தமிழ் விக்கிபீடியாவில் உலவிய போது உங்களுக்கு தெரியுமா ? என்ற பக்கத்தில்
மொரிசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருப்பதைப் பற்றிய செய்தி அது. எத்தனை பேருக்கு தெரிந்துருக்கும் எனத் தெரியவில்லை. ஆதலால் அதனை உங்களின் பார்வைக்கு இட வேண்டிய நோக்கத்தில் இங்கே பதிவிடுகிறேன். கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களை எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் தான் சிறுவயதில் வாய்ப்பாடு புத்தகத்தில் பார்த்ததோடு நமது இலக்கங்களையும், இலக்குகளையும் தொலைத்து கொண்டு இருக்கிறோம். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் இலக்கங்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே..
மொரிசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர், அண்மையில் தமிழக அரசு இவர்களின் தமிழ் கல்விக்கும் உதவ முன்வந்துள்ளது.
சோதனை பதிவு....
தமிழ்நாட்டிலே உள்ள அனைவரும் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யக் கோரி அதைச் செய்யச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்பினரின் நிலை தெரியாமல், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக