ரஜினி சந்திப்பு பற்றி அத்வானி!
ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று டெல்லியில் இருந்து கொண்டு குரல் கொடுக்கிறார் சத்ருஹன் சின்கா. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் ஆந்திராவிலிருந்து ஆர்வளப்படுகிறார் சிரஞ்சீவி. ஆனால், பதில் சொல்ல வேண்டிய ரஜினி, ஆகாயத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் நீண்டகாலமாக!
அதுபோகட்டும்... நேற்றைய செய்தி சுறுசுறுப்பளித்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு. சென்னைக்கு வந்த அத்வானி போயஸ் தோட்டம் பக்கம் காரை திருப்ப, முன்னாள் முதல்வர் ஜெ. வீட்டிற்குதான் செல்வார் என்று நினைத்திருப்பார்கள் மக்கள். ஆனால், கார் போய் நின்ற இடம் ரஜினி குடியிருக்கும் பதினெட்டாம் நம்பர் வீடு.
இருவரும் சந்தித்து இலங்கை பிரச்சனை பற்றியா பேசியிருக்கப் போகிறார்கள்? 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில் திரைப்படங்கள் குறித்து பேசினார்களாம் இருவரும். ( இது) சந்திரமுகி, சிவாஜி படத்தின் டிவிடிகளை கொடுத்தாராம் ரஜினி. 'கடவுள் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்' என்று ரஜினி கூறியிருந்ததற்கு பாராட்டுகளை தெரிவித்தாராம் அத்வானி. (ம்...இதை நம்பலாம்) அன்று மாலை நடைபெற்ற அத்வானியின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. நூலின் பெயர் 'என் தேசம், என் வாழ்க்கை'
ரஜினியோட நூல் வெளியீட்டுக்கு வருவீங்களா, அத்வானிஜி?
தூரத்தில் இருந்து சந்தையை பார்த்தவர்களெல்லாம் சந்தையில் முதலீடு செய்யவில்லையே என்று சந்தோஷப்படுகின்றனர். தற்போது, சந்தை சரிந்து இருப்பதை பார்த்தவுடன் இது நல்ல சந்தர்ப்பமா என தயக்கத்துடன் பார்க்கின்றனர். திங்களன்று ஏறிய ஏற்றமெல்லாம் கடந்த இரண்டு நாளில் காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாடும் சந்தைகளை நிலை நிறுத்த தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா போல, சீன அரசும் திங்களன்று சலுகை அறிவிப்பை வெளியிட்டது. அது, ஆசிய அளவில் சந்தைகளை தூக்கி நிறுத்தியது.
அமெரிக்க நிலைமை இன்னும் சரியாகவில்லை என்றே தோன்றுகிறது. உலகின் நம்பர் 2 கம்பெனியான அமெரிக்காவின் சர்க்கியுட் சிட்டி, மஞ்சள் கடுதாசி கொடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிய சரிய ரிலையன்ஸ் நிறுவன பங்கின் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. வருங்காலங்களில் எண்ணெய் தேவை குறையும் என்று வரும் ரிப்போர்ட்களை அடுத்து அந்த கம்பெனியின் ரிபைனிங் உற்பத்தி அளவு குறையலாம் என்ற எண்ணத்தில் தான். நேற்று முன்தினம் மட்டும் 7.3 சதவீதம் குறைந்து அந்த கம்பெனியின் பங்குகள் 1,207 ரூபாய் அளவிற்கு வந்தது. நேற்று முன்தினம் முடிவாக மும்பை பங்குச் சந்தை 696 புள்ளிகளை இழந்தது. மற்ற ஆசிய சந்தைகளில் அடி விழுந்தால், இந்திய சந்தைகளில் மரண அடி விழுகிறது. நேற்றைய துவக்கம் மந்த நிலையிலேயே இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் 1.4 சதவீதமாக இருந்தது, செப்டம்பரில் 4.8 சதவீதமாக கூடியிருந்தது. ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தற்போதே யூகங்கள் இருப்பதால் சந்தை மேலும், கீழுமாகவே இருந்தது. ரிலையன்ஸ் 4.89 சதவீதம் கீழே விழுந்து 1,148 ரூபாய் அளவிற்கு வந்துள்ளது. நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை 303 புள்ளிகள் சரிவுடன் 9,536 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை 90 புள்ளிகள் சரிந்து 2,848 என்ற நிலையிலும் முடிந்தது. சந்தை 10,000க்கு கீழே இருப்பது சென்டிமென்டாக ஒரு கவலையளிக்கக் கூடிய விஷயம் தான்.
கச்சா எண்ணெய் பகவான்: கச்சா எண்ணெய் பகவான் தான் ஒரு காலத்தில் (சில மாதங்களுக்கு முன் வரை) சந்தையை கீழே இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தற்போது, பேரல் 60 டாலர் வரை குறைந்தும், சந்தை மேலே செல்லவில்லை.
சந்தைக்கு இன்று விடுமுறை: இன்று குருநானக் ஜெயந்தி விடுமுறை காரணமாக சந்தையில் வர்த்தகம் இல்லை. தெளிந்த நீரோட்டம் போல ஒரு சந்தை தேவை. அது தான் உடனடித் தேவை. ஆனால் அதற்கு இன்னும் பல காலாண்டுகள் காத்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. தீபாவளியன்று கிடைத்தது போல் சல்லிசாக பங்குகள் கிடைக்கும். அப்போது மீன் பிடிக்க வசதியாக இருக்கும்.
- சேதுராமன் சாத்தப்பன்-
சமீபத்தில்தான் திருமணமாகியிருக்கிறது. அவனுடைய கைப்பேசியில் அடிக்கடி மிஸ்கால் வந்து கொண்டிருக்கும். என்னவென்று விசாரிக்கும்போது, வங்காளதேசத்திலிருந்து அவனுடைய மனைவி இவனிடம் பேசுவதற்காக அவ்வாறு செய்துவருவதாக சொல்லுவான். அனால் இவன் பதிலுக்கு தொலைபேசியில் பேசுவது மாதத்திற்கு ஒரிரு தடவைதானாம். சொற்ப சம்பளத்தில் கண்தெரியாத தகப்பனார், வயதான தாயார் இன்னும் இரண்டு சகோதரிகள் என்று எல்லாருக்கும் இவனுடைய ஆதரவில்தான் வாழவேண்டியிருக்கிறது. தொலைபேசிக்கான செலவைத் தவிர்த்து, மிகவும் சிக்கனமாக வாழ்ந்துவருகிறான். என்றாலும், அடிக்கடி மிஸ்கால் வந்த்துகொண்டேதான் இருக்கும்.
"பாருங்கள், என் மனைவிதான் மிஸ்கால் செய்கிறாள்", என்று சொல்லிக்கொண்டிருப்பான். நான் அவ்வப்போது அவனுக்கு ப்ரிபெய்ட் தோலைபேசி கார்டுகள் வாங்கி பரிசளிப்பேன். மனைவியிடம் பேசுவான். ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பான்.
இன்று வழக்கத்தின்படி மிஸ்கால் இல்லாது தொடர்ந்து அவனுடைய கைப்பேசி ஒலிக்க ஆரம்பித்தது. அவன் மனைவி பேசினாளாம். வீட்டில் களவு போய்விட்டதாம். மனைவியின் கல்யாணபட்டு சேலை அடங்கிய பெட்டியை திருடர்கள் எடுத்து சென்றுவிட்டார்களாம். ஒரே கூப்பாடும், அழுகையுமாம். அவனால் மனைவியை ஆறுதல்படுத்த இயலவில்லை.
அடுத்து மாசூமின் அம்மா பேசியிருக்கிறார்கள்.
"அம்மா என்ன சொன்னார்கள்", என்று ஆவலில் கேட்டேன்.
"திருடர்கள் வீட்டில் பானை, பாத்திரங்களை ஆக்கிவைத்திருந்த சாப்பாடோடு களவாடி கொண்டு போய்விட்டார்ள். அடுத்தவேளை சாப்பாடு ஆக்குவதற்கு பாத்திரங்கள் இல்லை. இங்கே விலைவாசியும் ஏறிவிட்டது. ஜீவனம் நடத்துவதே கஷ்டமாயிருக்கிறது. திருடர்களும் என்ன செய்வார்கள்?" என்று சொல்லி சிரித்தார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக