திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-07



More than a Blog Aggregator

by rammalar

HOLDING HANDS

Sometimes you feel that problems are so heavy.

Sometimes it's hard for you and you can say you can't do it anymore.

Just look at the sky.

Maybe there's someone to lean on.

Or maybe, you can call me.

You'll know that forever.

Holding hands!

I will not leave you!

(English version of Yeng Constantino's Hawak Kamay)

*****************************************

Thanks:http://pilyo.wordpress.com/2008/06/30/the-lost-text-messages/

      

கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் � சிரிப்பு.

    * * * * *
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு

சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை

   * * * * *
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே

சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்

ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்

ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை

பாம்பின் படம்கூட
அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

   * * * * *
 

காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?

சிரியுங்கள் மனிதர்களே!

பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை

சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஐ�தி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு

தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்��றடித் தேய்ந்தழியும் சிரிப்பு

கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐ�தி பிரிக்கலாம்

சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை

நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?

சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு

ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்

மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!

   * * * * *

Thanks:http://members.optushome.com.au/mayuranet/poems/vairamuthu/sirippu.html

      
ஜனாதிபதியால் நேற்று சமர்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகிறது. ஆவை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று இதைத்தெரிவித்ததுடன் பாராளுமன்றம் இன்று காலை 9.30 க்கு கூடுவதாக சபாநாயகர் அறிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை நாட்கள் உட்பட எதிர்வரும் 15 ஆம் தகதி வரை நடைபெறவுள்ளது. 15 ஆம் திகதி மாலை ஐந்து மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு [...]


More than a Blog Aggregator

by புதுகை.அப்துல்லா
சர்தார்ஜி ஒருவர் தன்னுடைய நண்பன் ஒருவனிடம் பெருமையோடு சொன்னார்

"நான் எப்பவும் வேலைக்கு போறதுக்கு முன்னாடி என் மனைவிக்கு முத்தம் குடுத்துவிட்டுத்தான் செல்வேன். நீ எப்படி?"
"நான் நீ வேலைக்குப் போனதுக்கு அப்புறம் குடுப்பேன்"
சர்தார்ஜி இப்போது மிகவும் பெருமையோடு சொன்னார்...
"ஹையா! மீ த ஃபர்ஸ்டு "


டிஸ்கி : இது பதிவைப் படிக்கும் முன்பே மீ த ஃபர்ஸ்டு போடும் சிலரை குறி வைத்து எழுதிய பதிவல்ல :)))
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா, தனது ஆலோசகராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பொருளாதார வல்லுநர் சோனல் ஷாவை தேர்வு செய்துள்ளார். வெள்ளை மாளிகை ஆலோசகர்கள் குழுவில் சோனல் ஷா இடம்பெறுவார். கூகிள் நிறுவனத்தின் பிலந்த்ரோபிக் பிரிவிற்கு சோனல் தலைமை வகித்து வந்துள்ளார். 40 வயதாகும் சோனல் ஷா, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று அனுபவம் பெற்றவர். இவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: