புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15

எட்டாவது அத்தியாயத்தின் முதல் ஆறு பகுதிகள்! மொத்தமாக வலையில் ஏற்றப்படுகின்றன. இவை 5.4 MB முதல் 7 MB வரை இருக்கும். சுமார் 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை செல்லும். இன்னும் நான்கு பதிவுகள் வரும். இது கொஞ்சம் பெரிய Chapter.

ESNIP LINKS:
Get this widget | Track details | eSnips Social DNA



Get this widget | Track details | eSnips Social DNA


Get this widget | Track details | eSnips Social DNA


Get this widget | Track details | eSnips Social DNA


Get this widget | Track details | eSnips Social DNA


Get this widget | Track details | eSnips Social DNA




SNAPDRIVE LINKS:


bht.8.1.mp3

bht.8.2.mp3

bht.8.3.mp3

bht.8.4.mp3

bht.8.5.mp3


bht.8.6.mp3

தமிழக தலைமைச் செயலர் திரிபாதியின் தொலைபேசி உரையாடல் ஒட் டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி, போலீஸ் அதிகாரி உபாத்தியாய், சிறப்பு உதவியாளர் சங்கர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலர் திரிபாதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் இயக்குனர் உபாத்தியாய் இடையே நடந்த தொலைபேசி உரையாடல், கடந்த ஏப்ரல் 14ம் தேதி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானது.



இதுகுறித்து விசாரிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் முழுமையாக விசாரித்து தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. தொலைபேசி உரையாடலை உபாத்தியாய் தனது "லேப்-டாப்' மூலம் பதிவு செய்தது உறுதி செய் யப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில் பணியாற்றிய சிறப்பு உதவியாளர் சங்கர், "பென் டிரைவ்'ஐ பயன் படுத்தி அந்த உரையாடலைப் பதிவு செய்து பத்திரிகைகளுக்குக் கொடுத்த விவரம் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வெளியிட்ட பத்திரிகையாளர் கள் மீது வழக்கு தொடரவும் நீதிபதி ஆணையம் பரிந்துரை அளித்தது. ஆணையத்தின் பரிந்துரை மற்றும் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக் கை விவரம் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.



அதில் கூறப்பட்டிருப்பதாவது: அலுவலக ரகசியத் தன்மை வாய்ந்த விஷயங்கள் வெளியாக மறைமுகமாக அனுமதித்த தவறான நடத்தை, கடமை புறக்கணிப்பு மற்றும் தொலைபேசி விதிகளை மீறியது ஆகியவற்றுக்காக உபாத்தியாய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சிறப்பு உதவியாளர் சங்கர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. சங்கர் அனுமதியின்றி கணினியில் இருந்து தகவல்களை எடுத்து ஊடகப் பணியாளர்களிடம் வெளியிட்டதன் மூலம், அரசு ரகசியத்தைப் பாதுகாக்கத் தவறிய நடத்தைக்காக அவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ரகசியத் தகவலை பிறருக்கு வெளியிடுவதை அனுமதித்த தவறான நடத்தை மற்றும் கடமை புறக்கணிப் புக்காக போலீஸ் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் சட்ட ஆலோசகர் விஜயராஜன் ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



பாதுகாப்பு விஷயம் தொடர்பாக ஆணையம் தெரிவித்த பரிந்துரைகள், பணியாளரமைப்பு நிர்வாகச் சீர்திருத்தத் துறையிலும், தகவல் தொழில் நுட்பத் துறையிலும் பரிசீலிக்கப் பட்டு வருகிறது. கணினி தகவல்களைப் பாதுகாக்க விரிவான பாதுகாப்புக் கொள்கை மற்றும் வழிகாட்டிக் குறிப்புகளை வகுக்க மின் ஆளுமை இயக்குனரின் தலைமையின் கீழ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இதை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. .

புலிகள் தாமே தேர்ந்தெடுத்த தோல்வி இது. இது பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றியல்ல. இது தமிழ் மக்களின் சொந்த வெற்றியுமல்ல. தமிழ்மக்களோ அனைத்துத் தரப்பாலும் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்கள் மேல் புலிப் பாசிசத்தை நிறுவிய புலிகள், அதன் மூலம் மக்களை தோற்கடித்து அதை இராணுவத்தின் வெற்றியாக்கியுள்ளனர்.


புலிகளின் தோல்வி பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாதவர்கள் கூட, இது நடந்துவிடும் என்று இன்று நம்பத் தொடங்கியுள்ளனர். புலிப் பினாமிகளான கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட, புலிகளை தோற்கடித்தாலும் விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்று பேசுமளவுக்கு நிலைமை வேகமாக மாறிச்செல்கின்றது.

தொடர்ந்தும் தொடரும் போராட்டம் பற்றி வேடிக்கை காட்டுகின்றனர். புலிகளின் இந்த பொம்;மைகள், வாய்வீச்சைத் தவிர வேறு எதுவும் செய்ய லாயக்கற்ற பினாமிகளின் உளறல்கள் இவை. சுயநிர்ணயம் என்றால் என்ன என்ற தெரியாத மலட்டுச்சமூகத்தை உருவாக்கியுள்ள புலிகள், அனைத்தையும் அழித்து விட்டு கதை சொல்கின்றனர். புலிகள் அழிந்தவுடன், பேரினவாதத்தின் கோமணத்தை எடுத்துக் கட்டும் முதல்தரமான பொறுக்கிகள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது.

புலிகளை தோற்கடிக்கும் புறநிலையான நெருக்கடிகள் எவை

அனைத்தையும் இராணுவ வடிவில் கட்டமைத்த புலிகள், சமூகத்தை தம் பாசிச கட்டமைக்குள் அடக்கியொடுக்கினர். இதன்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/


More than a Blog Aggregator

by goma


பெங்களூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008 ( 11:24 IST )

நாட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் ' சிமி' இயக்கத்தை ஒழித்துக் கட்டவே, மாலேகாவில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடப்பட்டதாக, கைது செய்யப்பட்ட ராணுவ உயரதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடத்தப்பட்ட 'நார்கோ அனலைஸிஸ் ' ( ஆழ்நிலை மயக்க நிலை விசாரணை ) சோதனையில் இதனை தெரிவித்துள்ள அவர், நாட்டில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பல்வேறு குண்டு வெடிப்புகளிலும் தமக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் மற்றும் துறவி தயானந்த பாண்டே ஆகியோரது தூண்டுதலின் பேரிலேயே தாம் இதனை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாலேகாவ் குண்டுவெடிப்பை எப்படி நிகழ்த்துவது என்பதற்கான சதித்திட்டத்தை தாமும், ( புரோஹித்), பெண் சாமியார் பிரக்யா, தயானந்த் பாண்டே ஆகியோர் தயாரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டில் நான்டட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் பாண்டேவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புரோஹித் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அஜ்மீர் குண்டுவெடிப்பும் தயானந்த் பாண்டேவால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட சுமார் 500 பேருக்கு அகமதாபாத் அருகே உள்ள ஆசிரமம் ஒன்றில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் புரோஹித் தெரிவித்ததாக காவல் துறையை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)


இந்துத்துவ பயங்கரவாதம் என்னும் நச்சு நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஊடுருவி, தற்போது ராணுவத்திலும் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கக்கூடியாதகவே இருக்கப்போகிறது என்பது கவலை தரும் விஷயம். இந்த மாதிரியான பயங்கரவாத கும்பல்களை பாதுகாத்து அரவணைக்கத் துடிக்கும் பால் தக்கரே போன்ற தீவிரவாதிகளை தடுக்க முனையாமல் வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசு ஒரு கையாலாகாத அரசாகத்தான் தெரிகிறது. 'சுரனையற்ற இந்தியா' என்று கட்டுரை எழுதிய பாசிஷ்டுகள் இப்பொது என்ன செய்கிறார்கள்.? தெகல்கா, குஜராத் இன கலவரத்தைத் தோலுரித்துக் காட்டியும் இந்தியாவில் எவ்வித சலனமுமில்லை, குண்டு வெடித்தவர்கள் இந்துதுவா அமைப்பினர் என்ற போதும் நாட்டில் பெரியளவு எதிர்ப்புமில்லை எனும் போது, நிச்சயமாக தெரிகிறது இது 'சுரனையற்ற இந்தியா'.


"சிமி" அமைப்பினைச் சார்ந்தவர்கள் தான் குண்டு வைக்கிறார்கள் என்றால் அந்த அமைப்பினர் எத்தனைப் பேர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்?

"சிமி" தடைச் செய்யப்பட்ட அமைப்பாக இருக்கும் போது எப்படி செயல்படுகிறது.? இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது,?

மும்பை குண்டுவெடிப்பையும், கோவை குண்டுவெடிப்பையும் தவிர எந்த குண்டு வெடிப்புகளையும் யார் செய்தார்கள்? என்ன விசாரணை எதுவரை நடந்து வருகிறது என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. கைது செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்களா ? தடா, பொடா சட்டங்கள் இருந்த காலத்திலும் பயங்கரவாத்தை தடுக்க முடியவில்லை எனும் போது குற்றவாளிகள் ஆட்சி,அதிகாரங்களில் தான் இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது. இதுவரை நடந்த குண்டு வெடிப்புகளையும் அதன் விசாரணை விவரங்களையும் வெள்ளை அறிவிக்கையாக மத்திய அரசு வெளியிட்டால் பல மர்ம முடிச்சுக்கள் அவிழும். இல்லையென்றால் வழக்கம் போல் முஸ்லிம்களை குற்றம் சுமத்தி இந்துத்துவாவையும் அதன் பயங்கரவாத்தையும் வளர்க்கும் வேலையைத்தான் அரசு செய்யும்.

கருத்துகள் இல்லை: