரச்னை இருக்கிறது. அதனை போக்கும்விதமாக, குஜராத் அரசாங்கம் புதிதாக தொழில் துவங்குபவர்களுக்காகவே பிரத்யேகமாக 25,000 ஹெக்டேர் நிலத்தை பெற்று தயாராக வைத்திருக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் யார் இங்கு வந்து தொழில் துவங்க விரும்பினாலும் அவர்களுக்கு தேவையான நிலத்தை எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் எங்களால் ஒதுக்கி கொடுக்க முடியும் என்று குஜராத் மாநில நிதி மற்றும் தொழில் அமைச்சர் சவ்ரப் பட்டேல் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பில் கலந்து கொண்டபின் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியின்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் குஜராத் அரசாங்கம் இப்போது 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரத்தை எல்லா தரப்பினருக்கும் அளித்து வருகிறது. அடுத்த வருடத்தில் இன்னும் ஒரு 2,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் மூன்று வருடங்களில் மேலும் ஒரு 10,000 மெ.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எனவே எங்கள் மாநிலத்தில் பவர்கட் என்பதே இருக்காது என்றார் அவர். முதலீட்டாளர்களுக்கு குஜராத் ஒரு நல்ல இடமாக இப்போது திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மொத்த முதலீட்டில் 22 சதவீதம் குஜராத்திற்கு தான் செல்கிறது என்று ரிசர்வ் பேங்க் சமீபத்தில் தெரிவித்ததை குறிப்பிட்ட அவர், சோலார் பவர் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் துறைக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்
அன்பகம் என்ற இந்த இல்லம் 2003 ஆம் ஆண்டு திண்டுக்கலில் HIV பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக துவக்கப்பட்டது.

இந்த இல்லத்தின் மூலம் இதுவரை பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை 96.
தற்போது சுமார் குழந்தைகள் தங்கி உள்ளனர் . அனைவரும் ஆதரவற்றவர்கள் .அதாவது தாய், தந்தை இறந்தபின் உறவினர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் .

இவர்களில் ஒன்பது பேர் பள்ளி செல்லும் குழந்தைகள்.

இரண்டு பேர் தொட்டில் குழந்தைகள்.

மீதிப் பேர் 2-5 வயதினர் .

HIV பாதிக்கப்பட்ட கைம்பெண்கள் இவர்களை பராமரிக்கின்றனர் .
இந்த பெண்களில் சிலர் உறவினர்களால் தன் கணவன் இறந்தபின் வீட்டை விட்டு துரத்ததப்பட்டு வேறு வழியில்லாமல் தற்கொலை முயற்சி செய்தவர்கள் .

இவர்களை போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து மறுவாழ்வு அளிக்கும் பணியை அன்பகம் செய்து வருகிறது.


அன்பகம் தற்போது நிதிப் பற்றாக்குறையால் தடுமாறுகிறது..மேலும் இது வாடகை மற்றும் இன்ன பிற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் 10 முறை தன் முகவரியை மாற்றியது ...

தற்போது இருக்கும் வாடகை இல்லத்தையும் மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. தற்போது இருக்கும் வாடகை இல்லம் மிகவும் சிறியது . 4-5 பேர் மட்டுமே தங்க முடிந்த இடத்தில் 27 பேர் தங்கிஉள்ளனர்.

உங்களுக்கு உதவி செய்ய எண்ணம் இருந்தால் உங்கள் பள்ளி , கல்லூரி மற்றும் அலுவலக நண்பர்களிடம் இதைப் பற்றி பேசுங்கள்.......



ஒரு நபருக்கு ஒரு ரூபாய் உங்களால் கொடுக்க முடியுமா ?


[ஒவ்வொரு மாதமும் குறைந்தது (ONE RUPEE) ஒரு ரூபாய் ]

என்று யோசியுங்கள் ....................

உங்களில் பத்து பேர் இந்த திட்டத்திற்கு முன்வந்தால் கூட மாதத்திற்கு பத்து ரூபாய் திரட்ட முடியும் .........


அப்படி முடிந்தால் மாதம் 10 ரூபாய் குறைந்த பட்சம் உங்களால் அன்பகத்திற்கு உதவ முடியும்..

----------------------------------------------------------------------

உங்களுக்கு தெரியுமா ?

அந்த ஒரு ரூபாய் ஒரு குழந்தைக்கு ஒரு நாள் இன்னும் இந்த உலகில் வாழ உதவும் ....



உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் ,

இந்த பத்து ரூபாய் மிகவும் குறைவாக உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள் ..........

இது இவர்களை போல இன்னும் பலர் உயிர் வாழ உதவட்டும் ...,

கருத்துகள் இல்லை: