வியாழன், 6 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-03



More than a Blog Aggregator

by Amalan
A

e காதுகளை சுத்தம் செய்வதற்கு இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் பஞ்சு குச்சிகள் போலந்து நாட்டிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டுள்ளன.
1920ஆம் ஆண்டளவில் போலந்து நாட்டைச் சேர்ந்த லியோ ஜெர்ன்ஸ்டென்ஜாங் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். ஒரு நாள் அவர்களது குழந்தையின் காதை அவரது மனைவி பல்குத்தும் குச்சியொன்றில் பஞ்சை வைத்துச் சுத்தம் செய்ய முயல்வதை லியோ கண்டார். இதனால் குழந்தையின் காது சேதமடைந்து விடும் என எண்ணிய அவர் எளிமையான முறையில் பாதுகாப்பாக குழந்தையின் காதை சுத்தம் செய்வதற்கான வழியை சிந்தித்தார்.

குறைகளற்ற காது குச்சியை உருவாக்க லியோ வுக்குப் பல ஆண்டுகள் பிடித்தன.

இதற்கு மரக்குச்சிகளைப் பயன்படுத்தினால் அவை உடையக்கூடும் என்று லியோ கருதியதால் கார்ட்போர்டில் தயாரிக்கப் பட்ட குச்சிகளைப் பயன்படுத்தினார். பஞ்சு உதிர்ந்து காதுக்குள் விழுந்துவிடாமல் இருக்க அதை குச்சியில் ஒட்டவைப்பதற்கு வழிகாண வேண்டியிருந்தது.

1926ஆம் ஆண்டில் இறுதி வடிவம் பெற்ற தனது காது குச்சிகளை விற்பனை செய்வதற்காக இன்பேன்ட் நாவல்டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் லியோ. ஆனால் தனது காது குச்சிகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று லியோவுக்குத் தெரியவில்லை. ஈற்றில் பேபி கேஸ் என்று பெயரிட்டார்.

பின்னர் அப்பெயர் கவர்ச்சி கரமானதாக இல்லாததால் அதற்கு கியூடிப்ஸ் பேபி கேஸ் என பெயர் மாற்றம் செய்தார். கடைசியாக கியூடிப்ஸ் என்பது மட்டும் எஞ்சியது.

இன்று கியூடிப்ஸ்கள் காதுகளை மட்டுமல்ல, நுணுக்கமான உபகரணங்களையும், காயங்களையும் சுத்தம் செய்யவும், மருந்திடவும் கூட பயன்படுத்தப்படுகின்றன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.மற்ற இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கொடுமை செய்வது என்பது ஆண்கள் மட்டுமே என்று குடும்ப வன்முறைச் சட்டத்தில் எழுதி வைத்து ஆண்களை வஞ்சனை செய்கிறார்களே, பெண்கள் ஒரு பாவமும் அறியாத பேதைகளா? கீழ்க்கண்ட செய்தியை வாசியுங்கள்:

சண்டிகார்: பஞ்சாபில், விதவைப் பெண்ணை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப், லூதியானாவைச் சேர்ந்த விதவை குர்மீத் கவுர். இவரை கர்ஜித் கவுர், சரண்ஜித் கவுர் என்ற இரு பெண்கள், வேறு ஒரு நபரிடம் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளனர். இதற்காக அந்த நபரிடம் இருந்து முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஜர்னல் சிங் என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விதவைப் பெண்ணை விற்க முயன்ற இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !
காதல் உணர்வைக் காட்டிய
எனக்கு நீ புதியவளே !
புதிய உறவை தந்த
காதலி நீ புதியவளே !
புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

உன் பார்வையில் மௌனம் ஆனேன்
அது எனக்கு புதியது !
உன் நினைவில் தூக்கம் மறந்தேன்
அது எனக்கு புதியது !
எனக்குள்ளே நான் பேசிக் கொண்டேன்
அது எனக்கு புதியது !
தனியாகச் சிரித்து வழிந்தேன்
அது எனக்கு புதியது !
எனக்குள் பல புதுமைகள் செய்தவளே !
என் புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

முதல் முதலாய் வெட்கம் வந்தது
அது எனக்கு புதியது !
உன் கண்ணில் என்னை பார்த்தேன்
அது எனக்கு புதியது !
காதலி உன் கொலுசின் ஓசை
அது எனக்கு புதியது !
நீ இல்லாமல் நான் வாழ்ந்தால்
அந்த தனிமை கூட புதியது !
எனக்கு புதிராய் விளங்குபவளே !
என் புத்தம் புதியவளே !
புதிதாய்ப் பூத்தவளே !

திருமண ஆசையில் துடித்தேன்
அது எனக்கு புதியது !
நான் போடும் மூன்று மூடிச்சு
அது எனக்கு புதியது !
காதலி எனக்கு மனைவி ஆனாய்
அது எனக்கு புதியது !
உன்னுடன் நான் இருக்கும்
அந்த முதலிரவு புதியது !
எனக்கு என்றும் இனியவளே !

என் புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

உன் உயிரை எனக்குள் வைத்தேன்
அது எனக்கு புதியது !
ஓர் உடலில் இரு உயிர் ஆனேன்
அது எனக்கு புதியது !
முத்த மழையில் நான் குளித்தேன்
அது எனக்கு புதியது !
உன் பிரிவில் நான் இறந்தால்
அந்த மரணம் கூட புதியது !
எனக்கு உயிராய் வந்தவளே !

என் புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

கருத்துகள் இல்லை: