ஒபாமா வெற்றியால் அச்சம்: துப்பாக்கி விற்பனை கனஜோர்
நவம்பர் 16,2008,00:00 IST
வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றதை தொடர்ந்து,
அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை பெரிதும் அதிகரித்துள்ளது. அதிபர் தேர்தலில்
ஒபாமா வெற்றி பெற்றால், துப்பாக்கி வைத்திருப்பதிலும், துப்பாக்கி வாங்குவதிலும்
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், துப்பாக்கி
வாங்க திட்டமிட்டவர்கள், அவற்றை வாங்கத் துவங்கினர். ஒவ்வொரு கட்டத்திலும்
ஒபாமாவின் வெற்றி உறுதியாகி வந்த நிலையில், துப்பாக்கி விற்பனை தொடர்ந்து
அதிகரித்து வந்தது. தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து,
துப்பாக்கி விற்பனை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. தேர்தல் துவங்கியதில்
இருந்து இது வரை 12 லட்சம் துப்பாக்கிகள் வாங்கப் பட்டுள்ளன. இவற்றில், நீளமான
துப்பாக்கிகளின் எண்ணிக்கை 1.5 லட்சம். இது தவிர, கைத்துப் பாக்கி, பகுதி தானியங்கி
துப்பாக்கிகள் என ஏராளமான துப்பாக்கிகள் விற்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள
துப்பாக்கி விற்பனை நிலையங்களில் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.
செய்தி: நன்றி தினமலர்!
படம்: நான் பிடித்துப்போட்டது!:-))))
பி.கு: இந்தத் துப்பாக்கிகளை வாங்குபவர்கள் தங்களுகளுடைய பாதுகாப்பிற்காக
வாங்கி வைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அவற்றை வேறு எதற்காவது
பயன் படுத்தினால் என்ன ஆவது? கடவுளே நீதான் அமெரிக்காவில் உள்ள அப்பாவி
மக்களைக் காப்பாற்ற வேண்டும்!
வாழ்க வளமுடன்!
SP.VR.SUBBIAH
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக