நெஞ்சில்
பளிச்சிட்டு நான் பாட
நினைத்த கீதம்
இன்றுவரை
வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது!
எனது இசைக் கருவியின்
நாண் கம்பிகளை
நான் முறுக்கியும், தளர்த்தியும்
நாட்கள்தான் கழிந்தன!
அந்த கீதம்
வெளிவரும் வேளை
மெய்யாக
வரவில்லை இன்னும்!
சொற்களை
செம்மையாகக் கோர்க்க முடியவில்லை!
வேட்கை மீறிக் கீதம்
வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை!
பூரண மாகக் கீதம்
பூத்து விரிய வில்லைச்
சீராக இன்னும்!
அருகில்
பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்!
அவனது முகத்தை நான்
பார்த்திலேன்!
அவனது குரலை நான்
கேட்டிலேன்!
என்வாசல்
முன்னுள்ள முற்றப் பாதையில்
மெதுவாகப் படும்
அவனது
பாத ஓசைகள் மட்டும் எனது
காதில் பட்டுள்ளது!
தரைமீது அமர்ந்திட அவனுக்கு
ஆசனம் விரிப்பதற்கே
நாள் முழுதும் கழிந்து
இருட்டி விட்டது
இப்போது!
விளக்கேற்ற வில்லை
இன்னும்!
வாராய் [...]
***********************
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: . ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
http://jayabarathan.wordpress.com/
மச மசன்னு ஒரு விளையாட்டு. ஒருத்தர் அவுட்ன்னு அவங்க கிட்ட தான் பந்து இருக்கும். அவங்க அந்த பந்தை யார் மேலயாவது படறமாதிரி வீசணும். யார் மேல படுதோ அவங்க அவுட். அப்பறம் மேடு பள்ளம் விளையாட்டு.
இன்னோண்ணு நாலு கல். நாலு சதுரம் போட்டு சதுரங்கள் சேருமிடத்தில் நாலு கல் வைப்போம். இது அஞ்சு பேர் விளையாடற விளையாட்டு. ஒருத்தர் அவுட். மீதி நாலு பேர் ஆளுக்கு ஒரு சதுரத்தை எடுத்துக்கலாம். அவுட் ஆனவர் அந்த கல்லுக்கு காவலாயும் இருக்கணும். அதே சமயம், இந்த நாலு பேர் அந்த கல்ல எடுக்க முயற்சி செய்யும் போது அவங்களை அவுட்டாக்கவும் முயற்சி செய்யணும். கல்லை எடுத்துட்டா அவங்க அவுட் ஆக்க முடியாது. அவங்க சதுரத்தையும் அவுட் ஆனவர் புடிக்கமுடியாது. அப்பறம் நம்மளே ஏதாவது விதிகள் சேத்துக்கறது இந்த விளையாட்டுகளுக்கு.
அப்பறம் அக்கம்பக்கத்து வீட்டுல தொலைக்காட்சிப்பெட்டி வந்தது. கொஞ்சம் இந்த விளையாட்டு குறைஞ்சுது. கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சதும் டீ வி வந்ததுக்கப்பறம்தான். முதல்ல தொலைக்காட்சில நான் பாத்த நிகழ்ச்சி இந்திரா காந்தியோட கடைசிக்காரியம். நண்பனோட அப்பா காங்கிரஸ்ல உள்ளூர் பிரமுகர். அவங்க வீட்டுல அப்ப இந்திரா காந்தி செத்தப்ப அவங்க வீட்டு டீவிய வெளிய வச்சு எல்லாரும் பாக்க வசதி செஞ்சாங்க. நமக்கு ஒண்ணும் புரியலைன்னாலும் சும்மா போய் ஆன்னு பாத்தேன். கல்லூரில படிச்ச காலத்தில் நண்பன் கொஞ்சம் ஆர் எஸ் எஸ் பக்கம் சாஞ்சுட்டான். அவனுக்கு நாய்கள்னா ரொம்ப பிடிக்கும். கல்லூரிலயும் எனக்கு ஜூனியர். கல்லூரி முடிஞ்சு வரும்போது தெருநாய்களுக்கு வர்க்கி வாங்கி போடுவான். அவன் கூட எப்படியும் ஒரு நாய் கூடவே வரும். காலெஜ் பையன்னா நாலு பொண்ணுங்க கூட வராம என்ன இது அப்படின்னு கிண்டல் பண்ணினாலும் அவனோட நல்ல மனசைப்பாராட்டுவோம்.
பள்ளி சென்ற காலங்கள்ல நண்பர்கள் வீட்டுல சினிமா பாக்க போகும் போது பெற்றோருடன் போனது மிகவும் குறைவே. அக்கம்பக்கத்தினர் , நண்பர்கள் அவர்களது பெற்றொர்களுடன் தான் போய்ப்படம் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவை ரஜினி படங்களாகத்தான் இருந்தது. தர்மத்தின் தலைவன், நான் சிகப்பு மனிதன், குரு சிஷ்யன், ராகவேந்திரா இப்படி. (கமல் படத்து முத்தக்காட்சி பாத்து கெட்டுப்போய்விடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ).
எங்க வீதியில் எல்லார் வீட்டிலும் கொய்யா மரம் , தென்னை மரம், முருங்கை மரமும் இருக்கும். நாங்கள் யாரும் இதையெல்லாம் கொய்யா, முருங்கை , தேங்காய் எல்லாம் விலை கொடுத்து வாங்கியதே இல்லை. இப்போது தண்ணீர் சரியாக வருவதில்லை. அதனால் எல்லார் வீடுகளிலும் இந்த மரங்கள் குறைந்து விட்டது.
அப்பறம் வார, மாத இதழ்கள் படிக்கறது. அது இன்னொரு பதிவா போடறேன்.
....
குறை காண முடியாத பணியொன்று சொல்வீர்!
ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.
குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.
குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு … கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!” என்று கொட்டாவி விட்டான்.
அதற்கு வைர வியாபாரி சொன்னான் “உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி… நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்…” என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.
எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.
ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.
பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.
அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.
“உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களிடம் கேட்டார்.
“எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!” பயத்துடன் பதில் சொன்னார்கள்.
“அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?” பெரியவர் கேட்டார்.
“களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்” என்று இருவரும் சொன்னார்கள்.
“உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்” என்று முடித்தார்.
Imperfections are Opportunities
Posted by ந. உதயகுமார்
Thanks:http://tamil-kutti-kathaikal.blogspot.com/2005/04/blog-post_09.html
இப்போது நண்பர் கார்த்திக்கின் விருப்பத்திற்கு இணங்கி Picasa மென்பொருள் வழியாக பல படங்களை ஒரே சொடுக்கில், Resize செய்வது எப்படி என்பதைக் காணவிருக்கிறோம்.
முதலில் Picasa பயன்பாட்டைத் துவக்கி, அதில் ஒரு Folder உருவாக்கி,அதில் எந்த எந்தப் படங்களையெல்லாம் Resize செய்யப் போகிறோமோ அவைகளை Import செய்யவும்.
Import ஆன பிறகு, Folderல் வலது Click செய்து, Select All Pictures ஐத் தேர்வு செய்யவும்.
பிறகு File Menuவில் Export Pictures To Folder தேர்வு செய்யவும். இப்போது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களையெல்லாம் எங்கே எந்த Target Folderல் Export செய்யவேண்டும் என்பதற்கான புதிய Folder பெயரை தட்டெழுதவும்.
Image Size Options பகுதியில் உள்ள Slide bar ஐ நகர்த்தி உங்களின் target படங்களின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும்.
வேறு ஏதேனும் விருப்பங்கள் இருந்தால் அதையும், இந்த உரையாடல் பெட்டி (dialog box)யில் தெரிவித்துவிட வேண்டியது.
OK கொடுக்க வேண்டியது ஒன்றுதான் மீதி.
இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட Target Folderல் அனைத்துப் படங்களும் அளவு குறைந்து பதிவாகி இருக்கும். அதை அப்படியே சுருக்கிப் பொட்டலம் போட்டு நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிடலாம்.
நன்றி : திரு. கார்த்திக் அவர்களுக்கு - கேள்வியின் நாயகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக