வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-13

ஜினியை அத்வானி சந்தித்ததன் பின்னணி குறித்து இனி ஒவ்வொருவரும் கட்டுக் கதைகளாக எழுதிக் குவிப்பார்கள். நமக்கு அந்த விவரங்கள் வேண்டாம். உண்மை மட்டும்தான் தேவை. ரஜினியைப் போன்ற உண்மையான மனிதர்கள் கட்டுக் கதைகளுக்காக கவலைப்படுவதில்லை.

ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பின் அத்வானி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், சென்னை வரும்போது வீட்டுக்கு வருமாறு ரஜினி அழைத்தார். எனக்கும் அவரைச் சந்தித்துப் பேசும் ஆவலிருந்தது. அது இன்றுதான் நிறைவேறியது.
ஆண்டவன் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினி கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். நான் அவரிடம், 'உங்கள் நிலைப்பாடு அற்புதமானது. நீங்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவீர்கள். அதற்கு என் ஆசீர்வாதம்', என்று கூறினேன். அவரிடம் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டேன், ஆனால் பதில் சொல்லவில்லை, என்று யதார்த்தமாகக் கூறினார்.

சும்மா விடுவார்களா நம்ம காகிதப் புலிகள்...

அதற்குள், 'அத்வானி ஒன்றும் தானாகப் போகவில்லையாம், ரஜினி வேண்டி வருந்தி அழைத்ததால்தான் போனாராம்', என எழுதிவிட்டனர்.

அவர்களது பொறாமைத் தீயில் நாளும் அவர்களே வெந்து கொண்டிருப்பதன் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்...! இதில் ஒரு அல்ப திருப்தி..!

அத்வானியின் இயல்பு!

ஒரு அரசியல்வாதியாக நாம் அத்வானியைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரது கட்சி மீதோ, அவர்களின் கொள்கை மீதோ நமக்கு பெரிய அபிப்பிராயமும் கிடையாது. ஆனால் அத்வானி நேர்மையாளர் எனப் பெயரெடுத்தவர். எளிமைக்கு மறுபெயர் அத்வானி என்று சொல்லலாம்.

2001-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவரது பேட்டி அவசரமாகத் தேவைப்பட்டது. அப்போது அவர் மத்திய அமைச்சர். அவரைப் பேட்டியெடுக்க அவரது செயலாளரிடம் தொடர்பு கொண்டோம். அடுத்த நாள் நேரில் வருமாறு அவரும் நேரம் ஒதுக்கிவிட்டார்.

ஆனால் டெல்லிக்குச் சென்று பேட்டியெடுத்து திரும்ப வேண்டும். அன்றைய விமானக் கட்டணப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய், இரண்டு நாள் கால அவகாசம் வேண்டும்.

செயலாளரிடம் நிலைமையைச் சொன்னபோது, டெல்லியில் உள்ள வேறு யாராவது ஒரு நிருபரை அனுப்புமாறு மாற்று யோசனை சொன்னார். ஆனால் அன்றைய சிறப்புக் கட்டுரைக்கான அவரது பேட்டி, குறிப்பாக இந்தி சேனலில் அன்றே ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம். உடனே அவருக்கு நிலைமையை விளக்கினாம். அடுத்த 30 நிமிடம் கழித்து பேசச் சொன்னார்.

பேசினோம். மறுமுனையில் மாண்புமிகு எல்.கே. அத்வானி!

அத்தனை எளிமை, எளிதில் அணுகும் தன்மை கொண்டவர் அத்வானி. அவர் சூப்பர் ஸ்டாரை தேடி வந்து பார்ப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மீண்டும் மீண்டும் வரவேண்டியிருந்தாலும் வருவார்...!

மற்றபடி சூப்பர்ஸ்டாரின் இயல்பு பற்றி நாட்டுக்கே தெரியும். யாராக இருந்தாலும் தன்னைத் தேடி வந்துதான் பார்க்க வேண்டும் என்ற ஈகோ இல்லாத மனிதர் அவர்.

'உங்கள் வீட்டுக்கு வருமாறு முன்பு அழைத்தீர்கள். வர முடியவில்லை. இப்போது சென்னை வருகிறேன். உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா...?' என்று கேட்கும் இந்தியாவின் பிரதமர் பதவிக்கான பிரதான கட்சியின் வேட்பாளரிடம் அவர் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?

ரஜினியைப் போன்ற நல்லவர்களின் பெருமையை இங்குள்ள வக்கிரம் பிடித்த அரசியல்வாதிகளுக்கும், நோயுள்ளம் கொண்ட பத்திரிகையாள பாவிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன், அத்வானியை போயஸ் இல்லம் (இனி அரசியலில் போயஸ் இல்லம் என்றால் ரஜினி வீடு என்று பொருள் கொள்க!) போக வைத்தார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இன்னும் எத்தனை சரித்திர சந்திப்புகள் இந்த போயஸ் இல்லத்தில் நடக்கப் போகின்றனவோ!

என்ன சொல்றீங்க!
http://www.envazhi.com

ஆனந்தக் கோனார் முன்னிலையில்
சந்தோச நாடார் தலைமையில்
ஷண்முக முதலியார் வரவேற்பு வழங்க
சிவனேச செட்டியார் வாழ்த்து மடல் வாசிக்க
நாயகம்பிள்ளை விரிவுரை நிகழ்த்த
சாம்பசிவ ஐயர்..ரங்காச்சாரி..கருப்பு தேவர்
ஆகியோர் கலந்துக்கொள்ள
இனிதே நடந்தது
சாதி ஒழிப்பு மகாநாடு.
அரசாங்கத்திடமிருந்த சம்பளம் பெறும் 100 ஆசிரியர்கள் புலிகளின் அமைப்பில் இணைந்துகொண்டு அரச படைகளுக்கெதிராகப் போராடுகின்றனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு பிரிகேடியர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏ32 வீதியில் பாலாவிக்கு அண்மையில் உள்ள 7ம் மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற சண்டையின் பின்பு புலிகளின் நான்கு பெண் உறுப்பினர்களை படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டர்களில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார். மற்றைய மூவரும் நிலாவொளி வயது 28, இளவேனி வயது 18, திருவேனி வயது 19 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் நிலாவொளி, இலங்கை கல்வியமைச்சின் சம்பளத்தை சட்டப்படி பெற்றுவந்த ஆங்கில ஆசிரியை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

தான் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் படித்து ஆசிரியராகி கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் படிப்பித்து வந்ததாகவும் கிளிநொச்சியில் வீட்டிற்கு ஒருத்தரை புலிகளின் இயக்கத்தில் இணைக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையில் இருந்து தமது 18 வயத நிரம்பாத தம்பியை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் புலிகளுடன் இணைந்ததாகவும் கூறினார்.

கிளிநொச்சியில் தன்னைப்போன்று ஏறக்குறைய 100 ஆசிரியர்கள் அரச சம்பளத்துடன் அரசபடைகளுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுவதாகவும் அத்துடன் அரச திணைக்கள இலிகிதர்கள் மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகித்தர்கள் அரச சம்பளத்துடன் அரசுக்கு எதிராக போராடுவதாகவும் நிலாவொளி தெரிவித்துள்ளார்

நிலாவொளி கருத்து வெளியிட்ட வீடியோ இன்று ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

--
People Of Thambiluvil www.thirukkovil.com

இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பையும் நலன்களையும் உரியவகையில் பேணுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
புதுடில்லியில் இன்று இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த வலியுறுத்தலை இந்திய பிரதமர் விடுத்தார். இதற்கு முன்னதாக தாம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் முகமாகவே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதாகவும், அரசியல் தீர்வைக்காணும் முன்னர் பயங்கரவாதத்தை ஒழிப்பதே தமது நோக்கம் என்றும் மஹிந்த ராஜபக்ச, மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளார் இதன் போது தமது கருத்தை வெளியிட்ட இந்திய பிரதமர், பயங்கரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்தின் போது அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். 

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச,  தாம்  தமிழர்களின் பாதுகாப்புக்கான  உறுதிப்பாட்டை இந்திய பிரதமரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார். தாம் தங்களின் மக்களை பார்த்துக்கொள்வோம் என்றும் அது தமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். தாம் முதலில் பயங்கரவாதத்தை ஒழித்த பின்னரே இனப்பிரச்சினைக்கான தீர்வை காணப்போவதாக குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை களைந்தப்பின்னரே அவர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் 13 வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கவுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
--
People Of Thambiluvil www.thirukkovil.com

அரசாங்கத்திடமிருந்த சம்பளம் பெறும் 100 ஆசிரியர்கள் புலிகளின் அமைப்பில் இணைந்துகொண்டு அரச படைகளுக்கெதிராகப் போராடுகின்றனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு பிரிகேடியர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏ32 வீதியில் பாலாவிக்கு அண்மையில் உள்ள 7ம் மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற சண்டையின் பின்பு புலிகளின் நான்கு பெண் உறுப்பினர்களை படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டர்களில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார். மற்றைய மூவரும் நிலாவொளி வயது 28, இளவேனி வயது 18, திருவேனி வயது 19 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் நிலாவொளி, இலங்கை கல்வியமைச்சின் சம்பளத்தை சட்டப்படி பெற்றுவந்த ஆங்கில ஆசிரியை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

தான் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் படித்து ஆசிரியராகி கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் படிப்பித்து வந்ததாகவும் கிளிநொச்சியில் வீட்டிற்கு ஒருத்தரை புலிகளின் இயக்கத்தில் இணைக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையில் இருந்து தமது 18 வயத நிரம்பாத தம்பியை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் புலிகளுடன் இணைந்ததாகவும் கூறினார்.

கிளிநொச்சியில் தன்னைப்போன்று ஏறக்குறைய 100 ஆசிரியர்கள் அரச சம்பளத்துடன் அரசபடைகளுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுவதாகவும் அத்துடன் அரச திணைக்கள இலிகிதர்கள் மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகித்தர்கள் அரச சம்பளத்துடன் அரசுக்கு எதிராக போராடுவதாகவும் நிலாவொளி தெரிவித்துள்ளார்

நிலாவொளி கருத்து வெளியிட்ட வீடியோ இன்று ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

--
People Of Thambiluvil www.thirukkovil.com

கருத்துகள் இல்லை: