திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-08

60 வயதுக்குப் பிறகு ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்'' என்றும், `` இது பற்றி அவர் தன்னிடம் கூறி இருக்கிறார்'' என்றும் பிரஜா ராஜ்யம் கட்சி தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி தெரிவித்தார்.
சிவகாமியின் சபதம் #15: முதல் பாகம் : ரதியின் தூது டவுன்லோட் சிவகாமியின் சபதம் #15: முதல் பாகம் : ரதியின் தூது
இலங்கை விமானப்படை செய்தித்தொடர்ப்பாளர் ஜனகநாயகரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் " புனரின் பிரதேசத்தின் வடக்கேயுள்ள பாலத்தீவில் நேற்று இரவு இலங்கை விமானங்கள் குண்டு வீசி தாக்கின. பாலத்தீவு விடுதலைப்புலிகளின் சந்திப்புக் கூடாரமாக திகழ்ந்து வந்தது. நேற்றைய தாக்குதல் பாலத்தீவிற்கு பலத்த சேதம் விளைவித்திருக்கும் என்பதில் ஐயமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். பாலத்தீவு புனரின் பிரதேசத்தின் வடக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இலங்கை விமானபடைப்பிரிவைச் சேர்ந்த MI-24 ரக ஹெலிகாப்டர்கள் நேற்று இரவு 9.30 மணியளவில் பாலத்தீவில் குண்டுமழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தின. விமானிகளின் கூற்றின்படி தாக்குதலுக்குப் பிறகு அவ்விடம் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த சேதம் விளைந்திருக்கக் கூடுமென்றும் கருதப்படுகிறது.
நேத்துத் தேர்தல் நடந்து முடிஞ்சது. நாலு மணிநேரத்துலே முடிவு தெரிஞ்சுபோச்சு. மொத்தம் 122 ஸீட்ஸ். அதுலே 'ஜான் கீ' தலைமையில் நேஷனல் கட்சிக்கு 59 இடங்கள். இதுவரை (9 வருசமா)ஆண்ட தொழிலாளர் கட்சிக்கு 43 இடங்கள்.

MMP கேக் வெட்டிக் கொடுத்ததுலே கிடைச்சதுதான் இவைகள். குறைஞ்ச பட்சம் 5 சதமானம் கட்சிகளுக்கான ஓட்டு விழுந்துச்சுன்னா அந்தக் கட்சிக்குச் சில இடம் (தேர்தலில் நிக்காட்டாலும்)கிடைக்கும். ஆளுக்கு ரெண்டு ஓட்டு. ஒன்னு பிடிச்ச வேட்பாளருக்கு, ஒன்னு பிடிச்ச கட்சிக்கு. ரெண்டும் வெவ்வேறாவும் இருக்கலாம்.

இதுவரை பிரதமரா இருந்த ஹெலன் க்ளார்க், அவுங்க தொகுதியிலே ஜெயிச்சுட்டாங்க. ஆனாலும், பாராளுமன்றத்துலே எதிர்கட்சித் தலைமை வேணாமுன்னு , புது தலையைத் தெரிஞ்செடுக்கச் சொல்லி அவுங்க கட்சி மேலிடத்தைக் கேட்டுக்கிட்டாங்க. மேடையில் ஏறுனப்பவே 'நமஸ்தே, சத்ஸ்ரீகால், சலாம் ஆலேக்கும், ஹாரே மாய்'ன்னு 20 மொழிகளில் கும்பிட்டுக்கிட்டே வந்தாங்க.(அரசியல்வியாதியா, கொக்கா?) எல்லாம் இந்த 9 வருசப் பிரதமர் வாழ்க்கையில் படிச்சுக்கிட்டது. இவுங்க கட்சி செஞ்ச ஒரே தவறுன்னா.... அது ஒட்டக் கறந்ததுதான். பக்கத்து நாட்டுலே புல் பசுமையா இருக்குன்னு பல கிவிக்கள் பறந்து போயிருச்சு. போனவருசம் 27 ஆயிரத்துச் சொச்சம்பேர் நாட்டைவிட்டுப் போயிட்டாங்க. இந்த வருசமும் மக்கள்ஸ் நாடு மாறிக்கிட்டே இருக்காங்க. (நம்ம சின்ன அம்மிணிகூட என்னைத் தனியா வுட்டுட்டுப் போயிருச்சுப்பா)

அதுவும் இல்லாம எங்க வழக்கமே ஒருத்தருக்கு மூணு முறை சான்ஸ் கொடுக்கறதுதான். எடுத்தேன் கவுத்தேன்னு இல்லாம நாட்டுக்கு என்ன செய்யறாங்கன்னு பொறுமையாக் கவனிச்சுக்கிட்டு இருப்போம். நாங்கள் எல்லாரும் பொறுமையின் பூஷணங்கள்:-))))


நேஷனல் 59 இடம் புடிச்சாலும், இன்னும் சில ( மவொரி, ஆக்ட் & யுனைட்டெட் ஃப்யூச்சர்) கட்சிகளைச் ( 5+5+1) சேர்த்துக்கிட்டு கூட்டுமந்திரி சபைதான் அமைக்கப் போறாங்க. தனி மெஜாரிட்டி இப்பெல்லாம் கிடைக்கறதில்லை. (நாங்களும் முழிச்சுக்கிட்டொம்லெ)
மவொரிக் கட்சியின் கொள்கைகள் பல நல்லாவே இருக்கு.


வழக்கம்போல தேர்தல் முடிஞ்சதும் இனிமேல் ஆளும் கட்சியும், இதுவரை ஆண்ட கட்சியும் மேடையில் வந்து ஒருவரை ஒருவர் பாராட்டிப் புகழ்ந்தாங்க. புது ஆட்சியில் தலை சரியா இருந்தாலும், பரிவாரங்களில் சில கொஞ்சம் லொடலொட. எல்லாம் பார்த்துச் சரிபண்ணுவாங்கன்னு நம்பறோம்.



புதுப் பிரதமர் ஜான் கீ( John Key) அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம். நல்லதே நடக்கணும். நடக்கும்
படிக்க படிக்க முடியாத கவிதை ஒன்று... அழகான வாழ்வியலை சொல்லித் தருகின்றது... நீண்ட கனவுகளை தேடி புதைந்த நெஞ்சுக்குள் ஆசுவாசப்படுத்துகிறது படிக்க படிக்க முடியாத கவிதை ஒன்று... ஒன்றுக்ளுள் ஒன்றுமில்லை என்று புரிந்த பின்னும் இன்றும் ரசித்தேன் கவிதையின் வரிகளை... முகமில்லா உருவம் நிலவினில் சிரித்தபடி நலன் விசாரித்தது... கலைந்த கனவுக்குள் புரியாமல் இருந்தால் தெளிவாக இருப்பேனோ? படிக்க படிக்க

வே. மதிமாறன்

மூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் 'நன்றாக' முன்னேறலாம். 'எங்க சமூகத்தை எவன் எவனோ எமாத்துன்னான். நான் ஏமாத்தக் கூடாதா?' என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

[கட்டுரையை முழுவதுமாக வாசிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்]

கருத்துகள் இல்லை: