இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பையும் நலன்களையும் உரியவகையில் பேணுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார். |
புதுடில்லியில் இன்று இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த வலியுறுத்தலை இந்திய பிரதமர் விடுத்தார். இதற்கு முன்னதாக தாம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் முகமாகவே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதாகவும், அரசியல் தீர்வைக்காணும் முன்னர் பயங்கரவாதத்தை ஒழிப்பதே தமது நோக்கம் என்றும் மஹிந்த ராஜபக்ச, மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளார் இதன் போது தமது கருத்தை வெளியிட்ட இந்திய பிரதமர், பயங்கரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்தின் போது அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, தாம் தமிழர்களின் பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டை இந்திய பிரதமரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார். தாம் தங்களின் மக்களை பார்த்துக்கொள்வோம் என்றும் அது தமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். தாம் முதலில் பயங்கரவாதத்தை ஒழித்த பின்னரே இனப்பிரச்சினைக்கான தீர்வை காணப்போவதாக குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை களைந்தப்பின்னரே அவர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் 13 வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கவுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார். |
People Of Thambiluvil www.thirukkovil.com
இவன் நம்ம பயன்னு சொன்னவுடனே, மனசு நெகிழுதே? அப்ப மத்த பயலுவ??
சட்டசபைத் தொடர்ன்னா, உள்ளயோ அல்லது வெளிலயோ எதோ ஒரு அசம்பாவிதம் காலங் காலமா நடக்குதே? அதுக்கு யார் காரணம்??
மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், சமுதாயத்திற்குமான ஒரு அறப் போராட்டம்ன்னு வந்தா, கிடைச்சது வாய்ப்புன்னு நல்லா ஒக்காந்து வடை போண்டா சாப்ட்டுட்டு காணொளியில காலத்தை ஓட்டுற நாம, சங்கத் தலைவனுக்கு ஒன்னுன்னா கெடந்து தவிக்கறமே?
அந்த நேரத்துக்கு உணர்ச்சியில பரிதாபத்தைக் கொட்டிட்டு, அப்புறமா எல்லாத்தையும் மறந்து போறமே?
சிவகாசிக் கலவரம்ன்னா யாருக்காவது தெரியுமா? அதில இருந்து நாம கத்துகிட்டது என்ன??
எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனில்லை!
குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அது யாராக இருப்பினும்!!
அதற்கு முன்பாக, நாம் திருந்த வேண்டியவர்கள்!!!
இது எனக்கும் பொருந்தும். சுய பரிசோதனைக்கான தருணம் இது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக