பிரபல ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் மரணம். http://en.wikipedia.org/wiki/A_Case_of_Need
1 Comments
At November 5, 2008, புருனோ wrote:
http://en.wikipedia.org/wiki/Michael_Crichton
Related posts
- No related posts.
கடந்த செவ்வாய் (04.11.2008) அன்று புதுவை சட்டக் கல்லூரி, தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் புதுச்சேரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அனைவரும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகே திரண்டனர்.
4000 மாணவர்கள் அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் சிங்கள அரசை கண்டித்தும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோரிக்கை அட்டைகளை கையிலேந்திச் சென்றனர்.
ஊர்வலமாக வந்த மாணவர்கள் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் மாணவர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் பாசுகரன், ஆனந்தன், பிரதீப், குமரேசன், அன்புமணி, நர்மதா, பவாணி, அறிவுச்சுடர், கலைவாணி ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து;
இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிங்கள இனவெறி அரசால் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்கவேண்டும்.
இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு உதவிகளை வழங்கக்கூடாது.
ஈழத்தமிழர்களின் இன்னல்தீர தமிழர்களுக்காக தமிழீழ தனிநாட்டை இந்திய அரசு ஏற்கவேண்டும்.
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குருதி கையெழுத்திட்டு புதுச்சேரி ஆளுநர் கோவிந்த்சிங் குர்சாரிடம் மனு கொடுத்தனர்.
மத மோதலில் மண்டை உடைதல்
சாதிய ரீதியாக சண்டை போடுதல்
(வேட்பாளர் தேர்வு போது இதை மறந்துவிடுவோம்)
அரசியல் அடுப்புக்கு அணையாத விறகென்று
ஆனமட்டும் பற்ற வைத்துப் பார்க்கின்றார் -
அருள் பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை; எனும்
வள்ளலார் வாசகம் என்ன வேண்டிக் கிடக்கிறதோ?
எம்மதமும் சம்மதமே என வாழ்ந்த திருநாட்டில்;
எதற்காக நெற்றிக் குறி? நெடிய பூணூல்?
( எதற்காக மஞ்சள் துண்டு, எதற்காக பூமி பூஜை, எதற்காக வேதம் படிக்க வேண்டும்)
இடக்காக இப்படிக் கேட்கலாமா என்று;
மிடுக்காக கோபித்துக் கொள்ளும் மேலோர் என்போர்-
வள்ளுவரின் குறள் வழியில் சொன்னால்;
வைதீகக் குரங்கினத்தின் வாலோரேயாவார்!
ஆன்மீகம் என்பது ஆண்டவனை போற்றும் ஒருமுறை எனினும்
ஆத்திக நாத்திக சொற்போருக்கு அவற்றிடையே இடமில்லை -
நாத்திகமென்பது நடமாடும் கோயில்களின் திருப்பணி எனில்
ஆத்திகம் அதற்கு மறுப்பு சொல்லத் தேவை என்ன?
``நல்லதே நினை, நல்லதே செய்'' - நாத்திகமெனில்
இல்லையே அதற்கோர் ஈடு; எனப் போற்றினால் அது ஆத்திகமாம் -
நாத்திகம் ஆத்திகம் என்பதும் நமக்குள்
அம்மதம் இம்மதம் என்று போரிட்டுப் புலம்புவதும் வீண்தானே!
எல்லோரும் ஒரே குலம்- உண்மையே கடவுள்
என்று அறியாதார் பேதமையே ஆகும் என்போம்!
மதபேதமெனும் மரக்கிளைகள் ஈன்ற விழுதுகளே
மலையாக மடுவாக இருக்கின்ற ஏற்றத் தாழ்வுச் சாதிகளாம்-
மரத்தையே வெட்டிச் சாய்த்து விட்டால்;
கிளைகள், வேர்கள், விழுதுகள் பட்டுப் போகும்!
அங்கே அழகாக ஓர் உருவம் தோன்றும்
அதன் பெயர்தான் சமத்துவம் என்போம்!
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 7 ந் தேதி தனது பிறந்த தினத்தை ரசிகர்களுடன் கொண்டாடும் கமல்ஹாசன், இந்த வருடம் இந்த கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். காரணம்? இலங்கையில் நடக்கும் இனப் படுகொலை!
'இலங்கை நம் அண்டை வீடு என்ற சமீபம் போக, ஈழப்போர் நம் தற்கால தமிழ் சரித்திரம் என்ற நெருக்கமும் என்னை எந்த கொண்டாட்டத்திலும் மனம் லயிக்க முடியாமல் தடுக்கிறது. மனிதனே, மனிதனை கொல்லும் இந்த போர் இந்த நவீன யுகத்தின் ஊடகங்களால் நம் காது கேட்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடக்கிறது. இந்த சோக சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக்கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில், நம் வீட்டில் குதூகல கொண்டாட்டங்கள் நடப்பது மனித நேயம் சார்ந்த செயலாக இருக்காது' என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் கமல்.
கொண்டாட்டத்தை அடக்கிக் கொள்ள சொன்ன கமலுக்கு உளமார்ந்த பாராட்டுகள். அப்படியே தனது ரசிகர்களை குரல் கொடுக்கவும் சொன்னால், இந்த அறிக்கையின் பலன் அதிகரிக்கும். செய்வீர்களா கலைஞானி?
இதில் எல்லாம் ஆர்வம் இல்லாதது போல் அரை மணிநேரமாவது தாமதமாக வந்து தங்கள் பெருமையை நிலைநாட்டிக் கொண்டாலும், மனதுக்குள் அந்த சந்திப்பை எதிர்நோக்கும் ஆர்வம் அதிமாக காதலிகளுக்கே உள்ளது. கேட்டால் "காக்க காக்க ஜோதிகா" ரேஞ்சில் "இட்ஸ் எ கேர்ள் திங்".. என்பார்கள்..
பின்வரும் இந்த சூழலைப் பாருங்கள்..
" வெண்மையான முதுகையுடைய கொக்கின் நிறத்தை ஒத்த ஆம்பல் பூக்கள் குளத்தில் மலர்ந்திருப்பதை பார்த்தால் மாலை வேளை வந்து விட்டது தெரிகிறது.. அதைவிட மகிழ்ச்சி தரக்கூடியது என்ன வென்றால் அந்த மாலைக்குப் பிறகு இரவு வந்துவிடும் என்பதே"
இப்படி மாலை வேளையை வாழ்க போட்டு வரவேற்பதில் தெரிகிறதா ஆர்வம்?.
நெய்தலில் தலைவி பாடுவதாக இருக்கும் அந்த பாடல்...
பைங் காற் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை!
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே.
ஓரம்போகியாரின் இந்த பாடல் புரியும் என்று நம்புகிறேன்..
..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக