வியாழன், 6 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-04

5:30 ]
பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியாதென அமெரிக்கத் தூதுவர் றொபர்ட் பிளேக் மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார்.
ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்கா இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதன் காரணமாகவே, இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அனைத்துக் கட்சி குழுவினால் தயாரிக்கப்படும் பரிந்துரைகள் 90 வீதம் பூர்த்தியாகியுள்ளதெனவும், இதன் தீர்வினை எட்ட முடியும் என அதிக மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் தனிமைப் படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மனித உரிமை நிலைமைகளில் ஏற்படும் முன்னேற்றம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் சமாதான முன்னெடுப்புக்களைத் தொடர முடியும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
--
People Of Thambiluvil www.thirukkovil.com



More than a Blog Aggregator

by sharehunter


More than a Blog Aggregator

by பரிசல்காரன்
அவர் தன்னைப்பற்றி சொல்கையில் இப்படிச் சொல்கிறார்.

"அதிரடிச் சிரிப்புக்காரன். டம்ளரில் பிடிக்குமளவு அழுகிறவன். தோன்றும் நல்ல விஷயங்களை அலட்சியப்படுத்துகிறான். கற்பனை செய்யவே முடியாதபடி அல்பமாக ஏதாவது தோன்றும்போது உரத்தகுரலில் அறிவித்துவிடுவான். அன்பர்களுக்கு பயங்கரவாதி. வெறுத்தொதுங்கிப் போனவர்களைத் தொடர்கிறான் கூப்பிய கைகளோடு. எதற்காக வந்தான் இவன்"

தன்னைப்பற்றி அவர் சொன்ன மேற்பேராவில் எதுவும் பொய்யில்லை. அவர் அப்படித்தான்.

அவர் – ரமேஷ்வைத்யா.

ஸோமாவனதேவதா என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளை மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறேன். அதில் என் ஃபேவரைட் 'அறிதல் அறிவித்தல்' நான் அவரை விட அதிக இடங்களில் இந்தக் கவிதை குறித்துப் பேசியிருக்கிறேன். நேற்றுகூட லண்டன் சென்றிருந்த என் நண்பன் செந்தில் இதுவரை என்னை அழைத்துப் பேசவேயில்லை நீ என்று மெயிலியபோது 'இவையெதுவும் இல்லாமலும் ஒரு மனசு அறியாதா தன்னைப் போல் இன்னொன்றை' என்று பதிலினேன்.

அந்த ஸோமாவனதேவதா செத்தாச்சு' என்பார் ரமேஷ்வைத்யா. இல்லை என்பது என் கணிப்பு அல்லது விருப்பம்.

இவரது கவிதைத் தொகுப்பு 'உயரங்களின் ரசிகன்' என் மிகப்பிடித்த புத்தகங்களில் ஒன்று.

குடைபற்றி எழுதும்போது

மழை பெய்தால்
ஆண்கள்
கறுப்புக்கொடி காட்டுகிறார்கள்..
பெண்கள்
பூங்கொத்து நீட்டுகிறார்கள்!

என்கிறார்.

காதலிகளை

எல்லா பாஷையிலும்
காதலிக்கிறார்கள்

கடைசியில்

மௌனபாஷையில்
மறுதலிக்கிறார்கள்

என்று புதிர்மனுஷிகள் என்கிறார்.

இவரை உயிரோடு வாழவைப்பது எது?

துக்கங்களைப் போட்டுப்
புதைக்கின்ற கல்லறைபோல்
துணிந்த ஒரு மூளை


பக்கத்து மனுஷருக்குப்
புன்னகைப்பூ பூக்கின்ற
தாவரமாய் உதடு

பல்வேறு ஒலிகளில்
மெல்லிசை அடையாளம்
காண்பதற்குக் கற்ற காது

கண்ணீர், காமம்,
கயமை இவைதவிர்த்து
கருணையும் வழியும் கண்கள்

பட்சிக்கோ பாம்புக்கோ
தீங்கிழைத் திருந்தாலும்
நஷ்ட ஈடாகும் சதை

பட்ட செடி, பூமலரும்
உத்தரவாதம் தந்தால்
பந்தலாகும் எலும்பு

குடித்தவன், குழந்தையை
அடிப்பதைப் பார்க்கையில்
கொதித்துத் தோல்சுடும் ரத்தம்

இவையெதுவும் இல்லாத

என்னையும் உயிரோடு
வைப்பது, இதற்கேங்கும் மனசு!


இன்றைக்கு இவருக்குப் பிறந்தநாள்!


அதிகாலை சேவலை எழுப்பி என்ற பாடலையும் எழுதிப் பிரபலமான இவர்...

இன்றுபோலில்லாமல்..

கவிதைகள் எழுதிக் குவித்துக் கொண்டிருந்த

அன்றுபோல் இன்றும், இனியும் வாழ வாழ்த்துவோம்!

முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழருக்காக திரட்டும் நிவாரண நிதி குறித்து ஏனைய கட்சிகள் பல்வேறு விதமாக விமர்சித்துள்ளதையடுத்து, கட்சிகளிடையே ஒருமித்த குரல் ஒலிக்காவிட்டால் இது தான் இலங்கைத் தமிழனின் தலைவிதி என எண்ணி கண்ணீர் விட வேண் டியது தான் என முதலமைச்சர் கருணாநிதி தெரி வித்துள்ளார்.

முழு முடிவுகள் வராத நிலையிலும் கூட ஒபாமாவின் வெற்றி இப்பொழுது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகியிருக்கிறது. இந்தத் தேர்தலின் ஆதியிலிருந்தே ஒபாமாவை ஆதரித்தவன் என்ற முறையில் இது மகிழ்ச்சியான முடிவு.  ஒபாமாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தன் வரலாற்றுக் கறைகளைக் களைந்தெரியும் முக்கியமான கட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள்.

என்னுடைய பல எழுத்துக்களில் அமெரிக்காவின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவன் நான். இருந்தபோதும் அமெரிக்காவின் சில ஆதார விழுமியங்கள் உலகிலேயேன் மிகவும் உன்னதமானவை. இவற்றுள் முக்கியமாக நான் கருதுவது தளையற்ற சிந்தனைகள் (இதனால்தான் அறிவியல்/நுட்பத்தில் அமெரிக்கா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது).  இருந்தபோதிலும் பணக்காரனின் வயலில் பாயும் வெள்ளம் கசிந்துதான் ஏழையின் காணிக்கு வரவேண்டும் என்ற சிந்தனை அதன் மிகப் பெரும் கரும்புள்ளிகளில் ஒன்று. மற்றது சமீபகாலமாக வளர்ந்துவரும் சமய வெறி.  இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி இல்லாவிட்டால் கூட குறைந்தபட்சம் காற்புள்ளியாவது ஒபாமாவால் இடமுடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது.  கடந்த எட்டு வருடங்களில் வறட்டு முரட்டுத்தனத்தை மாத்திரமே உலக நாடுகளிடம் காட்டிய அமெரிக்கா தனது மூர்க்கத்தைக் களைந்தெரிந்து ஒரு உன்னத முதன்மை நாடாக உலக நாடுகளிடையே தன் பெயரை மீட்டெடுக்க வேண்டும்.

ஒபாமா அப்பழுக்கற்றவர் என்ற எண்ணம் எனக்கு ஒருப்போதும் இருந்ததில்லை. ஆனால் போட்டியிட்ட எல்லோரைக் காட்டிலும் மிகக் குறைவான எதிரெண்ணங்களைக் கொண்டவர் என்பதே அவரிடம் நான் கண்ட (காணும்) முக்கிய தகுதி.  இன்றைய அமெரிக்க மற்றும் உலக நடப்பில் ஒபாமாவின் துவக்கம் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக தேர்தலில் காட்டிய சில நல்ல பண்புகளைத் தொடர்ந்தாலே போதும் பல எதிர்ப்புகளைச் சமாளிக்கலாம் என்று நம்புகிறேன். குறிப்பாக அனைவரையும் அரவணைத்துச் செல்வது.

செனட்டர் மெக்கெய்ன் இந்தத் தோல்வியால் ஒன்றும் சிதைந்துப் போகப் போவதில்லை. அவருடைய நீண்ட நாளைய சேவை அமெரிக்கர்களால் நன்றியுடன் நினைவுகூறப்படும் என்று நம்புகிறேன். இன்னும் சில காலமாவது செனட்டாராகத் தொடரவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

சிக்கலான துவக்கம். தடைகளைக் களைந்தெரிந்து வெற்றிகளைச் சேர்க்க ஒபாமாவுக்கு இனிய வாழ்த்துகள்.

(இதை எழுதி முடிக்கும் நேரத்தில் 54 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக ஒரு டெமாக்ரடிக் வேட்பாளர் (ஒபாமா) வர்ஜீனியாவில் வெற்றி பெறுவார் என்ற அறிவிப்பு வருகிறது. இன்னும் முழு முடிவுகள் வரவில்லை எனினும் … சரியாக 11:00 மணி, சி.என்.என் ஒபாமாவின் வெற்றியை உறுதியான அறிவிப்பாக்கியிருக்கிறது.)

Grabbed அக்கரைப்பற்றில் ஆதார வைத்தியசாலையில் இளம் தம்பதியினருக்கு  பிறந்த ஆண் குழந்தையொன்றே இவ்வாறு மூன்று கால்களுடன் பிறந்துள்ளது. இக்குழந்தை இவ்வாறு பிறந்துள்ளமை தொடர்பாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிகாரி எம்.எம் தாசின் அவர்களிடம் கேட்டபோது… குறித்த தாய்க்கு கர்ப்பம் தரிக்கப்பட்ட போது அது இரட்டைக் குழந்தைக்குரிய தோற்றப்பாட்டுடன் வளர்ந்து வந்துள்ளதாகவும் ஆனால் குறித்த சில மாதங்களின் பின்னர் இரட்டை பிள்ளைகளுக்கான வடிவம் மாறி ஒரு தனி சிசுவாக மாற்றமடைந்துள்ளதுதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே இல்லாமல் போன மற்றைய சிசுவின் கால்பகுதி தற்போது பிறந்துள்ள குழந்தையின் இரு கால்களுக்குமிடையே மேலதிகமாக வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இக்குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் விசேட சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: