இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த வாரம் வெளியிட்ட தகவல் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 13 ஆயிரம் பேரை படையினர் கொன்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அரசாங்கம் 2004 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை போருக்காக 583 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியின் கூற்றுப்படி ஒரு புலி உறுப்பினருக்காக அரசாங்கம் 42 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு;ள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி நேற்று 2009 ஆம் ஆண்டுக்கான மாற்று வரவுசெலவுத்திட்டத்தின் யோசனைகளை வெளியிட்டது. இதன்படி அடுத்த 18 மாதத்திற்குள் 10 லட்சம் உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் திட்டம் கூறப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் ஏழாயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன. அத்துடன் படையினருக்கான குறைந்தளவு சம்பளம் 40 ஆயிரம் ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை 100 ஆக உள்ள அமைச்சரவையின் எண்ணிக்கையை 35 ஆக குறைத்தால் மேற்கொள்ளமுடியும் என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2009 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டம் நாளையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. |
People Of Thambiluvil www.thirukkovil.com
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இந்த அதிசய ஆண்குழந்தையைப் பார்ப்பதற்காக வைத்தியசாலையில் பெருமளவிலான மக்கள் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அக்குழந்தை கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குழந்தைக்கான விஷேட வைத்திய சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன் இந்த மூன்றாவது காலுக்கான எலும்பு எங்கிருந்து வளர்ந்துள்ளது என்பதை பொறுத்தே சத்திரசிகிச்சை செய்யமுடியும் என வைத்தியத் தரப்புகள் குறிப்பிட்டுள்ளது. |

5:30 ] |
|
ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்கா இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே, இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்துக் கட்சி குழுவினால் தயாரிக்கப்படும் பரிந்துரைகள் 90 வீதம் பூர்த்தியாகியுள்ளதெனவும், இதன் தீர்வினை எட்ட முடியும் என அதிக மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் தனிமைப் படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை நிலைமைகளில் ஏற்படும் முன்னேற்றம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் சமாதான முன்னெடுப்புக்களைத் தொடர முடியும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. |
People Of Thambiluvil www.thirukkovil.com
இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த வாரம் வெளியிட்ட தகவல் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 13 ஆயிரம் பேரை படையினர் கொன்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அரசாங்கம் 2004 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை போருக்காக 583 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியின் கூற்றுப்படி ஒரு புலி உறுப்பினருக்காக அரசாங்கம் 42 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு;ள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி நேற்று 2009 ஆம் ஆண்டுக்கான மாற்று வரவுசெலவுத்திட்டத்தின் யோசனைகளை வெளியிட்டது. இதன்படி அடுத்த 18 மாதத்திற்குள் 10 லட்சம் உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் திட்டம் கூறப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் ஏழாயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன. அத்துடன் படையினருக்கான குறைந்தளவு சம்பளம் 40 ஆயிரம் ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை 100 ஆக உள்ள அமைச்சரவையின் எண்ணிக்கையை 35 ஆக குறைத்தால் மேற்கொள்ளமுடியும் என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2009 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டம் நாளையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. |
People Of Thambiluvil www.thirukkovil.com
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இந்த அதிசய ஆண்குழந்தையைப் பார்ப்பதற்காக வைத்தியசாலையில் பெருமளவிலான மக்கள் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அக்குழந்தை கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குழந்தைக்கான விஷேட வைத்திய சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன் இந்த மூன்றாவது காலுக்கான எலும்பு எங்கிருந்து வளர்ந்துள்ளது என்பதை பொறுத்தே சத்திரசிகிச்சை செய்யமுடியும் என வைத்தியத் தரப்புகள் குறிப்பிட்டுள்ளது. |
People Of Thambiluvil www.thirukkovil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக