திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-07

ராகவன்: மாப்பிள்ளை இன்னக்கி கம்பியூட்டர் சயின்ஸ் பேப்பர் பரீட்ச்சைக்கு என்னடா ப்ரொகிராம் வரும், எதுனா சொல்லுடா நானும் கடம் போட்டு வெக்கிறேன்.

ராவணன்: நீ வேறடா, நானே இந்த கருமம் புடிச்ச பாடத்த எதுக்கு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கிற நமக்கு வைக்கிறாங்கன்னே தெரியலன்னு கடுப்புல இருக்கேன், ஒரு எழவும் புரிய மாட்டேங்குது. புரோகிராம்னு சொல்லி சும்மா பிராக்கெட்,பிராக்கெட்டா போட்டு வெச்சிருக்காங்க, இத கடம் போடரதோட ஒரு ஜாக்கெட்டுக்கு பிராக்கெட் போடறது ஈசிடா.

ராமசாமி(cse): கம்பியூட்டர் சயின்ஸ் புரோகிராமிங் ரொம்ப ஈசிடா, ஒன்னயும் ரெண்டையும் கூட்டரதுக்கு ஒரு புரோகிராம் போடரது மாதிரிதான்.

ராவணன்:டேய் நெறுத்துடா உன்க்கெல்லாம் தெர்மோடைனமிக்ஸ் பாடத்தை வெச்சாதான் எங்க கஷ்டம் புரியும். சரி விடு பரீட்சைல போய் தெரிஞ்ச தியரிய எழுதிட்டு வரவேண்டியது தான்.சரிடா ராமசாமி அப்படியே ஒரு பீடிய கொடுத்துட்டி போடா.

ராகவன் : ஒருவேளை பீடி குடிச்சா புரோகிராம் போடவருமாடா?

ராமசாமி(cse): டேய் லூசு எங்கிளாஸ் பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா, அவங்ககிட்டதான் நாங்க கத்துக்கிறோம்.

ராகவன் : உனக்கு யோகம், மெக்கானிக்கல்ல பொண்ணுங்க இருந்தாலாவது நாங்களும் உன்ன மாதிரி பிராக்கெட் போட கத்துப்போம்.

இடம்:தேர்வு அறை

ராகவன் கேள்விதாளை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு தெரிஞ்ச தியரியெல்லாம் எழிதிட்டாரு, பாஸ் மார்க் வாங்கனுமுன்னா ஒரு புரோக்கிராமாவது எழுதனும், அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல.கருமம் எந்தரிச்சு போகவேண்டியதுதான், ஒரு புரோகிராம் சரியா எழுதினா இந்த கருமத்தை திருப்பி எழுத வேண்டாமேடான்னு நெனச்சிட்டே பக்கத்தில் உட்காந்திருந்த கம்பியூட்டர் சயின்ஸ் ராமசாமி polyndrome program எழுதறது பாத்தாரு, ஆஹா அடிச்ச்துடா லக்குன்னு, டப்புன்னு அப்படியே காப்பி அடிச்சிட்டாரு, பாஸாகப்போற சந்தோசத்தில இருக்கும் போது அங்க வந்தாரு சூப்பரவைசர் நாகூரான்.

நாகூரான்: டேய் வேவஸ்த இல்லை அடுத்த பிராஞ்ச் காரன பாத்து காப்பி அடிக்கற என்ன எழுதறமுன்னாவது தெரியுமா.?

ராகவன்: அது வந்து இல்ல சார், ஒரே கேள்விதான் சார், அவனுக்கும் பாலிண்ட்ரோம் என்க்கும் பாலிண்ட்ரொம் அதான் சார் கண்டுக்காம விடுங்க சார் பாசயிருவேன். இந்த கம்பியூட்டர் பேப்பர்லாம் இழுத்துகிட்டு திரிய முடியாது சார்.

நாகூரான்: டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.

ராகவன்: அப்படி வேற இருக்கா? ஆனா என் புத்தகத்தில பாத்த மாதிரி பிராக்கெட்டாதானே சார் இருக்கு.

நாகூரான் : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


More than a Blog Aggregator

by A Blog for Short Films


Happened to see the campaign for new seven wonders. Finally, some New7Wonders got selected which are:
1) not democratically elected (one person can vote for any candidate million times)
2) not elected by every single citizen of this WORLD
3) got elected by particular countries by means of extensive use of campaigns, kiosks, SMS, internet, etc.
4) got voted for sentimental reasons

There are so many other monuments got omitted simply because lack of knowledge and research work. Tomorrow some other COMMERCIAL organizations come and do the same thing. Every seven months New7Wonders! Again SMS, mails, kiosks, etc.

In this video, you can see some real living architectural wonders of Tamil Nadu, South India. They are not only places of architectural beauty, but also home for millennia old wonderful art, music, dance, painting and literature forms ever known to human kind.

ஒரு இணையத்தளத்தையே உள்ளங்கையில் எடுத்துச் செல்வது எப்படி?


ஒரு வெப்சைட்டில் உள்ள அனைத்து இணையப்பக்கங்கள் அவற்றின் உள்ளே உள்ள இன்டெர்னல் லிங்குகள் படங்கள், ஆடியோ,வீடியோ அனைத்தையும் அப்படியே ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யலாம்.அதை இணைய இணைப்பின்றி உலாவலாம்.



இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இணையத்தளத்தை அப்படியே இறக்கி, யு.எஸ்.பியில் பதிந்து உள்ளங்கையில் எடுத்துச்செல்லலாம். சாத்தியமே.

உக்காந்து யோசிப்பாங்களோ? எல்லாத்துக்குமே மென்பொருட்களா?

What is WebZIP?
Using WebZIP you can:

Download and save an entire Web site.
Download and save particular sections of a Web site you require.
View saved web content offline.

Easily compile downloaded content into compressed HTML-Help (.chm) files which automatically incorporate a Table of Contents and Full Text Search capabilities.
Compress saved web content into a single zip file.
Conveniently move a saved website to another computer.
Email a saved Web to a colleague.

Create your own "Personal Intranet" where web information is quickly and readily available from your local hard disk.

WebZIP can save you a lot of time and money, since viewing a website offline is much faster than clicking from link to link whilst online. In addition, WebZIP can download up to 16 pages or images simultaneously, thus large amounts of information can be retrieved in very little time.

Browse offline anywhere, anytime at breakneck speeds
Save your sites to HTML-Help (CHM)
Zip up the Web
Save valuable time and money
Capture only the information you want



http://www.spidersoft.com/webzip/webzip71_setup.exe



இது 30 நாட்கள் வரை இயங்கும் ஷேர்வேர் பயன்பாடு

ஜுர்கேன் க்ருகேர் இதைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்.
இதுவரை Httrack ஐ உபயோகித்து வந்தேன்.
WEBZIP -இன் "features" ரொம்பவே நல்ல இருக்கும் போலிருக்கு.
தகவலுக்கு மிக்க நன்றி!

தர்மபுரி..கிருஷ்ணகிரி மக்களுக்கு குடி தண்ணீர் பிரச்னையை ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தீர்த்து வைக்கும் என்றிருந்தால்..காவிரி பிரச்னையைப் போல இதுவும் தீராது போலிருக்கிறது...நம் பங்கு நீரை பயன்படுத்தக்கூட கர்நாடகா மாநிலம் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறது.

மத்திய அரசு தலையிட வேண்டும்..என்ற கோரிக்கை வைக்கும் கர்நாடகா அரசு...இத் திட்டத்திற்கு நமக்கு நிதி வழங்குவதாகக் கூறியுள்ள ஜப்பான் வங்கிக்கு..கடன் வழங்காதீர்கள் என கடிதம் எழுதப்போகிறதாம்..

மஹாராஷ்டிரா ராஜ்தாக்கரே பரவாயில்லை போலிருக்கிறது..

மத்திய அரசு..உடனே தலையிட்டு..வெளிநாட்டு வங்கிக்கு..கடிதம் எழுதக்கூடாது என கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும்.நம் நாட்டு பங்காளி சண்டை நம்மிடையே இருக்கட்டும்.

ஆமாம்...இலங்கை தமிழர் பற்றி கூவும் நாம்...சிங்கள அரசை கண்டிக்கிறோம்..

நம் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா அரசு...சிங்கள அரசைவிட கொடூர எண்ணத்தில் சற்றும் குறைந்தது இல்லை.
ரசியலுக்கு வருவது குறித்து ரஜினி முடிவாக ஒரு பதிலைச் சொல்லிவிட்டார். ஆண்டவன் உத்தரவு வந்ததும் தன் அடுத்த உத்தரவை ரசிகர்களுக்கு வழங்கப் போவதாக அவர் அறிவித்துவிட்ட நிலையில் அவரது பேச்சுக்கு பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதத் தொடங்கியுள்ளன சில வார இதழ்கள்.

ஆனால் ரஜினியின் புதிய கீதோபதேசத்தில் தெளிவும் மன நிம்மதியுமடைந்துள்ள அவரது ரசிகர்கள், 'தலைவர் வரும்போது வரட்டும். உறுதியான உத்தரவை வழங்கட்டும். அதுவரை பொறுத்திருப்போம்', என தங்களை உள்ளக் கிடக்கையை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ரஜினியின் இன்னொரு உத்தரவான குடும்பத்தைக் காப்பாற்றும் வேலையில் மூழ்கி விட்டார்கள்.

இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகரும், ரஜினியின் நண்பரும், சமீபத்தில் பிரஜா ராஜ்யம் கட்சி துவங்கி கலக்கி வருபவருமான சிரஞ்சீவி சிஎன்என் ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு இன்று அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
ரஜினி தனது 60 வது வயதில் அரசியலுக்கு வருவார் என்றும், இத்தகவலை ரஜினியே தன்னிடம் பேசும்போது தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார்.

அந்த பேட்டியின் சுருக்கம்:

என்னைக் கேட்டால் ரஜினி இப்போதே அரசியலில் இறங்க வேண்டும் என்றுதான் சொல்வேன். இதுதான் அதற்கான தருணமும் கூட.

நானும் அவரும் பலமுறை இது பற்றி ஆலோசனை செய்திருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் 'என்னுடைய 60-வது வயதில் அரசியலுக்கு வருவதுதான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்று ரஜினி கூறுவார்.

அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கு உள்ளது. அவரளவுக்கு மக்களை வசீகரித்துள்ள தலைவர்கள் இப்போது தமிழகத்தில் இல்லை. மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். எனவே இப்போது அரசியல் பற்றி அவர் முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது, என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.

இந்த நேர்காணலை வீடியோ பதிவாகப் பார்க்க:

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்! - சிரஞ்சீவி

http://www.envazhi.com

இது கலீல் ஜிப்ரானின் 'Have Mercy on me, my Soul' கவிதையின் மொழிபெயர்ப்பு.

என்மீது கருணைகொள் என்மனமே
———————————————————–

ஏன் அழுகிறாய் என்மனமே?
என் பலவீணங்களை அறிந்ததினாலா?

என் தவறுகளல்ல என்றுணர்ந்ததினால்
இக்கண்ணீர் கூர்மையாகத் தாக்கி,
எனைக் காயப்படுத்துகிறதே.
இன்னும் எத்தனை நேரம் அழுவாய்?

உன் கனவுகளின்,
உன் தேவைகளின்,
உன் கட்டளைகளின்
அர்த்தங்களை விவரிக்கும்
மனித வார்த்தைகளைத் தவிர
வேறொன்றுமில்லை என்னிடம்.

எனைப்பார் என்மனமே,
உன்போதனைகளைக்கேட்டே
என் வாழ்க்கை செலவழிந்துவிட்டது.

நான் எத்தனை கஷ்டப்படுகிறேன்
என்று நினைத்துப்பார்!
உனக்கிசைந்து தொடர்வதிலேயே
நான் சோர்ந்துவிட்டேன்.

என் இதயம்
மதிப்புடைய சிம்மாசனமாயிருந்தது,
ஆனால் இப்பொழுதோ
அடைக்கப்பட்ட அடிமையானது;

என் பொறுமை
ஒர் நல்லத் துணையாயிருந்தது,
ஆனால் இப்பொழுதோ
எனக்கெதிராய் சண்டையிடுகிறது;

என் இளமை
எனக்கு நம்பிக்கையாயிருந்தது,
ஆனால் இப்பொழுதோ
நிராகரித்ததற்காக பழிக்கிறது.

என் சுயவிருப்பங்களைத் தவிர்த்து
நீ கட்டளையிட்ட பாதையில் நடந்தே
என் வாழ்க்கையின் சந்தோசங்களை
பாலைவனமாக்கினேன்.

எனக்கு நேர்மையாய் இரு,
இல்லையேல் மரணம் வந்து
எனை விடுவிக்கச் சொல்,
நேர்மையே உன் மதிப்பு.

என்மீது கருணைகொள் என்மனமே.
நான் சுமக்க முடியாதளவு
அன்பை என்மேல் பொழிந்தாய்.
நீயும் அன்பும்
பிரிக்கவியலா இணைப்புகள்;
நானும் என்னுடல் பொருளும்
வலுவற்ற பிணைப்புகள்.
வலுவுடையதோடு வலுவற்றதின்
போராட்டம் என்றாவது தீருமா?

என்மீது கருணைகொள் என்மனமே.
எட்டிப்பிடிக்கமுடியாத அதிர்ஷ்டங்களை
எனக்குக் காட்டினாய்
நீயும் அதிஷ்டமும்
மலையுச்சியில் இருக்கின்றீர்கள்;
நானும் துயரமும் ஒன்றாக
பல்லத்தாக்கின் படுகுழியில்
நிராகரிக்கப்பட்டிருக்கின்றோம்.
மலையும் மடுவும்
என்றாவது இணையுமா?

என்மீது கருணைகொள் என்மனமே.
எனக்கு அழகை காட்டியிருக்கிறாய்
பின் என்னிடமிருந்து மறைத்துவிட்டாய்.
நீயும் அழகும்
வெளிச்சத்தில் வாழ்கிறீர்கள்;
நானும் அறியாமையும்
பிணைக்கப்பட்டு இருளில்லுள்ளோம்.
வெளிச்சம் இருட்டை
என்றாவது அட்கொள்ளுமா?

நீயோ முடிவினால்
மட்டற்ற மகிழ்ச்சியடைகிறாய்,
இப்போது சந்தோஷத்தோடு
எதிர்ப்பார்த்திருக்கின்றாய்;
ஆனால் வாழ்க்கையுடன் அவ்வுடல்
உயிரோடு தவித்துக்கொண்டிருக்கிறது.
இது பெருங்குழப்பம் என்மனமே.

நீயோ நிலைபேறுடைமையை
நோக்கிவிரைகிறாய்,
ஆனால் இவ்வுடலோ
மெதுவாக அழிவை நோக்கி.
இவனுக்காக காத்திருக்கவில்லை நீ,
வேகமாக செல்ல இயலவில்லை இவனால்.
இது பெருஞ்சோகம் என்மனமே

நீயோ சொர்கத்தின் ஈர்ப்பில்
உயரப்பறக்கிறாய்,
ஆனால் இவ்வுடலோ
பூமியின் ஈர்ப்பில் விழுகிறது.
இவனை தேற்றவில்லை நீ,
உன்னை பாராட்டவில்லை இவன்.
இது பெருந்துயரம் என்மனமே

நீயோ அறிவில்
செழித்திருக்கிறாய்,
ஆனால் இவ்வுடலினாலோ
எளிதில் புரிந்துக்கொள்ளவும் இயலாது
நீ சமாதானமாகவில்லை,
இவன் கீழ்படியவில்லை.
இது பெருஞ்சங்கடம் என்மனமே

நீயோ
அமைதியான இரவில்
பிடித்தமானதை காணுகிறாய்.
அதன் இருப்பில்
ஆனந்தமடைகிறாய்.
எதிர்ப்பார்ப்பிற்கும் பிரிவிற்குமிடையில்
சிக்கிய கசப்பான பலியாலியான
என்னுடலோ இங்கே தவிக்கிறது,
இது நரக வேதனை என்மனமே

என்மீது கருணைகொள் என்மனமே.


நன்றி :நதியலை

கருத்துகள் இல்லை: