வியாழன், 6 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-04

தீவாளி ஸ்பெசல் : சங்கத்துச் சிங்கம் நிருபர் நந்துவை பேட்டி கண்டார். நடந்தவை கீழே.


நிருபர்: வணக்கம் நந்து f/o நிலா அவர்களே
நந்து : வணக்கமுங்க.

நிருபர்: அதென்னாங்க பேரு நந்து f/o நிலா?

நந்து : நம்ம பேரைச் சொன்னாவே உக்காந்துட்டு இருக்கிறவங்க எல்லாம் எந்திருச்சி நின்னுக்கிறாங்க. அவ்ளோ பயம். சும்மா அதிருர பேரு நம்மளது. அதனால கொஞம் லைட்டா இருக்க நிலாப்பேரையும் சேர்த்துகிட்டேன். ஆனாலும் நம்ம பேரை பதிவிலேயோ வேற எங்கேயோ கேட்டாவே மக்கள் அலறாங்க. அவ்ளோ மரியாதை.

நிருபர்: மரியாதையா? பயம்னு சொல்றாங்க?


நந்து : அதெல்லாம் நம்பாதீங்க. சஞ்சய் கட்டி விட்ட கதை அது.

நிருபர்: பதிவுலகம் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..

நந்து : ரஜினி ஒரு படத்துல சொல்லுவாரு தெரியுங்களா?

நிருபர்: ஆமாங்க. நான் ரொம்ப நல்லவன். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா..

நந்து: அது வடிவேலுங்க. ரஜினி சொன்னதைத்தான் நானும் சொல்றேன். ஆண்டவா பதிவர்களிடம் இருந்து என்னைக் காப்பாத்து, நண்பர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.

நிருபர்: குறிப்பா யாருன்னு சொல்ல முடியுங்களா?

நந்து: வாலி(வால்பையன்), சஞ்சய்(பொடிப்பையன்), குசும்பன் இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்குங்க.

நிருபர்: உங்க வீட்டுல பூச்சி மருந்து வாங்குற பழக்கம் உண்டுங்களா?

நந்து: வாங்கிட்டு இருந்தோம். என்னிக்கு கேமராவை கையில எடுத்தேன்னோ அன்னைக்கிருந்து வாங்குறதில்லீங்க.

நிருபர்: அட ஆச்சர்யமா இருக்கே. ஏன்??

நந்து: நான் கேமராவை கையில எடுத்துட்டாப்போதுங்க. புழு பூச்சி எல்லாம் பின்னாங்கால் பொடனில அடிக்க ஓடிரும். அய்யாவைப்ப் பார்த்தா அவ்ளோ பயம். ஒரு ஈ, எறும்பு விடாம விதவிதமா படம் எடுக்க ஆரம்பிச்சேன். அந்தத் தொந்தரவு தாங்காமயே எல்லாம் யூனியன் சேர்த்து ஓடிப்போயிருச்சுங்க. அதுமட்டுமில்லீங்க. ஓடிப்போன பூச்சி எல்லாம் ஒன்னா சேர்ந்து இனிமேல யாரும் கஷ்டப்பட வேண்டாம்னு வர புழு பூச்சி எல்லாம் தடுத்துடுதுங்க. இப்போ என் வயத்துல பூச்சி கூட வரதில்லைனா பார்த்துக்குங்களேன்.

நிருபர்: உங்களுக்கு Blue Crossக்கும் பிரச்சினைன்னு சொல்றாங்களே?

நான் யாரு? எவ்வளவு படங்கள் எடுத்திருப்பேன்? பிராணிகளை படம் எடுக்கிறதுல ஒரு விருப்பம் அதிகம்ங்க. அதனால தெருவுல போற நாய், பூனை, மாடு இதுங்க எல்லாத்தையும் படம் எடுக்க ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க, நாம சொல்ற படி அதுங்க போஸ் தராது. ஒரு மாட்ட ஓட்டியாந்து 4 காலயும் தூக்கிட்டு இருக்கிற மாதிரி படம் எடுக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா மாடு ஒத்துக்கலை,. அதுக்காக நாலு போடு போட்டேன். அவ்ளோதான் இதுக்கு போயி ப்ளூ கிராஸு வந்துட்டாங்க. பொறாமை புடிச்சவங்க. எங்கே நானு பெரிய போட்டோகிராபர் ஆகிருவேன்னு நினைச்சு வெளிநாட்டுக்காறங்க பண்ற சதிதான் இது?

நிருபர்: குசும்பன், அபி அப்பா,.. இவுங்க எல்லாருங்களா?

நந்து : இல்லீங்க. ஹ்ஹஹஹ டமாஸ் பண்றீங்க. அவுங்க எல்லாம் வெளிநாட்டுல இருக்கிற உள்ளூர்க்காரங்க. இவுங்க உள்ளூருல இருக்கிற வெளிநாட்டுக்காரங்க...

நிருபர்: (வெளங்கிரும்..) உங்களுக்கு பொழுதுபோக்கு என்னன்னு சொல்லுங்களேன்?

நந்து : நமக்கு பொழப்பே பொழுதுபோக்குதானுங்க.

நிருபர்: அப்படின்னா?

நந்து : நான் ரொம்ப நல்லவங்க. ரெஸ்ட் எடுத்தே டயர்டாகிடுவேங்க. அதனால பொழைப்பே பொழுதுபோக்குதானுங்க..

நிருபர்: உங்க எழுத்துக்களைப்பத்தி(கொடுமை, இதைஎல்லாம் கேட்க வேண்டி இருக்கே)

நந்து : நான் ஒரு சீரியஸ் எழுத்தாளருங்க. ஆனா இந்த மக்களுக்கு மட்டும் அவ்வளவா பக்குவப்படலீங்க. அதனால அவுங்களுக்கு தகுந்த மாதிரி கருத்துக்களைச் சொல்லிட்டு வரேங்க.

Flash News: நிருபர் கீழ்ப்பாக்கம் மருத்துவமையில் அனுமதி.
இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மை டாக்டர் மனேஹ் ஹாமத் அல்ஜொஹானி முன்னுரை : இஸ்லாம் மார்க்கத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தைப் பற்றியதாகும். இந்தக் கருத்து வேறுபாடுகள் தான் இரண்டு மார்க்கத்தையும பிரித்து வைத்திருப்பது. இயேசு கிறிஸ்துவை - முஸ்லிம்கள் - ஆப்ரகாம், மோசஸ், முஹம்மது நபி போன்றவர்களை மதிப்பது போல் அவர் மிகப் பெரிய
இலங்கை தமிழர் பிரச்சினையில் உண்மை நிலவரத்தை அறிய நடுநிலையாளர் தலைமையில் ஒரு நல்லெண்ண குழுவை அனுப்ப வேண்டும் என்று கவர்னரிடம் அன்பரசு நேரில் வலியுறுத்தினார்.


More than a Blog Aggregator

by குட்டிபிசாசு

நாம் எல்லோரும் சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் படித்தவர்களாகவோ அல்லது பார்த்து ரசித்தவர்களாகவோ இருப்போம். நம்ம பதிவர் "லக்கிலுக்" கூட அடிக்கடி காமிக்ஸ் வாசிப்பைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார். அவர் பதிவுலக பெயர்கூட காமிக்ஸ் மேல் கொண்ட பாசம் தான் காரணம். நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகம் படிப்பேன். ராணிகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் அப்போது வருவதுண்டு. காமிக்ஸில் வரும் வீரர்கள் என்னை அதிகமாக கவர்ந்துவிடும். அப்படிக் கவர்ந்தவை... துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட், டைகர், குதிரைவீரன் ஜோ, இரும்பு மனிதன் ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர். அப்படி காமிக்ஸ் கேரக்டர்களின் ரசிகனாக இருந்த காலத்தில், என் தந்தையிடம் தினமும் குதிரை, தொப்பி வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிப்பேன். நான் அதிகமாக நேசித்தது குதிரைவீரர்க்ளைத் தான். கட்டிலில் அமர்ந்து காமிக்ஸ் கையில் எடுத்துவிட்டால், எப்போதும் கற்பனைதான். வீட்டில் அம்மா இல்லாவிட்டால், நானும் என் அண்ணனும் காமிக்ஸ் கதையின்படி நடிக்க ஆரம்பித்துவிடுவோம். கட்டிலின் இருபுறமும் இருந்து கையை துப்பாக்கியாக வைத்துக் கொண்டு சுடுவதுண்டு. இவ்வாறு நாங்கள் இருவரும் நடிக்கும் போது, என் அண்ணனுக்கு நான் செவ்விந்தியர் வேடம் தான் கொடுப்பேன். ஒன்றுமில்லை... கோழியிறகோ / காக்கையிறகோ தலையில் சொருகிக்கொள்ளவேண்டும். கல்லூரி நாட்களின்போது குதிரைவீரர்களின் காமிக்ஸ் தாக்கம் காரணமாகவே நிறைய Western gendre படங்கள் தேர்ந்தெடுத்து பார்க்கத் தொடங்கினேன். இப்படியாக சுமார் 50 படங்களுக்கு மேல் பார்த்ததோடல்லாமல், சேமித்தும் வைத்திருந்தேன்.

லயன்காமிக்ஸில் 'ஈகிள்மேன்' என்று வெளிவந்த கதையின் திரைப்படம் தான் "Condorman", அப்படத்தின் ஒரு ஒளித்துண்டு கீழே...





நான் 4-ம் வகுப்பு வந்தபின் ஒரு வழியாக காமிக்ஸ் ஆர்வம் குறைந்துவிட்டது. அதன் பின் தொலைக்காட்சியில் வரும் ஹீமேன், ஸ்பைடர்மேன் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். 1992-ல் ஸ்டார் சேனல் தொடங்கியபின், தினமும் காலை எழுந்தவுடன் கார்டூன் பார்க்கும் வேலை தான். Oscar wilde தொகுப்பில் வரும் fairytale கதைகள் அதிகமாக வரும். (Happy prince, Selfish giant போன்ற கதைகளைப் பார்த்த ஞாபகம் இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது). கிருத்ஸ்மஸ் பண்டிகை மற்றும் கோடைவிடுமுறை வந்துவிட்டால், ஸ்டார் டீவியில் நிறைய குழந்தைகளுக்கான படங்கள் காட்டப்படும், அவற்றை வெகுவாக ரசிப்பதுண்டு. சன் டீவி தொடங்கி வளர்ந்த பிறகு என்னை அப்போது யாரும் கார்டூன் சேனல் பார்க்க அனுமதிப்பதில்லை.

ஆனால் இப்போதுள்ள குழந்தைகள் கார்டூன் நெட்வொர்க், சுட்டி டிவி, போகோ என பல சேனல்கள் பார்க்கிறார்கள்.கொடுத்து வைத்தவர்கள். என்னோட அண்ணன் மகன் கார்த்திகேயன் யாரையும் மற்ற சேனல் பார்க்கவே விடுவதில்லை. அந்த அளவுக்கு இப்ப குழந்தைகள் வெறித்தனமாக பார்க்கிறார்கள். ஆனால் எப்படியோ மொக்கையான சீரியல்களும் அரைகுறையான தமிழ்படங்களைப் பார்ப்பதைவிட இந்த காட்டூங்ன் சேனல்கள் நிறைய தகவலும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.



More than a Blog Aggregator

by பிரேம்குமார்
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

கருத்துகள் இல்லை: