வியாழன், 6 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-05

குறிப்பு.....

ஈழ தமிழரின் அவலத்தையும்,தான் பிறந்த மண்ணிலேயே அனுபவிக்கும் துயரத்தையும் தமிழக சகோதரர்கள் அறிந்திட விரும்பி பல மாத காலத்தின் முன்னர் பதிவிடப்பட்ட கவிதை இது.இக் கவிதைக்கான பின்னூட்டத்தில் எம் அன்பு உறவுகள் தமது அன்பினையும் ஆதரவினையும் தந்திருந்தார்கள்.இன்று அதே போல தமிழகத்தில் என் சகோதரரின் எழுச்சி மனதை ஆனந்த கூத்தாட செய்கிறது.ஒரு சிறிய நெருடல் மக்கள் எல்லோரும் எமக்காக குரல்கொடுக்கும் போது

தலைவர்களாக மக்களால் தெரிவானோர் எம் விடயத்திலொற்றுமை படாதததும் ,தமது உணர்வை வெளிப்படுத்தும் சகோதரரை சகோதரரே கைது செய்வதும் தான்,இந் நிலை மாற வேண்டுகிறேன்.எனது சகோதரருக்கு எனது நன்றி எப்பொதும்.......

நீயும் தமிழன்தான்

நீ... என் சகோதரன்

நீ... என் உறவு

நீ... என் இனம்

நீயும் தமிழன்தான்

என்றாலும்...

நீ...ஒரு இந்தியன்!!!

நீ...உன்

நாட்டிலேயே

நிராகரிக்கப் பட்டிருக்கிறாயா...

உன் உயிர் காக்க

ஓடி ஒழிந்திருக்கிறாயா

அநுபவித்திருக்கிறாயா...

அகதி வாழ்வு.

இரத்தமும் சதையும்

தந்த பெற்ற தெய்வங்கள்

கண் முன்னே

இரத்தமாய் சதையாய்

சிதறிக் கிடந்தும்

இறுதிக் கிரியைகள்

செய்யக் கூட

கையாலாகாதவனாகி

உன் உயிர் காத்து

ஓடி ஒளித்திருக்கிறாயா!!!

சிதறிய உடல்களைக்

கிண்டிக் கிளறி

அப்பாடி.....

எவருமில்லை

என் வீட்டில் என்று

நின்மதிப் பெருமூச்சு

விட்டிருக்கிறாயா!!!

இறந்து கிடக்கும்

தாயின் உணர்வறியாப்

பச்சைக் குழந்தை

முலை பிடித்துப்

பால் குடிக்கும்

பரிதாபம்

பார்த்திருக்கிறாயா!!!

சொட்டு அசைந்தாலும்

"பட்"என்று

உன் தலையிலும் வெடி

விழுமென்று

இரத்த வெள்ளத்துள்

பிணத்தோடு பிணமாக

பாதி இரவு வரை

படுத்திருக்கிறாயா!!!

உயிரோடு புதைகுழிக்குள்...

கழுத்தில்லா முண்டங்கள்...

காணாமல் போனவர்கள்...

கற்பையும் பறித்துக் கொண்டு

கருவறைக்குள்ளும்

குண்டு வைத்துச்

சிதறடிக்க விட்டவர்கள்...

ஐயோ ஐயோ...

எத்தனை எத்தனை

கொடிய நச்சு விலங்குகள்

நடுவில் நாங்கள்

அகப்பட்டிருக்கும்

வேதனை அறிவாயா நீ!!!

இலங்கைத் தீவில்

தமிழனாய்ப் பிறந்த

பாவம் தவிர......

தவறு வேறொன்றும்

செய்யவேயில்லையே!!!

ம்ம்ம்.....

கேட்டு உணர்வதை விட

பட்டு உணர்வதே மேல்.

இருந்தும்...

புரிந்துகொள்

இனியாவது என்னை...

உன் தமிழ் சகோதரர்

நிலைமை அறிந்துகொள்.

நீயும் தமிழன்தான்

நீ...என் சகோதரன்

நீ...என் உறவு

நீ...என் இனம்

நீயும் தமிழன்தான்

என்றாலும்....

நீ ஒரு இந்தியன்!!!

ஹேமா(சுவிஸ்)18.01.2007
வணக்கம்! ஒரு ரெண்டு மூணு வாரமா நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்'ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.

சித்திரக்கவி வகைல, நாம அடுத்து பாக்கப் போறது சுழிகுளம். சுழிகுளம்ங்றது ஒரு பாட்டை, வரிக்கு எட்டெழுத்தா நாலு வரி எழுதி, மேல இருந்து கீழ படிச்சாலும், கீழ இருந்து மேல படிச்சாலும் அதே அர்த்தத்துல வர்ற பாட்டு.

வழமையா, என்னோட மகளை வெச்சு பாட்டு எழுதுவேன். ஆனா, இன்னைக்கு ஒரு சரித்திர முக்கியத்துவமான நாள். அதாவது அடிமை இனமாய் இருந்து, தளைகளை ஒடச்சு எறிஞ்சு வல்லரசையே ஆட்சி புரியுற அளவுக்கு மனித நேயம் வளர்ந்த நாள். கடைக்கோடி மனுசனுக்கு மகனாப் பொறந்து, ஆதவனா ஒசந்து இருக்குற ஒபாமாவுக்கான பாட்டுதான் இன்றைய சுழிகுளப் பாட்டு.

காலமறி செயல்நீ
நேயமது கொள்நர்
முயல்வ துறுநர்
திருவழி ந்துமாயா!

பொருள்: காலமறிந்து செயல்பட்டு, மனித நேயம் கொண்டு, முயற்சிதனை உற்று, மாந்தனைய மக்களால் வழிமொழியப் பெற்று, ஆக்கம் கொண்டனையே!

டேய் அமெரிக்காவுக்கு தானே தேர்தல் ?

என்னம்மோ அயனாவரம் பஞ்சாயத்து பிரெசிடெண்டு தேர்தல் மாதிரி, அவர் வீட்டு நாய்க்குட்டி வரைக்கும் அலசி துவைச்சு காயப்போடுறீங்க ?

ஆதிக்க சக்திகளுக்கு அடிவருடுதலை ஏதோ கலை மாதிரி செய்யுறீங்களேடா ?

போங்கடா போய் புள்ளகுட்டிவள படிக்கவைங்க...!!!

இந்த பெயர் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் நிற்கிறார் என்ற உடன் இந்தியா அமெரிக்க மட்டும் அல்ல உலகின் அனைத்து பகுதிகளையும் சென்று அடைந்தது என்றால் மிகையாகாது. அதிபர் வேட்பாளருக்கு திருமதி.கிளிண்டன் மற்றும் இவர் பெயர் முன்னிலைப்படுத்தபட்ட போது நான் திருமதி.கிளிண்டன் அவர்கள் இந்த வேட்பாளர் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி கொண்டேன் காரணம் அவர் கூறிய அர்த்தம் பொதிந்த ஒரு கருத்து. ஆனால் அங்கு பணியில் இருக்கும் என் நண்பனிடம் விசாரித்த போது அவன் கூறியது "மச்சான் கண்டிப்பாக ஒபாமா தான் வருவான், அவன் தமிழ்நாட்டில் நம்ம வைகோ மாதிரி பேச்சு ரொம்ப அசத்தலா இருக்கும் இங்கே தெளிவா பேசினால் மயங்கிவிடுவார்கள்".
அவன் கூறியது போல் இதோ திரு.ஒபாமா அவர்கள் வேட்பாளராக தேர்வு பெற்று இப்போது அதிபராகவும் முடி சூடிக்கொண்டு உள்ளார். அவர் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் என்று அனைவரும் அறிந்தது, என் ஆதங்கம் எல்லாம் அவர் கறுப்பின மற்றும் மிக எளிய குடும்பத்தில் இருந்து இந்த நிலைமையை அடைந்து உள்ளார், எனவே இவர் பிறர் உடைய வருத்தங்களையும் துன்பங்களையும் கண்டிப்பாக உணர்ந்து இருப்பார் என்று நம்புகிறேன் புரியுது எதற்கு இவன் தேவையில்லாத கருத்து எல்லாம் இந்த பதிவில் கூறிக்கொண்டு உள்ளான் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேற என்னங்க கேட்க போறேன் எல்லாம் என் சொந்தங்களை பற்றி தான், திருமதி.கிளிண்டன் முன்பு கூறியது போல் தீவிரவாதிகள் என்பதற்கு சில வரைமுறை உள்ளது. சில குழுக்களை தீவிரவாதிகள் என்று கூற கூடாது என்று கூறியுள்ளார், மேலும் அவர் உதாரணத்திற்கு ஸ்பெயின் மற்றும் இலங்கையில் போராடும் குழுக்களை தீவிரவாதிகள் என்று கூற கூடாது என்று கூறியுள்ளார்.இதோ திரு.பாரக் ஒபாமா அவர்களும் இதே கருத்து உடையவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். திரு.புஷ் அவர்களின் ஆட்சியில் கொசோவா என்ற நாடு மலர்ந்தது போல் திரு.ஒபாமா அவர்களின் ஆட்சி காலத்தில் ஈழம் என்ற நாடு அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு இந்த இவர் ஆட்சியில் விடிவு கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை.

புதிய அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரு.ஒபாமா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு:-அமெரிக்காவில் இருந்து எழுதும் பதிவர்கள் புதிய அதிபரை ஈழம் அமைக்க தங்கள் பதிவுகளில் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா அபார வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போதைய அதிபர் ஜார்ஜ்புஷ்சின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் முடிகிறது. இதனால் அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஜார்ஜ்புஷ்சின் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக் கைனும் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும் போட்டியிட்டனர்.

அதிபர் தேர்தல் ஓட்டுப் பதிவு நேற்று முன்தினம் நள் ளிரவு தொடங்கியது. அமெ ரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள், ஒரு மாவட் டம் உள்ளது.

அனைத்து இடங்களிலும் தேர்தல் நடந்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் அங்குள்ள கால சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி ஓட்டுப் பதிவு நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருந் தது. எனவே இந்திய நேரப் படி இன்று பகல் 11.30 மணி வரையிலும் தேர்தல் நடந்தது.

ஒவ்வொரு மாகாணத்தி லும் ஓட்டுப் பதிவு முடிந் ததுமே உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங் கியது.

அதில் தொடக்க முதலே ஒபாமாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன.

அமெரிக்க தேர்தல் முறைப்படி மக்களின் நேரடி ஓட்டு மூலம் அதிபரை தேர்வு செய்வது இல்லை. மக்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் கட்சிகள் சார்பில் நிறுத்தப் படும் தேர்வுக் குழு உறுப் பினர்களுக்கு (பிரதிநிதிகள்) ஓட்டுப் போட்டு அவர்களை தேர்வு செய்வார்கள். பின்னர் அவர்கள் ஓட்டு போட்டு அதிபரை தேர்வு செய்வார் கள்.

51 மாகாணங்களிலும் மொத்தம் 538 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண் டும். இதில் யாருக்கு 270 உறுப்பினர்கள் கிடைக்கிறார் களோ, அவர்கள் அதிபராக வெற்றி பெறுவார்கள்.

ஒரு மாகாணத்தில் எந்த கட்சிக்கு அதிக உறுப் பினர்கள் கிடைக்கிறார் களோ அந்த கட்சியே அந்த மாகாணத்தின் ஒட்டு மொத்த உறுப்பினர்கள் இடத்தையும் கைப்பற்றியதாக கருதப்படும். எனவே எதிர்க்கட்சி வெற்றி பெற்று இருந்தாலும் கூட அதிக இடம் பெற்ற கட்சிக்கே அந்த இடம் போய்விடும்.

இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதுமே ஒபாமா வின் ஜனநாயக கட்சி உறுப் பினர்களே அதிகம் பேர் வெற்றி பெற்றனர்.

காலை நிலவரப்படி மொத்தம் 44 மாகாணங் களின் முடிவு தெரிய வந்தது. அதில் 24 மாகாணங்களை ஒபாமா கைப்பற்றினார். 20 மாகாணங்கள் ஜான் மெக் கைனுக்கு கிடைத்தது.

இதன்படி ஒபாமாவுக்கு 297 உறுப்பினர்களும், மெக்கைனுக்கு 138 உறுப் பினர்களும், கிடைத்துள் ளனர். இன்னும் 103 உறுப் பினர்கள் முடிவு தெரிய வேண்டியது.

ஒபாமா வெற்றிக்கு தேவை யான 270 இடங்களை தாண்டி அபார வெற்றி பெற்று விட் டார். இன்னும் உள்ள 103 இடங்களிலும் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் ஒபாமா வுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் கறுப்பு இனத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் முதல் அதிபராக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளார்.

மக்கள் அளித்துள்ள ஓட் டின் படி இதுவரை ஒபா மாவுக்கு 3 கோடியே 65 லட்சத்து 74 ஆயிரத்து 584 ஓட்டுகளும், மெக்கைனுக்கு 3 கோடியே 44 லட்சத்து 51 ஆயிரத்து 323 ஓட்டுகளும் கிடைத்து உள்ளன.

தேர்தல் முடிவு படி ஒபாமா வெற்றி பெற்று இருந்தாலும் 538 உறுப்பினர்களும் ஓட்டு போட்டு தான் முறைப்படி அதிபரை தேர்வு செய்வார் கள். இந்த தேர்தல் டிசம் பர் மாதம் 15-ந் தேதி நடக்கிறது.

இதன் ஓட்டு எண்ணிக்கை ஜனவரி மாதம் 6-ந் தேதி பாராளுமன்ற கூட்டுகூட்டத் தில் நடத்தப்படும். அப் போது தான் ஒபாமா முறைப் படி அதிபராக தேர்ந்தெடுக் கப்படுவார்.

புஷ் பதவி காலம் ஜனவரி 20-ந் தேதி முடிவடைகிறது. அன்றே ஒபாமா புதிய அதிப ராக பதவி ஏற்றுக் கொள்வார்.

--
People Of Thambiluvil www.thirukkovil.com

கருத்துகள் இல்லை: