ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் காரணம் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
மிகப்பெரிய அளவிலான பல புகைப்படங்களின் அளவை ஒரே சொடுக்கில் குறைப்பது எப்படி?
நண்பர் ஷிவா தனது புதிய Canera வில்அதிகபட்ச Resolution ல் நூற்றுக்கு மேற்பட்ட படங்கள் எடுத்திருந்தார்.அவைகளை கேமராவிலிருந்து கணினிக்கு மாற்றிவிட்டு,எனக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு முயற்சித்தார்..
ஒவ்வொரு படத்தின் Resolution மிக அதிகம் (3072 X 2304). அதனால் படங்களின் அழகு மெருகேரியிருந்தது நிஜம். ஆனால் ஒவ்வொரு கோப்பின் அளவும் மிக மிக அதிகமாக இருந்தது ( > 4MB)
ஒட்டுமொத்தக் கோப்புகளையும், எனக்கு e-mail அனுப்ப முயற்சித்துத் தோல்வியடைந்தவர், என்னுடன் தொலைபேசினார்.
நான் வழமை போல கூகிளிடம் சரணடைந்து 'ஆண்டவரே! ஏதேனும் Image Resize Application இருந்தால் கொடுத்துதவவும். என்றேன்'. அவரது கருணை என்பக்கம் இருந்தது.
கூகிள் ஆண்டவர் இந்த மென்பொருளை எனக்காகப் பரிந்துரைத்தார்.
நான் எனது கணினியில் அதை நிறுவிப் பரிசோதித்தேன். ஆகா. என்ன விந்தை.
ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட அதியுயர் ரெசொல்யூசனில் எடுக்கப்பட்ட படங்களை, குறைந்த ரெசொல்யூசனுக்கு மாற்றிவிட்டதே. அற்புதம். நண்பர் ஷிவாவுக்குத் தகவல் கொடுத்தேன். அவர் உடனே 400 எம்பி அளவிலான கோப்புகளை - குறைந்த ரெசொல்யூசனுக்கு மாற்றினார்.
3072 x 2304 ல் இருந்த படங்களை 400 x 300 க்கு மாற்றினார். 4 எம்பி அளவிலான படங்கள் 30 கேபி அளவுக்குக் குறைந்துவிட்டன.
வழமை போல பொட்டலம் போட்டு எனக்கு அனுப்பினார்.
இந்த அப்ளிகேசன் இல்லாவிடில், நாங்கள் இதுவரை செய்து வந்ததுபோல் ஒவ்வொரு கோப்பாகத் திறந்து ஒவ்வொன்றையும் மாற்றிக்கொண்டு இருந்திருப்போம். காலமும், நேரமும் ஓடியிருக்கும்.
Image Resizer application for Windows XP is here
http://download.microsoft.com/download/whistler/Install/2/WXP/EN-US/ImageResizerPowertoySetup.exe
Image Resizer Application for Windows Vista is here
This is a clone of Image Resizer which is one of the Microsoft PowerToys for Windows XP. It enables you to resize one or many image files with a right-click. This version will work also on non-XP versions of Windows including Windows Vista.
http://sourceforge.net/projects/phototoysclone/
இதையே பிக்காஸா இலவச மென்பொருள் வாயிலாகச் செய்வது எப்படி என்று அடுத்த பதிவுகளில் வெளியிடுகிறேன்.
தொடரும்...

திமுக அரசை காங்கிரஸ் கட்சியால்தான் கலைக்க முடியும் என்றும் அவ்வாறு கலைத்துவிட்டு புதிய ஆட்சி அமைத்தால் பாமக ஆதரிக்கும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிரண்டு ஹீரோக்கள் நடித்தாலே பல பிரச்சனைகளை சந்திக்கும் காலத்தில் பத்து இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து நடிக்க ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ராசு மாதவன் கதை எழுதி இயக்கும் படம் " மாயாண்டி குடும்பத்தார்". இந்த படத்தில் தான் பத்து இயக்குனர்கள் நடிக்கின்றனர். சீமான்,தருண்கோபி,ஜகன்னாத்,ரவிமரியா,நந்தா பெரியசாமி,மணிவண்ணன்,ஜி.கே.குமார்,செந்தமிழன்,சிங்கம்புலி மற்றும் அழகர்பெருமாள் நடிக்கும் இப்படம் , மதுரை சோழவந்தானுக்கு அருகில் உள்ள ஆனப்பட்டியில் நடந்த உண்மை சம்பவம் தான் இப்படத்தின் கதைக்கரு என இயக்குனர் கூறுகிறார். இப்படத்திற்கு பல ஹீரோயின்கள் கேரளாவிலிருந்து இறக்குமதியாகவிருக்கின்றனர். சபேஷ்-முரளி இசையமைக்க கேமராவை பரணி கையாளவுள்ளார். அண்ணாமலை பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
வணக்கம். வாரக் கடைசி நாளுங்றபடியால் கணனியில யிருந்து எட்ட இருப்பமெண்டு, காணொளியில முதல் மரியாதை படம் பாத்துக் கொண்டு இருந்தன். நான் இந்தப் படத்தைக் கணதடவை கண்டு இருக்குறன். ஆனாலும் நீர் எத்தினி தரங்கண்டாலும் அலுப்பு அடிக்காதென்ன, அப்பிடி ஒரு படமென்ன.
படத்தக் காணைக்குள்ள மனசு சரியான விசர் பிடிச்சதென்ன. நான் படத்தோட கதையச் சொல்லலே. இந்த இளைய ராசாவும், வைர முத்துவும், பாரதி ராசாவும், செலுவ ராசும் ஏன் பிரிஞ்சிட்டினம்? அவங்கள்டப்பா ஒண்டா இருந்திருந்தா கண படங்கள், நல்ல படங்கள் வந்திருக்குமென்ன. அவிங்கள் இதுக்கும் அடி மட்டத்துல இருந்து வந்தவிங்க என்ன. ஏன் காசு வந்த பொறகு, இப்பிடி ஆனவிகளெண்டு தெரியலை. தமிழண்ட பிரச்சினையே இதுதானென்ன. அவிகளுக்கு பொறுப்பு இருக்கு. இனியெண்டாலாவது ஒண்டு சேந்து படமெடுக்க வேணும். நல்லூர்க் கந்தன் அதுக்கு வழி செய்ய வேணும். என்ன நாஞ்சொல்லுறது சரிதானே?
அந்தப் படம் பாக்கைக்குள்ள எனக்கு ஊர் ஞாபகம் வந்திட்டு என்ன. அந்த வடிவுக்கரசி கதைக்க றெதெல்லாம்டப்பா, ஒரே பேய்க் கதையென்ன. நம்பட ஊர்ல எல்லாம் அப்படித்தான கதைக்குறது. அதுவும் பொம்பளைப் புள்ளைக கொழுவறது எண்டால், நமக்கு ஒரேப் பகிடிதான். பொடியங்க ஏசுறது எப்பிடி யெண்டு தெரியுமே உமக்கு? ஏழஞ்சு மையன்னா எண்டு சொல்லுவினம். ஒன்னே முக்காத் தையன்னா எண்டு சொல்லுவினம். இதெல்லாம் உமக்கு விளங்குதே?! இல்லியே?! சொல்லுறன், கேளுங்கோ!

1 2 3 4 5 6 7 8 9 10 100 1000 ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
ஏழுக்கு தமிழ் எண் வந்து எ. அஞ்சுக்கு ரு. அதத்தான், எருமையண்டு ஏசுறதுக்கு பதிலா ஏழஞ்சு மையன்னா. ஒண்டாம் எண்ணுக்கு தமிழ் எழுத்தெண் க. முக்கால் 3/4 பின்னத்த தமிழ் எழுத்தில ழு மாதிரி இருக்குற எழுத்தில எழுதிவினம். ஆக, கழுதையிண்டு ஏசுறதை ஒன்னே முக்காத் தையன்னா எண்டு ஏசுவினம். இப்ப விளங்கிட்டே?!
குத்து வயித்துக்காரன் தூங்கினாலும்,
குறை வயித்துக்காரன் தூங்க மாட்டான்!
குறை வயித்துக்காரன் தூங்க மாட்டான்!
வாக்களியுங்க மக்களே, வாக்களியுங்க!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரிபாறையிலிருந்து நாகர்கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து , ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால் விலகி கவிழ்ந்தது. கவிழ்ந்த இடத்திலேயே இரண்டு பயணிகள் இறந்தனர். முப்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக ம்றுத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வார்ட் கவுன்சில் உறுப்பினர் ராஜன் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் . காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக